மில்லியன் புத்தகம் திட்டம்
மில்லியன் புத்தகம் திட்டம் (Million Book Project) அல்லது உலகம் தழுவிய நூலகம் என்பது 2007-2008 -ல் கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளி மற்றும் பல்கலைக்கழக நூலக முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட திட்டமாகும்.[1] இத்திட்டம் புத்தகங்களை எண்ணிம முறைக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டமானது இந்தியா (இந்திய எண்ணிம நூலகம்) மற்றும் சீனாவில் உள்ள அரசு மற்றும் ஆராய்ச்சிக் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல மொழிகளில் உள்ள புத்தகங்களை வருடியெடுத்தும், ஒளி எழுத்துணரியினைப் பயன்படுத்தியும் புத்தகங்களை உருவாக்கி, முழு உரைத் தேடல் வசதியின் மூலம், இணையத்தில் புத்தகங்களை இலவசமாகப் படிக்கும் அணுகலையும் வழங்குகிறது. 2007ஆம் ஆண்டின் முடிவில் 1 மில்லியன் புத்தகங்களை வருடியடுத்து, முழு பட்டியலையும் இணையத்தில் அணுகும்படி செய்துள்ளனர்.
விளக்கம்
தொகுமில்லியன் புத்தகம் திட்டம் என்பது 501(c)3 பிரிவின் கீழ் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இது உலகம் முழுவதும் பல்வேறு படியெடுக்கும் நடுவத்தினைக் கொண்டுள்ளது.
திசம்பர் 2007க்குள், 20 மொழிகளில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் வருடியெடுக்கப்பட்டன. சீன மொழியில் 970,000; ஆங்கிலத்தில் 360,000; தெலுங்கில் 50,000; மற்றும் அரபியில் 40,000[2] என வருடியெடுக்கப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலான புத்தகங்கள் பொது உரிமைப் பரப்பில் உள்ளன. ஆனால் 60,000 பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை (ஆங்கிலத்தில் சுமார் 53,000 மற்றும் இந்திய மொழிகளில் 7,000) சேர்க்க அனுமதி பெறப்பட்டுள்ளது. புத்தகங்கள் இந்தியா, சீனா, கார்னகி மெலன், இணைய ஆவணகம், அலெக்சாந்திரியா நூலகம் ஆகிய இடங்களில் உள்ள தளங்களில் ஓரளவு பிரதிபலிக்கின்றன. இன்றுவரை வருடியெடுக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கவில்லை. மேலும் எந்த ஒரு தளத்திலும் இணையத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களின் நகல்களும் இல்லை.
மில்லியன் புத்தகத் திட்டம் "கருத்துக்கான ஆதாரம்" ஆகும், இது பெரும்பாலும் காத்தி அறக்கட்டளை, கூகிள் புத்தக தேடல் மற்றும் இணையக் காப்பகம் புத்தக வருடியெடுப்பு திட்டங்களால் மாற்றப்பட்டது.
இணையக் காப்பகத்தில் கூகுளில் இல்லாத சில புத்தகங்கள் இருக்கலாம் (எ.கா: ராபர்ட் ப்ரோசுடின் கவிதைகள் 1922-ன் இறுதியில் வெளியிடப்பட்டது).[3][4][5]
தேசிய அறிவியல் அறக்கட்டளை மில்லியன் புத்தகத் திட்டத்திற்கான உபகரணங்கள் மற்றும் நிர்வாகப் பணிக்காக நான்கு ஆண்டுகளில் கார்னகி மெல்லனுக்கு $3.63M வழங்கியது. மொழி மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி திட்டங்களுக்கு இந்தியா ஆண்டுதோறும் $25M வழங்கியது. சீனாவின் கல்வி அமைச்சகம் மூன்று ஆண்டுகளில் $8.46M வழங்கியது. இணையக் காப்பகம் உபகரணங்கள், பணியாளர்கள் மற்றும் பணத்தை வழங்கியது. கலிபோர்னியா பல்கலைக்கழகம், மெர்சிட் நூலகம், அமெரிக்க வெளியீட்டாளர்களிடமிருந்து பதிப்புரிமை அனுமதியைப் பெறுவதற்கு நிதியளித்தது.
இத்திட்டம் 2008-ல் முடிவடைந்தது.[6]
பங்குதாரர்கள்
தொகுசீனா
தொகுஇந்தத் திட்டத்தில் பங்குபெறும் சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு:[1]
- சீன மக்கள் குடியரசின் கல்வி அமைச்சகம்
- சீன அறிவியல் அகாதமி
- புடான் பல்கலைக்கழகம்
- நான்ஜிங் பல்கலைக்கழகம்
- பீக்கிங் பல்கலைக்கழகம்
- சிங்குவா பல்கலைக்கழகம்
- ஜெஜியாங் பல்கலைக்கழகம்
- வடகிழக்கு சாதாரண பல்கலைக்கழகம்
இந்தியா
தொகுஇந்தத் திட்டத்தில் பங்குபெறும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு:[1]
- இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
- பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்
- இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத்
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
- மைசூர் பல்கலைக்கழகம், மைசூர்
- புனே பல்கலைக்கழகம், புனே
- கோவா பல்கலைக்கழகம், கோவா
- திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி
- சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி, தஞ்சை
- கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர்
- மகாராட்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம், மும்பை
அமெரிக்கா
தொகுபங்குபெறும் அமெரிக்க நிறுவனங்களில் பின்வருவன அடங்கும்:[1]
- இணைய ஆவணகம்
- இந்தியானா பல்கலைக்கழகம்
- பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம்
- இசுட்டாபோர்டு பல்கலைக்கழகம்
- ட்ரைகல்லூரிகள் (சுவார்த்மோர், கேவர்போர்ட், பிரைன் மாவ்ர்)
- கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
- கலிபோர்னியா பல்கலைக்கழகம், மெர்சிட்
- பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம்
- வாஷிங்டன் பல்கலைக்கழகம்
ஐரோப்பா
தொகுபங்குபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு:[1]
- கோபனாவன் பல்கலைக்கழகம்
- ஆர்குசு பல்கலைக்கழகம்
- ஓடென்சு பல்கலைக்கழகம்
- டென்மார்க் மெய்நிகர் நூலகம்
மேலும் பார்க்கவும்
தொகு- எண்ணிம நூலகம் (பட்டியல்)
- கூட்டன்பர்கு திட்டம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "ULIB [About Us]". Carnegie Mellon University. Archived from the original on 2012-01-08.
- ↑ "The Million Book Project - 1.5 million scanned!". London Business School Library. Archived from the original on 2008-06-14.
- ↑ "Universal Library : Free Books : Free Texts : Download & Streaming : Internet Archive". பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "The Poems Of Robert Frost". பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ Frost, Robert (1949). "The Poems of Robert Frost - Google Books". பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Universal Digital Library". UCSB Library. November 9, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- யுனிவர்சல் டிஜிட்டல் லைப்ரரி
- மில்லியன் புத்தக டிஜிட்டல் லைப்ரரி திட்டம் (டிசம்பர் 1, 2001 இல் இருந்து தாள்)
- (in சீன மொழி) யுனிவர்சல் லைப்ரரி, சீனா தளம்
- அலகாபாத்தில் உள்ள யுனிவர்சல் டிஜிட்டல் லைப்ரரி
- இந்தியாவின் டிஜிட்டல் லைப்ரரி பரணிடப்பட்டது 2019-04-17 at the வந்தவழி இயந்திரம்
- இணையக் காப்பகம்: