லிவர்பூல்

(லிவர்ப்பூல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லிவர்பூல் இங்கிலாந்தின் மெர்ஸெ முகத்துவாரத்தின் கிழக்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாநகரம் மற்றும் பெருநகர பரோ ஆகும். ஒரு பரோவாக 1207 ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டு 1880 ஆம் ஆண்டில் மாநகர அந்தஸ்து வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் நான்காம் பெரிய நகரமான லிவர்பூல் நகரத்தில் 435,500 பேர் வசிக்கின்றனர். இப்பெருநகரம் 816,216 பேர்[2] மக்கள்தொகை கொண்ட பரந்த லிவர்பூல் நகரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.

Liverpool
மேல் இடதில் இருந்து கடிகாரச் சுற்றில்: கவர்ன் கிளப், பையர் ஹெட்டின் மூன்று கருணைகளான லிவர் பில்டிங், கனார்டு பில்டிங் மற்றும் லிவர்பூல் துறைமுக கட்டிடம் ஆகியவை, ஆல்பர்ட் துறை மற்றும் செயிண்ட் ஜார்ஜ் ஹால்
மேல் இடதில் இருந்து கடிகாரச் சுற்றில்: கவர்ன் கிளப், பையர் ஹெட்டின் மூன்று கருணைகளான லிவர் பில்டிங், கனார்டு பில்டிங் மற்றும் லிவர்பூல் துறைமுக கட்டிடம் ஆகியவை, ஆல்பர்ட் துறை மற்றும் செயிண்ட் ஜார்ஜ் ஹால்
Official logo of Liverpool
Coat of arms of Liverpool City Council
அடைபெயர்(கள்): The Pool
Location within England
Location within England
இறையாண்மை அரசுயுனைடெட் கிங்டம்
நாடுஇங்கிலாந்து
பிராந்தியம்வட மேற்கு இங்கிலாந்து
கவுண்டிமெர்ஸெஸைட்
நிர்வாக தலைமையகம்லிவர்பூல் நகர மையம்
Founded1207
City Status1880
அரசு
 • வகைபெருநகர பரோ, மாநகர்
 • ஆட்சி அமைப்புலிவர்பூல் மாநகர் மன்றம்
பரப்பளவு
 • Metropolitan borough & City111.84 km2 (43.18 sq mi)
ஏற்றம்
70 m (230 ft)
மக்கள்தொகை
 (2007 est / Urban=2006)
 • Metropolitan borough & Cityவார்ப்புரு:EnglishDistrictPopulation ([[List of English districts by population|Ranked வார்ப்புரு:EnglishDistrictRank]])
 • அடர்த்தி5,001/km2 (12,950/sq mi)
 • நகர்ப்புறம்
8,16,900
 • பெருநகர்
11,03,089
 • இனம்
(2007 Estimate)[1]
91.5% White
2.3% Chinese and other
2.3% Asian or Asian British
2.0% Mixed Race
1.9% Black or Black British
நேர வலயம்ஒசநே+0 (கிரீன்விச் சராசரி நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (British Summer Time)
Postal Code
இடக் குறியீடு0151
ISO 3166-2GB-LIV
ONS code00BY
OS grid referenceSJ3490
NUTS 3UKD52
DemonymScouser/Liverpudlian
இணையதளம்www.liverpool.gov.uk

வரலாற்றுரீதியாய் லங்காஷயரின் ஒரு பகுதியாய் லிவர்பூல் அமைந்திருந்தது. ஒரு பெரிய துறைமுகமாய் நகரத்தின் அந்தஸ்து மாறியதின் மூலம் தான் நகரமயமாக்கமும் விரிவாக்கமும் கொண்டு வரப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டு வாக்கில், மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, மற்றும் பிரதான ஐரோப்பா ஆகியவற்றில் இருந்தான வணிகத்துடன் சேர்த்து அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்துடனும் நெருக்கமாய் இணைப்புகள் இருந்தது லிவர்பூலின் பொருளாதார விரிவாக்கத்தை அதிகப்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பவாக்கில், உலக வர்த்தகத்தின் 40% லிவர்பூல் துறைமுகத்தின் கப்பல்துறைகளின் வழியே கடந்து சென்றது. இது ஒரு பெரிய நகரமாக லிவர்பூல் உருவாவதற்கு பங்களித்தது.

லிவர்பூலில் வசிப்பவர்கள் லிவர்புட்லியன்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். ”ஸ்கௌஸ்” என்னும் பிரபலமான உள்ளூர் புழுக்கல் உண்டி வகையைக் குறிப்பிடும் வகையில் ”ஸ்கௌஸர்கள்” என்று அவர்களைக் குறிப்பிடுவதுண்டு. லிவர்பூல் வட்டார மொழிவழக்கு மற்றும் பேச்சுத் தொனியுடனும் இந்த “ஸ்கௌஸ்” என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுவதாகி இருக்கிறது.[3] ஒரு துறைமுக நகரமாக லிலர்பூலின் அந்தஸ்து அதன் பன்முகப்பட்ட மக்கள்தொகைக்கு பங்களிப்பு செய்திருக்கிறது. இந்த மக்கள் வரலாற்றுரீதியாக பலவிதமான மக்கள்தொகைகளில் இருந்து, கலாச்சாரங்களில் இருந்து, மற்றும் மதங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக அயர்லாந்தில் இருந்து வந்தவர்கள். நாட்டில் மிகப் பழமையான கறுப்பு ஆப்பிரிக்க சமுதாயத்திற்கும் ஐரோப்பாவின் மிகப் பழமையான சீன சமுதாயத்திற்கும் கூட இந்த நகரம் தாயகமாய் விளங்குகிறது.

தி பீட்டில்ஸ் மற்றும் மெர்ஸெபீட் ஆகிய இசைக்குழுக்களின் சகாப்தத்தில் இருந்தான பிற குழுக்களின் பிரபலம் ஒரு சுற்றுலாத் தலமாக லிவர்பூலின் அந்தஸ்துக்கு பங்களிப்பு செய்துள்ளது. சுற்றுலா என்பது நகரின் நவீன பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதியை உருவாக்கியுள்ளது. 2007 ஆம் ஆண்டில் இந்நகரம் தனது 800 ஆம் ஆண்டுவிழாவை அனுசரித்தது. 2008 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கலாச்சார தலைநகரம் பட்டத்தை நார்வே நாட்டின் ஸ்டவாங்கர் உடன் இணைந்து இது தக்கவைத்துக் கொண்டது.[4]

2004 ஆம் ஆண்டில், நகர மையம் முழுவதிலுமான பல பகுதிகளுக்கு யுனெஸ்கோ மூலம் உலக பாரம்பரிய தளம் அந்தஸ்து வழங்கப்பட்டது. லிவர்பூல் மெரிடைம் மெர்கண்டைல் சிட்டி என்று குறிப்பிடப்படும் இந்த இடத்தில் நகரின் ஆறு தனித்தனியான இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பையர் ஹெட், ஆல்பர்ட் டாக் மற்றும் வில்லியம் பிரவுன் ஸ்ட்ரீட் ஆகியவையும் மற்றும் நகரின் மிகப் பிரபலமான பல அடையாளங்களும் அடங்கும்.[5]

வரலாறு

தொகு

லிவர்பூல் பரோ நிறுவலை 1207 ஆம் ஆண்டின் கிங் ஜானின் கடிதங்கள் காப்பு ஆவணம் தெரிவிக்கிறது. ஆனாலும் 16 ஆம் நூற்றாண்டு மத்தியில் மக்கள்தொகை வெறும் 500 மட்டுமே இருந்தது. லிவர்பூலின் உண்மையான வீதி வரைபடம் அதற்கு ராயல் சார்ட்டர் அந்தஸ்து வழங்கி பரோ ஆக்கிய சமயத்தில் கிங் ஜான் மூலம் வடிவமைக்கப்பட்டது தான் என்று கூறப்படுகிறது. ஆரம்ப ஏழு வீதிகளும் ஒரு H வடிவத்தில் அமைக்கப்பட்டன:

  • பேங்க் ஸ்ட்ரீட் (இப்போது வாட்டர் ஸ்ட்ரீட்)
  • கேஸில் ஸ்ட்ரீட்
  • சாபெல் ஸ்ட்ரீட்
  • டேல் ஸ்ட்ரீட்
  • ஜக்ளர் ஸ்ட்ரீட் (இப்போது ஹை ஸ்ட்ரீட்)
  • மூர் ஸ்ட்ரீட் (இப்போது டிதெபார்ன் ஸ்ட்ரீட்)
  • ஒயிடேகர் ஸ்ட்ரீட் (இப்போது ஓல்ட் ஹால் ஸ்ட்ரீட்)

17 ஆம் நூற்றாண்டில் வர்த்தகத்திலும் மக்கள்தொகையிலும் மந்தமான வளர்ச்சியே இருந்தது. ஆங்கிலேய உள்நாட்டுப் போர் சமயத்தில் இந்த நகருக்காக யுத்தங்களும் நிகழ்த்தப்பட்டன. இதில் 1644 ஆம் ஆண்டில் நடைபெற்ற பதினெட்டு நாள் முற்றுகையும் அடக்கம். 1699 ஆம் ஆண்டில் லிவர்பூல் நாடாளுமன்ற சட்டம் மூலமாக பாரிஷ் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. அதே வருடத்தில் ஆப்பிரிக்காவுக்கான அதன் முதல் அடிமைக் கப்பலான லிவர்பூல் மெர்ச்சண்ட் புறப்பட்டது. மேற்கு இந்தியத் தீவுகளில் இருந்தான வர்த்தகம் அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் இருந்தானதை விடவும் அதிகமானது. அத்துடன் ரிவர் டீ ஆறும் மணல்மிகுந்து கப்பல் போக்குவரத்து தடைப்பட்டதால், லிவர்பூல் வளர்ச்சியுறத் துவங்கியது. முதல் வர்த்தகரீதியான ஈரக் கப்பல்துறை லிவர்பூலில் 1715 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[6][7] அடிமை வர்த்தகம் மூலம் கிட்டிய கணிசமான லாபம் இந்த நகரம் செல்வத்தில் கொழிக்கவும் துரிதமாய் வளரவும் உதவியது. அந்த நூற்றாண்டு நிறையும் முன், ஐரோப்பாவின் 41% மற்றும் பிரிட்டனின் 80% அடிமை வர்த்தகத்தை லிவர்பூல் கட்டுப்படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள், உலகின் 40% வர்த்தகம் லிவர்பூல் வழியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும் கட்டிடங்கள் கட்டப்பட்டது அதன் செல்வத்தைப் பிரதிபலித்தது. 1830 ஆம் ஆண்டில் நகரங்களுக்கு இடையிலான ரயில் இணைப்பு கொண்ட முதல் நகரங்களாக லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் ஆயின. லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் ரயில்வே மூலம் இந்த திட்டம் நடந்தது. மக்கள்தொகை தொடர்ந்து துரிதமாய் வளர்ச்சி கண்டது. குறிப்பாக 1840களின் சமயத்தில் மகா பஞ்சத்தின் காரணமாக அயர்லாந்து நாட்டில் இருந்து நூறாயிரக்கணக்கான மக்கள் இங்கு குடியேறினர். 1851க்குள்ளாக, நகரின் மக்கள்தொகையில் சுமார் 25% பேர் அயர்லாந்தில் பிறந்தவர்களாய் இருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், லிவர்பூல் ஐரோப்பாவெங்கிலும் இருந்து குடியேற்றதாரர்களை ஈர்த்தது.

 
1830 ஆம் ஆண்டில் லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் இடையிலான துவக்க பயணம். இது தான் முதன்முதல் வர்த்தகரீதியான ரயில்வே பாதை ஆகும்.
 
மோசமான விதியைச் சந்தித்த கடல் கப்பலான RMS டைட்டானிக் பதிவுசெய்யப்பட்ட துறைமுகம் லிவர்பூல். மூழ்கிய கப்பலில் டைட்டானிக், லிவர்பூல் எனும் வார்த்தைகளைக் காணமுடியும். ஏப்ரல் 1912 ஆம் ஆண்டில் இந்த கப்பல் மூழ்கியதில் 1,517 பேர் உயிரிழந்தனர் (ஏராளமான லிவர்புட்லியன்களும் இதில் இருந்தனர்). டைட்டானிக் கப்பலின் என்ஜின் அறை நாயகர்களுக்கான ஒரு நினைவிடம் மாநகரின் நீர்முகத்தில் அமைந்துள்ளது.

1919 ஆம் ஆண்டில் வந்த வீட்டு வசதிச் சட்டத்தின் காரணமாக 1920கள் மற்றும் 1930களில் லிவர்பூல் எங்கும் ஏராளமான மாநகராட்சி மன்ற வீட்டுக் கட்டிடங்கள் வந்தன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நகருக்குள் இருந்து புதிய புறநகர்ப் பகுதி வீட்டுக் குடியிருப்புகளுக்கு இடம்பெயர்த்தப்பட்டன. இது அவர்களது வாழ்க்கைத் தரத்தை மிகவும் உயர்த்தும் என்று காரணம் கூறப்பட்டாலும் அது பெருமளவில் சம்பந்தப்பட்டவர்களைப் பொறுத்ததாகவே அமைந்தது. இந்த சகாப்தத்தில் தனியார் வீடுகளும் ஏராளமான எண்ணிக்கையில் கட்டப்பட்டன. இந்த நிகழ்முறை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும் தொடர்ந்தது. புறநகர்ப் பகுதிகளில் புதிய பல வீட்டுவசதிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதே சமயத்தில் பழைய நகர்ப்புற பகுதிகள் சிலவும் புதிய வீடுகளுக்கு மறுவளர்ச்சியுற்றது.

இரண்டாம் உலகப் போரின் போது மெர்ஸெஸைட் பகுதியில் 80 வான்வழித் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் 2,500 பேர் கொல்லப்பட்டதோடு, பெருநகரப் பகுதியில் இருந்த பாதி வீடுகள் சேதாரமுற்றன. போரினைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க மறுகட்டுமானப் பணிகள் நடந்தன. பெருமளவிலான வீட்டுவசதிக் குடியிருப்புகளும் ஸீஃபோர்த் கப்பல்துறையும் இதில் அடக்கம். இத்துறை பிரிட்டனின் மிகப்பெரும் கப்பற்துறை திட்டமாகும். நகர் மையத்தில் உடனடியாக நடந்த மறுகட்டுமானப் பணிகளில் அநேகமானவை ஆழமான வெறுப்பைச் சம்பாதித்தன. 1950கள் மற்றும் 1960களில் நடந்த நகர் திட்டமிடல் புதுப்பிப்பு போல பிழைபட்டதாய் இருந்தன. இந்த புதுப்பிப்பில் ஜெர்மன் குண்டுவீச்சுக்குத் தப்பிய நகரின் பாரம்பரிய பகுதிகளும் கூட இந்த நகர்ப்புற புதுப்பிப்பு பணிகளுக்குத் தப்பவியலாமல் போனது. 1952 முதல் லிவர்பூல் நகரம் போர் சமயத்தில் தன்னைப் போன்றே வான்வெளித் தாக்குதல்களைச் சந்தித்த ஜெர்மனியின் கலோன் நகருடன் இரட்டைப்படுத்திப் பார்க்கப்பட்டிருக்கிறது.

1960களில் ”மெர்ஸெபீட்” இசையொலியின் மையமாக லிவர்பூல் இருந்தது. இந்த ஒலி தி பீட்டில்ஸ் மற்றும் சக லிவர்புட்லியன் ராக் குழுக்களின் இசையை ஒத்திருந்தது.

1970களின் மத்திய காலம் தொடங்கி லிவர்பூலின் கப்பல்துறைகளும் பாரம்பரியமான உற்பத்தி ஆலைகளும் கூர்மையான சரிவைச் சந்தித்துள்ளன. பெருங்கொள்கலன்மயமாக்கலால் நகரின் கப்பல்துறைகள் பெருமளவில் பயனொழிந்து போனது. 1980களின் ஆரம்பவாக்கில் லிவர்பூலில் வேலைவாய்ப்பின்மை விகிதம் இங்கிலாந்தில் மிக உயர்ந்தவற்றில் ஒன்றாக இருந்தது. சமீப வருடங்களில், லிவர்பூலின் பொருளாதாரம் மீட்சி கண்டிருக்கிறது. அத்துடன் தொன்னூறுகளின் மத்திய காலம் முதல் தேசிய சராசரியை விட அதிகமான வளர்ச்சி விகிதங்களைக் கண்டு வந்திருக்கிறது.

 
தி பீட்டில்ஸ் குழு தொடர்பான பல சுற்றுலா இடங்களில் 20 ஃபோர்த்லின் சாலை ஒன்றாகும்.

முன்னதாக லங்காஷயரின் ஒரு பகுதியாகவும், 1989 முதல் ஒரு கவுண்டி பரோவாகவும் இருந்த லிவர்பூல் 1974 ஆம் ஆண்டில் புதிதாக உருவாகியிருந்த மெர்ஸெஸைட் பெருநகரக் கவுண்டிக்கு உட்பட்ட பெருநகர பரோவாக ஆனது.

20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் லிவர்பூல் மறுஉருவாக்கத்தில் கவனம் செலுத்தத் துவங்கியது. இந்த நிகழ்முறை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2002 ஆம் ஆண்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் தங்க விழாவை கொண்டாடும் வகையில், பிளாண்ட்லைஃப் என்னும் உயிரியல் பாதுகாப்பு தொண்டு அமைப்பு கவுண்டி பூக்களைத் தேர்வு செய்வதற்கு ஒரு போட்டியை ஏற்பாடு செய்தது; லிவர்பூலுக்கான இறுதித் தேர்வாக ஸீ-ஹோலி அமைந்தது.

1960களில் தி பீட்டில்ஸ் போன்ற ராக் குழுக்களின் பிரபலம், அத்துடன் உலகத் தரம் வாய்ந்த கலைக் கண்காட்சிகள், பழம்பொருள் காட்சியகங்கள் மற்றும் பிரபல அடையாளங்களின் காரணமாக, சுற்றுலாவும் லிவர்பூலின் பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாய் ஆகியிருக்கிறது.

2004 ஆம் ஆண்டில் கட்டிட நிறுவன அதிபர் க்ரோஸ்வெனார் பாரடைஸ் திட்டத்தை தொடக்கினார். பாரடைஸ் வீதியை மையமாகக் கொண்டு 920 மில்லியன் பவுண்டு தொகை செலவிடப்பட்ட வளர்ச்சி திட்டமாகும் இது. போருக்குப் பிந்தைய மறுகட்டுமானத்தில் லிவர்பூலின் நகர் மையத்தில் மிகக் கணிசமான மாற்றங்களை இது அடக்கியிருந்தது. ‘லிவர்பூல் 1’ என்று பெயர் மாற்றப்பட்டு இந்த மையம் 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் திறக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில், லிவர்பூல் பரோ நிறுவப்பட்டதன் 800வது ஆண்டுநிறைவை நகரம் கொண்டாடியது. இதற்கென ஏராளமான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கலாச்சாரத் தலைநகரமாக லிவர்பூல் இணைந்து தெரிவு பெற்றது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற பிரதான கொண்டாட்டங்களில் லா பிரின்செஸெ என்னும் ஒரு பெரிய இயந்திரவியல் சிலந்தியும் இடம் பெற்றது. 20 மீட்டர் உயரமும் 37 டன்கள் எடையும் கொண்டிருந்த இது, லிவர்பூலின் கவுரவம், வரலாறு, இசை, மெர்ஸெ, துறைமுகங்கள், ஆளுகை, சூரியவெளிச்சம் மற்றும் கலாச்சாரம் ஆகிய “எட்டுக் கால்களை” பிரதிநிதித்துவப்படுத்தியது. கொண்டாட்டங்களின் போது லா பிரின்செஸெ நகரின் வீதிகளில் ஊர்வலமாய் கொண்டு செல்லப்பட்டு குவீன்ஸ்வே சுரங்கப் பாதையில் நுழைந்து முடித்து வைக்கப்பட்டது.

சாம்ராஜ்யத்தின் இரண்டாம் நகரம்

தொகு
 
1890களில் லைம் ஸ்ட்ரீட், லிவர்பூல், இடப்பக்கம் செயிண்ட் ஜார்ஜ் ஹால், வலப்பக்கம் கிரேட் நார்த் வெஸ்டர்ன் ஹோட்டல், பின்னணியில் வாக்கர் ஆர்ட் காலரி மற்றும் செசன்ஸ் ஹவுஸ்.பிரின்ஸ் ஆல்பர்ட், டிஸ்ரேலி, ராணி விக்டோரியா ஆகியோரின் சிலைகள், மைய இடத்தில் வெலிங்டன் தூண்.

பிரிட்டனின் முடியாட்சி லட்சியங்களின் உச்சத்துடன் தொடர்புபட்ட பிரதமரான பெஞ்சமின் டிஸ்ரேலி தான் லிவர்பூலை இவ்வாறு விவரித்தார். 19 ஆம் நூற்றாண்டின் காலகட்டங்களில் லிவர்பூலின் செல்வ மதிப்பு லண்டனுடையதையும் கடந்து அதிகரித்தது.[8] லிவர்பூலின் சுங்கவரி அலுவலகம் தான் பிரித்தானிய கஜானாவுக்கு மிகப் பெரும் பங்களிப்பாளராய் இருந்தது.[9] தனக்கென்று அரசாங்க அலுவலக (ஒயிட்ஹால்) கட்டிடத்தை கொண்டிருந்த ஒரே பிரித்தானிய நகரமாக லிவர்பூல் மட்டுமே இருந்தது என்கிற உண்மையில் இருந்து அதன் அந்தஸ்தை கணிக்க முடியும்.[10]

உலகில் அமெரிக்காவின் தூதரக அதிகாரியாக முதன்முதலில் நியமனமானது ஜேம்ஸ் மௌரி தான். லிவர்பூலில் 1790 ஆம் ஆண்டில் நியமனமான இவர் 39 வருடங்கள் பதவியில் இருந்தார்.

1851 ஆண்டு சமயத்திலேயே இந்த நகரம் “ஐரோப்பாவின் நியூயார்க்”[11] என அழைக்கப்பட்டது, பிரம்மாண்டமாய் கட்டுமானம் செய்யப்பட்ட அதன் கட்டிடங்கள் 20 ஆம் நூற்றாண்டின் திருப்பத்தில் அந்த நகரின் மீது இருந்த அபாரமான நம்பிக்கைக்கும் லட்சியத்திற்கும் சாட்சியமளிப்பதாய் இருக்கின்றன. இங்கிலாந்தின் முதல் தலைநகருக்கு வெளியிலமைந்த விமான நிலையமாகவும் லிவர்பூல் இருந்தது. 1930 ஆம் ஆண்டு முதல் இந்த விமான நிலையம் செயல்பட்டது.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், லிவர்பூலின் அதிமுக்கியமான உத்திரீதியான முக்கியத்துவம் ஹிட்லர் மற்றும் சர்ச்சில் இருவருக்குமே தெரிந்திருந்தது. இந்நகரம் லண்டனுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான திடீர்த் தாக்குதல்களைச் சந்தித்தது. அத்துடன் முக்கியமான அட்லாண்டிக் யுத்தம் லிவர்பூலில் இருந்து தான் திட்டமிடப்பட்டு, போரிடப்பட்டு வெல்லப்பட்டது.[12]

கண்டுபிடிப்புகளும் புதுமைப் படைப்புகளும்

தொகு
 
வெப்பமண்டல மருந்தியல் பள்ளி, உலகின் முதலாவது.

படகுகள், தொடர் வண்டிகள், அட்லாண்டிக் கடக்கும் நீராவிப் படகுகள், மாநகராட்சி டிராம்கள்,[13] மின்சார ரயில்கள்,[14] மற்றும் ஹெலிகாப்டர்கள்[15] அனைத்தும் வெகுஜனப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுவதில் லிவர்பூல் முன்னோடியாக அமைந்தது.

முதலாவது பார்வையற்றோருக்கான பள்ளி,[16] பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளி,[17][18] உள்ளாட்சி அவை[19] மற்றும் சிறுவர் சீர்திருத்த நீதிமன்றம்[20] அனைத்தும் லிவர்பூலில் நிறுவப்பட்டன. RSPCA,[21] NSPCC,[22] ஏஜ் கன்செர்ன்,[23] ரிலேட், சிட்டிஸன்’ஸ் அட்வைஸ் பீரோ[24] மற்றும் லீகல் எய்ட் ஆகிய தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் இந்நகரில் செய்யப்பட்ட பணிகளில் இருந்து எழுந்தவை.

பொதுச் சுகாதாரத் துறையிலும் முதல் உயிர்காக்கும் படகு நிலையம், பொதுக் குளியலறைகள் மற்றும் ஓய்வு இல்லங்கள்,[25] சுகாதாரச் சட்டம்,[26] சுகாதாரத்திற்கான மருத்துவ அதிகாரி, மாவட்ட செவிலி, சேரி ஒழிப்பு,[27] சிறப்பு நோக்கங்களுக்கான ஆம்புலன்ஸ்,[28] எக்ஸ்ரே மருத்துவ நோயறிதல் முறை,[29] வெப்பமண்டல மருந்திற்கான பள்ளி, மோட்டார் இணைக்கப்பட்ட நகரவை தீயணைப்பு வண்டி,[30] இலவச பள்ளி பால் மற்றும் பள்ளி சாப்பாடு,[31] புற்றுநோய் ஆராய்ச்சி மையம்[32] மற்றும் மனிதருக்கு பரவத்தக்க விலங்கின நோய்கள் (zoonosis) ஆராய்ச்சி மையம்[33] இவை அனைத்துமே லிவர்பூலில் துவக்கமுற்றவையே. 1902 ஆம் ஆண்டில் முதல் பிரித்தானிய நோபல் பரிசை வென்ற ரோனால்டு ரோஸ் வெப்பமண்டல மருந்துக்கான பள்ளியில் பேராசிரியராய் இருந்தார். இப்பள்ளி உலகிலேயே இத்தகைய முதல்வகையானதாக இருந்தது.[34] எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கு லிவர்பூலில் ஹ்யூ ஓவன் தாமஸ்[35] தான் முன்னோடியாக இருந்தார். நவீன மருத்துவ மயக்கமருந்து சிகிச்சைக்கு தாமஸ் செசில் கிரே முன்னோடியாய் இருந்தார்.

 
ஓரியல் சாம்பர்ஸ், உலகின் முதல் ‘நவீன’ கட்டிடம்

நிதித் துறையில், இங்கிலாந்தின் முதல் உறுதியளிப்போர் கூட்டமைப்பு (அண்டர்ரைட்டர்ஸ்’ அசோசியேஷன்)[36] மற்றும் முதல் கணக்கியல் நிபுணர்களின் நிறுவனம் லிவர்பூலில் தான் நிறுவப் பெற்றன. மேற்கத்திய உலகின் முதல் நிதி தருவிப்புகள் (பருத்தி ஃப்யூச்சர்ஸ்) 1700களின் பிற்பகுதியில் லிவர்பூல் பருத்தி பரிவர்த்தனை மையத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டன.[37]

கலைப் பிரிவில், முதல் வாடகை நூலகம், வாசிப்பு சமூகம் (ஏதெனம் சொசைட்டி), கலை மையம்,[38] மற்றும் பொது கலை பாதுகாப்பு மையம்[39] ஆகியவற்றின் தாயகமாய் லிவர்பூல் இருந்தது. இங்கிலாந்தின் மிகப் பழமைவாய்ந்த வாழும் செவ்வியல் மெல்லிசைக் குழுவான, ராயல் லிவர்பூல் பில்ஹார்மோனிக் கச்சேரிக் குழுவிற்கும் லிவர்பூல் தாயகமாய் திகழ்கிறது.[40]

1864 ஆம் ஆண்டில், உலகின் முதலாவது இரும்பு உத்திரங்களுடனான, திரை சுவர்களுடனான ஓரியல் சேம்பர்ஸ் என்னும் கட்டிடத்தை பீட்டர் எல்விஸ் கட்டினார். வானளாவிய கட்டிடங்களுக்கு இது முன்மாதிரியாய் அமைந்தது.

1897 ஆம் ஆண்டில், லுமியர் பிரதர்ஸ் லிவர்பூலை படமெடுத்தனர்.[41] உலகின் முதலாவது உயர்ந்த இடத்திலான மின்சார ரயில்பாதையான லிவர்பூல் ஓவர்ஹெட் ரயில்வேயில் இருந்து எடுக்கப்பட்ட உலகின் முதல் நகர்ந்து கொண்டே படம் பிடிக்கப்பட்ட காட்சி[42] என நம்பப்படும் காட்சி இதில் இடம்பெற்றிருந்தது.

லிவர்பூலைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான ஃபிராங்க் ஹார்ன்பி பொம்மை உருவாக்கம் மற்றும் தயாரிப்பில் தொலைநோக்கு சிந்தனையுடையவராய் விளங்கினார்.

1999 ஆம் ஆண்டில் “வாழ்வின் அனைத்து துறைகளிலும் இந்நகரின் மைந்தர்கள் செய்த கணிசமான பங்களிப்பை” அங்கீகரிக்கும் விதமாக இங்கிலீஷ் ஹெரிட்டேஜ் அமைப்பு லிவர்பூலுக்கு நீலச் சின்ன கவுரவத்தை அளித்தது. தலைநகருக்கு வெளியே இந்த கவுரவத்தைப் பெறும் முதல் நகரம் லிவர்பூல் ஆகும்.[43]

ஆளுகை

தொகு

லிவர்பூல் மூன்று அடுக்காய் ஆட்சியமைப்பைக் கொண்டுள்ளது: உள்ளாட்சி மன்றம், தேசிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம். லிவர்பூல் அதிகாரப்பூர்வமாய் ஒரு ஒருமை அதிகாரத்தின் (Unitary Authority) மூலமாய் ஆட்சி செய்யப்படுகிறது. மெர்ஸெஸைட் கவுண்டி ஆட்சியவை விலக்கப்பட்டபோது பொதுப் பணிகள் மாவட்ட பரோ மட்டத்திற்குத் திரும்பின. ஆயினும் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் போன்ற சேவைகள் பலவும் கவுண்டி-அளவிலான மட்டத்திலேயே நடத்தப்படுகின்றன.

உள்ளாட்சி மன்றம்

தொகு
 
1754 காலத்து லிவர்பூல் டவுன் ஹால்

லிவர்பூல் மாநகரம் லிவர்பூல் மாநகராட்சி மன்றம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மெர்ஸெஸைட் பெருநகர கவுண்டியை உருவாக்கும் ஐந்து பெருநகர பரோக்களில் ஒன்றாகும் இது. மாநகர் முழுவதிலுமான உள்ளூர் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 90 தேர்ந்தெடுத்த மாமன்ற உறுப்பினர்களும்,[44] மற்றும் மாமன்றத்தின் அன்றாட வேலைகளுக்குப் பொறுப்பாக அமைந்த ஐந்து பேர் கொண்ட நிர்வாக மேலாண்மைக் குழுவும் இந்த மாமன்றத்தில் அடங்குவர்.[45] ஒரு மாமன்ற தலைவரையும் மேயரையும் தேர்வு செய்வதும் மாமன்ற உறுப்பினர்களின் பொறுப்பில் ஒரு பகுதி ஆகும். மாமன்ற தலைவர்களின் ஒரு பொறுப்பாக அமைவது மாமன்றத்தை வழிநடத்துவது மற்றும் உள்ளாட்சி மன்றம், மத்திய அரசு மற்றும் தனியார் & அரசு கூட்டாளிகளுக்கு ஊடகமாய் செயல்படுவது ஆகியவை ஆகும்.[46] மேயர் மாநகரின் ‘முதல் குடிமகனாய்’ செயல்படுவதோடு மாநகரின் மேம்பாட்டுக்கு பொறுப்பானவராய் திகழ்கிறார். உள்ளூர் தொண்டு & சமுதாய குழுக்களுக்கு ஆதரவளிப்பதோடு மாநகரின் பொதுப் பணிகளையும்[47] பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தற்போதைய மாமன்ற தலைவராய் வாரன் பிராட்லி இருக்கிறார். மைக் ஸ்டோரி என்னும் மாமன்ற உறுப்பினர் தற்போது மேயராக உள்ளார்.[48]

மாநகராட்சி தேர்தல் சமயத்தில் இம்மாநகர் 30 உள்ளூர் மாமன்ற வார்டுகளாய் பிரிக்கப்படுகின்றது,[49] அகரவரிசையில் அவற்றின் பெயர்கள் பின்வருமாறு:

  1. ஆலர்டன் & ஹண்ட்ஸ் கிராஸ்
  2. ஆன்ஃபீல்டு
  3. பெல்லீ வாலி
  4. சென்ட்ரல்
  5. சைல்டுவால்
  6. சர்ச்
  7. கிளப்மூர்
  8. கவுண்டி
  9. கிரெஸிங்டன்
  10. கிராக்ஸ்டெத்
  11. எவர்டன்
  12. ஃபஸாகெர்லி
  13. கிரீன்பேங்க்
  14. கென்ஸிங்டன் & ஃபேர்பீல்டு
  15. கிர்க்டேல்
  1. க்னாட்டி ஆஷ்
  2. மோஸ்லி ஹில்
  3. நோரிஸ் கிரீன்
  4. ஓல்டு ஸ்வான்
  5. பிக்டன்
  6. பிரின்சஸ் பார்க்
  7. ரிவர்ஸைட்
  8. ஸ்பீக் கார்ஸ்டன்
  9. செயிண்ட் மைக்கேல்ஸ்
  10. ட்யூப்ரூக் & ஸ்டோனிகிராஃப்ட்
  11. வார்பிரெக்
  12. வேவர்ட்ரீ
  13. வெஸ்ட் டெர்பி
  14. வூல்டன்
  15. யூ ட்ரீ

செப்டம்பர் 2008 நிலவரப்படி மிக சமீபத்திய மாநகராட்சி தேர்தலில் தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் 45 உறுப்பினர்களை வென்று மாமன்ற அவையில் ஆட்சி செலுத்துகின்றனர். தொழிற் கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றது. எஞ்சிய இடங்களில் தாராளவாத கட்சி மூன்று இடங்களையும் பசுமைக் கட்சி இரண்டு இடங்களையும் வென்றன. இறுதி ஒன்று சுயேச்சை கவுன்சிலரிடம் சென்றது. இங்கிலாந்தின் மூன்று பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாய் இருக்கும் பழமைவாத கட்சிக்கு லிவர்பூல் மாநகராட்சி மன்றத்தில் எந்த பிரதிநிதித்துவமும் கிட்டவில்லை.[50] அதிகாரப்பூர்வமாக, யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும் கிராக்ஸ்டெத் சுயேச்சை உறுப்பினரான நாடியா ஸ்டீவர்ட் கட்சி தாவியதைத் தொடர்ந்து, தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் தங்களது வெற்றியிடங்களின் எண்ணிக்கையை 46 ஆக அதிகரித்துக் கொண்டு நடப்பு நிர்வாகத்தை தொடர முடிந்தது.[51] 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், லிவர்பூல் மாநகராட்சி மன்றம் தான் ஒரே ஒரு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்று (செயல்பாடுகள் போதுமானதன்று என்று வகைப்படுத்தப்பட்டது) நாட்டில் மிக மோசமான செயல்பாடுடைய மாமன்றம் என்பது வெளியானது. வரி செலுத்துவோர் பணத்தை மாமன்றம் மோசமாகக் கையாண்டது தான் இந்த பரிதாப மதிப்பீடு கிட்டியதன் காரணம் எனக் கூறப்பட்டது. கலாச்சார தலைநகர நிதியத்திற்கு 20 மில்லியன் பவுண்டு பற்றாக்குறை திரண்டதும் இதில் அடங்கும்.[52]

நாடாளுமன்ற தொகுதிகளும் எம்பிக்களும்

தொகு
மேலும் காணவும்: மெர்ஸெஸைடின் நாடாளுமன்ற தொகுதிகளின் பட்டியல்

லிவர்பூலுக்குள்ளாக ஐந்து நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) தேர்ந்தெடுக்கப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் மாநகருக்கு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அந்த ஐந்து தொகுதிகள்: லிவர்பூல் கேர்ஸ்டன், லிவர்பூல் ரிவர்ஸைட், லிவர்பூல் வால்டன், லிவர்பூல் வேவர்ட்ரீ மற்றும் லிவர்பூல் வெஸ்ட் டெர்பி ஆகியவை ஆகும்.[53] சென்ற பொதுத் தேர்தலில், இந்த ஐந்து தொகுதிகளையுமே தொழி்ற் கட்சி கைப்பற்றியது. மரியா ஈகிள், லூய்ஸெ எல்மென், பீட்டர் கில்ஃபோய்ல், ஜேன் கென்னடி மற்றும் பாப் வேரிங் ஆகியோர் முறையே இத்தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். 2010 பொதுத் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தொகுதி மறுசீரமைப்பின் படி, லிவர்பூல் மாநகர எல்லைகளுக்குள்ளாக நான்கு தொகுதிகள் மட்டுமே இருக்கும். லிவர்பூல் கேர்ஸ்டன் தொகுதியை ஹேல்வுட் தொகுதியுடன் (அது முன்னர் க்னோஸ்லீ சவுத்தின் பகுதியாக இருந்தது) இணைத்து மறுசீரமைத்த தொகுதியாக ஆக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.[54] பழமைவாத கட்சி 1979 முதலே மாநகரத்துக்குள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற்றதில்லை. சென்ற 2005 தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 10%க்கும் குறைவான வாக்குகளையே அது பெற முடிந்தது.

புவியியல்

தொகு

லிவர்பூல் “எந்த இங்கிலாந்து நகரத்திலும் மிக அற்புதமான வடிவமைப்பை” கொண்டிருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.[55] (53.4, -2.98),176 மைல்கள் (283 km) லண்டனுக்கு வடமேற்கில், மேற்கு லங்காஷயரின் கடலோரச் சமவெளிப் பகுதியின் தெற்கு எல்லையைக் குறிக்கும் எவர்டன் ஹில் பகுதியில் கடல் மட்டத்திற்கு சுமார் 230 அடி (70 மீட்டர்கள்) மேலிருக்கும் மணல்பாறை மலைகளின் தொடர்ச்சிக்கு இடையே லிவர்பூல் நகரம் கட்டப்பட்டுள்ளது. லிவர்பூல் நகர்ப்புறப் பகுதியானது தெற்கில் நேரடியாய் பூடில், கிராஸ்பி மற்றும் மேகலுக்குள் செல்கிறது. வடக்கில் செஃப்டான், மற்றும் கிழக்கில் கிர்க்பி, ஹூய்டன், பிரெஸ்காட் மற்றும் க்னோஸ்லியில் உள்ள் ஹேல்வுட்டுக்குள் செல்கிறது. மேற்கில் இது வாலஸெ மற்றும் பிர்கென்ஹெட் பகுதிகளை மெர்ஸெ ஆற்றுக்கு குறுக்கே பார்த்து அமைந்திருக்கிறது.

காலநிலை

தொகு

பிரித்தானிய தீவுகள் போன்றதொரு மிதமான கடலோரக் காலநிலையை லிவர்பூல் கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான கோடைகளும் மிதமான குளிர்காலங்களும் இருக்கும்.

