ரெம்பிரான்ட்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn )/ˈrɛmbrænt, -brɑːnt/ [2](ஜூலை 15, 1606 – அக்டோபர் 4, 1669) ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு ஓவியர், அரிப்புவகை அச்சுகள் செய்பவர். இவர் ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியர், அரிப்பு அச்சுசெய்பவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்றார். வரலாற்று நோக்கில் டச்சு ஓவியர்களிலேயே தலை சிறந்தவராகக் கருதப்படுகின்றார்[3] இவருடைய படைப்புகள் வெளிவந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் டச்சின் பொற்காலம் எனப் புகழ்கின்றனர்.
ரெம்பிராண்ட் வேன் ரைன் | |
---|---|
சுய உருவப் படம் (1659),வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் | |
பிறப்பு | ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் 15 சூலை 1606 [1] லைடன், இடச்சுக் குடியரசு (தற்போது நெதர்லாந்து) |
இறப்பு | 4 அக்டோபர் 1669 ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு ,(தற்போது நெதர்லாந்து) | (அகவை 63)
தேசியம் | டச்சு |
கல்வி | ஜேக்கப் வான் ஸ்வானன்பேர்க், பீட்டர் லாஸ்ட்மேன் |
அறியப்படுவது | ஓவியம் வரைதல் , அச்சு நகலெடுத்தல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ரெம்பிராண்டின் சுய உருவப் படம் நிக்கோலசின் உடற்கூறியல் பாடம் (1632) 'தெ நைட் வாட்ச் (1642) |
அரசியல் இயக்கம் | ஒவியம் வரைதலில் டச்சின் பொற்காலம் |
இளமையிலேயே தன் கலையில் புகழ் பெற்றிருந்தும் பிற்காலத்தில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில இன்னல்களினால் பொருளாதார நலிவிற்கு ஆளானார்.
வாழ்க்கை
தொகுரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் [4] (Rembrandt Harmenszoon van Rijn ) சூலை 15,1606 ஆம் ஆண்டு லைடனில் பிறந்தார். தற்போது அது நெதர்லாந்தில் உள்ளது. இவருடைய பெற்றோருக்கு இவர் ஒன்பதாவது குழந்தை .[5] இவருடைய பெற்றோர்கள் சற்று வசதி படைத்தவர்களாக இருந்துள்ளனர். இவருடைய தந்தை அரவைத்தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தாயாரின் பெற்றோர்கள் அடுமனை வைத்திருந்தனர். இவருடைய ஓவியத்தின் மையக் கருவாகச் சமயம் இருந்தது. இவருடைய தாயார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர் என்றும் இவரின் தந்தை டச்சு கிறிஸ்துவ மறுமலர்ச்சி சபையைச் சார்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவருடைய அனைத்து பணிகளிலும் கிறித்துவ சமய தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் இவர் எந்த சபையைச் சார்ந்தவர் என்பது பற்றிய ஒரு தெளிவான சான்றுகள் இல்லை
ரெம்பிரான்ட் லைடன் பல்கழைக்கழகத்திற்குச் சென்ற போதிலும் அவர் வரைதல் கலை மீதே அதிக ஆர்வம் செலுத்தினார், ஆதலால் தான் அவர் ஒரு பிரபல்யமான ஓவியராக வந்தார். 1631 ஆம் ஆண்டில் வாழ்க்கை நடத்த ஆம்ஸ்டர்டம் நகருக்குச் சென்றார், ஏனெனில் அங்கிருந்த மக்கள் சிலர் தமது உருவப்படங்களை வரைந்து தருமாறு கோரிக்கை வைத்ததால் அங்கு சென்றார். 1634 ஆம் ஆண்டில் சசிகா வன் உலென்பேர்க் (Saskia van Uylenberg) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர், எனினும் மூன்று பிள்ளைகள் இளைமையிலேயே இறந்து விட்டனர். அவர்களில் 1641 ஆம் ஆண்டில் பிறந்த டிடஸ் (Titus) எனும் பிள்ளையே முதியவனாகும் வரை உயிருடன் இருந்தான். ரெம்பிரான்டின் மனைவி சசிகா டிடஸ் பிறந்து ஒரு வருடத்திற்கு பின் காச நோயால் 1642 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாள்.
