ரெஜினா கஸ்ஸாண்ட்ரா


ரெஜினா கஸ்ஸாண்ட்ரா தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். அவர் பிளாஷ் என்ற குழந்தைகள் 'சேனலுக்கு ஒன்பது வயதாக இருந்த போது, ​​அவர் விளம்பரங்களில் பணிபுரிந்தார். பல குறும் படங்களில் அவர் நடித்தார், குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி? அது பின்னர் அதே பெயரில் 2012 இல் ஒரு சிறப்புப் படமாக உருவாக்கப்பட்டது.

பிறப்பு மற்றும் இளமை பருவம்தொகு

ரெஜினா கஸ்ஸாண்ட்ரா, தமிழ்நாட்டில் சென்னையில் டிசம்பர் 13, 1990 இல் பிறந்தார் . இவர் சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். முதல் தமிழ் திரைப்பட த்தில்- கண்ட நாள் முதல் படத்தில் தன் 16 வயதில் லதா என்ற 21 வயது கர்ப்பஸ்திரீ வேடத்தில் ஒப்பனையின்றி மிக அருமையாய் நடித்தார் . 2012 சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு படம் இவருக்கு SIIMA விருதை பெற்று தந்தது

சினிமாவாழ்க்கைதொகு

அழகிய அசுரா திரைப்படத்தில் நடிகர் யோகியுடன் இணைந்து நடித்து, நல்ல விமர்சனங்களைப் பெற்றார். ரெஜினா அடுத்த கன்னட படமான சூரிய காந்தியில்,இயக்குனர் கே .எம் .சைதன்யா இயக்கத்தில் நடிகர் சேதனுடன் ஜோடி சேர்ந்தார் . மேலும் அவர் கன்னட மொழியில் பேச முடியாததால் ஆங்கிலத்தில் வசனங்களை பேசி ,கன்னட வசனமாய் மாற்றப்பட்டது . இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மற்றும் வசூலில் வெற்றி பெற்றது. ஆதித் அருணுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்தார் . பின்னர் அப்படம் தாமதமாயும்,புதிய நடிகர் நடிகையுடன் நடித்து 2012 இல் வெளிவந்தது. அடுத்து சிவா மனசுல சக்தி தெலுங்கில் சிவா மனசுல சுருதியாய் வெளிவந்து இவருக்கு SIIMA விருது பெற்றது 2012. 2013 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் இரண்டு தமிழ் படங்கள் வெளிவந்தன .அதில் பாண்டிராஜின் கேடி பில்லா கில்லடி ரங்கா, வெற்றி பெற்றது அடுத்து நிர்ணயம் என்ற படம் ,வசூலில் வெற்றி பெற வில்லை . பின்னர் அதிகமாக தமிழ் படங்களை குறைத்து கொண்டார் .தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெஜினா_கஸ்ஸாண்ட்ரா&oldid=2457222" இருந்து மீள்விக்கப்பட்டது