வார்ப்புரு : நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூலை 2007
ஜூலை 2 - அவுஸ்திரேலியா , பிறிஸ்பேன் விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற இந்திய மருத்துவரான முகமது ஹனீஃப் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டார். (ரொய்ட்டர்ஸ்)
ஜூலை 4 - 2014ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ரஷ்யாவின் சோச்சி (Sochi ) நகரில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது. (IOC)
ஜூலை 4 - பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் காசாவில் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்டன் 4 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். (பிபிசி)
ஜூலை 5 - இந்தியாவில் நாகாலாந்தைச் சேர்ந்த ஆயுததாரிகள் அருகிலுள்ள அஸ்ஸாம் மாநிலத்தின் கிராமங்களைத் தீயிட்டுக் கொழுத்தினர். (பிபிசி)
ஜூலை 5 - வடகிழக்கு சீனாவில் கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டு 33 பேர் படுகாயமடைந்தனர். (ஏபிசி)
ஜூலை 7 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் , பிரெஞ்சு வீராங்கனையான மரியன் பார்ட்டோலியை 6-4 6-1 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றார். (பிபிசி)
ஜூலை 7 - வடக்கு ஈராக்கில் சந்தைப் பகுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 105 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஜூலை 7 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. சீனப் பெருஞ்சுவர் , ஜோர்டானின் பெத்ரா , பிறேசிலின் ரெடிமர் ஏசு சிலை , பெருவில் உள்ள மச்சுபிச்சு என்ற புராதன கட்டுமானம், மெக்சிகோவின் சிச்சென் இட்சா பிரமிட் , இத்தாலியின் கொலாசியம் , இந்தியாவின் தாஜ் மகால் ஆகியவை புதிய 7 உலக அதிசயங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. (ஏபிசி)
ஜூலை 8 - முன்னாள் இந்தியப் பிரதமர் சந்திரசேகர் (வயது 80) டில்லியில் காலமானார். (தினக்குரல்)
ஜூலை 8 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியீன் இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் ஃபெடரர் ஸ்பெயினின் நாடலை 7–6, 4–6, 7–6, 2–6, 6–2 என்ற கணக்கில் தோற்கடித்து ஐந்தாவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். (பிபிசி)
ஜூலை 10 - இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் 23 காவல்படையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஜூலை 11 - பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் பலியாகினர். (பிபிசி)
ஜூலை 14 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். (சண்டே ரைம்ஸ்)
ஜூலை 14 - பாகிஸ்தானில் வாசிரிஸ்தான் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 24 பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (எட்மண்டன் சன்)
ஜூலை 14 - அவுஸ்திரேலியா , பிறிஸ்பேனில் ஜூலை 2 இல் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவரான முகமது ஹனீஃப் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாத அமைப்பு ஒன்றிற்கு உதவி செய்ததாக அவுஸ்திரேலிய காவற்படையினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (பிபிசி)
ஜூலை 16 - வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டுள்ளதாக வங்க தேசத் தொலைக்காட்சி சேவை அறிவித்துள்ளது. (ஏபி)
ஜூலை 16 - ஜப்பானில் 6.8 அளவு நிலநடுக்கம் காரணமாக 3 பேர் கொல்லப்பட்டு 33 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
ஜூலை 17 - பிறேசிலில் சாவோ பவுலோ என்ற இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 176 பேர் உட்பட 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஜூலை 17 - உக்ரையினில் கொடிய நச்சுப் பொருளான பாஸ்பரஸ் எரியத்தை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து தீப்பிடித்ததில் லிவ் பகுதியில் நச்சு மேகம் உருவாக்கியுள்ளது. (ஏபி)
ஜூலை 18 - மும்பாயில் பொரிவாலி என்னும் இடத்தில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஜூலை 18 - இலங்கை கிழக்குக் கடற்பரப்பில் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டது. (புதினம்)
ஜூலை 21 - இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பட்டீல் தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
ஜூலை 21 - ஹரி பொட்டர் நாவலின் ஏழாவதும் கடைசியுமான ஹரி பொட்டர் அன்ட் த டெத்லி ஹல்லோஸ் உலகெங்கனும் வெளியிடப்பட்டது. (ரொய்ட்டர்ஸ்)
ஜூலை 23 - பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 35 தீவிரவாதிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஜூலை 23 - ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர் சாஹிர் ஷா (அகவை 92) நீண்ட கால சுகவீனம் காரணமாக காபூலில் மரணமடைந்தார். (பிபிசி)
ஜூலை 24 - லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது. (ராய்ட்டர்ஸ்) , (தினக்குரல்)
ஜூலை 28 - ஆந்திராவில் கமாம் மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை அடக்க காவற்துறையினர் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர். (ஆந்திராநியூஸ்)
ஜூலை 29 - கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்பு தொடர்பாக பிறிஸ்பேனில் கைதுசெய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹனீஃப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பினார். ஆனாலும் அவரது ஆஸ்திரேலிய நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
ஜூலை 31 - சட்டவிரோதமாக ஆயுதங்கள் வாங்கிய குற்றத்திற்காக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் 6 வருட கடுங்காவல் தண்டனை பெற்றார். (பிபிசி)
ஜூலை 31 - ஆப்கானிஸ்தானில் ஜூலை 19 , 2007இல் கடத்திச்செல்லப்பட்ட தென் கொரியாவைச் சேர்ந்த 23 கிறிஸ்தவ நிவாரணப் பணியாளர்களில் ஒருவரின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)