வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2008
- மே 31: கொழும்பு, வெள்ளவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 10 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 29:
- யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் தாக்கியழிக்கப்பட்டதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- சிறுத்தீவு கடற்படைத் தளம், விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மோட்டார் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொழும்புத்துறை பங்குத்தந்தை உட்பட 13 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 28: யாழ்ப்ப்பாண நகரில் நாவாந்துறையில் ஊடகவியலாளர் பி. தேவகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- மே 26: கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு 73 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- மே 23:
- கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி கொல்லப்பட்டானர். 3 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 22: மட்டக்களப்பு ஆரையம்பதியில் இலங்கைப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவால் 3 முஸ்லிம்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- மே 18: மன்னார், கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 16:
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். (தமிழ்நெட்)
- கொழும்பு மத்தியில் வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 7 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்தனர். (புதினம்), (பிபிசி)
- மே 13: யாழ்ப்பாணம் நெல்லியடியில் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதம் அடையாளம் தெரியாதோரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். (புதினம்)
- மே 12: மட்டக்களப்பு பனிச்சங்கேணியில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினரின் கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டு, சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- மே 11: இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 20 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களைக் கைப்பற்றியது. (புதினம்)
- மே 10: திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நிலையில் இலங்கைப் படையினரின் ஏ-520 என்ற வழங்கல் கப்பல் கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. (புதினம்), (டெய்லிமிரர்)
- மே 9:
- அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு நிகழ்வில் 13 பேர் கொல்லப்பட்டு, 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (டெய்லி நியூஸ்)
- மன்னார், கறுக்காய்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வைத் தாம் முறியடித்ததாகவும் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 5 உடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மே 8: லண்டனில் சிறை வைக்கப்பட்டிருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுவிக்கப்பட்டார். (டெய்லி மிரர்)
- மே 6: மன்னாரில் இலங்கைப் படையினரின் இரு முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் 9 படையினர் கொல்லப்பட்டு, படையினரின் கவச ஊர்தி கண்ணிவெடியில் சிக்கி அழிந்தது. (புதினம்)
- மே 1: மணலாறுப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 2 இலங்கை அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)