ரியான் ஹாரிஸ்
ரியான் ஜேம்ஸ் ஹாரிஸ் (Ryan James Harris பிறப்பு: அக்டோபர் 11, 1979) என்பவர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். வலதுகை விரைவு வீச்சாளரான இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். வலதுகை விரைவு வீச்சாளரான இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 603 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் 113 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 5 இழப்புகளை 5 முறை கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 23.52 ஆகும். 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 48 ஓட்டங்களை 8.00 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் 44 எடுத்தது ஆகும். பந்துவீச்சில் 44 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 5 இழப்புகளை 3 முறை கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 26.53 ஆகும். மேலும் இவர் 81 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2047 ஓட்டங்களையும் 299 இழப்புகளையும் கைப்பற்றியுள்ளார், 85 பட்டியல் அ போட்டிகளில் விளையாடி 411 ஓட்டங்களையும் 123 இழப்புகளையும் எடுத்துள்ளார்.ஆத்திரேலியாவின் மிகச் சிறந்த விரைவு வீசாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.[4]
2014 இல் ஹாரிஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரியான் ஜேம்ஸ் ஹாரிஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 11 அக்டோபர் 1979 சிட்னி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ரினோ[1] ரியானோ[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.81[3] m (5 அடி 11 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை, விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 413) | 19 மார்ச் 2010 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 6 சனவரி 2015 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 169) | 18 சனவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 24 February 2012 எ. Sri Lanka | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001/02–2007/08 | தென் ஆத்திரேலியா (squad no. 24) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | சசெக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008/09–2014/15 | குயீன்சுலாந்து (squad no. 45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–2010 | டெக்கான் சார்ஜர்ஸ் (squad no. 7) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009 | சர்ரே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–2013/14 | பிரிசுபேன் ஹீட் (squad no. 45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 10 சனவரி 2015 |
தொழில் வாழ்க்கை
தொகுரியான் ஹாரிஸ் 2001-02 முதல் 2007-08 வரை தெற்கு ரெட்பேக் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அவர் 2008 மே மாதத்தில் சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தவிருந்தார்.ஆனால், அவர் குயின்ஸ்லாந்துக்குச் சென்றபோது விளையாட இயலாமல் போனது. ஏனெனில் அது அவரது சசெக்ஸ் துடுப்பாட்ட ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகும். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்திற்கு எதிராக சசெக்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியிருந்தார். ஜூன், 2009 ஆம் ஆண்டில், அவர் ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தில் சர்ரே துடுப்பாட்ட அணி சார்பாக கையெழுத்திட்டார்,[5] அதே நேரத்தில் 2010 ஆம் ஆண்டில் அவர் யார்க்ஷயர் துடுப்பாட்ட அணிக்காக உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[6]
ஹாரிஸ் 2008 இல் குயின்ஸ்லாந்து சென்றார் மற்றும் பிரிஸ்பேனில் உள்ள டூம்புல் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தில் விளையாடினார்.[7]
தென்னாப்பிரிக்காவில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஹாரிஸ் விளையாடினார். 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், டெக்கான் சார்ஜர்ஸ் உடனான இந்தியன் பிரீமியர் லீக் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்தத் துடுப்பாட்ட அணியினை அவரது முன்னாள் ரெட்பேக்ஸ் அணியின் வீரர் டேரன் லெஹ்மன் பயிற்றுவித்தார். 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியன் இருபது-20 அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹாரிஸ் 18 ஜனவரி 2009 அன்று ஹோபார்ட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இந்தப் போட்டியின் போது அவர் நீல் மெக்கென்சியின் இழப்பினை தனது முதல் இழப்பாக எடுத்தார். அந்தப் போட்டியில் 54 இழப்புகளை விட்டுக் கொடுத்து ஒரு இழப்பினை மட்டுமே எடுத்தார்.[8] ஆயினும்கூட, அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக மற்றொரு ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஜனவரி 26, 2010 அன்று, அடிலெய்ட் ஓவலில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஹாரிஸ் தேர்வானார்.
சான்றுகள்
தொகு- ↑ Ronay, Barney (19 July 2013). "The Ashes 2013: Ryan 'Rhino' Harris gives Australia first blood". தி கார்டியன். https://www.theguardian.com/sport/2013/jul/18/the-ashes-ryan-harris-england-australia. பார்த்த நாள்: 16 December 2013.
- ↑ "Cricinfo profile". Content.cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
- ↑ "Ryan Harris". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 4 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ICC (2015-09-10). "ICC Player Rankings". ICC Development (International) Ltd. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.
- ↑ "Surrey sign Ryan Harris". Britoval.com. Archived from the original on 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
- ↑ Cricket (2009-10-15). "Australian paceman Ryan Harris joins Yorkshire". Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
- ↑ http://www.couriermail.com.au/sport/cricket/ryan-harris-hundred-australia-test-bowler-hits-century-playing-as-batsman-in-grade-cricket/news-story/6261a08b067b8b896771a37cfdee37fa
- ↑ "Ryan Harris". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.