வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2007
- அக்டோபர் 31 - யப்பான் ஆப்கானிஸ்தானில் இருந்து தமது கடற்படையை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. (ரொய்ட்டர்ஸ்)
- அக்டோபர் 31 - மியன்மாரின் பௌத்த பிக்குகள் முன்னர் நடைப்பெற்ற ஆர்பாட்டங்கள் இராணுவ ஆட்சியாளகளால் அடக்கப்பட்டப் பின் முதன் முறையாக மீண்டும் பாதைகள் ஏதிர்ப்பு யாத்திரைகளை தொடங்கியுள்ளனர்.(ரொய்ட்டர்ஸ்)
- அக்டோபர் 30 - கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. (ரொய்ட்டர்ஸ்)
- அக்டோபர் 30 - பாலி ஒன்பது: இந்தோனீசிய சட்டத்தின் படி போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்க முடியாதென இந்தோனேசியா, பாலியில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஒன்பது அவுஸ்திரேலியர்களில் மூவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- அக்டோபர் 29 - தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல இடங்களிலும் இடம்பெற்றுவரும் கனத்த மழையினால் 22 பேர் இறந்தனர். (தமிழ்முரசு)
- அக்டோபர் 29 - ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கிறிஸ்டீனா கேர்ச்னர் என்ற பெண்மணி வெற்றி பெற்றார். (சிஎன்என்)
- அக்டோபர் 29 - ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவியுள்ள எச்.ஐ.வி என்னும் தீ நுண்மம் 1969 இல் ஹையிட்டியில் முதலில் உண்டானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. (பிபிசி)
- அக்டோபர் 29 - மத்திய நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ஆந்திராநியூஸ்)
- அக்டோபர் 28 - நில உரிமை கோரி நடைப்பயணம்: இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 25,000 நிலமற்றவர்களும், பழங்குடிமக்களும் தமக்கு உரிதான உரிமையான நிலமும் நீரும் தமக்கு உறுதி செய்ய வேண்டி நீண்ட நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டு டில்லிக்கு வந்தடைந்தனர். (பிபிசி)
- அக்டோபர் 27 - கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- அக்டோபர் 26 - லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ராடாவுக்கு பிலிப்பீன்ஸ் அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். (தமிழ்முரசு)
- அக்டோபர் 25 - சிங்கப்பூரின் முதலாவது ஏ-380 ரக சூப்பர் ஜம்போ விமானம் தனது முதலாவது வர்த்தகப் பயணத்தை சிட்னிக்கு வெற்றிகரமாக முடித்தது. (தமிழ்முரசு)
- கலிபோர்னியா காட்டுத்தீ:
- அக்டோபர் 25 - தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து எரியும் காட்டுத்தீக்களில் சிலவற்றை வாநிலை மாற்றத்தை துணையாகக் கொண்டு தீயணைப்புப் படையினர் அணைத்துள்ளனர்.(ரொய்டர்ர்ஸ்)
- அக்டோபர் 23 - தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ மூன்றாவது நாளாகவும் தொடந்து பரவியது. 5 பேர் இறந்தனர். 1500 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகின.(ரொய்ட்டர்ஸ்)
- அக்டோபர் 22 - தெற்கு கலிபோர்னியாவில் பரவிய பெரும் காட்டுதீயினால் 500,000 பேர் இடம்பெயர்ந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- அக்டோபர் 25 - இந்தோனீசியாவில் சுமாத்ராவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. (ரொயிட்டர்ஸ்)
- அக்டோபர் 24 - இந்தியாவில், 1992இல் அயோத்தியில் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கலவரங்களில் பங்கேற்று, கொலை மற்றும் பிற குற்றங்களை செய்தமைக்காக 15 இந்துக்களுக்கு கான்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- அக்டோபர் 24 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 23 - டிஸ்கவரி விண்ணோடம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 7 பேருடன் STS-120 என்ற விண்கப்பலை வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்துக்கு எடுத்துச் சென்றது. (நாசா)
- அக்டோபர் 20 - கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் புதிதாக இடம்பெற்ற வன்செயல்களினால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (டேர்க்கிஷ் பிரஸ்)
- அக்டோபர் 20 - பிரான்சில் இடம்பெற்ற "2007 ரக்பி உலகக்கிண்ண" இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணியை வென்றது. (பிபிசி)
- அக்டோபர் 20 - மிக்கைல் கொர்பச்சோவ் "சோசியல் டெமோக்ரட்ஸ் யூனியன்" என்ற புதிய கட்சியை ரஷ்யாவில் ஆரம்பித்தார். (பிபிசி)
- அக்டோபர் 18 - கராச்சி நகரில் எட்டு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை ஏற்றிச் சென்ற பார ஊர்தி அருகே இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 138 பேர் கொல்லப்பட்டு 600 பேர் படுகாயமடைந்தனர். (சிஎன்என்)
- அக்டோபர் 15 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய காங்கிரஸ் பெய்ஜிங் நகரில் ஆரம்பமானது. (பிபிசி)
- அக்டோபர் 6 - தாய்வானில் "சூறாவளி குரோசா" தாக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்தனர். சீனாவில் 730,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)
- அக்டோபர் 5 - சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற மாரியன் ஜோன்ஸ் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொண்டதாகத் தெரிவித்ததை அடுத்து அவரது 5 பதக்கங்கள் திரும்பப் பெறப்படும் நிலை தோன்றியுள்ளது. (ஏபிசி)
- அக்டோபர் 3 - தென்னாபிரிக்காவின் ஜொஹான்னர்ஸ்பேர்க்கில் தங்கச் சுரங்கம் ஒன்றில் 3,200 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். (பிபிசி)
- அக்டோபர் 3 - வட கொரிய அதிபர் கிம் ஜொங்-இல் மற்றும் தென் கொரிய அதிபர் ரோ மூ-ஹுயின் ஆகியோர் பியோங்யாங்கில் அமைதி பேச்சுக்களை ஆரம்பித்தனர். (ரொயிட்டர்ஸ்)
- அக்டோபர் 1 - பாகிஸ்தானில் பன்னு என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு 19 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)