வாரார் சண்டியர்

என். கே. விசுவநாதன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாரார் சண்டியர் (வர்றாரு சண்டியரு) இயக்குனர் என். கே. விசுவநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரேம், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.ஜெய்சங்கர், ஆனந்த் ராஜ் (நடிகர்), கே. ஆர். விஜயா, காந்திமதி (நடிகை), Senthil, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி மற்றும் டி. கே. எஸ். சந்திரன் போன்றோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப் படத்தை தரங்கை வி. சுந்தர் மற்றும் தரங்கை வி. சந்திரசேகரன் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் திசம்பர்-14, 1995.[1][2]

வாரார் சண்டியர் (வர்றாரு சண்டியரு)
இயக்கம்என். கே. விசுவநாதன்
தயாரிப்புதரங்கை வி. சுந்தர்
இசைதேவா
நடிப்புபிரேம்
குஷ்பூ
ஜெய்சங்கர்
ஆனந்த்ராஜ்
எஸ். எஸ். சந்திரன்
சார்லி
கிருஷ்ணா ராவ்
குள்ளமணி
செந்தில்
கே. ஆர். விஜயா
காந்திமதி
ஒளிப்பதிவுஎன். கே. விஸ்வநாதன்
படத்தொகுப்புவி. உதயசங்கர்
வெளியீடுதிசம்பர் 14, 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்தியமூர்த்தி (பிரேம் மேனன்) அவ்வூரின் ஊராட்சி மன்றத் தலைவனாக இருக்கிறான். அவன் நியாயமற்ற தீர்ப்புகளை அவ்வூர் மக்களுக்கு அளிப்பதோடு அல்லாமல் பயங்கரவாதத்தையும் பரப்புகிறான். அதனால் கிராமவாசிகள் அவனை சண்டியர் என அழைக்கின்றனர். கிராமவாசிகள் அவன் சாக வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அவனது தாய் அன்னபூரணி(கே. ஆர். விஜயா) அவன் திருந்தி நல்ல மனிதனாக வேண்டும் என எண்ணுகிறாள். கிராமவாசிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய மருதுவுடன்(ஆனந்த் ராஜ் (நடிகர்)) சண்டியர் நெருக்கமாக இருக்கிறான்.

ஒரு நாள் மீனா(குஷ்பூ) சண்டியரின் கிராமத்திற்கு வந்து, சண்டியர் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக கிராம பஞ்சாயத்தில் முறையிடுகிறாள். இதை சண்டியர் மறுக்கிறான். ஆனால் மீனா தொடர்ந்து அக் கிராமத்தாரின் முன்னிலையில் தனது திருமணம் நடக்கவேண்டும் எனப் பல விதங்களில் நிர்பந்திக்கிறாள். சண்டியரின் தாய் அன்னபூரணியும் இதற்கு சம்மதிக்கிறாள். அதனால் சண்டியர் மீனாவை மணந்து கொள்கிறான். திருமணத்திற்குப் பிறகு சண்டியர் கொடுத்த நியாயமற்ற தீர்ப்பினால் தனது தாய் மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டதால் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக மீனா சண்டியரிடம் தெரிவிக்கிறாள்.

சண்டியருக்கு ஒரு சோகமான பின்னணி இருப்பது மீனாவிற்கு தெரிய வருகிறது. சண்டியரின் தந்தை,ஜெய்சங்கர் நிலத் தகறாரில் குடும்ப நண்பனான மூக்கையாவினால் கொல்லப்பட்டார். அது சமயம் கிராமவாசிகளில் ஒருவர் கூட உதவ முன் வரவில்லை. இந்த நிகழ்வை சண்டியரால் மறக்க இயலவில்லை. அதனால் அன்றிலிருந்து கிராமவாசிகளைத் துன்புறுத்துவதை தன் வழக்கமாக்கிக் கொண்டான். இதுவரை சண்டியரைப் பழி வாங்கவேண்டும் என்று எண்ணிய மீனா தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அவனைத் திருத்தி நல்ல தலைவனாக்க வேண்டும் என முயற்சித்தாள். சண்டியரும் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு நல்ல மனிதனாகிறான். மூக்கையாவின் மகனாகிய மருது சண்டியரின் சொத்துக்களை அபகரிக்க முயலுகிறான். பிறகு என்ன நடந்தது என்பதே கதையின் முடிவாகிறது.

நடிப்பு

தொகு

சண்டியர் சத்தியமூர்த்தி - பிரேம் மேனன்
மீனா - குஷ்பூ
சண்டியரின் தந்தை - ஜெய்சங்கர்
மருது - ஆனந்த் ராஜ் (நடிகர்)
அன்னபூரணி - கே. ஆர். விஜயா
சண்முகசுந்தரி - காந்திமதி (நடிகை)
செம்பட்டை - செந்தில்
கணக்குப்பிள்ளை - வெண்ணிற ஆடை மூர்த்தி
சார்லி
மூக்கையா - டி. கே. எஸ். சந்திரன்
மருத்துவர் - ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
குள்ளமணி
காவல்துறை அதிகாரி - கிருஷ்ணமூர்த்தி
ஏ. ஒ. கே. சுந்தர்
கருப்பு சுப்பையா
மீனாவின் தாய் - பிரேமி
விநாயக் ராஜ்
சித்ரகுப்தன்
கையாள் - ராம்
கையாள் - லக்ஷ்மண்

பாடல்கள்

தொகு

இப் படத்திற்கு இசை அமைத்தவர் தேவா. பாடல்களை பிறைசூடன் (கவிஞர்) மற்றும் பொன்னியின் செல்வன் எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடியவர்கள் காலம்
1 'அம்மன் கோவில் கோபுரத்தில்' தேவா 2:35
2 'வை கையைன்னு சொல்லிப்புட்டேன்' சித்ரா 5:00
3 'சந்திரனே சாட்சி' மனோ 5:00
4 'திண்டுக்கல்லு' அனுராதா ஸ்ரீராம் 2:43
5 'வந்து பிறந்தது' மனோ, புவனா வெங்கடேஷ் 4:45
6 'வானம் பொழியணும்' டி. எல். மகராஜன், குழு 3:58

மேற்கோள்கள்

தொகு
  1. "Varraar Chandiyar (1995) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
  2. "Varraar Sandiyar (1995)". gomolo.com. Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=varrar%20chandiyar பரணிடப்பட்டது 2012-03-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரார்_சண்டியர்&oldid=4120850" இலிருந்து மீள்விக்கப்பட்டது