சசிகா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது பணியமர்த்தப்பட்ட செவிலியர் ரெம்பிரான்டின் காதலியாக மாறினார். ஆனால் அவள் ரெம்பிரான்டிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி குற்றம் இழைத்தாள். ரெம்பிரான்ட் சசிகாவிற்குக் கொடுத்த நகையை வைத்து வேலை செய்யுமிடமொன்றில் சேர்ந்து கொண்டார்.
பின்பு ரெம்பிரான்ட் அவரது வேலையாளான ஒரு இளம் பெண்ணுடன் வசித்துவந்தார். அவளின் பெயர் ஹென்ட்ரிக்ஜே ஸ்டொஃபெல்ஸ் (Hendrickje Stoffels) என்பதாகும். அப்பெண் கோர்னெலிஆ (Cornelia) எனும் மகளையும் பெற்றெடுத்தாள். இறுதியாக 1669 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் திகதி மரணமடைந்தார்.
படைப்புக்கள்
தொகுபடம் | தலைப்பு | ஆண்டு | செய்நுட்பம் | வடிவமைப்புகள்(செ. மீ) | காட்சியமைப்பு | எண்கள் | கருத்துகள் | விக்கித்தரவு | |
---|---|---|---|---|---|---|---|---|---|
தெ ஸ்பெக்டகிள்ஸ்
சுற்றித் திரிந்து விற்பனை அசெய்பவர் ( பெட்லர்) |
c. 1624 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 21 x 17.8 | தெ லெஹென்ஹால் அருங்காட்சியகம்
|
1 | அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் | Q21405958 | ||
மூன்று பாடகர்கள் (கேட்டல்) | c. 1624-1625 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 21.6 x 17.8. | லைடன் சேகரிப்பு | 2 | அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் | Q21406034 | ||
அறுவை சிகிச்சை
(தொடுதல்) |
c. 1624-1625 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 21.5 x 17.7 | லைடன் சேகரிப்பு | 3 | அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் | Q21406026 | ||
சுயநினைவில்லாத நோயாளி (முகர்தல்) | c. 1624-1625 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 21.5 x 17.7 | லைடன் சேகரிப்பு | 3A | அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் | Q27885055 | ||
புனித ஸ்டீபன் மீது கல்லெறிதல் | 1625 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 89.5 x 123.6 | லயான் நுண்கலை அருங்காட்சியகம் | 5 | Q2646680 | |||
ஓவியத்தின் வரலாறு | 1626 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 90 x 122 | தெ லெஹென்ஹால் அருங்காட்சியகம்
|
7 | இதுபற்றிய விவாதம் தற்போது வரை நடைபெற்றுக் கொன்டிருக்கிறது | Q13726955 | ||
நீராட்டுச் சடங்கு செய்தல் | 1626 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 63.5 x 48 | புனித கேத்தரின் அருங்காட்சியகம் | 9 | Q13571486 | |||
இசையின் உருவகம் | c. 1626 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 63.4 x 47.6 | ஆம்ஸ்டெர்டம் அருங்காட்சியகம் | 11 | Q3686099 | |||
எகிப்திய பயனம் | 1627 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 27.5 x 24.7 | 13 | Q2488726 | ||||
உன்னதத்தின் பெரிய மனிதன் | 1627 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 31.7 x 42.5 | பெர்லின் | 14 | Q11830152 | |||
சிறையில் அப்போஸ்தலன் பவுல் | 1627 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 72.8 x 60.2 | தேசிய அருங்காட்சியகம் - ஸ்டுகார்ட் | 15 | ஓவியத்தின் இரு புறமும் இருட்டாக உள்ளது. | Q16622054 | ||
கோவிலில் சைமன் | 1628 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 55.4 x 43.7 | ஹம்பர்க் | 16 | மேரியின் மேலாடைகள் வேறொரு நபரால் வரையப்பட்டது, முதலில் அது சாம்பல் நிறமாக இருந்தது. | Q21406189 | ||
