லகாட் டத்து மக்களவைத் தொகுதி

மலேசிய மக்களவைத் தொகுதி

லகாட் டத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu Federal Constituency; சீனம்: 拿笃国会议席) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; சண்டக்கான் பிரிவு ஆகிய 2 மாநிலப் பிரிவுகளில்; லகாட் டத்து மாவட்டம், கூனாக் மாவட்டம், கினபாத்தாங்கான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P188) ஆகும்.[4]

லகாட் டத்து (P188)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Lahad Datu (P188)
Federal Constituency in Sabah
லகாட் டத்து மக்களவைத் தொகுதி
(P188 Lahad Datu)
மாவட்டம்லகாட் டத்து மாவட்டம்
கூனாக் மாவட்டம்
கினபாத்தாங்கான் மாவட்டம்
வட்டாரம்தாவாவ் பிரிவு
சண்டக்கான் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை100,256 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிலகாட் டத்து மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்லகாட் டத்து; கூனாக்; தாவாவ்
பரப்பளவு8,594 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2019
கட்சி      சபா பாரம்பரிய கட்சி
மக்களவை உறுப்பினர்யூசோப் அப்டால்
(Yusof Apdal)
மக்கள் தொகை299,550 (2020)
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

லகாட் டத்து மக்களவைத் தொகுதி 2019-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2022-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2022-ஆம் ஆண்டில் இருந்து கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[5]

லகாட் டத்து மாவட்டம்

தொகு

லகாட் டத்து மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் லகாட் டத்து நகரம்.

சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 430 கி.மீ. (270 மைல்) தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லகாட் டத்து மாவட்டத்தில் 299,550 மக்கள் வசிக்கின்றனர்.

லகாட் டத்து

தொகு

'டத்து' என்பது பிலிப்பீன்சு தீவுக்கூட்டம் (Philippine Archipelago) முழுவதிலும் உள்ள ஏராளமான பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்களைக் குறிக்கும் ஒரு விருது. பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்கள் என்பது அந்த இனங்களின் தலைவர்கள், அல்லது இறையாண்மை கொண்ட மன்னர்கள் என பலவிதமாகக் குறிப்பிடுகிறது.

லகாட் டத்து பகுதியை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (North Borneo Chartered Company) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, லகாட் டத்து மாவட்டம் நிறுவப்பட்டது. அதன்பிறகு தென்னை கொப்பரை உற்பத்தி; மற்றும் புகையிலை உற்பத்தியில் லகாட் டத்து பகுதி சிறந்து விளங்கியது.

லகாட் டத்து மக்களவைத் தொகுதி

தொகு




 

லகாட் டத்து தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[6]

  மலாயர் (43.47%)
  சீனர் (10%)
  இதர இனத்தவர் (7.8%)





 

லகாட் டத்து தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (51.91%)
  பெண் (48.09%)
 

லகாட் டத்து தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (8.81%)
  21-29 (27.73%)
  30-39 (24.81%)
  40-49 (14.75%)
  50-59 (11.32%)
  60-69 (8.08%)
  70-79 (2.77%)
  80-89 (1%)
  + 90 (0.74%)
லகாட் டத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2019 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லகாட் டத்து தொகுதி 2019-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
14-ஆவது மக்களவை P188 2019-2021 முகமடின் கெத்தாப்பி
(Mohammadin Ketapi)
வாரிசான்
2021 சுயேச்சை
2021–2022 சபா மக்கள் கூட்டணி (GRS)
(பெர்சத்து)
2022 மலேசிய தேசிய கட்சி
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் யூசோப் அப்டால்
(Yusof Apdal)
வாரிசான்

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
யூசோப் அப்டால்
(Yusof Apdal)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)27,11646.6446.64
மாய்சத்தூல் அல்காம் அல்வி
(Maizatul Alkam Alawi)
பாரிசான் நேசனல் (BN)22,74039.1139.11
ஒசுகார் சியா இயூ கோக்
(Oscar Sia Yu Hock)
பாக்காத்தான் (PH)8,28914.2614.26
மொத்தம்58,145100.00
செல்லுபடியான வாக்குகள்58,14598.27
செல்லாத/வெற்று வாக்குகள்1,0221.73
மொத்த வாக்குகள்59,167100.00
பதிவான வாக்குகள்1,00,25659.0258.00
Majority4,3767.53
      சபா பாரம்பரிய கட்சி கைப்பற்றியது (தொகுதியின் முதல் தேர்தல்)
மூலம்: [7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  7. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு