லொக்கி பெர்கசன்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

லொக்கி பெர்கசன் (Lockie Ferguson, பிறப்பு: 13 சூன் 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து தேசிய அணிக்காகவும், ஓக்லாந்து துடுப்பாட்ட அணிக்காக முதல்தர துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார்.[1]

லொக்கி பெர்கசன்
Lockie Ferguson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லாக்லான் அமொண்ட் பெர்கசன்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 190)4 திசம்பர் 2016 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப29 சூன் 2019 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 71)3 சனவரி 2017 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப8 பெப்ரவரி 2019 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013–இன்றுஆக்லாந்து
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
2018டார்பிசயர்
2019கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பஒநா ப20இ முத பஅ
ஆட்டங்கள் 34 5 41 62
ஓட்டங்கள் 62 1 475 169
மட்டையாட்ட சராசரி 7.75 1.00 13.57 9.38
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 19 1 41 24
வீசிய பந்துகள் 1,782 114 6,520 3,172
வீழ்த்தல்கள் 63 10 149 112
பந்துவீச்சு சராசரி 25.80 13.50 24.65 25.41
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 11 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 5/45 3/21 7/34 6/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 3/– 13/– 19/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 29 June 2019

இருபது20 போட்டிகளில்

தொகு

2017 பெப்ரவரியில், 2017 இந்திய பிரிமியர் போட்டிகளில் விளையாடுவதற்காக ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணி இவரை 50 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது.[2] 2018 திசம்பரில், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.[3][4]

பன்னாட்டுப் போட்டிகளில்

தொகு

2016 நவம்பரில், ஆத்திரேலிய அணிக்கெதிரான போட்டிகளில் விளையாட நியூசிலாந்தின் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.[5] 2016 திசம்பர் 4 இல் முதல் தடவையாக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[6] 2017 சனவரி 3 இல் முதல் தடவையாக பன்னாட்டு இருபது20 போட்டியில் வங்காலதேச அணிக்கு எதிராக விளையாடினார்.[7] முதலாவது ஆட்டத்தில் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார்.[8]

2017 நவம்பரில், நியூசிலாந்தின் தேர்வு அணிக்காக சேர்க்கப்பட்டார்.[9] 2019 ஏப்ரலில், 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்பட்டார்.[10][11] 2019 சூன் 5 இல், வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில், பெர்கசன் தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Lockie Ferguson". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.
  2. "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20-02-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  4. "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  5. "Uncapped Ferguson in NZ squad for Chappell-Hadlee Trophy". ESPN Cricinfo. 
  6. "New Zealand tour of Australia, 1st ODI: Australia v New Zealand at Sydney, Dec 4, 2016". ESPN Cricinfo. 
  7. "Bangladesh tour of New Zealand, 1st T20I: New Zealand v Bangladesh at Napier, Jan 3, 2017". ESPN Cricinfo. 
  8. "Williamson, Ferguson thump Bangladesh". ESPNcricinfo. 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 4 January 2017.
  9. "Blundell to make Test debut against WI; NZ call Ferguson as cover for Southee". ESPN Cricinfo. 26 November 2017. http://www.espncricinfo.com/new-zealand-v-west-indies-2017/content/story/1127185.html. பார்த்த நாள்: 26 November 2017. 
  10. "Sodhi and Blundell named in New Zealand World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  11. "Uncapped Blundell named in New Zealand World Cup squad, Sodhi preferred to Astle". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  12. "World Cup 2019: Ross Taylor, Matt Henry script New Zealand's 2-wicket win over Bangladesh". India Today. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லொக்கி_பெர்கசன்&oldid=3968858" இலிருந்து மீள்விக்கப்பட்டது