ரெஜினா கசாண்ட்ரா

(ரெஜினா கசான்ட்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரெஜினா கசாண்ட்ரா (Regina Cassandra) இவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் சிவா மனசுலோ ஸ்ருதி (2012) என்ற தெலுங்கு படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார்.[2]

ரெஜினா கசாண்ட்ரா
2013இல் ரெஜினா கசான்ட்ரா
பிறப்பு13 திசம்பர் 1990 (1990-12-13) (அகவை 34)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்பொழுது வரை

ஆரம்ப வாழ்க்கை

தொகு

ரெஜினா 13 டிசம்பர் 1990இல் சென்னையில் பிறந்தார்.[3] இவரின் தாய் மொழி தமிழ் ஆகும். சென்னையிலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். பல குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார். பின்னர் இப்படம் 2012 இல் அதே பெயரில் முழு நீளப்படமாக உருவாக்கப்பட்டது.

திரைப்பட வாழ்க்கை

தொகு

பிரசன்னா மற்றும் லைலா நடித்து 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதைமாந்தராக அறிமுகமானார். 2006்ம் ஆண்டு அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியுடன் இணைந்து நாயகியாக நடித்தார். ஆதித் அருணுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்தார், பின்னர் அப்படம் புதிய நடிகர்கள் நடித்து தாமதமாக 2012 இல் வெளிவந்தது.

2010ம் ஆண்டு இயக்குநர் கே .எம் .சைதன்யா இயக்கத்தில் வெளியான சூர்யகாந்தி என்ற கன்னடத் திரைப்படத்தில் நடிகர் சேதன் குமாரின் இணையாக அறிமுகமானார். 2012ம் ஆண்டு சிவா மனசுலோ ஸ்ருதி என்ற என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான போது இரண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை வென்றார்.

அதை தொடர்து 2013ம் ஆண்டு விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் இணையாக நடித்தார். அந்தப்படம் மதிப்புரைஞர்களாலும் பார்வையாளர்களாலும் பாராட்டப் பெற்றது. அதே ஆண்டு அவர் நடித்து வெளியான நிர்ணயம் என்ற படம் கலவையான மதிப்புரையைப் பெற்றது.

2019ம் ஆண்டு எக் லடுகி கோ தேக்கா தோ ஐசா லகா என்ற திரைப்படத்தின் மூலம் இந்தித் திரைத்துறையில் அறிமுகமானார.

2022ம் ஆண்டு வெளியான ராக்கெட் பாய்ஸ் என்ற வலைதொடரில் மிருணாளினி சாராபாயாக நடித்து இணையத்திரையில் அறிமுகமானார்.

திரைப்படங்கள்

தொகு
Year Film Role Language Notes
2005 கண்ட நாள் முதல் (திரைப்படம்) லதா தமிழ்
2006 அழகிய அசுரா மகாலட்சுமி தமிழ்
2008 பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்) கடவுள் சீதை தமிழ் கௌரவத் தோற்றம்
2010 சூர்யகாந்தி காந்தி கன்னடம்
2012 சிவா மனசுலோ சுருதி சுருதி தெலுங்கு தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் — தெலுங்கு
ரோடீன் லவ் ஸ்டோரி தான்வி தெலுங்கு
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பாப்பா தமிழ்
நிர்ணயம் ஜெனி தமிழ்
2014 கொத்த ஜன்தா சுவர்ணா தெலுங்கு
ரா ரா... கிருஷ்ணய்யா நந்து தெலுங்கு
பவர் வைஷ்ணவி தெலுங்கு
பிள்ள நூவு லேனி ஜீவிதம் ஷைலஜா தெலுங்கு
2015 ராஜதந்திரம் (2015 திரைப்படம்) மெல்லோ தமிழ்
சுப்ரமணியம் பார் சேல் சீத்தா தெலுங்கு
சௌக்கியம் ஷைலஜா தெலுங்கு
2016 சௌரியா நேத்ரா தெலுங்கு
ஜோ அச்சுதானந்தா ஜோத்ஸ்னா தெலுங்கு பரிந்துரை -தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் - தெலுங்கு
சங்கரா பாப்பு தெலுங்கு
2017 மாநகரம் (திரைப்படம்) இளம்பெண் தமிழ்
சரவணன் இருக்க பயமேன் தேன்மொழி தமிழ்
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் லாவண்யா தமிழ்
நட்சத்திரம் ஜமுனா தெலுங்கு
பாலகிருஷ்ண்டு ஆத்யா தெலுங்கு
2018 ஆவ் மீரா தெலுங்கு
மிஸ்டர். சந்திரமௌலி மது தமிழ்
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் ராஜி தமிழ்
2019 ஏக் லடுக்கி கோ தேக்கா தோ ஐஸா லகா குஹு இந்தி பாலிவுட் அறிமுகம்
7 சரஸ்வதி தமிழ்
தெலுங்கு
எவரு சமீரா மகா தெலுங்கு
2021 சக்ரா லீலா தமிழ்
நெஞ்சம் மறப்பதில்லை மரியம் தமிழ்
கசட தபற திரிஷா தமிழ்
தலைவி சரோஜா தேவி தமிழ்
முகிழ் ராதிகா தமிழ்
2022 1945 ஆனந்தி தமிழ்
தெலுங்கு
ஆச்சார்யா மந்தாகினி தெலுங்கு
பிற பார்ட்டி (திரைப்படம்) மது தமிழ் தாமதம்
கள்ளப்பார்ட் தமிழ் முடிவடைந்துவிட்டது

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Regina Cassandra Biography
  2. "SIIMA WINNER'S 2013 (Telugu)". பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  3. Panchal, Salil (2021-10-19). "Regina Cassandra: The dependable". forbesindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெஜினா_கசாண்ட்ரா&oldid=4160475" இலிருந்து மீள்விக்கப்பட்டது