காலில் அறுவை சிகிச்சை | 1628 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 31.8 x 24.4 | தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது | 17 | Q21549398 | |||
ரெம்பிராண்ட் (சிரித்த முகத் தோற்றம்) | 1628 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 22.2 x 17.1 | ஜே. பால்கெட்டி அருங்காட்சியகம் | 18 | Q20178648 | |||
கண்ணாடியில் சுய உருவப் படம் பற்றிய ஆய்வு | 1628 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 42.8 x 33 | இண்டியானாபோலிஸ் கலை அருங்காட்சியகம் | 19 | Q16167060 | |||
டர்பன் அணிந்த மனிதன் | 1628 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 26.7 x 20.3 | தெ க்ரேமர் சேகரிப்பு | 21 | Q21473970 | |||
ஓவியர் அவருடைய படமனையில் | 1628 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 24.8 x 31.7 | பாஸ்டன் கலை அருங்காட்சியகம் | 24 | Q3905873 | |||
எம்மாவுவில் இரவு உணவு | 1629 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 37.4 x 42.3 | பாரிஸ் அருங்காட்சியகம் | 25 | Q21401882 | |||
இரண்டு முதியவர்களின்
விவாதம்( புனித பீட்டர் மற்றும் புனித பால்) |
1628 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 72.3 x 59.5 | விக்டோரியா தேசிய அருங்காட்சியகம் மெல்பேர்ண் | 27 | Q9247900 | |||
சிறையில் புனித பீட்டர் | 1631 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 59.1 x 47.8 | இஸ்ரேல் அருங்காட்சியகம், எருசலேம் | 40 | Q3947822 | |||
நல்ல மேய்ப்பன் | 1630 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 24.2 x 19.8 | இலண்டன் | 42 | Q21558277 | |||
ஆணின் உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 90.8 x 68.57 | வியன்னாஅருங்காட்சியகம் | 62 ஏ | ||||
பெண்ணின் உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 90 x 68 | வியன்னாஅருங்காட்சியகம் | 62 பி | ||||
ஆணின் உருவப் படம்( வான் பெர்ஸரென் குடும்பத்தினர்) | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 112 x 89 | பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்
நியூயார்க் |
63 ஏ | Q20167032 | |||
பெண்ணின் உருவப் படம்( வான் பெர்ஸரென் குடும்பத்தினர்) | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 112.5 x 88.8 | பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்
நியூயார்க் |
63 பி | Q20167179 | |||
அம்ர்ந்து இருக்கும் பெண்ணின் உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 92 x 71 | வியன்னாஅருங்காட்சியகம் | 64 பி | Q21406458 | |||
சுய உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 21.8 x 16.3 | தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது | 69 | Q21596800 | |||
ஜோரிஸ் டி கவுல்லரி உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 102.5 x 83.8 | சான் பிரான்சிஸ்கோகலைஅருங்காட்சியகம் | 70 | Q20198794 | |||
இளம் வயது ஆணின் உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 63 x 46 | ஆச்சென் அருங்காட்சியகம் | 71 | Q21509305 | |||
40 வயது நபரின் (ஆண்) உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 75.6 x 52.1 | பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்
நியூயார்க் |
73 | Q19905235 | |||
39 வயது பெண்ணுடைய உருவப் படம் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 74.5 x 55 | 74 | பெண்ணின் கை வேறொரு ஓவியரால் வரையப்பட்டது | Q21596897 | |||
தாடி வைத்த முதிய மனிதர் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 66.5 x 51 | ஃபாக் அருங்காட்சியகம், கேம்பிரிட்ச் | 81 | Q21541684 | |||
