மு. மேத்தா

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
(மு.மேத்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

மு. மேத்தா
பிறப்புமுகமது மேத்தா
செப்டம்பர் 5, 1945 (1945-09-05) (அகவை 79)
பெரியகுளம், தமிழ்நாடு,  இந்தியா
தொழில்கவிஞர்
பாடலாசிரியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (2006)
துணைவர்சையது ராபியா (௭)மல்லிகா மேத்தா[1]
பிள்ளைகள்5 மகள்கள்

இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்.

இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.[2]

"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்

இறப்பினில் கண் விழிப்பேன்

மரங்களில் நான் ஏழை

எனக்கு வைத்த பெயர் வாழை"

போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.

"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.


படைப்புகள்

தொகு

கவிதை நூல்கள்

தொகு
  1. கண்ணீர்பூக்கள்[3] (1974)
  2. ஊர்வலம்[4] (1977)
  3. மனச்சிறகு (1978)
  4. அவர்கள்வருகிறார்கள் (1980)
  5. முகத்துக்கு முகம் (1981)
  6. நடந்தநாடகங்கள் (1982)
  7. காத்திருந்த காற்று (1982)
  8. ஒரு வானம் இரு சிறகு (1983)
  9. திருவிழாவில் தெருப்பாடகன் (1984)
  10. நந்தவனநாட்கள் (1985)
  11. இதயத்தில் நாற்காலி (1985)
  12. என்னுடையபோதிமரங்கள் (1987)
  13. கனவுக்குதிரைகள் (1992)
  14. கம்பன் கவியரங்கில் (1993)
  15. என் பிள்ளைத் தமிழ் (1994)
  16. ஒற்றைத் தீக்குச்சி (1997)
  17. மனிதனைத்தேடி (1998)
  18. ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
  19. மு.மேத்தா கவிதைகள் (2007)
  20. கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
  21. கனவுகளின்கையெழுத்து (2016)
  22. நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)[5]

கட்டுரை நூல்கள்

தொகு
  1. திறந்த புத்தகம்.

நாவல்கள்

தொகு
  1. சோழ நிலா
  2. மகுடநிலா

நாயகம் ஒரு காவியம்

தொகு

கவிஞர் வாலியின் 'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்'' என்றார் வாலி.


ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும்   அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்

சிறுகதை தொகுப்புகள்

தொகு
  • கிழித்த கோடு
  • மு.மேத்தா சிறுகதைகள்
  • பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
  • "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை நூல்) சாகித்திய அகாதமி விருது

திரைப்படப் பட்டியல்

தொகு
ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் குறிப்பு
1981 அனிச்சமலர் சங்கர் கணேஷ் முதல் திரைப்படம்
1981 பன்னீர் புஷ்பங்கள் இளையராஜா
1982 ஆகாய கங்கை இளையராஜா தேனருவியில் நனைந்திடும் மலரோ
1985 நான் சிகப்பு மனிதன் இளையராஜா பெண் மானே சங்கீதம்
1985 இதய கோவில் இளையராஜா யார் வீட்டில் ரோஜா
1985 உதயகீதம் இளையராஜா பாடு நிலாவே
1985 உன்னை விடமாட்டேன் ஞாயிறு ஒளி மழையில்
1985 உன் கண்ணில் நீர் வழிந்தால்
1986 மரகத வீணை இளையராஜா ஒரு பூவனக்குயில் மாமரத்துல
1987 ரெட்டை வால் குருவி இளையராஜா ராஜராஜ சோழன் நான்
1987 வேலைக்காரன் இளையராஜா அனைத்து பாடல்களும்
1987 கிருஷ்ணன் வந்தான் இளையராஜா
1987 சிறைப்பறவை
1987 மைக்கேல் ராஜ் சந்திரபோஸ் காலம் பொறந்தாச்சு சின்னமயிலே
1988 கலியுகம்
1988 சொல்ல துடிக்குது மனசு இளையராஜா
1988 தாய்ப்பாசம் சந்திரபோஸ்
1989 அன்னக்கிளி சொன்ன கதை
1989 ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான் இளையராஜா
1990 கேளடி கண்மணி இளையராஜா கற்பூர பொம்மையொன்று
1991 இதயவாசல்
1991 தந்துவிட்டேன் ௭ன்னை இளையராஜா தென்றல் நீ தென்றல் நீ
1992 உன்னை வாழ்த்தி பாடுகிறேன் இளையராஜா
1994 பிரியங்கா இளையராஜா
1996 பூமணி இளையராஜா ௭ம்பாட்டு ௭ம்பாட்டு
1997 சூரிய வம்சம் எஸ். ஏ. ராஜ்குமார் நட்சத்திர சன்னலில்
1998 சிம்மராசி சிற்பி
1998 கும்பகோணம் கோபாலு இளையராஜா
1999 ராஜஸ்தான் இளையராஜா
1999 தொடரும் இளையராஜா
1999 நிலவே முகம் காட்டு
2000 பாரதி இளையராஜா மயில்போல பொண்ணு ஒன்னு
2000 இளையவன் இளையராஜா
2001 காசி இளையராஜா ௭ன் மனவானில் சிறகை
2002 இவன் இளையராஜா
2002 ௭ன் மனவானில்
2003 பிதாமகன் இளையராஜா அடடா அகங்கார அரக்க
2005 கரகாட்டக்காரி இளையராஜா
2005 சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி இளையராஜா
2006 உள்ள கடத்தல் பரத்வாஜ்
2007 மாயக்கண்ணாடி இளையராஜா
2007 உதயம்
2008 தனம் இளையராஜா
2009 கண்ணுக்குள்ளே
2009 மத்திய சென்னை
2009 அழகர் மலை இளையராஜா
2010 நந்தலாலா இளையராஜா
2011 அய்யன் இளையராஜா
2012 அஜந்தா இளையராஜா
2013 மத்தாப்பூ
2013 மறந்தேன் மன்னித்தேன் [6]
2014 ஒரு ஊருல இளையராஜா

மேற்கோள்கள்

தொகு
  1. "கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்". https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html. 
  2. "மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது".
  3. அலி, எஸ் ஏ எம் பரக்கத். ""கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது எப்படி?" - மு.மேத்தா பிறந்த தின சிறப்புப் பகிர்வு" (in ta). https://www.vikatan.com/arts/literature/tamil-poet-mu-metha-birthday-special-article. 
  4. "மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  5. சத்தியமார்க்கம் (2013-05-30). "கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!". சத்தியமார்க்கம்.காம் (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
  6. "mu metha filmography". https://www.filmibeat.com/celebs/mumetha/filmography.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._மேத்தா&oldid=4110524" இலிருந்து மீள்விக்கப்பட்டது