  லிவர்பூல்  - தட்பவெப்பச் சராசரி  
மாதம் ஜன பெப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ டிச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 6.6
(44)
6.6
(44)
9.4
(49)
11.6
(53)
15.5
(60)
17.7
(64)
20
(68)
19.4
(67)
16.6
(62)
12.7
(55)
9.4
(49)
7.7
(46)
12.7
(55)
தாழ் சராசரி °C (°F) 2.2
(36)
2.2
(36)
3.3
(38)
4.4
(40)
7.2
(45)
10.5
(51)
12.7
(55)
12.2
(54)
10
(50)
7.2
(45)
4.4
(40)
3.3
(38)
6.6
(44)
மூலம்: [56] 2008-12-19

மக்கள் பரவலியல்

தொகு
 
லிவர்பூல் மக்கள்தொகை, 1801-2001
 
லிவர்பூல், சைனாடவுனின் அலங்கார வாசல்

மற்ற பெரிய பிரித்தானிய மாநகரங்கள் போலவே, லிவர்பூல் ஒரு பெரிய பன்முகப்பட்ட மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது. 2001 ஆம் ஆண்டின் இங்கிலாந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி லிவர்பூலின் பதிவு செய்யப்பட்ட மக்கள்தொகை 441,900[57] ஆகும். 2008 மத்தியில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் அளித்த மதிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 434,900 ஆகும்.[58] லிவர்பூலின் மக்கள்தொகை 1930களில் உச்சத்தை எட்டியது. 1931 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி 846,101 என பதிவானது.[59] அப்போது முதல் நகரம் ஒவ்வொரு தசாப்தத்திலும் எதிர்மறை மக்கள்தொகை வளர்ச்சியை சந்தித்து வந்திருக்கிறது. அதன் உச்சமாக 1971 ஆம் ஆண்டுக்கும் 1981 ஆம் ஆண்டுக்கும் இடையில் நகரத்தை விட்டு 100,000 மக்கள் வெளியேறியிருந்தனர்.[60] 2001 ஆம் ஆண்டுக்கும் 2006 ஆம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்தின் ஒருமை அதிகாரப் பகுதிகளில் ஒன்பதாவது அதிகமான மக்கள்தொகை வீழ்ச்சியை இது எதிர்கொண்டது.[61]

பல மாநகரங்களுக்குப் பொதுவானதொரு விஷயமாக, லிவர்பூலின் மக்கள்தொகை இங்கிலாந்தினுடையதைக் காட்டிலும் இளமையானதாக இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 42.3 சதவீதம் பேர் 30 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருக்கின்றனர். இதில் மொத்த இங்கிலாந்து சராசரி 37.4 சதவீதம் ஆகும்.[62] மக்கள்தொகையில் 65.1 சதவீதம் பேர் வேலைக்குச் செல்லும் வயதில் உள்ளனர்.[62]

இங்கிலாந்தின் மிகப் பழமையான கறுப்பர் சமுதாயத்தின் தாயகமாய் லிவர்பூல் உள்ளது. குறைந்தது 1730கள் வரையேனும் இவர்களின் வரலாற்றை பின்னோக்கி காண முடியும். சில கறுப்பின லிவர்புட்லியன்கள் பத்து தலைமுறைகள் வரை தனது முன்னோர்களை பின்னோக்கி அறிந்து வைத்திருக்கின்றனர்.[63] ஆரம்பகால கறுப்பரின குடியேற்றத்தினரில் கல்வி கற்பதற்காக அனுப்பப்பட்ட வர்த்தகர்களின் குழந்தைகளும், விடுதலை பெற்ற அடிமைகளும் அடங்கியிருந்தனர். ஏனெனில் 1722 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் நுழைந்த அடிமைகள் சுதந்திர மனிதர்களாய் கருதப்பட்டனர்.[64]

ஐரோப்பாவின் மிகப் பழமையான சீன சமூகத்திற்கும் தாயகமாய் இம்மாநகர் விளங்குகிறது; நகரின் சைனாடவுன் பகுதியில் முதன்முதலில் குடியேறியவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்தவர்களாவர்.[65] லிவர்பூலின் சைனாடவுன் நுழைவாயில் மிகப்பெரிய நுழைவாயில் ஆகும். பெருமளவிலான ஐரிஷ் மற்றும் வெல்ஷ் மக்கள்தொகைக்கும் இந்த நகரம் புகழ்பெற்றதாகும்.[66] 1813 ஆம் ஆண்டில், லிவர்பூலின் 10 சதவீதம் மக்கள் வெல்ஷ் இனத்தவராய் இருந்தனர். இதனையடுத்து ‘வடக்கு வேல்ஸின் தலைநகரம்’ என்றும் இந்நகரம் அறியப்படுவதானது.[66] மாபெரும் ஐரிஷ் பஞ்சம் துவங்கியதைத் தொடர்ந்து, ஒரு தசாப்த காலத்தில் இரண்டு மில்லியன் ஐரிஷ் மக்கள் லிவர்பூலுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களில் பலரும் அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்று விட்டனர்.[67] 1851 வாக்கில், லிவர்பூலின் மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐரிஷ் இனத்தவராய் இருந்தனர்.[68] 2001 கணக்கெடுப்பில், மக்களில் 1.17 சதவீதம் பேர் வெல்ஷ் இனத்தவராகவும் 0.75 சதவீதம் பேர் அயர்லாந்து குடியரசில் பிறந்தவர்களாகவும், 0.54 சதவீதம் பேர் வட அயர்லாந்தில்[69] பிறந்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் இன்னும் பல லிவர்புட்லியன்கள் வெல்ஷ் அல்லது ஐரிஷ் பூர்வீகம் கொண்டவர்களாய் இருந்தனர்.

ஜூன் 2007 நிலவரப்படி, லிவர்பூலின் 91.5 சதவீதத்தினர் வெள்ளை இனத்தவர், 2.3 சதவீதத்தினர் ஆசியர்கள் அல்லது ஆசிய பிரித்தானிய இனத்தவர், 1.9 சதவீதம் பேர் கறுப்பர்கள் அல்லது கறுப்பு பிரித்தானிய இனத்தைச் சேர்ந்தவர்கள், 2.0 சதவீதம் பேர் கலப்பு இனத்தவர்கள், 2.3 சதவீதத்தினர் சீனர் மற்றும் மற்றவர்களாய்[1] இருந்தனர்.

மதம்

தொகு
 
கிறைஸ்ட் தி கிங் மெட்ரோபோலிட்டன் கதீட்ரலின் தோற்றம்
 
லிவர்பூலின் டாக்ஸ்டெத் பகுதியில் அமைந்திருக்கும் அல்-ரஹ்மா மசூதி

லிவர்பூல் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுக் குடியேற்ற மக்கள் மற்றும் கப்பல் பயணிகளின் காரணத்தால் இங்கிருக்கும் மத பன்முகத்தன்மை என்பது இன்றும் வெளிப்படையானதொன்றாக இருக்கிறது. பன்முகப்பட்ட மதக் கட்டிடங்களும்[70] இரண்டு கதீட்ரல்களும் சமமாகப் பரந்து காணப்படுவதில் இது பிரதிபலிக்கிறது.

ட்யுப்ரூக், பக்கிங்ஹாம் சாலையில் உள்ள கிறைஸ்ட் சர்ச், ஒரு பழமைவாத எவாஞ்சலிகல் திருச்சபை ஆகும், இது எவாஞ்சலிகல் கனெக்‌ஷன் அமைப்புடன் இணைப்பு கொண்டது.[71] 1785 பிரார்த்தனை புத்தகம் கொண்டு அவர்கள் வழிபடுகிறார்கள். விவிலியம் மட்டுமே விசுவாசத்திற்கும் பின்பற்றுவதற்குமான ஒரே விதி என்று கருதுகின்றனர்.

பேச்சுவழக்கில் ‘ஸெய்லர்ஸ் சர்ச்’ (கடற்பயணிகளின் திருச்சபை) என்று அழைக்கப்படும் லிவர்பூலின் ஏஞ்ச்லிகன் அவர் லேடி அண்ட் செயிண்ட் நிகோலஸ் சர்ச் கடல்பார்த்து 1257 முதல் இருந்து வரும் திருச்சபை ஆகும். கத்தோலிக்க மக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் இடமாக இது தொடர்ந்து இருந்து வருகிறது.

ஒரு துறைமுக நகரமாக லிவர்பூலின் செல்வம் கொழிக்கும் தன்மை இரண்டு பிரம்மாண்டமான கதீட்ரல்கள் கட்டப்படுவதற்கு வழிவகை செய்துள்ளது. இரண்டுமே 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. தி ஏஞ்ச்லிகன் கதீட்ரல் மிக நீளமான கூடங்களில் ஒன்றையும், நீளமான இசைக்கருவிகளையும், உலகிலேயே கனமானதும் உயரமானதுமான மணிகளையும் கொண்டு அமைந்துள்ளது. சர் கைல்ஸ் கில்பெர்ட் ஸ்காட் வடிவமைத்த இந்த கதீட்ரலில் வருடந்தோறும் லிவர்பூல் ஷேக்ஸ்பியர் விழா நடக்கிறது. லிவர்பூல் அறிவியல் பூங்காவிற்கு அடுத்து அமைந்துள்ள மவுண்ட் பிளசண்டில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக் பெருநகர கதீட்ரல் ஆரம்பத்தில் இன்னும் பெரிதாய் கட்டப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. சர் எட்வின் லுடியென் வடிவமைத்த ஆரம்ப வடிவமைப்பில் நிலவறை மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது. இறுதியில் இக்கதீட்ரல் சர் ஃபிரடரிக் கிபெர்ட் வடிவமைத்த ஒரு எளிமையான வடிவமைப்பில் கட்டப்பட்டது; லுட்யெனின் ஆரம்ப வடிவமைப்பைக் காட்டிலும் இது சிறியதே என்றாலும், இதில் உலகிலேயே மிகப்பெரும் கறைக் கண்ணாடி தொகுப்பை பொருத்த முடிந்தது. இரண்டு கதீட்ரல்களுக்கும் இடையில் செல்லும் பாதை நம்பிக்கை வீதி என்று அழைக்கப்படுகிறது. இது மதநம்பிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தற்செயல் நிகழ்வாய் அமைந்துள்ளது.[72][73]

லிவர்பூல் பல யூதர் திருக்கூட்டக் கூடங்களைக் கொண்டுள்ளது.[74] லிவர்பூலில் வாழும் யூத சமுதாயத்திற்கென இன்னும் இரண்டு மரபார்ந்த திருக்கூட்டக் கூடங்களும் உள்ளன. ஒன்று நகரின் ஆலர்டென் மாவட்டத்திலும் இரண்டாவது நகரின் சைல்ட்வால் மாவட்டத்திலும் உள்ளது. இங்கு யூத சமுதாயத்தினர் கணிசமான அளவில் வசிக்கின்றனர். கிரீன் பார்க் L17 பகுதியில் இருந்த மூன்றாவது மரபார்ந்த திருக்கூட்டக் கூடம் சமீபத்தில் மூடப்பட்டது. லுபாவிட்ச் சபாத் இல்லம் ஒன்றும் சீர்திருத்த திருக்கூட்ட கூடம் ஒன்றும் கூட இங்கு உண்டு. லிவர்பூலில் 18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் முதல் யூத சமுதாயம் இருந்து வருகிறது. லிவர்பூலின் தற்போதைய யூத மக்கள்தொகை சுமார் 3000 என்கிற எண்ணிக்கையளவில் உள்ளது.[75]

லிவர்பூலில் இந்து சமுதாய மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 253 எட்ஜ் லேன் பகுதியில் ஒரு கோவில் உள்ளது; ராதா கிருஷ்ணா கோவில் என்னும் இந்து கலாச்சாரக் கோயில் இந்த இடத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. லிவர்பூலின் தற்போதைய இந்து மக்கள் எண்ணிக்கை சுமார் 1147 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. [சான்று தேவை] லிவர்பூலி்ன் L15 பகுதியில் குரு நானக் சீக்கிய குருத்வாராவும் உள்ளது.

பிரிட்டனின் வெகு பழைய மசூதிகளில் ஒன்று இந்நகரில் உள்ளது. இஸ்லாம் மதத்திற்கு மாறிய வில்லியம் அப்துல்லா க்வில்லியம் என்கிற ஒரு வழக்கறிஞர் 1887 ஆம் ஆண்டில் இதனை நிறுவினார். இங்கிலாந்தின் முதல் மசூதியான இது இப்போது இல்லை.[76] முன்னர் மசூதி இருந்த இடத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.[77] இப்போது லிவர்பூலில் மூன்று மசூதிகள் உள்ளன: இவற்றில் பெரியதும் பிரதானமானதுமாய் இருப்பது அல்-ரஹ்மா மசூதி ஆகும். இது நகரில் டாக்ஸ்டெத் பகுதியில் உள்ளது. இன்னொரு மசூதி நகரின் மோஸ்லி ஹில் மாவட்டத்தில் சமீபத்தில் திறக்கப்பட்டதாகும். மூன்றாவது மசூதியும் டாக்ஸ்டெத் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்டதே. இது கிரான்பி வீதியில் உள்ளது.

பொருளாதாரம்

தொகு
 
இரவில் லிவர்பூலின் புதிய வர்த்தக மாவட்டம்

லிவர்பூல் பொருளாதாரம் இங்கிலாந்துக்குள் இருக்கும் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும். இது இங்கிலாந்தின் வட மேற்குக்குள் அமைந்திருக்கும் இரண்டு முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றின் மையத்தில் அமைந்துள்ளது.[78] 2006 ஆம் ஆண்டில் நகரின் கூட்டிய நிகர மதிப்பு (GVA) 7,626 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இது தனிநபர் ஆண்டு வருமானத்தை 17,489 பவுண்டுகள் என்ற அளவில் காட்டுகிறது. இது நார்த் வெஸ்ட் பகுதியின் சராசரியைக் காட்டிலும் அதிகமாகும்.[79] இன்று இங்கிலாந்தின் எஞ்சிய பிற பகுதிகளில் போலவே லிவர்பூலிலும் பொது மற்றும் தனியார் துறை இரண்டின் சேவைத் துறை நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக, 1990களின் பிற்பகுதி முதல் நகருக்குள்ளான பொது நிர்வாகம், கல்வி, சுகாதாரம், வங்கி, நிதி மற்றும் தொழிற்சாலை வேலைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது. ஊடகங்கள் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற புதிய பொருளாதாரங்களும் அபிவிருத்தி கண்டுள்ளன.[80]

வரலாற்றுரீதியாக, லிவர்பூலின் பொருளாதாரம் நகரின் துறைமுகத்தைச் சுற்றியும் அதன் உற்பத்தி தளத்தை சுற்றியும் தான் அமைந்திருக்கிறது. போருக்குப் பிந்தைய காலத்தில் நகர் குறிப்பிடத்தகுந்த சரிவைச் சந்தித்தது. 1980களின் சமயத்தில் இங்கிலாந்தின் மிக அதிக வேலைவாய்ப்பின்மை விகிதங்களில் கொஞ்சத்தை இந்நகர் கொண்டிருந்தது. இது அரசியல் ஸ்திரமின்மைக்கும் அப்போதைய தொழிலாளர் கவுன்சிலின் தீவிரவாதப் போக்கிற்கும் இட்டுச் சென்றது. ஆயினும், 1990களின் மத்திய காலம் முதல் லிவர்பூலின் பொருளாதாரம் மீண்டும் மறுமலர்ச்சி கண்டிருக்கிறது. அதன் GVA 1995 முதல் 2006 ஆம் ஆண்டு வரையான காலத்தில் 71.8 சதவீத அதிகரிப்பைக் கண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு 1998 மற்றும் 2006 ஆம் ஆண்டுக்கு இடையே 12% அதிகரித்தது.[79]

சமீபத்தைய பொருளாதார முன்னேற்றங்கள் இருந்தாலும் கூட, லிவர்பூல் நாட்டின் வறுமைமிகுந்த பகுதிகளில் ஒன்றாகத் தான் இன்னும் தொடர்கிறது. வாழ்வாதாரங்களின்மைக்கான 2007 ஆம் ஆண்டின் குறியீடுகள், இங்கிலாந்துக்குள் இருக்கும் மிக வாழ்வாதாரங்களற்ற வார்டுகளில் பத்தில் நான்கு லிவர்பூலில் இருப்பதாக சுட்டிக் காட்டின. அத்துடன் நகரில் இருக்கும் அனைத்து வார்டுகளிலும் பாதிக்கும் மேலானவை ஒட்டுமொத்த இங்கிலாந்தின் மிகவும் வாழ்வாதாரங்களற்றவற்றில் 10%க்கு பங்களிக்கின்றன.[81]

பெரிய அளவில் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உருவாக்கும் நிபுணர்கள் இருப்பது நியூ மீடியா பகுதிகளில் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது. சோனி நிறுவனம், பிரபல மென்பொருள் வெளியீட்டு நிறுவனமான சைக்னோஸிஸை வாங்கிய பிறகு, தான் அமைத்திருக்கும் வெகு சில ஐரோப்பிய பிளேஸ்டேஷன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்களில் ஒன்றை வேவர்ட்ரீயில் அமைத்துள்ளது. இத்துறை இதழான ‘எட்ஜ்’ (162வது இதழ்) 2006 ஆம் வருட பதிப்பின் படி, பிளேஸ்டேஷன் மென்பொருள் உருவாக்குநர் தொகுப்புகளில் முதல் தொழில்முறை தரம் கொண்டவை பெருமளவில் சோனியின் லிவர்பூல் ‘ஸ்டுடியோ’வில் தான் தயாரானதாய் கூறுகிறது. ஆக்டிவிஷனுக்குச் சொந்தமான பிஸாரே க்ரியேஷன்ஸ், மற்றும் சோனிக்கு சொந்தமான எவல்யூஷன் ஸ்டுடியோஸ் ஆகியவையும் லிவர்பூலின் பிற முக்கியமான உருவாக்க ஸ்டுடியோக்களில் அடங்கும்.

சுற்றுலாத் துறை இம்மாநகரின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் காரணியாக விளங்குகிறது. இதன் காரணத்தால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஆகிய உயர் தர சேவைகளில் பெரும் அதிகரிப்பு நிகழ்ந்திருக்கிறது. லிவர்பூல் நகரின் கட்டிடங்களும் திரைப்பட உருவாக்குநர்களைக் கவர்ந்திருக்கிறது. அவர்கள் உலகெங்கிலும் பல நகரங்களுக்கு ‘டூப்’ போன்று லிவர்பூலை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இங்கிலாந்தில் அதிகமாய் படம்பிடிக்கப்படும் நகரத்தில் இரண்டாம் இடத்தை இது பிடித்துள்ளது.[82] நகர மையத்தில் பயணியர் கப்பல் வந்து நிற்கும்படியான உலகின் வெகு சில நகரங்களில் லிவர்பூலும் ஒன்றாக இருக்கிறது. 2008 முதல் கணிசமான எண்ணிக்கையிலான பயணக் கப்பல்கள் லிவர்பூல் முணையத்தில் பயணத்தை துவக்குகின்றன அல்லது வந்து நிற்கின்றன. கப்பல்துறைக்கு வரும் பெரும் கடற்படைக் கப்பல்களும் ஒளிபடர்ந்த தினங்களில் பெரும் கூட்டத்தை ஈர்க்கிறது. லிவர்பூல் மற்றும் அதன் பரோக்கள் மெர்ஸெரயில் மூலம் அணுகக் கூடிய ஏராளமான மணல் கடற்கரைப் பரப்புகளைக் கொண்டுள்ளன. இவை கோடை மாதங்களில் வெகு பிரபலமாய் இருக்கின்றன.

 
லிவர்பூல் ஒன் நீர்முகத்தில் அமைந்துள்ள சவாஸே பூங்கா

கார்-தயாரிப்பும் இந்நகரில் ஹேல்வுட் ஆலையில் நடைபெறுகிறது. இங்கு ஜாக்வார் X-வகை மற்றும் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் மாதிரிகள் ஒன்றிணைக்கப்படுகின்றன.

