சுமாத்திரா

(சுமாத்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுமாத்திரா அல்லது சுமத்திரா (ஆங்கிலம்: Sumatra இந்தோனேசியம்: Sumatera) என்பது இந்தோனேசியா, சுந்தா தீவுகளில் ஒன்றாகும். உலகின் ஆறாவது பெரிய தீவான சுமாத்திரா தீவின் பரப்பளவு 482,286 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.[1] 2023-ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி சுமாத்திரா தீவில் 60 மில்லியன் மக்கள் வசித்தனர்.[2] இந்தத் தீவின் மிகப்பெரிய நகரம் மேடான் ஆகும். இதன் மக்கள்தொகை 3,418,645.

சுமாத்திரா
Sumatra
சுமாத்திராவின் நிலப்பரப்பு
இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில்
சுமாத்திராவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்00°N 102°E / 0°N 102°E / 0; 102
தீவுக்கூட்டம்சுந்தா பெருந் தீவுகள்
பரப்பளவு482,286.55 km2 (186,211.88 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை6th
உயர்ந்த ஏற்றம்3,805 m (12,484 ft)
உயர்ந்த புள்ளிகெரிஞ்சி மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
பிரிவுகள்/மாநிலங்கள்அச்சே; வடக்குச் சுமாத்திரா; மேற்கு சுமாத்திரா; ரியாவு; ஜாம்பி; பெங்கூலு; தெற்கு சுமாத்திரா; லம்போங்
பெரிய குடியிருப்புமேடான் (மக். 2,097,610)
மக்கள்
மக்கள்தொகை60,795,669
அடர்த்தி126 /km2 (326 /sq mi)

வெளிநாட்டவர் கிமு 500-இல் சுமாத்திராவிற்கு வந்ததாகக் கருதப்படுகிறது; மற்றும் பல பெரிய இராச்சியங்கள் அங்கு உருவாகி உள்ளன. சீன பௌத்த துறவியான யிஜிங், தம் வாழ்நாளில் நான்கு வருடங்களைப் பலெம்பாங்கில் கழித்து சமசுகிருத மொழியைக் கற்றார். இத்தாலிய ஆய்வாளர் மார்கோ போலோவும் 1292-இல் சுமாத்திராவிற்கு வருகை புரிந்தார்.

அமைவு

தொகு

சுமாத்திராவின் வடமேற்கு, மேற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரைகளில் இந்தியப் பெருங்கடல் எல்லையாக உள்ளது. மேற்குக் கடற்கரையில் சிமியூலூ (Simeulue), நியாஸ் தீவு, மெந்தாவாய் தீவுகள், எங்கானோ தீவு, இரியாவு தீவுகள், கரகோத்தாவா தீவுக்கூட்டம், பாங்கா பெலித்தோங் தீவுகள் உள்ளன.[3]

வடகிழக்கில், மலாக்கா நீரிணை இந்தத் தீவை மலாய் தீபகற்பத்திலிருந்து பிரிக்கிறது. தென்கிழக்கில், குறுகிய சுந்தா நீரிணை, சுமாத்திராவை ஜாவாவிலிருந்து பிரிக்கிறது. சுமாத்திராவின் வடக்கு முனை அந்தமான் தீவுகளுக்கு அருகில் உள்ளது.

சதுப்புநிலக் காடுகள்

தொகு

தென்கிழக்கு கடற்கரையில் பாங்கா பெலித்தோங் தீவுகள், கரிமாத்தா நீரிணை மற்றும் ஜாவா கடல் ஆகியவை உள்ளன. பல எரிமலைகளைக் கொண்ட பாரிசான் மலைகள் தீவின் முதுகெலும்பாக அமைகின்றன. வடகிழக்கு பகுதியில் சதுப்பு நிலங்கள், சதுப்புநிலக் காடுகள் மற்றும் பல ஆறுகளின் அமைப்புகளுடன் கூடிய பெரிய சமவெளிகள் மற்றும் தாழ்நிலங்கள் உள்ளன.

