வனிந்து அசரங்க

இலங்கை துடுப்பாட்டக்காரர்
(வனிந்து அசரங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வனிந்து அசரங்க (Wanindu Hasaranga, பிறப்பு: 29 சூலை 1997), இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார் இவர் இலங்கை அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] இவரது மூத்த சகோதரர் சதுரங்கா டி சில்வாவும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[2]

வனிந்து அசரங்க
Wanindu Hasaranga
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பின்னதுவாகே வனிந்து அசரங்க டி சில்வா
பிறப்பு29 சூலை 1997 (1997-07-29) (அகவை 27)
காலி, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பு
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல்
பங்குபந்து வீச்சாளர் (பல்துறை)
உறவினர்கள்சதுரங்க டி சில்வா (சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 180)2 சூலை 2017 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப1 மார்ச் 2020 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 80)1 செப்டம்பர் 2019 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப6 மார்ச் 2020 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015-இன்றுகொழும்புத் துடுப்பாட்ட அணி
2017–இன்றுசில்கெட் சிக்சர்சு
2020யாழ்ப்பாணம் இசுடாலியன்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ODI இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 15 12 30 44
ஓட்டங்கள் 190 115 1,955 812
மட்டையாட்ட சராசரி 19.00 19.16 45.46 26.19
100கள்/50கள் 0/0 0/0 3/13 0/6
அதியுயர் ஓட்டம் 42* 44 120 87
வீசிய பந்துகள் 583 226 2,651 1,544
வீழ்த்தல்கள் 17 16 63 56
பந்துவீச்சு சராசரி 32.17 18.37 24.31 22.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 4 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 3/15 3/21 8/26 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 5/– 38/– 21/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 14 திசம்பர் 2020

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

வனிந்து அசரங்க டி சில்வா காலியின் ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி பயின்றார். அந்தக் கல்லூரியில் பயிலும் பொழுது தனது துடுப்பாட்ட ஆடங்களைத் துவங்கினார் . 2016 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் இவர் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்டார்.[3]

உள்ளூர் போட்டிகள்

தொகு

2015 ஆம் ஆண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். நவம்பர் 30 இல் ஏ ஐ ஏ பிரிமியர் குறைந்தபட்ச ஓவர் போட்டி தொடரில் இவர் முதல் பட்டியல் அ போட்டிகளில் விளையாடினார்.[4]

2015 டிசம்பரில் அவர் 2016 ஆம் ஆண்டில் நடைபெறக் கூடிய 19 வாதிற்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இலங்கையின் அணியில் இடம் பெற்றார்.[5] பிப்ரவரி 26, 2016 அன்று நடைபெற்ற 2015–16 பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை துடுப்பாட்ட சங்கம் சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[6]

நவம்பர் 2017 இல், இலங்கை துடுப்பாட்ட வாரியம் ஆண்டு விருதுகளில் 2016 -17 ஆம் ஆண்டுகளில் இவர் சிறப்பாக செயல்பட்டதற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[7] 2017–18 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 11 நவம்பர் 2017 அன்று சில்ஹெட் சிக்ஸர் அணிக்காக இவர் இருபது-20 போட்டியில் அறிமுகமானார்.[8]

மார்ச் 2018 இல், இவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண போட்டித் தொடரில் கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[9][10] அடுத்த மாதம், அரிவிக்கப்பட்ட 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியிலும் அவர் இடம் பெற்றார் .[11] ஆகஸ்ட் 2018 இல், 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் தம்புல்லாவின் அணியில் இடம் பெற்றார்.[12]

2018 19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரிமியர் லீக் துடுப்பாட்ட தொடரில் இவர் கொழும்பு அணி சார்பாக கலந்து கொண்டார். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் 765 ஓட்டங்க எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார்.[13] மார்ச் 2019 இல், 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் இவர் காலி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார்.[14]

2020 அக்டோபரில், இவர் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்டார். இதன் முதலாவது தொடரில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சுக்காக விளையாடினார்.[15] இத்தொடரில் அதிக இலக்குகளை (17) பெற்ற வீரராகவும், தொடர் நாயகனாகவும் விளங்கினார்.[16]

சர்வதேச போட்டிகள்

தொகு

சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்காக இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் அவர் இடம் பெற்றார்.[17] இவர் ஜூலை 2, 2017 அன்று ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[18] இந்த போட்டியில், மூன்று இலக்குகளை தொடர்ச்சியாக வீழ்த்தினார், இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இளம் வயது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.[19]

குறிப்புகள்

தொகு
  1. "Wanidu Hasaranga". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
  2. "Chaturanga de Silva". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
  3. Sri Lanka Under 19 World Cup Squad – Player Profiles பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம், Sri Lanka Cricket
  4. "AIA Premier Limited Over Tournament, Group A: Sri Lanka Ports Authority Cricket Club v Tamil Union Cricket and Athletic Club at Colombo (CCC), Nov 30, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
  5. "SL include Charana Nanayakkara in U-19 World Cup squad". ESPNCricinfo. 23 December 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
  6. "AIA Premier League Tournament, Plate Championship: Sri Lanka Ports Authority Cricket Club v Bloomfield Cricket and Athletic Club at Panagoda, Feb 26-28, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  7. "Gunaratne wins big at SLC's annual awards". ESPN Cricinfo. November 2017. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  8. "10th match (N), Bangladesh Premier League at Dhaka, Nov 11 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
  9. "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018. 
  10. "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018. 
  11. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018. 
  12. "SLC T20 League 2018 squads finalized". http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018. 
  13. "Premier League Tournament Tier A, 2018/19 - Colombo Cricket Club: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
  14. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. 19 March 2019. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  15. "Chris Gayle, Andre Russell and Shahid Afridi among big names taken at LPL draft". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  16. "Lanka Premier League, 2020 - Most Wickets". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.
  17. "Chandimal left out for first two Zimbabwe ODIs". ESPN Cricinfo. 27 June 2017. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
  18. "Zimbabwe tour of Sri Lanka, 2nd ODI: Sri Lanka v Zimbabwe at Galle, Jul 2, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
  19. "Sri Lanka vs Zimbabwe, 2nd ODI: Wanidu Hasaranga becomes youngest player to take hat-trick on debut". Indian Express. 2 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிந்து_அசரங்க&oldid=3744212" இலிருந்து மீள்விக்கப்பட்டது