நகரின் வடக்கு கப்பல்துறையை லிவர்பூல் வாட்டர்ஸ் என்ற பெயரிலான திட்டத்தின் மூலம் மறுவளர்ச்சி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இத்திட்டத்தின் மூலம் 50 ஆண்டு காலத்தில் 5.5 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்படும் 17,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் லிவர்பூல் துறைமுகம் மற்றும் விமான நிலைய உரிமையாளரான பீல் ஹோல்டிங்ஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மெர்ஸெ ஆற்றின் இன்னொரு பக்கத்தில் வைரல் வாட்டர்ஸ் (Wirral Waters) என்ற பெயரிலான இதன் துணைத் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது. [சான்று தேவை]

சமீப வருடங்களில், லிவர்பூல் துறைமுகம் ஒருவகை மறுமலர்ச்சியை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஜப்பான் நிறுவனமான NYK மற்றும் டச்சு நிறுவனமான மேர்ஸ்க் லைன் இரண்டும் தங்களது இங்கிலாந்து தலைமையகத்தை இந்நகரில் அமைத்திருக்கின்றன.[83][84]

அடையாளச் சின்னங்கள்

தொகு
 
2008 இன் பிற்பகுதியில் லிவர்பூலின் கதீட்ரலில் இருந்து பார்க்கையில் லிவர்பூல் நகர மையத்தின் தோற்றம், புதிய நிதி மாவட்டம் மற்றும் வரலாற்று நீர்முகத்தை இடப்பக்கம் காணலாம், வலப்பக்கம் இருக்கும் முக்கிய கட்டிடம் செயிண்ட் ஜான்’ஸ் கலங்கரை விளக்கம்

லிவர்பூலின் வரலாற்றின் காரணமாக குறிப்பிடத்தக்க பல்வேறு வகையான கட்டுமானக் கலை பாணிகளை நகருக்குள்ளாகக் காண முடியும். 16வது நூற்றாண்டு ட்யூடர் பாணியில் இருந்து நவீன காலத்தின் சமகால கட்டுமானக் கலை வரை பலவகைகளைக் காண முடியும்.[85] நகரின் பெரும்பான்மையான கட்டிடங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உதயமானவை. இந்த காலகட்டத்தில் தான் இந்நகரம் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் முன்னணி சக்திகளில் ஒன்றாய் வளர்ச்சியுற்றது.[86] லிவர்பூலில் 2,500க்கும் அதிகமான பட்டியலிட்ட கட்டிடங்கள்]] உள்ளன. இதில் 27 கிரேடு I பட்டியலின்[87] கீழ் வருபவை. இன்னும் 85 கட்டிடங்கள் கிரேடு II* பட்டியலின்[88] கீழ் வருகின்றன. இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் மட்டுமே இதனை விட அதிகமாய்க் கொண்டுள்ளது.[89] வெஸ்ட்மின்ஸ்டர்[90] தவிர இங்கிலாந்தின் வேறு எந்த ஒரு இடத்தை விடவும் இந்நகரில் ஏராளமான பொதுச் சிற்பங்கள் அமையப் பெற்றுள்ளன.[91] கட்டுமானக் கலையின் இந்த வளமையை அடுத்து இங்கிலீஷ் ஹெரிட்டேஜ் அமைப்பு லிவர்பூல் நகரத்தை இங்கிலாந்தின் மிகச்சிறந்த விக்டோரிய நகரம் என்று வர்ணித்தது.[92] லிவர்பூலின் கட்டுமானக் கலையும் கட்டிட வடிவமைப்புகளும் 2004 ஆம் ஆண்டில் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றது. அப்போது நகரம் முழுவதிலுமான பல்வேறு பகுதிகள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாய் அறிவிக்கப் பெற்றன. லிவர்பூல் மெரிடைம் மர்கண்டைல் சிட்டி என்று அறியப்பட்ட இந்த தளங்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல்துறை தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்நகரத்தின் பங்கினை அங்கீகரிக்கும் விதமாய் சேர்க்கப்பட்டன.[93]

நீர்முகம் மற்றும் கப்பல்துறைகள்

தொகு
 
ஆல்பர்ட் கப்பல்துறை லிவர்பூலின் மிகப்பெரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

ஒரு பெரும் பிரித்தானிய துறைமுகமாக, லிவர்பூலில் உள்ள கப்பல்துறைகள் வரலாற்றுரீதியாக நகரின் வளர்ச்சிக்கு மையமாக அமைந்திருக்கின்றன. கப்பல்துறையில் முதல்முறையாய் மேற்கொள்ளப்பட்ட பல பெரிய அம்சங்கள் இந்நகரில் நடந்தேறி இருக்கின்றன. 1715 ஆம் ஆண்டில் உலகின் முதல் சூழப்பட்ட ஈரக் கப்பல்துறை (பழைய கப்பல்துறை) கட்டுமானம் செய்யப்பட்டது மற்றும் முதல்முறையாக ஹைட்ராலிக் லிஃப்டிங் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டது ஆகியவை இதில் அடங்கும்.[94] லிவர்பூலில் உள்ள மிகுந்த பிரபலமான கப்பல்துறை ஆல்பர்ட் துறை ஆகும். இது 1846 ஆல் கட்டப்பட்டது.[95] ஜெஸி ஹார்ட்லியின் வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்ட இந்த துறை, கட்டிமுடிக்கப்பட்ட சமயத்தில் உலகின் வேறெங்கையும் விட மிக அதிநவீன துறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. உலகின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக ஆவதற்கு இந்நகருக்கு உதவியதாகவும் பல சமயங்களில் கருதப்படுகிறது. நகர மையத்தின் வடக்கில் ஸ்டான்லி துறை உள்ளது. இது புகையிலை கிடங்கிற்கு தாயகமாய் உள்ளது. 1901 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சமயத்தில் பரப்பளவில்[96] உலகின் மிகப்பெரிய கட்டிடமாய் இருந்த இது இன்று உலகின் மிகப்பெரும் செங்கல் கட்டிடமாய் திகழ்கிறது.[97]

 
லிவர்பூலின் மூன்று கருணைகளின் நீர்முகம் இரவில், ரிவர் மெர்ஸெ ஆற்றில் இருந்து காண்கையில்

லிவர்பூலில் இருக்கும் மிகப் பிரபலமான இடங்களில் பையர் ஹெட்டும் ஒன்று. இது மும்மூர்த்திகளாய் அமைந்த கட்டிடங்களுக்குப் பெயர் வாய்ந்தது ஆகும். ராயல் லிவர் பில்டிங், கனார்ட் பில்டிங் மற்றும் லிவர்பூல் போர்ட் பில்டிங் ஆகியவையே அந்த மூன்று கட்டிடங்கள். மூன்று கருணைகள் என்பதாய் மொத்தமாய் குறிப்பிடபடும் இந்த கட்டிடங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்த நகரில் இருந்த மாபெரும் செல்வத்திற்கு சாட்சிகளாய் நிற்கின்றன. பன்முகப்பட்ட கட்டுமானக் கலை பாணிகளில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் மெரிடைம் லிவர்பூலின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. உலகின் மிக அழகிய நீர்முகங்களில் ஒன்றாக இவ்விடத்தை இக்கட்டிடங்கள் ஆக்கியிருப்பதாகவும் பலர் கருதுகின்றனர்.[98][99][100][101]

சமீப வருடங்களில், லிவர்பூலின் நீர்முகத்தை ஒட்டிய பல பகுதிகளும் குறிப்பிடத்தக்க மறுவளர்ச்சிக்கு உட்சென்றிருக்கின்றன. கிங்ஸ் துறையில் லிவர்பூல் எகோ எரினா மற்றும் பிடி கன்வென்ஷன் சென்டர், பிரின்செஸ் துறையில் அலெக்ஸாண்ட்ரா கோபுரம் மற்றும் கோபர்க் மற்றும் ப்ரன்ஸ்விக் துறைகளைச் சுற்றி லிவர்பூல் மெரினா ஆகியவை சமீபத்திய வளர்ச்சிகளில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

வர்த்தகரீதியான மாவட்டம் மற்றும் கலாச்சாரக் குடியிருப்பு வட்டம்

தொகு
 
லிவர்பூலின் டவுன் ஹால், கேஸில் வீதியை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.வலப்பக்கத்தில் முன்னால் இருக்கும் கட்டிடம் முன்னாள் பேங்க் ஆஃப் இங்கிலாந்து கட்டிடம் ஆகும்

உலகின் மிக முக்கியமான வர்த்தக துறைமுகங்களில் ஒன்றாக லிவர்பூல் வரலாற்றுரீதியாய் வளர்ச்சி பெற்றதானது காலப்போக்கில் கப்பல் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் அனைத்தின் தலைமையகங்களும் லிவர்பூலில் பல பிரம்மாண்ட கட்டிடங்களை கட்ட வழிவகுத்தது. இது கொணர்ந்த மாபெரும் செல்வத்தின் மூலம் பின்னர் மாபெரும் மாநகராட்சி கட்டிடங்களும் உருவாக்கப்பட முடிந்தது. உள்ளூர் நிர்வாகிகள் ‘மாநகரை பெருமிதத்துடன் நடத்த’ அனுமதிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.[102]

இப்பகுதியின் சாலைகள் பலவும் இன்னும் தங்களது மத்திய கால வரைபட அமைப்பையே கொண்டுள்ளன. மூன்று நூற்றாண்டு காலத்தில் உருவாகியிருக்கும் இந்த பகுதியானது நகரின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானக் கலையில் சிறந்த இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, லிவர்பூலின் உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்கப்பட்டு இந்த அங்கீகாரத்தையும் அது பெற்றுள்ளது.[103] இப்பகுதியின் மிகப் பழமையான கட்டிடம் கிரேடு I பட்டியலிடப்பட்ட லிவர்பூல் டவுன் ஹால் ஆகும். இது கேஸில் ஸ்ட்ரீட்டின் உச்சியில் அமைந்துள்ளது. 1754 காலம் வரையான வரலாறு கொண்டது. நகரில் ஜார்ஜிய கட்டுமானக் கலையின் சிறந்த படைப்பாக பொதுவாகக் கருதப்படும் இந்த கட்டிடம் பிரிட்டனெங்கிலும் கட்டப்பட்டிருக்கும் மிக ஆடம்பர அலங்காரமிகுந்த மாநகராட்சி கட்டிடங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.[104][105] கிரேடு I பட்டியலிடப்பட்ட பேங்க் ஆஃப் இங்கிலாந்து கட்டிடமும்]] கேஸில் ஸ்ட்ரீட்டில் தான் உள்ளது. தேசிய வங்கியின் மூன்றே பிராந்திய கிளைகளில் ஒன்றாக 1845-1848 இடையே இது கட்டப்பட்டது.[104] டவர் பில்டிங்ஸ், அல்பியான் ஹவுஸ் (முன்னாளில் ஒயிட் ஸ்டார் லைன் தலைமையகம்), முனிசிபல் கட்டிடங்கள் மற்றும் ஓரியல் சாம்பர்ஸ்[106] - வெகு ஆரம்பத்தில் கட்டப்பட்ட நவீனத்துவ பாணி கட்டிடங்களில் இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது - ஆகியவை இந்த பகுதியில் இருக்கும் பிற முக்கியமான கட்டிடங்கள் ஆகும்.[107]

 
நவீன-செவ்வியல் செயிண்ட் ஜார்ஜ் ஹால்

வில்லியம் பிரவுன் ஸ்ட்ரீட்டை சுற்றிய பகுதி நகரின் ‘கலாச்சார வட்டாரம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணம் வில்லியம் பிரவுன் நூலகம், வால்கர் ஆர்ட் காலரி, பிக்டன் வாசக சாலைகள் மற்றும் லிவர்பூல் உலக மியூசியம் ஆகிய ஏராளமான பொதுக் கட்டிடங்கள் இங்கு உள்ளன. நவீன-செவ்வியல் கட்டுமானக் கலை இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் மிக முக்கியமானது செயிண்ட் ஜார்ஜ் ஹால் ஆகும்,[108] இது ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் நவீன-செவ்வியல் கட்டிடப் பாணிக்கு ஒரு சிறந்த உதாரணமாய் கருதப்படுகிறது.[109] கிரேடு I பட்டியலிடப்பட்ட கட்டிடமான இது நகரின் பல்வேறு நகராட்சி பணிகளை ஆற்றும் பொருட்டு 1840 மற்றும் 1855 காலத்தில் கட்டப்பட்டதாகும். இதன் கதவுகளில் "S.P.Q.L." (லத்தீன் செனடஸ் பாபுலஸ்க் லிவர்புட்லியன்ஸிஸ் ) எனப் பொறிக்கப்பட்டிருக்கும், இதன் அர்த்தம் “லிவர்பூலின் செனட் மற்றும் மக்கள்” என்பதாகும். ஏராளமான பொது நினைவுச் சின்னங்கள் மற்றும் சிற்பங்களுக்கும் வில்லியம் பிரவுன் ஸ்ட்ரீட் தாயகமாய் உள்ளது. இதில் வெல்லிங்டன்’ தூண் மற்றும் ஸ்டெபிள் ஃபவுண்டெய்ன் ஆகியவையும் அடங்கும். மற்ற பலவும் இந்த பகுதியைச் சுற்றி, குறிப்பாக இந்த நோக்கத்திற்கெனக் குறிப்பாக கட்டப்பட்ட செயிண்ட் ஜான்’ஸ் கார்டன்ஸ் பகுதியை சுற்றி அமைந்துள்ளன.[110]

பிற குறிப்பிடத்தக்க அடையாளங்கள்

தொகு
 
ஸ்பீக் ஹால் ட்யூடர் மேனார் இல்லம் என்பது லிவர்பூலின் மிகப் பழைய கட்டிடங்களில் ஒன்றாகும்

லிவர்பூலின் பெரும்பான்மையான கட்டுமானங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டவையாக உள்ள அதே சமயத்தில், அந்த காலத்திற்கும் முற்பட்ட பல கட்டிடங்களும் உள்ளன. இன்னும் இருக்கின்ற மிகப்பழமையான கட்டிடங்களில் ஒன்று ஸ்பீக் ஹால் ஆகும். இது 1598[111] ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இங்கிலாந்தின் வடக்கில் எஞ்சியிருக்கும் மரச் சட்டகம் கொண்ட வெகு சில ட்யூடர் இல்லங்களில் இந்த கட்டிடமும் ஒன்றாகும். குறிப்பாக இது 19 ஆம் நூற்றாண்டின்[112] மத்தியில் சேர்க்கப்பட்ட அதன் விக்டோரிய உள்ளமைப்புக்கு பெயர்பெற்றதாகும். ஸ்பீக் ஹால் தவிர, நகரில் இருக்கும் இன்னும் மிகப் பழைய கட்டிடங்களில் கிராக்ஸ்டெத் ஹால் மற்றும் வூல்டன் ஹால் ஆகியவை அடங்கும். இவை முறையே 1702 மற்றும் 1704 ஆம் ஆண்டுகளில்[113] கட்டி முடிக்கப்பட்டவை ஆகும்.

நகர மையத்திற்குள் இருக்கும் மிகப் பழைய கட்டிடம் என்றால் கிரேடு I பட்டியலில் வரும் ப்ளூகோட் சாம்பர்ஸ்[114] ஆகும். இது 1717 மற்றும் 1718 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். பிரித்தானிய ராணி ஆனி பாணியில்[115][116] கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஒரு பாதி கிறிஸ்டோபன் ரென் படைப்பின் பாதிப்பைக் கொண்டிருக்கிறது.[117] 1908 முதல் இது லிவர்பூலின் கலைகளின் ஒரு மையமாய் செயல்பட்டு வந்திருக்கிறது.[115]

 
லிவர்பூல் கதீட்ரல் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரும் கட்டிடங்களில் ஒன்றாய் கருதப்படுகிறது

லிவர்பூல் இரண்டு கதீட்ரலுக்குப் பெயர் பெற்றதாகும். இவை இரண்டும் தாம் அமைந்துள்ள இடங்களுக்கு அழகு சேர்க்கின்றன.[118] 1904 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட ஏஞ்ச்லிகன் கதீட்ரல் பிரிட்டனில் உள்ள மிகப்பெரிய கதீட்ரல்[119] ஆகும். அத்துடன் உலகில் ஐந்தாவது மிகப் பெரியதாகவும் விளங்குகிறது. கோதிக் பாணியில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இது 20 ஆம் நூற்றாண்டில்[120] கட்டப்பட்டிருக்கும் மாபெரும் கட்டிடங்களில் ஒன்றாய் கருதப்பட்டு வருகிறது. இதனை முன்னாள் பிரித்தானிய கவிஞர் ஜான் பெட்ஜிமேன் ‘உலகின் மாபெரும் கட்டிடங்களில் ஒன்று’ என்று விவரித்தார்.[121] ரோமன் கத்தோலிக் பெருநகரக் கதீட்ரல் 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. மரபுவழியான நீள்வெட்டு வடிவமைப்பு மரபை உடைக்கும் வகையாய் அமைந்த முதல் கதீட்ரல்களில் ஒன்று எனக் குறிக்கப்படுகிறது.[122]

சமீப வருடங்களில், லிவர்பூலின் நகர மையத்தின் பல பகுதிகளும் பல ஆண்டுகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க மறுவளர்ச்சி மற்றும் மறு உருவாக்கத்திற்கு உட்சென்றிருக்கின்றன.[123] நகர மையத்திற்கு வடக்கை சுற்றிய பகுதியிலும் பல்வேறு புதிய வானளாவிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல வருங்கால மறுவளர்ச்சி திட்டங்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன. மத்திய கிராமம் (திட்டமிடல் அனுமதி வழங்கப்பட்டு விட்டது),[124] லைம் ஸ்ட்ரீட் கேட்வே (வேலை துவங்கிவிட்டது)[125] மற்றும் பெரிய அளவிலான லட்சியத்துடன் செய்யப்பட்டு வரும் லிவர்பூல் வாட்டர்ஸ் (ஆரம்ப திட்டமிடல் கட்டம்)[126] ஆகியவை இதில் அடங்கும்.

லிவர்பூலில் இன்னும் பல குறிப்பிடத்தக்க கட்டிடங்கள் உள்ளன. ஸ்பீக் விமான நிலையத்தின் முன்னாள் முனைய கட்டிடத்தின் கலை அலங்கார முகப்பு, லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விக்டோரியா கட்டிடம் (ரெட் ப்ரிக் பல்கலைக்கழகம் என்கிற வார்த்தைக்கு இதுதான் உதாரணம் வழங்கியது), மற்றும் அடெல்பி தங்கும் விடுதி (இந்த தங்கும் விடுதி கடந்த காலத்தில் உலகின் வேறெந்த பகுதியிலுமான மிகச் சிறந்த தங்கும் விடுதிகளில் ஒன்றாய் கருதப்பட்டது) ஆகியவை இதில் அடங்கும்.[127]

இங்கிலீஷ் ஹெரிட்டேஜ் வரலாற்று பூங்காங்களின் தேசியப் பதிவகம் மெர்ஸெஸைடின் விக்டோரியன் பூங்காங்களை மொத்தமாய் “நாட்டின் மிக முக்கியமானவை”[128] எனக் குறிப்பிடுகின்றன. லிவர்பூல் நகரம் பத்து பட்டியலிடப்பட்ட பூங்காக்களையும் கல்லறைகளையும் கொண்டுள்ளது. இதில் கிரேடு II* மூன்றும் அடங்கும். இது லண்டன் தவிர வேறு எந்த இங்கிலாந்து நகரிலும் விட அதிகமான எண்ணிக்கையாகும்.[129]

போக்குவரத்து

தொகு

லிவர்பூல் நகரின் போக்குவரத்து பிரதானமாக நகரின் சாலை மற்றும் ரயில் பிணைப்புகளைச் சுற்றி நிகழ்கிறது. இரண்டுமே விரிவுபட்டதாய் இருப்பதோடு இங்கிலாந்து முழுமைக்கும் இணைப்புகளைக் கொண்டுள்ளது. லிவர்பூலில் ஒரு விரிவுபட்ட உள்ளூர் பொது போக்குவரத்து வலையமைப்பும் உள்ளது. மெர்ஸெஸைட் பயணியர் போக்குவரத்து நிர்வாகம் மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது. இதில் பேருந்துகள், தொடர் வண்டிகள் மற்றும் படகுகள் அடங்கும். கூடுதலாக, நகரில் ஒரு சர்வதேச விமான நிலையமும் ஒரு பெரிய துறைமுகமும் உள்ளன. இவை இரண்டும் நகருக்கு வெளியிலான இடங்களுக்கு இணைப்புகளை வழங்குகின்றன.