பூமத்திய ரேகையானது, மேற்கு சுமாத்திரா மற்றும் இரியாவு மாநிலங்களில் அதன் மையத்தில் தீவைக் கடக்கிறது. தீவின் காலநிலை என்பது வெப்பமண்டல, வெப்பம் மற்றும் ஈரப்பதமானது. ஒரு காலத்தில் பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள் தீவின் நிலப்பரப்பில் மிகுதியாய் ஆதிக்கம் செலுத்தின.

உயிரினங்களின் நிலைப்பாடு

தொகு

சுமாத்திரா பரந்த அளவிலான தாவர மற்றும் விலங்கு இனங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும், கடந்த 35 ஆண்டுகளில் அதன் வெப்பமண்டல மழைக்காடுகளில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு வளங்களை இழந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

சுமாத்திரா நிலக் காகம் (Sumatran ground cuckoo), சுமாத்திரா புலி, சுமாத்திரா யானை, சுமாத்திரா காண்டாமிருகம் மற்றும் சுமாத்திரா ஓராங் ஊத்தான் போன்ற பல இனங்கள் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளன.

காடழிப்புகள்

தொகு

2013-ஆம் ஆண்டு, சுமாத்திரா தீவில் நடைபெற்ற காடழிப்புகள், அண்டை நாடுகளில் கடுமையான பருவகால புகை மூட்டங்களை ஏற்படுத்தின. 2013 தென்கிழக்கு ஆசிய புகைமாசு (2013 Southeast Asian haze) என்று சொல்லப்படும் அந்த புகை மாசு, இந்தோனேசியாவிற்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் இடையே கணிசமான அளவிற்குப் பதட்டங்களை ஏற்படுத்தியது.[3][2][4]

சுமாத்திரா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் பரவலாக நடைபெறும் காடழிப்புகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் அழிவுகள்; ஒரு வகையான இய்றகைக் கொலை (ecocide) என கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.[5][6][7]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hasil Pencarian – KBBI Daring" [Entry for "Sumatra" in the online version of the Kamus Besar Bahasa Indonesia]. kbbi.kemdikbud.go.id. Ministry of Education, Culture, Research, and Technology. Archived from the original on 5 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  2. 2.0 2.1 "Forensic Architecture". forensic-architecture.org. Archived from the original on 5 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  3. 3.0 3.1 Shadbolt, Peter (21 June 2013). "Singapore Chokes on Haze as Sumatran Forest Fires Rage". CNN இம் மூலத்தில் இருந்து 7 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107033133/http://www.cnn.com/2013/06/19/world/asia/singapore-haze/index.html. 
  4. "Explainer: What is ecocide?". Eco-Business (in ஆங்கிலம்). 2022-08-04. Archived from the original on 17 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  5. Aida, Melly; Tahar, Abdul Muthalib; Davey, Orima (2023), Perdana, Ryzal; Putrawan, Gede Eka; Saputra, Bayu; Septiawan, Trio Yuda (eds.), "Ecocide in the International Law: Integration Between Environmental Rights and International Crime and Its Implementation in Indonesia", Proceedings of the 3rd Universitas Lampung International Conference on Social Sciences (ULICoSS 2022), Advances in Social Science, Education and Humanities Research (in ஆங்கிலம்), Paris: Atlantis Press SARL, vol. 740, pp. 572–584, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2991/978-2-38476-046-6_57, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-38476-045-9
  6. Alberro, Heather; Daniele, Luigi (2021-06-29). "Ecocide: why establishing a new international crime would be a step towards interspecies justice". The Conversation (in ஆங்கிலம்). Archived from the original on 17 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
  7. Setiyono, Joko; Natalis, Aga (2021-12-30). "Ecocides as a Serious Human Rights Violation: A Study on the Case of River Pollution by the Palm Oil Industry in Indonesia" (in en). International Journal of Sustainable Development and Planning 16 (8): 1465–1471. doi:10.18280/ijsdp.160807. பன்னாட்டுத் தர தொடர் எண்:1743-7601. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாத்திரா&oldid=4177784" இலிருந்து மீள்விக்கப்பட்டது