தங்க நகை அணிந்திருக்கும் முதிய மனிதர் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 59 x 46.5 | கேசெல் | 82 | Q21406264 | |||
தூதர் பீட்டர் | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 81.3 x 66.2 | தேசிய அருங்காட்சியகம், ஸ்டாக்ஹாம் | 83 | Q18573359 | |||
சாளரத்தின் அருகில் ஒரு அறிஞர் ('கமர்லிக்ட்' ஒரு ஆய்வு) | 1632 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 60.8 x 47.3 | தேசிய அருங்காட்சியகம், ஸ்டாக்ஹாம் | 85 | Q21416454 | |||
ஆணின் உருவப் படம் | 1633 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 128.5 x 100.5 | கேசெல் | 91 | Q18602834 | |||
இளம் வயது பெண்ணின் உருவப் படம் | 1633 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 63.5 x 47.5 | ஹாஸ்டன் கலை அருங்காட்சியகம் | 93 | Q21468651 | |||
தஙகச் செயின் அணிந்திருக்கும் நபரின் சுய உருவப் படம் | 1633 | மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் | 61 x 48.1 | லூவர் அருங்காட்சியகம், பாரிஸ் | 96 | Q21406865 |
காட்சி வரிசை
தொகுசுய உருவப்படம்
தொகுஓவியங்கள்
தொகு-
இளமைக் காலத்தில் ரெம்பிரான்டின் தோற்றம், (c. 1628, அவர் 22 வயதில் இருக்கும் போது).
-
சுய உருவப்படம், c. 1629; ஜேர்மனிஸ்கெஸ் தேசிய அருங்காட்சியகம், நியூரெம்பேர்க்
-
மகிழ்வுடன் இருக்கும் காட்சி, ரெம்பிரான் சிரிக்கும் போது, c. 1628, 2008 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது,[6] ஜெ. பவுல் ஜெட்டி அருங்காட்சியகம், லாஸ் ஏஞ்சலஸ்
-
சுய உருவப்படம், 1630, தேசிய அருங்காட்சியகம், ஸ்டாக்ஹோம்
தாளில்
தொகு-
சுய உருவப்படம், பேனை, தூரிகை மற்றும் மை போன்றவற்றால் வரையப்பட்டது., c. 1628-1629
-
Self-portrait(நாடகப் பாத்திரமாக), 1634
-
சூசன்னா மற்றும் முதியோர்கள், ஓவியம், 1634
-
சசிக்காவுடனான சுய உருவப்படம், பொறித்தல், 1636
மேற்கோள்களும் அடிக்குறிப்புக்ளும்
தொகு- ↑ Or possibly 1607 as on 10 June 1634 he himself claimed to be 26 years old. See Is the Rembrandt Year being celebrated one year too soon? One year too late? and (டச்சு) J. de Jong, Rembrandts geboortejaar een jaar te vroeg gevierd for sources concerning Rembrandts birth year, especially supporting 1607. However, most sources continue to use 1606.
- ↑ "Rembrandt" பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம். Random House Webster's Unabridged Dictionary.
- ↑ Gombrich, p. 420.
- ↑ This version of his first name, "Rembrandt" with a "d," first appeared in his signatures in 1633. Until then, he had signed with a combination of initials or monograms. In late 1632, he began signing solely with his first name, "Rembrant". He added the "d" in the following year and stuck to this spelling for the rest of his life. Although we can only speculate, this change must have had a meaning for Rembrandt, which is generally interpreted as his wanting to be known by his first name like the great figures of the Italian Renaissance: Leonardo, Raphael etc., (who did not sign with their first names, if at all). Rembrandt-signature-file.com பரணிடப்பட்டது 9 ஏப்பிரல் 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bull, et al., p. 28.
- ↑ E. van de Wetering, 'Rembrandt laughing, c. 1628 – a painting resurfaces' in Kroniek van het Rembrandthuis, June 2008