தேச அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான பயணம்

தொகு
சாலை இணைப்புகள்

ஒரு முக்கிய நகரமாக, லிவர்பூல் இங்கிலாந்தில் இருக்கும் பிற பல பகுதிகளுடன் நேரடியான சாலை இணைப்புகளைக் கொண்டுள்ளது. கிழக்கில், எம்62 மோட்டார்வே லிவர்பூலை ஹல் உடன் இணைக்கிறது. இப்பாதையின் வழியில் இந்த சாலை மான்செஸ்டர், லீட்ஸ் மற்றும் பிராட்ஃபோர்ட் உள்ளிட்ட பல பெரும் நகரங்களுக்கும் இணைப்புகள் கொண்டுள்ளது. எம்6 மோட்டார்வே மற்றும் எம்1 மோட்டார்வே இரண்டுக்குமான ஒரு இணைப்பையும் எம்62 வழங்குகிறது. இதன்மூலம் பிர்மிங்ஹாம், ஷெஃபீல்டு, பிரெஸ்டன், லண்டன் மற்றும் நாட்டிங்காம் உள்ளிட்ட வெகு தூரப் பகுதிகளுக்கான மறைமுக இணைப்புகளும் கிட்டுகின்றன.[130] நகரின் மேற்கில், கிங்ஸ்வே மற்றும் குவீன்ஸ்வே சுரங்கப் பாதைகள் லிவர்பூலை வைரல் பெனிசூலா பகுதி உடன் இணைக்கின்றன. இதன் மூலம் பிர்கென்ஹெட், மற்றும் வாலஸெ ஆகிய இரண்டுக்கும் இணைப்புகள் கிடைக்கின்றன. பிர்கென்ஹெட்டில் துவங்கும் ஏ41 சாலை செஷயர் மற்றும் ஷ்ரோஃப்ஷயருக்கும், தவிர ஏ55 சாலை வழியே நார்த் வேல்ஸ்க்கும் இணைப்புகளை வழங்குகிறது.[131] தெற்கில் லிவர்பூல் ஏ562 சாலை வழியாக லிவர்பூல் விட்னெஸ் மற்றும் வாரிங்டனுக்கு இணைப்பு கொண்டுள்ளது. இதன்மூலம் மெர்ஸெ ஆற்றுக்கு குறுக்கே ரன்காமுக்கும், சில்வர் ஜூப்ளி பாலம் வழியேயும் இணைப்பு கொண்டுள்ளது. இன்று இந்த பாதையில் இருக்கும் நெரிசலைக் குறைப்பதற்காக ஆற்றின் குறுக்கே மெர்ஸெ கேட்வே என்னும் ஒரு இரண்டாவது பாலத்தைக் கட்டுவதற்கான திட்டங்கள் சமீப வருடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

 
லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் ஸ்டேஷன்
ரயில் இணைப்புகள்

லிவர்பூலில் இரண்டு தனித்தனியான ரயில் பாதை இணைப்புகள் உள்ளன. உள்ளூர் ரயில் இணைப்புகள் மெர்ஸெரயில் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன; இயக்கப்படுகின்றன. இது மெர்ஸெஸைட் மற்றும் அதற்கு அப்பால் முழுவதும் இணைப்புகளை வழங்குகிறது (உள்ளூர் போக்குவரத்து என்பதைக் காணவும்). தேசிய ரயில் இணைப்புகள் நெட்வொர்க் தொடர்வண்டி வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இது இங்கிலாந்து முழுவதிலும் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் மாநகரங்களுடன் லிவர்பூலுக்கு இணைப்புகளை வழங்குகிறது. மாநகரின் பிரதான நிலையமாக இருப்பது லைம் ஸ்ட்ரீட் நிலையம் ஆகும். இது நகருக்குள் பல்வேறு பாதைகளுக்கான ஒரு முனையமாக செயல்படுகிறது. லைம் ஸ்ட்ரீட்டில் இருந்தான தொடர் வண்டி சேவைகள் ஏராளமான இடங்களுக்கு இணைப்புகள் வழங்குகின்றன. லண்டன் (பெண்டோலினோ தொடர் வண்டிகளில்[சான்று தேவை] 2 மணி நேரம் 8 நிமிடங்கள்), பிர்மிங்ஹாம், டைன் நியூகேஸில், மான்செஸ்டர், பிரெஸ்டன், லீட்ஸ், ஸ்கார்பரோ, ஷெஃபீல்டு, நாட்டிங்ஹாம் மற்றும் நார்விச் ஆகிய நகரங்கள் இதில் அடங்கும். நகரின் தெற்கே, லிவர்பூல் சவுத் பார்க்வே நகரின் விமான நிலையத்திற்கு இணைப்பினை வழங்குகிறது.

 
லிவர்பூல் ஜான் லெனான் விமானநிலைய நுழைவாயில்
துறைமுகம்

லிவர்பூல் துறைமுகம் பிரிட்டனின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது ஐரிஷ் கடல் வழியே பெல்ஃபாஸ்ட், டுப்ளின் மற்றும் ஐல் ஆஃப் மேன் பகுதிகளுக்கு படகு சேவைகளை வழங்குகிறது. 2007 ஆம் ஆண்டில், லிவர்பூலில் ஒரு புதிய பயணியர் கப்பல் முனையம் திறக்கப்பட்டது. நகரின் மையத்தில் பையர் ஹெட்டின் பக்கவாட்டில் இது அமைந்துள்ளது. இந்த முனையம் பயணியர் கப்பல்களை நகரின் கப்பல்துறைக்குள் நிற்க அனுமதிக்கிறது. (2009 ஆம் ஆண்டில்[132] 40 கப்பல்கள் நிற்க அனுமதி கோரியிருந்தன) அத்துடன் அட்லாண்டிக் கடந்த சேவைகளுக்கான ஒரு தளத்தையும் வழங்குகிறது.[133]

விமான நிலையம்

நகரின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் லிவர்பூல் ஜான் லெனான் விமானநிலையம், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவெங்கிலும் லிவர்பூலுக்கு நேரடியான வான்வெளி இணைப்புகளை அளிக்கிறது. 2008 ஆம் ஆண்டில், இந்த விமான நிலையம் சுமார் 5.3 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.[134] இன்று அது பெர்லின், ரோம், மிலான், பாரிஸ், பார்சிலோனா மற்றும் ஸூரிச் உள்ளிட்ட 68 இடங்களுக்கு[135] சேவைகளை வழங்குகிறது. இவ்விமான நிலையத்தில் குறைந்த கட்டண விமான சேவைகள் பிரதானமாக வழங்கப்படுகின்றன. ரியனாய்ர் மற்றும் ஈஸிஜெட் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆயினும் கோடை காலங்களில் கூடுதல் சிறப்பு சேவைகளையும் இந்நிலையம் வழங்குகிறது. 2008 ஆம் ஆண்டில், டச்சு விமான நிறுவனமான KLM இந்த விமான நிலையத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமான சேவையை ஒரு நாளைக்கு மூன்று முறை இயக்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு இந்த விமான சேவை மூலம் டச்சு விமானநிலையத்தின் வழியே 650க்கும் அதிகமான இடங்களுக்குப் பறக்க வாய்ப்புவகைகளை வழங்கியுள்ளது.[136]

உள்ளூர் போக்குவரத்து

தொகு
பேருந்துகள்

லிவர்பூலுக்கு உள்ளேயும் அதனைச் சுற்றியுமான உள்ளூர் பேருந்து சேவைகள் மெர்ஸெஸைட் பயணியர் போக்குவரத்து நிர்வாகம் (மிகப் பொதுவாக மெர்ஸெடிராவல்[137] என்று அறியப்படுகிறது) மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. பிரதானமாக இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. நகரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்வதற்கு குவீன் ஸ்கொயர் பேருந்து நிலையமும் (லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது), மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு முன்னர் பாரடைஸ் ஸ்ட்ரீட் பஸ் இண்டர்சேஞ்ச் என்று அழைக்கப்பட்ட லிவர்பூல் ஒன் பேருந்து நிலையமும் (ஆல்பர்ட் துறை அருகில் அமைந்துள்ளது) உள்ளன. நகர மையத்தில் இருந்து லிவர்பூல் மற்றும் மெர்ஸெஸைட் ஆகியவற்றுக்கு இடையே சனிக்கிழமைகளில் ஒரு இரவுப் பேருந்து சேவையும் இயக்கப்படுகிறது.[138]

 
மெர்ஸெரயில் வலைப்பின்னலுக்கு நகர மையத்திற்குள் விரிவான தரைக்குக் கீழ் செல்லும் பாதைகள் உள்ளன
தொடர் வண்டிகள்

லிவர்பூலின் உள்ளூர் தொடர் வண்டி போக்குவரத்து நாட்டில் மிகப் பரபரப்பு மிகுந்ததாயும் மிகவும் விரிவுபட்டனவாயும் இருப்பவற்றுள் ஒன்றாகும். 75 மைல் தூர தடத்தைக் கொண்டிருக்கும் இச்சேவை சராசரியாக ஒரு வாரநாளில் 100,000 பயணிகளைச் சுமக்கிறது.[139][140] மெர்ஸெரயில் கிளை மூலம் இச்சேவைகள் இயக்கப்படுகின்றன. அத்துடன் மெர்ஸெஸைட் பயணியர் போக்குவரத்து நிர்வாகம் தான் இதனையும் நிர்வகிக்கிறது. இந்த வலைப்பின்னலில் மூன்று பாதைகள் உள்ளன: வடக்கு பாதை, இது சவுத்போர்ட், ஓர்ம்ஸ்கிர்க், கிர்க்பி மற்றும் ஹண்ட்ஸ் கிராஸ்க்கு செல்கிறது. வைரல் பாதை, இது மெர்ஸெ ரயில்வே சுரங்கம் வழியே செல்கிறது. நியூ பிரைட்டன், வெஸ்ட் கிர்பி, செஸ்டர் மற்றும் எலெஸ்மீர் துறைமுகத்திற்கு கிளைகள் பிரிகின்றன. மாநகரப் பாதை, இது லைம் ஸ்ட்ரீட்டில் துவங்குகிறது. செயிண்ட் ஹெலென்ஸ், விகான், பிரெஸ்டன், வாரிங்டன் மற்றும் மான்செஸ்டர் ஆகிய இடங்களுக்கு இணைப்புகள் வழங்குகின்றது. மாநகரப் பாதையில் உள்ளூர் சேவைகள் மெர்ஸெரயில் மூலம் இல்லாமல் வடக்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன. ஆயினும் அந்த தொடர் வண்டிப் பாதை மெர்ஸெரயில் வலைப்பின்னலின் ஒரு பகுதியே என்பது குறிப்பிடத்தக்கது. நகர மையத்திற்குள்ளாக வலைப்பின்னலின் பெரும்பகுதி பூமிக்குக் கீழ் செல்லும் வகையில் அமைந்துள்ளது. 5 நகர மைய நிலையங்களும் 6.5 மைல்களுக்கும் அதிகமான சுரங்கங்களும் உள்ளன.[139]

 
MV ராயல் ஐரிஸ் ஆஃப் மெர்ஸெ லிவர்பூலுக்கும் வைரலுக்கும் இடையில் ஆற்றுக்கு குறுக்கே படகு சேவை வழங்கும் மூன்று படகு சேவைகளில் ஒன்றாகும்
மெர்ஸெ படகு போக்குவரத்து

லிவர்பூலில் மெர்ஸெ ஃபெரி என்று அறியப்படும் மெர்ஸெ ஆற்றின் குறுக்கேயான படகுப் போக்குவரத்து மெர்ஸெடிராவல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, இயக்கப்படுகிறது. சேவைகள் லிவர்பூலின் பையர் ஹெட்டுக்கும் பிர்கின்ஹெட்டில் உள்ள வுட்ஸைட் மற்றும் வாலஸெயில் உள்ள ஸீகாம்பெ இரண்டுக்கும் இடையில் இயக்கப்படுகின்றன. நெரிசலான நேரங்களில் சேவைகள் 20 நிமிட இடைவெளிகள் வரை இயக்கப்படுகின்றன. மதிய நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் இது ஒரு மணி நேர இடைவெளியாய் இருக்கும்.[141] நகருக்கும் வைரல் வளைகுடாவுக்கும் இடையிலான முக்கியமான போக்குவரத்து இணைப்பாக இருந்தபோதிலும், நகருக்குள்ளாக மெர்ஸெ ஃபெரி பெருகிய முறையில் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் ஆகியிருக்கிறது. பகல் நேரத்தின் ஆற்று பயணப் பயணியர் கப்பல்கள் பயணிகளுக்கு ரிவர் மெர்ஸெ ஆறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்த ஒரு வரலாற்று பார்வையை வழங்குகின்றன.[142]

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய டிராம்

2001 ஆம் ஆண்டில், மெர்ஸெடிராம் என்னும் ஒரு புதிய இலகு தொடர் வண்டி அமைப்பை கட்டுவதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. முன்னதாக ஒப்புக் கொண்ட நிதியை வெளியிடும் முன்னதாக கூடுதல் உறுதிமானங்கள் மீது மத்திய அரசாங்கம் வலியுறுத்தியதை அடுத்து 2005 ஆம் ஆண்டு நவம்பரில் இத்திட்டம் ரத்தாகி விட்டது. ஆயினும், லிவர்பூலின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பாகமாகக் கருதப்படும் இது 2006-11 ஆண்டு காலத்தில் இருந்தான போக்குவரத்து திட்டத்தில் சேர்க்கப்பட இருக்கிறது.[143]

லீட்ஸ் மற்றும் லிவர்பூல் கால்வாய்

1770 மற்றும் 1816 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்ட இந்த லீட்ஸ் மற்றும் லிவர்பூல் கால்வாய் லிவர்பூல் மற்றும் மெர்ஸெயை லீட்ஸ் மற்றும் எய்ர் ஆற்றுடன் இணைக்கிறது. வடக்கேயேயான மதகுகளின் ஒரு தொடர்ச்சி மூலம் கால்வாய் ஸ்டான்லி டாக் துறைக்கு இட்டுச் செல்கிறது. இந்த இடம் புகையிலை கிடங்குக்கு புகழ்பெற்றதாகும். அங்கிருந்து பிரதான துறைமுக அமைப்புக்கு இந்த பாதை செல்கிறது.

தற்போது கட்டுமானப் பணிகளில் இருக்கும் பையர் ஹெட் கட்டிடங்களுக்கு முன்பு அமையவிருக்கும் ஒரு புதிய இணைப்பு வடக்கு துறைகளை ஆல்பர்ட் துறையுடன் இணைக்கவிருக்கிறது. இதனை 2008 ஆம் ஆண்டில் லிவர்பூலின் கலாச்சார தலைநகர ஆண்டு கொண்டாட்ட சமயத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலாச்சாரம்

தொகு
 
லிவர்பூல் ஐரோப்பிய கலாச்சார தலைநகரம் 2008 கொடி, லிவர்பூல் துறைமுக கட்டிடத்தின் முன் பறக்கிறது

2003 ஆம் ஆண்டில், லிவர்பூல் 2008 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய கலாச்சாரத் தலைநகரமாய் அறிவிக்கப்பட்டது. இப்பெருமையை நார்வேயின் ஸ்டாவங்கர் உடன் இது பகிர்ந்து கொண்டது. 2003-2009 வரையிலான தொடர்ச்சியான பல கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன. இவை 2008 ஆம் ஆண்டில் உச்சம் பெற்றன.

இலக்கியம்

தொகு

டேனியல் டெஃபோ, வாஷிங்டன் இர்விங், தாமஸ் டி குவின்ஸி, ஹெர்மன் மெல்வில்லி, நாதனியல் ஹாதோர்ன், சார்லஸ் டிக்கன்ஸ், கெரால்டு மேன்லி ஹாப்கின்ஸ் மற்றும் ஹியுக் வால்போல் உட்பட ஏராளமான பிரபல எழுத்தாளர்கள் லிவர்பூலுக்கு வருகை தந்து நகரில்[சான்று தேவை] பெரியதொரு காலத்தை செலவிட்டுள்ளனர். 1853 மற்றும் 1856[சான்று தேவை] ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஹாதோர்ன் லிவர்பூலில் அமெரிக்க தூதராய் அமர்த்தப்பட்டிருந்தார். ஜங் லிவர்பூலுக்கு ஒருமுறையும் வந்ததாக அறியப்படவில்லை என்றாலும், அவர் இந்நகரம் குறித்து ஒரு தெளிந்த கனவைக் கொண்டிருந்தார். அதனை அவர் தனது படைப்புகளில் ஒன்றில் பகுப்பாய்கிறார்.[144]

1960களில் மெர்ஸெபீட்டின் (இசை) மையமாக லிவர்பூல் இருந்தது. அப்போது முதலே அது இசை அரங்கிற்கு ஒரு தாயகமாகத் தான் இருந்து வருகிறது. இங்கிலாந்தின் மிகப் பழமையாக நிறுவப்பட்ட மெல்லிசைக் குழுவான ராயல் லிவர்பூல் பில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவின் தாயகமும் இந்நகரே. இக்குழு பில்ஹார்மோனிக் ஹாலில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் ஒரு இளைஞர் மெல்லிசைக்குழுவும் உண்டு. லிவர்பூலின் எதிர்பார்ப்பு மிகுந்த படைப்பாளிகளில் ஆஸ்திரியாவில் இருந்து குடியேறிய ஃபிரிட்ஸ் ஸ்பீகல் குறிப்பிடத்தகுந்தவர். ஸ்கௌஸின் சொற்பிறப்பியலில் அவர் ஒரு உலக நிபுணரானதோடு, Z-கார்கள் மற்றும் ரேடியோ 4 யுகே கருப்பொருள் பாடல்களுக்கும் இசை தொகுப்பு செய்துள்ளார்.

கவிதை

தொகு

1960களின் பிற்பகுதியில், ரோஜர் மெக்கவ் மற்றும் மறைந்த அட்ரியன் ஹென்றி உள்ளிட்ட லிவர்பூல் கவிஞர்களுக்கு இந்நகர் பெரிதும் அறியப்பட்டதானது. ஹென்றி, மெக்கவ் மற்றும் பிரையன் பாட்டன் எழுதிய தி மெர்ஸெ சவுண்ட் என்னும் கவிதைகளின் திரட்டு ஒன்று 1967[சான்று தேவை] ஆம் ஆண்டில் முதலில் பதிப்பிடப்பட்டது. அதுமுதல் 500,000 பிரதிகளுக்கும் அதிகமாய் விற்றுத் தீர்ந்துள்ளது.

நாடகம்

தொகு

நடிப்புக் கலைகளின் ஒரு வரலாறும் லிவர்பூலுக்கு உண்டு. ஒவ்வொரு கோடையிலும் லிவர்பூல் கதீட்ரலுக்குள்ளும் அடுத்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க செயிண்ட் ஜேம்ஸ் கார்டனிலும் நடக்கும் வருடாந்திர தியேட்டர் சிறப்பு விழாவான லிவர்பூல் ஷேக்ஸ்பியர் விழாவிலும், மற்றும் நகரெங்கிலும் உள்ள ஏராளமான நாடக அரங்குகளிலும் இது பிரதிபலிக்கக் காணலாம். எம்பயர், எவ்ரிமேன், லிவர்பூல் பிளேஹவுஸ், நெப்டியூன், ராயல் கோர்ட் மற்றும் யூனிட்டி தியேட்டர் ஆகியவை இவற்றில் அடங்கும். எவ்ரிமேன் தியேட்டர், யூனிட்டி தியேட்டர் மற்றும் பிளேஹவுஸ் தியேட்டர் இவை அனைத்தும் தங்களது சொந்த நாடக நிறுவனங்களை நடத்தி வருகின்றன.[145][146]

காட்சிக் கலை

தொகு
 
சூப்பர்லம்பனானா, இப்போது லிவர்பூல், டிதெபார்ன் வீதியில் உள்ளது
 
டாடே லிவர்பூலின் தாயகமாய் உள்ள ஆல்பர்ட் கப்பல்துறை
 
Superlambananas, 2010

லண்டனைத் தவிர[147] இங்கிலாந்தில் இருக்கும் வேறெந்த நகரத்தையும் விட அதிகமான கலைக் காட்சியகங்களையும் தேசிய அருங்காட்சியகங்களையும் லிவர்பூல் கொண்டுள்ளது. நேஷனல் மியூசியம்ஸ் லிவர்பூல் தான் முழுமையாய் லண்டனுக்கு வெளியிலான இடத்தை மையமாகக் கொண்ட ஒரே இங்கிலாந்து தேசிய தொகுப்பு ஆகும்.[148] டாடே லிவர்பூல் காலரி வட இங்கிலாந்தின் டாடேயின் நவீன கலைத் தொகுப்பைக் கொண்டிருக்கிறது. டாடே மாடர்ன் திறக்கப்படும் வரை, இங்கிலாந்தில் நவீனக் கலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் பெரும் கண்காட்சி இடமாக இது தான் இருந்தது. FACT மையம் மல்டிமீடியா கண்காட்சிகளை நடத்துகிறது. வாக்கர் ஆர்ட் காலரி ப்ரி-ரஃபேலைட்டுகளின் ஒரு விரிவான தொகுப்பைக் கொண்டிருக்கிறது. சட்லே ஹவுஸ் 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கலையின்[149] இன்னுமொரு பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது. அத்துடன் கலைக் காட்சியகங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து விரிவுபட்டுக் கொண்டிருக்கிறது: செரி ஹேண்ட் கலைக் காட்சியகம் 2008 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது பிரதானமாக சமகாலக் கலையை வெளிப்படுத்துகிறது. லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விக்டோரியா கட்டிடம் பல்கலைக்கழகத்தின் கலைப் படைப்புகள் மற்றும் வரலாற்று தொகுப்புகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு பொது கலைக் காட்சியகமாக மறுதிறப்பு செய்யப்பட்டது. [சான்று தேவை]

1724 ஆம் ஆண்டில் லிவர்பூலில் பிறந்த ஓவியர் ஜார்ஜ் ஸ்டப்ஸ் உட்பட ஓவியர்களும் இந்த நகரில் இருந்து வந்திருக்கின்றனர்.

