ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)
ராஸ் தீவு (Ross Island) (அரசு ஏற்புப் பெற்ற பெயர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவுகள்) அந்தமான் தீவுக் கூட்டதில் உள்ள ஒரு தீவாகும். தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு போர்ட் பிளேருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
Etymology | Named after Captain Daniel Ross |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11°40′31″N 92°45′47″E / 11.67528°N 92.76306°Eஆள்கூறுகள்: 11°40′31″N 92°45′47″E / 11.67528°N 92.76306°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 0.312 km2 (0.120 sq mi)[1] |
நீளம் | 1.25 km (0.777 mi) |
அகலம் | 0.52 km (0.323 mi) |
கரையோரம் | 3.20 km (1.988 mi) |
உயர்ந்த ஏற்றம் | 45 m (148 ft)[2] |
நிர்வாகம் | |
District | தெற்கு அந்தமான் |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
Island sub-group | Port Blair Islands |
Tehsil | போர்ட் பிளேர் |
பெரிய குடியிருப்பு | INS Jarawa quarters |
மக்கள் | |
மக்கள்தொகை | 10 (2011) |
தரவரிசை | None ,as not a state |
அடர்த்தி | 32 /km2 (83 /sq mi) |
தரவரிசை | None ,as not a state |
இனக்குழுக்கள் | இந்து, Andamanese |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744101[3] |
Telephone code | 031927[4] |
ISO code | IN-AN-00[5] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 30.2 °C (86.4 °F) |
Avg. winter temperature | 23.0 °C (73.4 °F) |
Sex ratio | 1.2♂/♀ |
Census Code | 35.639.0004 |
Official Languages | இந்தி, ஆங்கிலம் |
வரலாறுதொகு
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது 1857-இல் ஏற்பட்ட கலங்களுக்குப் பிறகு ஆங்கில அரசு அந்தமானில் சிறை ஒன்றைக் கட்டி அங்கு போராட்ட வீரர்களை அடைத்தது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திற்கும் தங்கியிருப்பதற்கும் இத்தீவு பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது 1942-இல் இருந்து 1945 வரை சப்பானியர் வசம் அந்தமான் தீவு வந்தது. இந்தக் காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசு இத்தீவில் இந்தியக் கொடியேற்றினார். அதன் நினைவாக 2018-ஆம் ஆண்டு திசம்பர் 30-ஆம் நாள் இதன் பெயர் ராஸ் தீவு என்பதில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவு என்று மாற்றப்பட்டது.
தற்போது இது இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பொதுமக்கள் குடியேற அனுமதி இல்லை.
திரைப்படங்களில் ராஸ் தீவுதொகு
ராஸ் தீவில் பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. சில திரைப்படங்கள் மற்றம் விவரங்கள்,
- காக்க காக்க திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
- கடல் திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துதொகு
போர்ட் பிளேரிலிருந்து விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.
படங்கள்தொகு
உசாத்துணைதொகு
- ↑ "Islandwise Area and Population – 2011 Census" (PDF). Government of Andaman. 2017-08-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-05-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23.
- ↑ "A&N Islands – Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. 22 September 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: BOT: original-url status unknown (link)
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. 2019-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
வெளி இணைப்புகள்தொகு
- அந்தமான் நிக்கோபார் சுற்றுலா இணையதளம் பரணிடப்பட்டது 2009-05-20 at the வந்தவழி இயந்திரம்