லிவர்பூல் கலை விழா செப்டம்பர் மத்தியில் துவங்கி நவம்பரின் பிற்பகுதி வரை நடக்கும். இதில் மூன்று முக்கிய பிரிவுகள் உண்டு: சர்வதேசம், சுயேச்சையானவை மற்றும் புதிய சமகாலம் ஆகியவை. ஆயினும் சிறு நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழும்[150]. 2004 விழா சமயத்தில் யோகோ ஓனோவின் படைப்பான “மை மதர் இஸ் ப்யூட்டிஃபுல்” பரவலான பொதுமக்கள் எதிர்ப்பை சம்பாதித்தது. காரணம் ஒரு நிர்வாண பெண்ணின் அந்தரங்க பிரதேச புகைப்படங்கள் பிரதான வர்த்தக தெருவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புகள் வந்த போதிலும் கூட அந்த படைப்பு அந்த இடத்திலேயே[சான்று தேவை] தொடர்ந்து இருந்தது.

கல்வி

தொகு
 
லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விக்டோரியா கட்டிட கோபுரம்
 
லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் பைரோம் வீதி நகர வளாகம்

லிவர்பூலில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி என்பது மதச்சார்பற்ற வகை, சர்ச் ஆஃப் இங்கிலாந்து வகை, யூத வகை, மற்றும் ரோமன் கத்தோலிக்க வகை உட்பட அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இஸ்லாமிய கல்வி ஆரம்பக் கல்வி நிலையில் கிடைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இடைநிலைக் கல்வி நிலை இல்லை. 1708 ஆம் ஆண்டில் ஒரு தொண்டு நிறுவனப் பள்ளியாக நிறுவப்பட்ட லிவர்பூல் ப்ளூ கோட் பள்ளி லிவர்பூலின் முக்கியமான ஆரம்பகால பள்ளிகளில் ஒன்று ஆகும்.

லிவர்பூல் ப்ளூ கோட் பள்ளி தான் நகரில் மிகச் சிறப்பாய் செயல்படும் பள்ளி ஆகும். 100% 5 அல்லது கூடுதலான A*-C கிரேடுகளை GCSE ஆம் ஆண்டில் பெற்று நாட்டிலேயே 30வது சிறந்த GCSE ரிசல்ட் வரிசையிடத்தைப் பிடிக்கிறது. அத்துடன் A/AS நிலைகளில் மாணவர் சராசரியாய் 1087.4 புள்ளிகள் ஸ்கோரைப் பெற்றுள்ளது.[151] 1840 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லிவர்பூல் கல்லூரி மற்றும் 1620 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மெர்ச்செண்ட் டெய்லர் பள்ளி ஆகியவை உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க பள்ளிகளும் உள்ளன.[152] லிவர்பூலின் குறிப்பிடத்தக்க மேல்நிலைக் கல்வி பள்ளிகளில் இன்னொன்று நகரில் வெஸ்ட் டெர்பி பகுதியில் அமைந்துள்ள புனித எட்வர்ட்ஸ் கல்லூரி ஆகும். 1980களில் மூடப்பட்ட லிவர்பூல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை ஸ்கூல் & லிவர்பூல் காலேஜியேட் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இலக்கணப் பள்ளிகள் கல்வியில் சிறந்து விளங்கிய மையங்களாக இன்னும் நினைவுகூரப்படுகின்றன. பெலரிவ் கத்தோலிக் கல்லூரி தான் 2007 ஆம் ஆண்டில் GCSE ரிசல்ட் அடிப்படையில் அமைந்த தெரிவு சாரா பள்ளிகளில் நகரின் மிகச் சிறந்த பள்ளியாக விளங்கியது.

லிவர்பூலில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன: லிவர்பூல் பல்கலைக்கழகம், லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகம். லிவர்பூலின் எட்ஜ் ஹில் மாவட்டத்தில் ஆசிரியர்-பயிற்சிக் கல்லூரியாய் ஆரம்பத்தில் நிறுவப்பட்ட எட்ஜ் ஹில் பல்கலைக்கழகம் இப்போது தென்-மேற்கு லங்காஷயரில் ஓர்ம்ஸ்கிர்கில் அமைந்துள்ளது.

லிவர்பூல் பல்கலைக்கழகம் 1881 ஆம் ஆண்டில் லிவர்பூல் பல்கலைக்கழக கல்லூரி என நிறுவப்பட்டது. 1884 ஆம் ஆண்டில், இது பெடரல் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் பாகமாய் ஆனது. 1903 ஆம் ஆண்டில் அரச ஆணை மற்றும் நாடாளுமன்ற சட்டத்தை அடுத்து, தனது சொந்த பட்டங்களை வழங்கும் உரிமையுடனான லிவர்பூல் பல்கலைக்கழகம் என்கிற சுதந்திரமான பல்கலைக்கழகமாக அது ஆனது. உயிரிவேதியியல், கட்டுமானவியல், கட்டிட வடிவமைப்பு, கால்நடை அறிவியல், கடலியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் பட்டங்கள் வழங்கிய முதல் பல்கலைக்கழகமாய் இது ஆனது.

1844 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகம் சைல்ட்வாலில் உள்ள டகார்ட் அவென்யூவின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளது. இரண்டாவது வளாகம் நகர மையத்தில் (தி கார்னர்ஸ்டோன்) அமைந்துள்ளது. தாராளவாத கலைகளுக்குள் ஹோப் பல்கலை தனக்கென ஒரு பெயரைச் சம்பாதித்துக் கொண்டுள்ளது. உயர்ந்த பட்டதாரி வேலைவாய்ப்புத்திறனிலும், வளாக மேம்பாட்டிலும், மற்றும் நகருக்கு வெளியிலிருந்தான மாணவர் விண்ணப்பங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பிலும் இந்த பல்கலைக்கழகம் வெற்றிகரமாய் திகழ்ந்து வந்திருக்கிறது.

வர்த்தகத்தால் உருவான சில பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்ட லிவர்பூல் வெப்பமண்டல மருந்தியல் பள்ளி இன்று லிவர்பூல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு முதுகலைப் பட்ட பள்ளியாய் தொடர்ந்து கொண்டுள்ளது, அத்துடன் அவசியமான நிர்ணயப்பட்ட விஷ-முறிவு சேமிப்பகத்தை சர்வதேச அளவில் கொண்டிருக்கும் இரு நிறுவனங்களில் ஒன்றாய் திகழ்கிறது.[சான்று தேவை]

லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் முன்னதாய் ஒரு பலதொழில்நுட்பக் கல்லூரியாக இருந்து 1992 ஆம் ஆண்டில் தான் இந்த அந்தஸ்தை பெற்றது. ஒரு முக்கிய பங்களிப்பாளராய் இருந்த லிட்டில்வுட்ஸ் கால்பந்து குழுக்கள் மற்றும் சில்லரை விற்பனைக் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான சர் ஜான் மூர்ஸை கவுரவிக்கும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டது. இந்த ஸ்தாபனம் முன்னர் லிவர்பூல் உள்ளாட்சி மன்றத்தால் உரிமை கொள்ளப்பட்டு நடத்தப்பட்டு வந்ததாகும்.

நகரில் லிவர்பூல் சமுதாயக் கல்லூரி என்னும் கூடுதல் கல்விக் கல்லூரியும் உள்ளது.

லிவர்பூலில் இரண்டு யூதப் பள்ளிகள் உள்ளன. இரண்டும் கிங் டேவிட் அறக் கட்டளைக்கு சொந்தமானதாகும். லிவர்பூல் கிங் டேவிட் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகும். கிங் டேவிட் ஆரம்ப பள்ளியும் உண்டு. கிங் டேவிட் கிண்டர்கார்டனும் இருக்கிறது. இது ஹரோல்டு ஹவுஸின் சமுதாய மையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்துமே சைல்ட்வாலில் இருக்கும் ஹரோல்டு ஹவுஸை மையமாய் கொண்டு இயக்கும் கிங் டேவிட் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகின்றன.

விளையாட்டு

தொகு
 
ஆன்ஃபீல்டு, லிவர்பூல் எஃப்.சி.யின் தாயகம்

லிவர்பூல் இரண்டு பிரீமியர் லீக் கால்பந்து கிளப்களின் தாயகமாய் இருக்கிறது: லிவர்பூல் எஃப்.சி. மற்றும் எவர்டன். கால்பந்து லீக் 1888 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது முதல் ஒவ்வொரு சீசனிலும் டாப் டிவிஷன் கால்பந்து போட்டிகளை நடத்தி வரும் ஒரே இங்கிலாந்து நகரம் லிவர்பூல் மட்டுமே. நகரின் இரண்டு கிளப்களும் அரங்கு நிறைந்த பெரும் மைதானங்களில் விளையாடுகின்றன.

லிவர்பூல் எஃப்.சி. தான் இங்கிலீஷ் கால்பந்து போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது. இது 18 லீக் பட்டங்களையும், ஏழு FA கோப்பைகளையும், ஏழு லீக் கோப்பைகளையும், ஐந்து ஐரோப்பிய கோப்பைகளையும் மூன்று UEFA கோப்பைகளையும் வென்றுள்ளது. இந்த அணி 1892 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவர்கள் தங்களது மொத்த வரலாற்றையும் அன்பீல்டு மைதானத்தில் செலவிட்டுள்ளனர். இது அவர்களின் உருவாக்கத்தின் போது அவர்கள் ஆக்கிரமித்த மைதானம் ஆகும்; முன்னதாக அது எவர்டன் அணியின் தாயகமாய் இருந்தது. இங்கிலீஷ் கால்பந்தில் 1962 முதல் லிவர்பூல் தொடர்ந்து தலைமை இடங்களில் இருந்து வருகிறது. பில் ஷேங்க்லி, பாப் பைஸ்லி, ஜோ ஃபேகன், கென்னி டால்க்லிஷ் (இவர் இந்த கிளப்புக்காக விளையாடவும் செய்தார். கொஞ்ச காலத்திற்கு வீரர் மற்றும் மேலாளராய் இருந்தார்), கெரார்ட் ஹவ்லியர் மற்றும் அவர்களது நடப்பு மேலாளரான ரபேல் பெனிடெஸ் ஆகியோர் இதன் மேலாளர்களாய் இருந்து வந்திருக்கின்றனர். பில்லி லிடெல், இயன் செயிண்ட் ஜான், ரோஜர் ஹண்ட், ரோன் யீட்ஸ், எம்லின் ஹுக்ஸ், கெவின் கீகன், இயன் ரஷ், கிரீமி சௌனஸ், ராபி ஃபவுலர் மற்றும் ஸ்டீவன் கெரார்டு ஆகியோர் பிரபல லிவர்பூல் வீரர்களில் சிலர். ஆயினும், இந்த கிளப்புக்கு ஒரு துயர சம்பவத்துடனும் தொடர்பு இருக்கிறது; 1985 ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் ப்ருசெல்ஸ் நகரில் ஹெய்ஸெல் மைதானத்தில் நடந்த ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டியின் போது மேல்தளங்களில் நடந்த கலவரத்தால் 39 பார்வையாளர்கள் மரணமடைந்தனர் (ஏறக்குறைய இவர்களில் எல்லோரும் ஜுவெண்டஸ் ஆதரவாளர்கள்), இதனையடுத்து அனைத்து இங்கிலீஷ் கிளப்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐரோப்பிய போட்டிகளில் பங்கெடுக்க முடியாதபடி தடைசெய்யப்பட்டது (எல்லா பிற இங்கிலீஷ் கிளப்களுக்கும் மறு அனுமதி கிட்டிய பின்னரும் லிவர்பூல் ஒரு வருடம் கூடுதலாய் தண்டனை பெற்றது). நான்கு வருடங்கள் கழித்து, 94 லிவர்பூல் ரசிகர்கள் (இறுதியில் இந்த எண்ணிக்கை 96 ஆனது) ஷெஃபீல்டில் ஹில்ஸ்பரோ மைதானத்தில் நடந்த FA கோப்பை அரையிறுதிப் போட்டியில் நெரிசலில் நசுங்கி மரணமுற்றனர். இதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட டெய்லர் அறிக்கையின் படி அனைத்து டாப் டிவிஷன் மைதானங்களிலும் நிற்கும் வசதியானது 1990களின் மத்திய காலம் வரை தடை செய்யப்பட்டது.

லிவர்பூலின் இரண்டு தொழில்முறை கால்பந்து கிளப்களில் எவர்டன் தான் மூத்ததாகும். 1878 ஆம் ஆண்டில் அந்த அணி நிறுவப்பட்டது. 1892 ஆம் ஆண்டில் அன்பீல்டு மைதானத்தில் இருந்து அவர்கள் இடம்பெயர்ந்தது முதல் அவர்கள் குடிசன் பார்க்கில் விளையாடி வந்துள்ளனர். அதன்பின் அன்பீல்டு மைதானம் புதிய லிவர்பூல் கிளப்பால் எடுத்துக் கொள்ளப்பட்டது. எவர்டன் அணியினர் ஒன்பது முறை லீக் சாம்பியன்களாகி உள்ளனர். ஐந்து முறைகள் FA கோப்பை வென்றுள்ளனர். ஒருமுறை ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பையையும் கைப்பற்றியுள்ளனர். ஹாரி கேடரிக் மற்றும் ஹோவார்டு கெண்டால் ஆகியோர் அவர்களின் மிகவும் வெற்றிகரமான மேலாளர்களாய் இருந்துள்ளனர். பல உயர் புகழ் வீரர்கள் எவர்டன் அணியில் விளையாடியுள்ளனர். டிக்ஸி டீன் (இவர் ஒற்றை லீக் சீசனில் 60 கோல்கள் போட்டு சாதனை செய்தவர்), டாமி லாடன், ப்ரையன் லபோன், ரே வில்சன், ஆலன் பால் (இவர்கள் இருவருமே 1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவர்கள்), நெவிலி சவுதால், ஆண்டி கிரே, கேரி லைன்கெர், ஆண்ட்ரெ கான்செல்ஸ்கிஸ், டேவ் வாட்சன் மற்றும் வேய்ன் ரூனி ஆகியோர் இவ்வீரர்களில் அடங்குவர்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், லிவர்பூலின் இரண்டு கிளப்களுமே புதிய மைதானங்களுக்கு இடம்பெயர்வதை சிந்தித்து வருகின்றன. ஸ்டான்லி பார்க் பக்கத்திலிருக்கும் ஒரு புதிய மைதானத்திற்கு இடம்பெயர்வது குறித்து சில வருடங்களாகவே லிவர்பூல் சிந்தித்து வருகிறது. எவர்டன் அணி இப்போது கிர்க்பியில் உள்ள ஒரு புதிய மைதானத்திற்கு இடம்பெயர்வது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது. முன்னதாக கிங்’ஸ் துறை பகுதிக்கு இடம்பெயர்வதற்கு போடப்பட்ட திட்டம் நிதிச் சிக்கல்கள் காரணமாய் சாத்தியம் இல்லாமல் போனது.

தொழில்முறை கூடைப்பந்து விளையாட்டில் எவர்டன் டைகர்ஸ் அணி உயர்மட்ட பிரித்தானிய கூடைப்பந்து லீகில் 2007 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டதை அடுத்து இந்த ஆட்டமும் நகரில் விளையாடப்படுகிறது. இந்த கிளப் எவர்டன் கால்பந்து கிளப் உடன் தொடர்புபட்டதாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 1,500 இளைஞர்களுக்கு பயனளித்து வரும் டாக்ஸ்டெத் டைகர்ஸ் இளைஞர் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[153] 2007-08 சீசனுக்காக பிரிட்டனின் தலைமை லீகில் டைகர்ஸ் விளையாடத் துவங்க இருக்கிறது. விளையாட்டில் அவர்களின் தொழில்முறை எதிரிகளான செஸ்டர் ஜெட்ஸ் அணி 18 மைல்கள் தூரம் தள்ளி செஸ்டரை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

அவ்வப்போது கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் லிவர்பூலில் நடப்பதுண்டு, லங்காஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் எய்க்பர்த்தில் உள்ள லிவர்பூல் கிரிக்கெட் கிளப்பில் ஒரு ஆட்டத்தில் விளையாடும்.

லிவர்பூலின் வடக்கில் அடுத்த பரோவான ஸெஃப்டனில் எய்ண்ட்ரீ ரேஸ்கோர்ஸ் ஓட்டப்பந்தய மைதானத்தில் கிராண்ட் நேஷனல் என்னும் பிரபல பந்தய ஓட்டம் உண்டு. சர்வதேச குதிரை ஓட்டப் பந்தய வருடாந்திர நிகழ்வுகளில் மிகவும் பிரபலமான இந்த பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும். எய்ண்ட்ரீயில் குதிரைப் பந்தயம் தவிர, மோட்டார் பந்தயமும் நடைபெறுவதுண்டு. 1950கள் மற்றும் 1960களில் பிரித்தானிய கிராண்ட் பிரிக்ஸ் இங்கு நடந்திருக்கின்றது.

லிவர்பூல் ஹேரியர்ஸ் இங்கிருக்கும் ஐந்து தடகள விளையாட்டு கிளப்களில் ஒன்றாகும். இவர்கள் வேவர்ட்ரீ அத்லெடிக்ஸ் செண்டரில் சந்திக்கின்றனர். லிவர்பூலுக்கு ஒரு நெடிய குத்துச் சண்டை வரலாறும் உண்டு. ஜான் காண்டெ, ஆலன் ருட்கின் மற்றும் பால் ஹாட்கின்ஸன் ஆகியோரை உருவாக்கியிருக்கிறது. அத்துடன் உயர் நிலை அமெச்சூர் குத்துச்சண்டை போட்டி நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கின்றது. பார்க் ரோடு ஜிம்னாஸ்டிக்ஸ் மையம் உயர் நிலை பயிற்சியை வழங்குகிறது. லிவர்பூல் நகர நீச்சல் கிளப் கடந்த 11 ஆண்டுகளில் 8 முறைகள் நேஷனல் ஸ்பீடோ லீக் சாம்பியன்களாய் இருந்திருக்கின்றது. வேவர்ட்ரீ டென்னிஸ் மையத்தில் செயல்படும் லிவர்பூல் டென்னிஸ் வளர்ச்சி திட்டம் இங்கிலாந்தின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.[154] ரெட் ட்ரையாங்கிள் கராத்தே கிளப்பின் தாயகமாகவும் லிவர்பூல் உள்ளது. சண்டர்லேண்டில் நடந்த உலக ஷோடோகான் சாம்பியன்சிப்பை வென்ற 1990 குழுவினரில் பலரைத் தந்த பெருமை இந்த கிளப்புக்கு உண்டு. சென்ஸெய் கெய்னோஸுகே எனோடா, சென்ஸெய் ஃபிராங்க் ப்ரெனன், சென்ஸெய் ஒம்ரி வெய்ஸ், சென்ஸெய் டெகெல் கெரெர், சென்ஸெய் ஆண்டி ஷெரி மற்றும் சென்ஸெய் டெரி ஓ’நீல் (இவர் பல்வேறு நடிப்பு பாத்திரங்களிலும் புகழ் பெற்றவர்) ஆகியோர் புகழ்பெற்றவர்களில் அடங்குவர்.

ரக்பி லீக் மாநகருக்குள்ளாக அமெச்சூர் மற்றும் மாணவர் மட்டத்தில் விளையாடப்படுகிறது; கடைசியாய் நகரின் பெயரைத் தொழில்முறையாய் தாங்கியிருந்த அணி லிவர்பூல் சிட்டி அணி ஆகும். இது 1960களில் மூடப்பட்டு விட்டது. ரக்பி யூனியன் பிரபலமாகாதது என்றாலும் ஒரு நெடிய வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. 1857 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட லிவர்பூல் கால்பந்து கிளப் உலகின் மிகப் பழைய ரக்பி அணியாகும். இந்த அணியினர் 1986 ஆம் ஆண்டில் செயிண்ட் ஹெலன் RUFC உடன் இணைந்து லிவர்பூல் செயிண்ட் ஹெலன்ஸ் அணியை உருவாக்கினர்.[155] ஸெஃப்டானில் வாட்டர்லூ ரக்பி கிளப் ப்ளண்டர்லாண்ட்ஸில் அமைந்துள்ளது. 1882 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கிளப் தேசிய டிவிஷன் இரண்டில் விளையாடுகிறது.

பாரம்பரிய விளையாட்டான பிரித்தானிய பேஸ்பால் விளையாட்டை இன்னும் தொடர்ந்து நடத்தி வரும் மூன்று நகரங்களில் லிவர்பூலும் ஒன்றாகும். வருடந்தோறும் நடக்கும் இங்கிலாந்து-வேல்ஸ் இடையிலான சர்வதேச போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கார்டிஃப் மற்றும் நியூபோர்ட் உடன் இடம் மாற்றிக் கொண்டு இங்கு நடத்தப்படுகிறது. லிவர்பூல் ட்ரோஜான்ஸ் இங்கிலாந்தில் இன்னும் இருக்கும் மிகப் பழமையான பேஸ்பால் கிளப் ஆகும்.

அருகில் இருக்கும் வைரல் வளைகுடா பகுதி நகரமான ஹோய்லேக்கில் அமைந்துள்ள ராயல் லிவர்பூல் கோல்ஃப் கிளப் தி ஓபன் சாம்பியன்சிப் போட்டிகளை பல சந்தர்ப்பங்களில் நடத்தியிருக்கிறது. சமீபத்தில் இந்த போட்டிகள் 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. இது வாக்கர் கோப்பையையும் நடத்தியிருக்கிறது.

விளையாட்டு மைதானங்கள்

தொகு
 
குடிஸன் பார்க், எவர்டன் எஃப்.சி.யின் தாயகம்

1892 ஆம் ஆண்டில் ஆன்ஃபீல்டில் மைதான நிலஉரிமையாளருடன் ஏற்பட்ட தகராறையடுத்து எவர்டன் அணியினர் வெளியேறியது முதல் இந்த மைதானத்தில் லிவர்பூல் உருவாக்கப்பட்டு விளையாடி வந்துள்ளது. 116 ஆண்டுகளுக்குப் பிறகும் லிவர்பூல் அணியினர் இங்கு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் இந்த மைதானம் 1970கள் தொடங்கி முழுமையாக மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. 1992க்கு முன்பிருந்ததில் பிரதான இருக்கையிடம் மட்டும் தான் மாறாமல் இருக்கிறது. ஸ்பியான் கோப் (1994/1996 ஆம் ஆண்டில் அனைத்து-இருக்கை இருக்கையிடமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது) தான் மைதானத்தின் மிகப் பிரபலமுற்ற பகுதியாய் இருந்தது. இதன் கூரைப்பகுதிகளில் நிரம்பியிருக்கும் ஏராளமான ரசிகர்கள் பாட்டும் கொண்டாட்டமுமாய் இருப்பது உலகெங்கும் இப்பகுதிக்கு ஒரு முன்மாதிரி அந்தஸ்தை வழங்கியிருந்தது. 45,000 பார்வையாளர்கள் வசதியாய் அமரும் திறன் கொண்ட ஆன்ஃபீல்டு மைதானம் 4 நட்சத்திர UEFA எலைட் மைதானமாய் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய மற்றும் பழைய கட்டிடங்கள் நிரம்பியதொரு பகுதியில் இது ஒரு தனித்துவம் வாய்ந்த அடையாளச்சின்னமாகும். தி அகாதமி என்கிற பெயரில் இளைஞர்களுக்கான பல மில்லியன் டாலர் பயிற்சி வசதியையும் லிவர்பூல் கிளப் கொண்டுள்ளது.

1892 ஆம் ஆண்டில் அன்ஃபீல்டை விட்டு பிரிந்த பின், எவர்டன் அணி ஸ்டான்லி பார்க்கிற்கு எதிர்ப் பக்கத்தில் இருக்கும் குடிஸன் பார்க்கிற்கு சென்றது. குடிஸன் பார்க் தான் இங்கிலாந்தில் கட்டப்பட்ட முதலாவது பெரிய கால்பந்து மைதானம் ஆகும். மோலினக்ஸ் (வூல்வ்ஸ்’ மைதானம்) மூன்று வருடங்களுக்கு முன்னரே திறந்திருந்தாலும் சரியாய் மேம்படுத்தப்படாமல் இருந்தது. நியூ கேஸில், செயிண்ட் ஜேம்ஸ்’ பூங்கா ஒரு வயலைப் போல மேம்படுத்தப்படாமல் இருந்தது. ஸ்காட்லாந்தில் மட்டும் நன்கு மேம்பட்ட மைதானங்கள் இருந்தன. ரேஞ்சர்ஸ் 1887 ஆம் ஆண்டில் ஐப்ராக்ஸை துவக்கியது. அதே சமயத்தில் செல்டிக் பார்க் குடிஸன்பார்க் என அதிகாரப்பூர்வமாய் திறந்து வைக்கப்பட்டது. மெரெ கிரீனில் எவர்டன் குழு ஒரு அற்புதமான உருமாற்றத்தைக் கண்டது. தரையை சமப்படுத்துவதற்கும் மூன்று பக்கங்களில் ஸ்டாண்டுகளை நிறுத்துவதற்கும் 3000 பவுண்டுகள் செலவிட்டது. சதுர யார்டுக்கு 4½d என்கிற விகிதத்தில் திரு.பார்டன் 552 பவுண்டுகளுக்கு இந்த மைதானத்தை தயாரித்தார். வால்டனின் கெல்லி பிரதர்ஸ் 4,000 பேர் அமரக் கூடிய இரண்டு கூரையற்ற இருக்கையிடங்களையும், 3,000 இருக்கை கொண்ட கூரையுள்ள இருக்கையிடம் ஒன்றையும் கட்டியது. இதற்கு 1,460 பவுண்டுகள் செலவானது.

அம்மைதானம் உடனடியாக குடிஸன் பார்க் என பெயர்மாற்றப்பட்டு பெருமிதத்துடன் 1892 ஆகஸ்டு 24 அன்று திறக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்த 12,000 பார்வையாளர்கள் கொண்ட கூட்டம் ஒரு சுருக்கமான தடகள சந்திப்பைத் தான் காண முடிந்ததே தவிர ஒரு கால்பந்து போட்டியைக் காண முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இசை தெரிவுகள் இசைப்பும் பட்டாசுகள் கொளுத்துவதும் வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. அங்கு எவர்டனின் முதல் ஆட்டம் 1892 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2 அன்று நடந்தது. அதில் அவர்கள் போல்டான் அணியை 4-2 வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இப்போது இந்த மைதானத்தில் 40,000 பேர் அமர்ந்து பார்வையிட முடியும். ஆனால் கடைசியாய் விரிவாக்கம் 1994 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகும். அப்போது ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய கோல்-முனை இருக்கையிடம் தான் மைதானத்திற்கு அனைத்து இருக்கை திறனை அளித்துள்ளது. பிரதான இருக்கையிடம் 1970களில் அமைக்கப்பட்டதாகும். மற்ற இரண்டு இருக்கையிடங்களும் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கட்டுமானங்களில் புதுப்பிப்பு செய்யப்பட்டதாகும்.

இப்போது இரண்டு மைதானங்களையும் இடித்து விடுவதற்கும் இந்த அணிகள் வேறு மைதானங்களுக்கு இடம்பெயர்வதற்கும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. லிவர்பூல் அணி 2000வது ஆண்டு முதலே ஸ்டான்லி பார்க்கில் இருக்கும் ஒரு புதிய மைதானத்திற்கு நகர்வதை சிந்தித்து வருகிறது; ஏழுவருட வேலைகள் துவங்கி விட்டன. 60,000 இருக்கைகள் கொண்ட மைதானம் 2010 ஆம் ஆண்டில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவர்டன் அணி 1996 முதலே இடம்பெயர்வதை சிந்தித்து வருகிறது. கிங்’ஸ் துறையில் 55,000 இருக்கை மைதானத்திற்கான திட்டங்களை நிதிக் காரணங்களுக்காக 2003 ஆம் ஆண்டில் கைவிட வேண்டியதானது. லிவர்பூல் மாநகராட்சி எல்லையைத் தாண்டி கிர்க்பிக்கு இடம்பெயருவது தான் சமீபத்திய திட்டமாக இருக்கிறது. இத்திட்டம் சில ரசிகர்களுக்கும் அத்துடன் உள்ளூர் சமூகத்தின் சில உறுப்பினர்களுக்கும் சர்ச்சைக்குரியதாய் இருக்கிறது. ஒரு சமயத்தில், ஸ்டான்லி பார்க்கில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தில், லிவர்பூல் குழுவுடன் மைதானத்தை எவர்டன் பகிர்ந்து கொள்வது பற்றியும் நிறைய பேச்சு இருந்தது. ஆனால் அத்திட்டம் இரண்டு கிளப்களாலும் அதற்குப் பின் முன்னெடுக்கப்படவில்லை.

ஊடகங்கள்

தொகு

லிவர்பூலுக்கு வரும் ஐடிவி எல்லை ஐடிவி க்ரனடா ஆகும். கிரனடாவின் பிராந்திய செய்தி ஒளிபரப்புகள் 1980கள் மற்றும் 1990களில் ஆல்பர்ட் டாக் செய்தி மையத்தில் தயாரிக்கப்பட்டன.[156] பிபிசியும் ஒரு புதிய செய்தியறையை ஹனோவர் ஸ்ட்ரீட்டில் 2006 ஆம் ஆண்டில் திறந்தது.

1996 வரை ஐடிவியின் அன்றாட தொகுப்பு நிகழ்ச்சியான திஸ் மார்னிங் நிகழ்ச்சி ஆல்பர்ட் டாக்கில் உள்ள படமனையில் இருந்து ஒளிபரப்பானது பிரபலமாய் இருந்தது. அதன்பின் அத்தயாரிப்பு லண்டனுக்கு நகர்த்தப்பட்டது. கிரனடா கொஞ்ச காலம் நடத்திய பொருள்விற்பனைத் தொலைக்காட்சியான ”ஷாப்!” சானலும் லிவர்பூலில் தான் நிகழ்ச்சி தயாரிப்புகளை செய்தது. 2002 ஆம் ஆண்டில் இது துண்டிக்கப்பட்டது.

முன்னர் மெர்ஸெ டெலிவிஷன் என்று அழைக்கப்பட்ட லைம் பிக்சர்ஸ் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் தாயகமாய் லிவர்பூல் இருந்தது. ப்ரூக்சைட் மற்றும் க்ரேஞ்ச் ஹில் ஆகிய தொடர்களை இந்நிறுவனமே தயாரித்தது. இப்போது ஹோலியோக்ஸ் என்னும் நாடகத் தொடரையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. அனைத்து மூன்று தொடர்களுமே, அல்லது அவற்றின் பெரும்பகுதி, லிவர்பூலின் சைல்ட்வால் பகுதியில் படம்பிடிக்கப்பட்டவையே.

நகரில் காலையில் டெய்லி போஸ்ட் மற்றும் மாலையில் எகோ ஆகிய இரண்டு தினசரி செய்தித்தாள்கள் வருகின்றன. இரண்டுமே ட்ரினிடி மிரர் குழுமத்தால் வெளியிடப்படுபவையே. குறிப்பாக, தி டெய்லி போஸ்ட் வடக்கு வேல்ஸ் உள்ளிட்ட ஒரு பரந்த பகுதிக்கு சேவை செய்கிறது. இங்கிலாந்தின் முதல் இணையத்திற்கு மட்டுமான வாராந்திர செய்தித்தாளான சவுத்போர்ட் ரிப்போர்ட்டர் (சவுத்போர்ட் & மெர்ஸெ ரிப்போர்ட்டர்) இந்நகர் செய்திகளைத் தாங்கி வரும் பல பிற செய்திக் களங்களில் ஒன்றாகும்.

பிபிசி ரேடியோ மெர்ஸெஸைட், ஜூஸ் எஃப்எம், கேசிஆர் எஃப்எம் மற்றும் ரேடியோ சிட்டி 96.7, சிட்டி டாக் 105.9, அத்துடன் மேஜிக் 1548 ஆகியவை இங்கிருக்கும் வானொலி நிலையங்கள் ஆகும். இண்டிமீடியா என்னும் சுதந்திரமானதொரு ஊடக அமைப்பும் லிவர்பூலுக்கு சேவையளிக்கிறது. ‘நெர்வ்’ இதழ் கலாச்சார நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளையும் திறனாய்வுகளையும் வெளியிடுகிறது.

லிவர்பூல் திரைப்படங்களிலும்[157] இடம்பெற்றிருக்கிறது. அவற்றில் சிலவற்றைக் காண லிவர்பூலில் படம்பிடிக்கப்பட்ட படங்களின் பட்டியலைக் காணவும். படங்களில் இந்த நகரம் லண்டன், பாரிஸ், நியூயார்க், மாஸ்கோ, டுப்ளின், வெனிஸ் மற்றும் பெர்லின் ஆகிய நகரங்களுக்கு ’டூப்’ ஆகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.[8][158]

2008 எம்டிவி ஐரோப்பா இசை விருதுகள் நிகழ்ச்சி லிவர்பூலில் நடந்தது.

லிவர்பூல் பற்றிய மேற்கோள்கள்

தொகு
  • "லிவர்புல் ஒரு அழகிய நகரம்... இங்கிருந்த அரசருக்கு ஒரு கோட்டை இருந்தது, இங்கு ஒரு கல் வீடும் இருந்தது. ஐரிஷ் வியாபாரிகள் வர்த்தகத்திற்கு சிறந்த இடமாய் இங்கு தேடி வருகிறார்கள்... லிவர்பூலில் சுங்கம் குறைவாய் செலுத்தப்படுவதால், வியாபாரிகள் இங்கு விரும்பி வர அது காரணமாய் உள்ளது. லிவர்பூலில் வியாபாரம் நன்கு நடைபெறுகிறது...மான்செஸ்டர் ஆட்கள் ஐரிஷ் நூல்களை இங்கே வாங்குகிறார்கள்" - ஜான் லேலண்ட் (ஆண்டிகுவாரி), இடினரி , சி. 1536-39
  • “லிவர்பூல் பிரித்தானிய அற்புதங்களில் ஒன்றாகும்.... சுருக்கமாய் சொல்வதானால், வீதிக்களின் தூய்மையிலும் கட்டிடங்களில் அழகிலும் லண்டனைத் தவிர்த்து இங்கிலாந்தின் வேறு எந்த நகரும் இந்நகருக்கு இணையாக முடியாது.” டேனியல் டஃபோ - கிரேட் பிரிட்டன் மொத்த தீவு முழுவதுமான ஒரு பயணம் , 1721–26
  • "இங்கிலாந்தில் நான் பார்த்த மிக தூய்மையான, சிறந்த நகரங்களில் ஒன்று." - ஜான் வெஸ்லி. ஜர்னல் , 1755
  • ”தங்களது நரக நகரத்தின் ஒவ்வொரு செங்கலும் ஆப்பிரிக்க ரத்தத்தால் சிமிட்டி பூசப்பட்டிருக்கும் நிலையில் கொண்டுள்ள பரிதாபத்துக்குரியவர்களின் ஒரு கூட்டத்தால் அவமதிக்கப்படுவதற்கு நான் இங்கு வரவில்லை.” நடிகர் ஜார்ஜ் ஃபிரடெரிக் குக் (1756 - 1812) லிவர்பூலுக்கு வருகை தந்த சமயத்தில் குடித்து விட்டு மேடைக்கு வந்ததால் ரசிகர்கள் ஊளையிட்டதை அடுத்து பதிலுக்கு அவர் கூறியது.[159]
  • ”தண்ணீரின் மீது இன்னொரு வெனிஸ் நகரம் போல் நிற்கும் செறிந்த நகரம்.....இங்கே செல்வம் நிரம்பி வழிகிறது....அத்துடன் ஒரு பெரும் சமுதாயத்தின் வளமையைக் காண விரும்பும் எந்த ஒரு மனிதனையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஒவ்வொரு விஷயமும் இங்கு இருக்கும்.... உலகின் எந்த சாம்ராஜ்யத்திற்கும் பெருமிதமான தலைநகராக இருப்பதற்கு தகுதியுடையதாய் இருக்கும் இந்த நகரம் வாழும் மனிதரின் நினைவிலும் கூட ஒரு போற்றப்படும் அரண்மனை போன்று துவங்கியுள்ளது.” தாமஸ் எர்ஸ்கைன், 1வது பரோன் எர்ஸ்கைன், 1791
  • "லிவர்பூலின் அற்புதம் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் காண்பது எனது எதிர்பார்ப்புகளை விஞ்சி உள்ளது" - பிரின்ஸ் ஆல்பர்ட், பேச்சு , 1846
  • "லிவர்பூல் உலகின் ஒரு அற்புதமாக ஆகி இருக்கிறது. இது ஐரோப்பாவின் நியூயார்க். இது வெறுமனே பிரித்தானியா மாகாணமாய் இருப்பதை விட ஒரு உலக நகரமாய் உள்ளது.” - இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ் , 15 மே 1886
  • “லிவர்பூல் ‘வாழ்வின் நீச்சல்குளம்’ - சி.ஜி.ஜங், மெமரிஸ், ட்ரீம்ஸ், ரெப்ளெக்‌ஷன்ஸ் , 1928
  • "...லிவர்பூல் மீண்டும் உத்வேகத்துடன் நகர்ந்தால் நகரின் சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இல்லை. இங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் மக்களின் அளவும் மன உறுதியும் மிகச் சிறந்ததாய் இருக்கிறது. லண்டன் மற்றும் மான்செஸ்டரை விடவும் இது ஒரு உலக நகரம். லங்காஷயரின் வேறு எந்த இடத்தைப் போன்றதொரு உணர்வும் இங்கில்லை: ஒப்பீடுகள் எப்போதும் வெளிநாடுகளில் தான் - டுப்ளின், அல்லது பாஸ்டன், அல்லது ஹாம்பர்க் - சென்று முடிகின்றன.” இயன் நெய்ர்ன், பிரிட்டனின் மாற்றமுறும் நகரங்கள் , 1967

சர்வதேச இணைப்புகள்

தொகு

இரட்டை நகரங்கள்

தொகு

லிவர்பூல் பின்வரும் நகரங்களுடன் இரட்டையாக்கப்படுகின்றது[160]:

! style="background:#006" height="17" width="120"|நாடு ! style="background:#003" | ! style="background:#003" width="100"| இடம் ! style="background:#006" | ! style="background:#006" width="130"| கவுண்டி / மாவட்டம் / பிராந்தியம் / மாநிலம் ! style="background:#006" width="40" | தேதி |- |   ஜெர்மனி |   | கலோன் |   | வடக்கு ரைன் -வெஸ்ட்பாலியா | 1952 |- |   அயர்லாந்து குடியரசு |   | டுப்ளின் |   | லெய்ன்ஸ்டர் | 1997 |- |   சீனா | ஷாங்காய் | | ஷாங்காய் முனிசிபாலிட்டி | 1999 |}

பிற தொடர்புகள்

தொகு

பின்வரும் நகரங்களுடனும் லிவர்பூல் தொடர்பு கொண்டுள்ளது:

லிவர்பூலில் இருக்கும் தூதரகங்கள்

தொகு
  •   கேப் வெர்டியன் தூதரகம்
  •   ஹங்கேரிய தூதரகம்
  •   இத்தாலிய தூதரகம்
  •   நெதர்லாந்து தூதரகம்
  •   நார்வே தூதரகம்
  •   ராயல் ஸ்வீடன் தூதரகம்
  •   ராயல் தாய் தூதரகம்

கூடுதல் வாசிப்பு

தொகு

குறிப்புதவிகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Neighbourhood Statistics: Resident Population Estimates by Ethnic Group (Percentages)". Office for National Statistics. Archived from the original on 2011-06-12. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  2. "Key Statistics for urban areas in the North - Contents, Introduction, Tables KS01 - KS08" (PDF). Office for National Statistics. Archived from the original (PDF) on 2004-07-24. பார்க்கப்பட்ட நாள் 2010-01-28.
  3. லிவர்பூல் நகர எல்லைகளுக்குள் உண்மையில் பிறந்திருக்காத அல்லது வாழ்ந்து வராத பலரும் இப்போது தங்களை லிவர்புட்லியன்கள் அல்லது ஸ்கௌஸர்கள் என்று “சுய-அடையாள”ப்படுத்திக் கொள்கின்றனர். பெரும் மெர்ஸெஸைட் பகுதிக்குள் இருக்கும் பலர் இவ்வாறு தங்களைக் கருதிக் கொண்டாலும் மற்ற பலர் அவ்வாறு செய்வதில்லை. எதிர்விதமாய், லிவர்பூலில் வசிப்பவர்களிலேயே நிறையபேர் தங்களை ஸ்கௌஸர்கள் என்று அழைத்துக் கொள்வது சற்று ஏளன தொனியில் இருப்பதாகக் கருதி அதனை விரும்புவதில்லை.
  4. "Report on the Nominations from the UK and Norway for the European Capital of Culture 2008" (PDF). Archived from the original (PDF) on 2008-08-19. பார்க்கப்பட்ட நாள் 2008-07-11.
  5. "Liverpool – Maritime Mercantile City". UK Local Authority World Heritage Forum. Archived from the original on 2005-03-05. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  6. "The Lost Dock of Liverpool". Channel 4: Time Team, 21 April 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.
  7. "Liverpool Dock System". New York Times, 2 January 1898. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help) குறிப்பு: முழுக் கட்டுரையைப் படிக்க "pdf" ரீடர் அவசியம்
  8. 8.0 8.1 Ten facts about Liverpool டெலகிராஃப், 4 ஜூன், 2003
  9. Hatton, Brian (2008). Shifted tideways: Liverpool's changing fortunes. The Architectural Review. Archived from the original on 2012-06-04. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  10. Henderson, W.O. (1933). The Liverpool office in London. Economica xiii. London School of Economics. pp. 473–479.
  11. The Bankers' Magazine. v.11. London: Groombridge & Sons. 1851.
  12. Merseyside Maritime Museum, Sheet No. 4: Battle of the Atlantic
  13. Victoria & Albert Museum. பரணிடப்பட்டது 2010-03-16 at the வந்தவழி இயந்திரம்லண்டன் பரணிடப்பட்டது 2010-03-16 at the வந்தவழி இயந்திரம்
  14. Suburban Electric Railway Association, Coventry
  15. Bagwell, Philip Sidney (2006). Transport in Britain 1750-2000. Continuum International Publishing Group.
  16. "Royal School for the Blind, Liverpool". Archived from the original on 2010-06-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  17. Bisson, Frederick (1884). Our schools and colleges. London: Simpkin, Marshall.
  18. "Charles Dickens, speech, 26 Feb, 1844". Archived from the original on 2010-07-04. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  19. "The Scottie Press". Archived from the original on 2010-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  20. Adler, N (1925). The work of Juvenile Courts. Third Series, Vol.7, No.4. Cambridge University Press: Journal of International and Comparative Law. pp. 217–227.
  21. Garner, Robert (1993). Animals, politics, and morality. Manchester: University Press.
  22. Hendrick, Harry (2005). Child welfare and social policy - an essential reader. The Policy Press.
  23. "communitycare.co.uk". Archived from the original on 2009-08-18. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  24. BBC Politics Show, 1 May 2009
  25. Wohl, Anthony S. (1984). Endangered Lives: Public Health in Victorian Britain. Taylor & Francis.
  26. British Medical Journal[தொடர்பிழந்த இணைப்பு] 14 பிப். 1948
  27. Dennis, Richard (1986). English Industrial Cities of the Nineteenth Century: A Social Geography. Cambridge University Press.
  28. "Liverpool Medical Institution". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  29. Peltier, Leonard F. (1990). Fractures: a history and iconography of their treatment. Norman Publishing.
  30. Wallington, Neil. One Hundred Years of the British Fire Engine. Jeremy Mills Publishing.
  31. National Museums,Liverpool
  32. BBC News 12 மே 1998
  33. Liverpool University செய்திக் குறிப்பு, 22 பிப். 2006
  34. "Liverpool School of Tropical Medicine". Archived from the original on 2009-08-31. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  35. Liverpool's Contributions to Medicine பிர்கன்ஹெட்டின் லார்டு கோஹேன் BMJ 1965 ஏப்ரல் 10; 1(5440): 945–948
  36. "125 years of the International Union of Marine Insurance". Verlag Versicherungswirtsch. 1999. பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.
  37. "The Professional Risk Managers' Guide to Financial Markets". McGraw Hill Professional. 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.
  38. BBC நியூஸ், 13 மே 2008
  39. "Culture 24". Archived from the original on 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  40. Henley, Darren; McKernan, Vincent (2009), The Original Liverpool Sound: The Royal Liverpool Philharmonic Society, Liverpool: Liverpool University Press, p. 68, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84631-224-3 {{citation}}: Cite has empty unknown parameter: |1= (help)
  41. Liverpool Scenes 1896/1897 யூட்யூப்
  42. Liverpool City Council நியூஸ், 14 அக். 2008
  43. BBC News 26 மே 1999
  44. "How the council is governed". Liverpool City Council. Archived from the original on 2008-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  45. "The executive management team". Liverpool City Council. Archived from the original on 2007-10-21. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  46. "The leader of the council". Liverpool City Council. Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  47. "The Lord Mayor". Liverpool City Council. Archived from the original on 2007-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  48. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-11. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  49. "Ward Profiles". Liverpool City Council. Archived from the original on 2006-03-01. பார்க்கப்பட்ட நாள் 2008-07-03.
  50. "Elections 2008". BBC News. 2008-05-02. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  51. "Defection confusion in Liverpool". BBC News. 2008-05-02. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  52. Coligan, Nick (2008-02-07). "Official: Liverpool city council is worst - yes, the WORST - in the country". Liverpool Echo. பார்க்கப்பட்ட நாள் 2008-09-23.
  53. "Liverpool Members of Parliament". Liverpool City Council. Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2008-07-03.
  54. Neild, Larry (2007-08-27). "Labour MP to fight for newly-created seat". Liverpool Daily Post. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  55. இங்கிலாந்தின் கட்டிடங்கள் - லங்காஷயர்: லிவர்பூல் மற்றும் சவுத்வெஸ்ட் ஆசிரியர் ரிச்சர்ட் போலார்டு, நிகோலஸ் பெவ்ஸ்னெர், யேல் பல்கலைக்கழக பிரஸ், 2006, ப243
  56. "Historical weather for Liverpool, England, United Kingdom". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.
  57. "Resident Population Estimates Jun2001, All Persons". Office for National Statistics. 2007-12-18. Archived from the original on 2009-01-11. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  58. "Resident Population Estimates, All Persons". Office for National Statistics. 1 October 2009. Archived from the original on 24 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 21 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  59. "Liverpool District: Total Population". A Vision of Britain through Time. University of Portsmouth. பார்க்கப்பட்ட நாள் 2008-08-07.
  60. "Liverpool District: Population Change". University of Portsmouth. Archived from the original on 2009-07-25. பார்க்கப்பட்ட நாள் 2008-09-23.
  61. "UK population grows to 60,587,000 in mid-2006" (PDF). Office for National Statistics. 2007-08-22. p. 9 இம் மூலத்தில் இருந்து 2007-09-06 அன்று. பரணிடப்பட்டது.. http://webarchive.nationalarchives.gov.uk/20070906180615/http://www.statistics.gov.uk/pdfdir/popest0807.pdf. பார்த்த நாள்: 2008-08-06. 
  62. 62.0 62.1 "Neighbourhood Statistics: Resident Population Estimates by Broad Age Band". Office for National Statistics. Archived from the original on 2009-01-11. பார்க்கப்பட்ட நாள் 2008-08-06.
  63. Costello, Ray (2001). Black Liverpool: The Early History of Britain's Oldest Black Community 1730-1918. Liverpool: Picton Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1873245076.
  64. McIntyre-Brown, Arabella (2001). Liverpool: The First 1,000 Years. Liverpool: Garlic Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1904099009. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  65. "Culture and Ethnicity Differences in Liverpool - Chinese Community". Chambré Hardman Trust. Archived from the original on 2009-07-24. பார்க்கப்பட்ட நாள் 2008-08-06.
  66. 66.0 66.1 "Culture and Ethnicity Differences in Liverpool - European Communities". Chambré Hardman Trust. Archived from the original on 2009-01-10. பார்க்கப்பட்ட நாள் 2008-08-06.
  67. "Coast Walk: Stage 5 - Steam Packet Company". BBC. பார்க்கப்பட்ட நாள் 2008-08-06.
  68. "Leaving from Liverpool". National Museums Liverpool. பார்க்கப்பட்ட நாள் 2008-08-06.
  69. "Neighbourhood Statistics: Country of Birth". Office for National Statistics. Archived from the original on 2012-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-08-24.
  70. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-11-18. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  71. http://www.ec-fce.org.uk
  72. "Cathedral celebrates anniversary". 
  73. மத மற்றும் இன பிரிவினைவாதங்கள் இப்போது பெருமளவில் மறைந்து விட்டிருந்தாலும் ஒரு காலத்தில் மிக பயங்கர அளவில் லிவர்பூலில் உலவி வந்தன.
  74. ஷார்பில்ஸ், ஜோசப், லிவர்பூலுக்கான பெவ்ஸ்னெர் கட்டிடக் கலை வழிகாட்டி, யேல் பல்கலைக்கழக பிரஸ், 2004, ப. 249
  75. "Liverpool's Jewish heritage". Archived from the original on 2007-02-06. பார்க்கப்பட்ட நாள் 2007-05-13.
  76. Lousie Sardais. "BBC - Legacies - Architectural Heritage - England - Liverpool - The 'little mosque' - Article Page 1". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2009-01-24.
  77. Lousie Sardais. "BBC - Legacies - Architectural Heritage - England - Liverpool - The 'little mosque' - Article Page 2". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2009-01-24.
  78. "Economic Data". Liverpool Vision. Archived from the original on 8 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  79. 79.0 79.1 "Liverpool Economic Briefing - March 2009" (PDF). Liverpool City Council. March 2009. Archived from the original (PDF) on 4 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  80. "Business sectors and services". Liverpool City Council. 2009-10-08. Archived from the original on 2010-05-16. பார்க்கப்பட்ட நாள் 24 February 2010. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  81. "Indices of Deprivation 2007 (Zip File)". DCLG. 2007 இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080628001305/http://www.communities.gov.uk/communities/neighbourhoodrenewal/deprivation/deprivation07/. பார்த்த நாள்: 24 February 2010. 
  82. "Liverpool City Region Film and TV". Visit Liverpool. Archived from the original on 2008-10-10. பார்க்கப்பட்ட நாள் 2008-11-22.
  83. "Japanese shipping line NYK doubling its city operation". Liverpool Echo. 2010-02-16. பார்க்கப்பட்ட நாள் 24 February 2010. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  84. "Liverpool wins London HQ as Maersk relocates to city". Liverpool Echo. 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 24 February 2010. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  85. ஹியூக்ஸ் (1999), ப10
  86. ஹியூக்ஸ் (1999), ப11
  87. "Grade I listing for synagogue". பிபிசி. 2008-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-07-11. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  88. "Listed buildings". Liverpool City Council. Archived from the original on 2008-10-17. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  89. "Historic buildings". Liverpool City Council. Archived from the original on 2008-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  90. "Historic Britain: Liverpool". HistoricBritain.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
  91. "Merseyside Facts". The Mersey Partnership. 2009. Archived from the original on 2007-09-19. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
  92. "Heritage map for changing city". BBC News. 2002-03-19. பார்க்கப்பட்ட நாள் 2009-07-11. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  93. ""Liverpool - Maritime Merchantile City"". பார்க்கப்பட்ட நாள் 2008-05-26.
  94. Jones, Ron (2004). Albert Dock, Liverpool. R.J. Associates Ltd. p. 46.
  95. Helen Carter (2003-03-07). "Glory of Greece, grandeur of Rome ... and docks of Liverpool". Guardian Unlimited. பார்க்கப்பட்ட நாள் 2007-03-27.
  96. நிகோல்ஸ், ப38
  97. "Trading Places: A History of Liverpool Docks (Stanley Dock)". Liverpool Museums. 
  98. லிவர்பூல் மாநகராட்சி மன்றம் (2005), ப49
  99. மோஸ்கார்டினி (2008), ப10
  100. நிகோல்ஸ் (2005), ப11
  101. பெவ்ஸ்னர் (ஷார்பில்ஸில் மேற்கோளிடப்பட்டது, 2004), ப 67
  102. Hughes, Quentin (1999). Liverpool City of Architecture. The Bluecoat Press.
  103. லிவர்பூல் மாநகராட்சி மன்றம் (2005), ப73
  104. 104.0 104.1 லிவர்பூல் மாநகராட்சி மன்றம் (2005), ப74
  105. ஷார்பில்ஸ், ப48
  106. மான்செஸ்டர் கட்டிடக் கலைப் பள்ளி வீடியோ யூட்யூப்
  107. "Oriel Chambers". Liverpool Architectural Society. Archived from the original on 2008-09-22. பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.
  108. மான்செஸ்டர் கட்டிடக் கலைப் பள்ளி காணொளி யூட்யூப்
  109. லிவர்பூல் மாநகராட்சி மன்றம் (2005), ப87
  110. லிவர்பூல் மாநகராட்சி மன்றம் (2005), ப93
  111. ஹியூக்ஸ் (1999), ப20
  112. Cousens, Belinda Cousins (2006). Speke Hall. National Trust. p. 5.
  113. ஹியூக்ஸ் (1999), ப22
  114. மான்செஸ்டர் கட்டிடக் கலைப் பள்ளி வீடியோ யூட்யூப்
  115. 115.0 115.1 லிவர்பூல் மாநகராட்சி மன்றம் (2005), ப97
  116. ஹியூக்ஸ் (1999), ப23
  117. ஷார்பில்ஸ் (2004), ப7
  118. "The Cathedrals of Britain: Liverpool's Cathedrals". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  119. Brooks, John (2007). Liverpool Cathedral. Jarold Publishing. p. 2. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  120. ஷார்பில்ஸ் (2004), ப83
  121. "Liverpool Cathedral". VisitLiverpool.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  122. ஷார்பில்ஸ் (2004), ப73
  123. "Key Facts". Grosvenor Group. Archived from the original on 2009-06-11. பார்க்கப்பட்ட நாள் 2009-06-14. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  124. Sharp, Laura (2009-05-12). "Liverpool Central Village regeneration plan approved". Liverpool Echo. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  125. "Lime Street Gateway, Liverpool". English Partnerships. 2008-10-15. Archived from the original on 2009-02-28. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  126. "Peel unveil £5.5 billion investment plans". Peel Holdings. 2007-03-06. Archived from the original on 2007-10-09. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15.
  127. Coslett, Paul (2008-06-20). "Once Upon a Time at the Adelphi". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  128. "டாக்டர். பீட்டர் பிரவுன், தலைவர், மெர்ஸெஸைட் சிவிக் சொசைட்டி" (PDF). Archived from the original (PDF) on 2013-09-20. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  129. லிவர்பூல் மாநகராட்சி மன்றம் நியூஸ் , 23/2/2009
  130. "Motorway Database M62". cdrd.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2008-02-07.
  131. "Motorway Database A55". cdrd.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2008-02-07.
  132. "Port of Liverpool: Introduction". Peel Ports. Archived from the original on 2009-07-23. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  133. "Transatlantic liner on Mersey". Liverpool City Council. 2009-05-26. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  134. "UK Airport Statistics: 2008 - annual". Civil Aviation Authority. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  135. "Airlines & Tour Operators". Liverpool John Lennon Airport. பார்க்கப்பட்ட நாள் 2009-07-23.
  136. Schofield, Ben (2008-11-04). "Air fares battle as KLM moves into Liverpool". Liverpool Daily Post. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  137. "Bus Information". Merseytravel. Archived from the original on 2009-07-13. பார்க்கப்பட்ட நாள் 2009-07-23.
  138. "Night Bus Network". Merseytravel. Archived from the original on 2009-08-02. பார்க்கப்பட்ட நாள் 2009-07-23.
  139. 139.0 139.1 "Who are Merseyrail". Merseyrail. Archived from the original on 2009-06-26. பார்க்கப்பட்ட நாள் 2009-07-23.
  140. "Public transport". Liverpool City Council. Archived from the original on 2010-12-17. பார்க்கப்பட்ட நாள் 2009-07-23.
  141. "Complete Timetable". Mersey Ferries. Archived from the original on 2009-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
  142. "River Explorer Cruises". Mersey Ferries. Archived from the original on 2010-07-23. பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
  143. "Local Transport Plan 2006-2011" (PDF). Archived from the original (PDF) on 2007-06-04. பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  144. மெமரிஸ், ட்ரீம்ஸ், ரெஃப்ளெக்ஸன்ஸ் (1961)
  145. "Everyman & Playhouse". பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  146. "Unity Theatre Liverpool". பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  147. "Visit Liverpool". Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2009-04-16.
  148. DCMS ஆதரவுடனான அருங்காட்சியகங்கள் மற்றும் காலரிகள்
  149. "National Museums Liverpool". பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  150. "Liverpool Biennial". பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  151. "Secondary schools in Liverpool". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2008-01-10.
  152. "Liverpool College". பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  153. "Liverpool Toxteth Tigers website". பார்க்கப்பட்ட நாள் 2008-05-02.
  154. "Liverpool Sports Development website". Archived from the original on 2007-02-07. பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  155. "A Brief History of Liverpool St Helens". பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
  156. "ITV North West News". TV Ark. 9 September 2006 இம் மூலத்தில் இருந்து 13 அக்டோபர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061013002015/https://www.tv-ark.org.uk/itvnorthwest/itvnorthwestnews.html. 
  157. Movie City: Liverpool பரணிடப்பட்டது 2010-01-13 at the வந்தவழி இயந்திரம் பிலிம் இன் ஃபோகஸ், 10 நவம்பர், 2009
  158. City fights to preserve star quality கார்டியன், 8 நவம்பர், 1999
  159. http://www.channel4.com/history/microsites/T/timeteam/2008/liverpool/liverpool-cameo.html
  160. "Liverpool City Council: twinning". Archived from the original on 2010-12-18. பார்க்கப்பட்ட நாள் 2007-11-17.

ஆதார நூற்பட்டியல்

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Liverpool
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவர்பூல்&oldid=4045375" இலிருந்து மீள்விக்கப்பட்டது