விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு15


காப்புரிமை வழங்கப்படாத படிமங்களும் பயனர்களும்

தொகு

அனைவரதும் கவனத்துக்கு...

88 user:Natkeeran
76 user:Kanags
67 user:செல்வா
44 user:மு.மயூரன்
40 user:Mayooranathan
22 user:பாலாஜி
20 user:Kalanithe
19 user:Profvk
16 user:நிரோஜன் சக்திவேல்
16 user:வைகுண்ட ராஜா
16 user:Viruba

படிமங்களுக்கான உரிமங்களைக் கண்காணிப்பது முக்கியமான நல்ல பணி. பாராட்டுகளும் நன்றியும், டெரன்சு. நான் பதிவேற்றிய படங்களில் 2 மட்டும் உரிமம் குறித்த தகவலுக்கு காத்துள்ளன.விரைவில் சரி செய்கி்றேன்.--ரவி 21:11, 5 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]


கிரந்தம் பயன்பாடு வழிகாட்டி

தொகு

--Natkeeran 17:48, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

முக்கிய அறிவிப்பு

தொகு

சில நாட்கள் முன்பாக விக்கிமீடியா சார்பாக விக்கிக்கு வரும் பயனர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தும் திட்டத்தைத் துவக்கினர். அதைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் மயூரநாதனும் செல்வாவும் நானும் அவர்களுக்கு உதவினோம். இப்போது அந்தத் தகவல் சேர்ப்புக் கருத்துக்கணிப்பு துவங்குகிறது. அனைவரும் தவறாமல் மேலே பின்வருவதுபோல் உள்ள இணைப்பைச் சொடுக்கித் தகவல்களைத் தாருங்கள். நன்றி. -- சுந்தர் \பேச்சு 09:36, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

எங்கள் கேள்விகளுக்கு விடையளித்து விக்கிப்பீடியாவின் வருங்காலத்தைச் செதுக்க உதவுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா - ஓர் அறிமுகம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா - ஓர் அறிமுகம் நூல் உள்ளடக்கம் பற்றி தகுந்த புரிதல் உண்டு. எனவே தகவல்களை ஓரிடத்தில் குவியப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும்.

தயந்து ஏற்கனவே விக்கிப்பீடியாவில் இருக்கும் அடிப்படைத் தகவல்களை அங்கேயே மேம்படுதவும். பின்னர் வெட்டு ஒட்டு செய்யலாம். இயன்றவரை இருக்கும் ஆக்கங்களை பயன்படுத்தினால் நன்று.

அனைவரின் பங்களிப்பும் கருத்துக்களும் வரவேற்கபடுகின்றன. விரும்பினால், இந்த தகவல்களைப் பயன்படுத்தி பின்னர் ஒருவர் எளிய நடையில் எழுதலாம்.

wikibooks:ta:தமிழ் விக்கிப்பீடியா

--Natkeeran 17:09, 30 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்

தொகு

--Natkeeran 14:24, 3 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

எண்வாரியாக தனிமங்களின் பட்டியல்

தொகு

--Natkeeran 14:26, 3 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

கவனிக்க: <centralnotice-template-2008_nometer_2>

தொகு

மேலே இருந்த பெட்டகம் பிழையாக தெரிகிறது. கவனிக்க. --Natkeeran 17:06, 16 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

When Languages die...மொழிகள் இறக்கும்பொழுது

தொகு

--Natkeeran 03:27, 17 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

நல்ல பயனுடைய இணைப்பு, நற்கீரன்! நன்றி. பேராசிரியர் 'டேவி'ட் 'ஆரிசன் அவர்களின் செவ்வியைக் கண்டேன். அனைவரும் பார்த்து உள்வாங்கிக்கொள்ள வேண்டிய உணர்வுகள், கருத்துகள். --செல்வா 18:51, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
ஆமாம். செல்வா. அந்தப் போட்டியில் அவர் local knowledge பற்றி ஒரு கருத்து கூறுவார். தமிச்சூழலோடு பொருத்தி பாக்கும் பொழுது எவ்வளவு உண்மை. தகுந்த கவனம் தாராமல் நாமே அதை இழக்கின்றோமே என்று எண்ணத்தோறுகிறது. --Natkeeran 21:54, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

Rnarendr வேண்டுகோள்

தொகு

"Catchment Area,Glacier lake, Glacier cave, Firn" என்பதன் தமிழ் வார்த்தை என்ன.--Rnarendr 14:53, 17 நவம்பர் 2008 (UTC)

Catchment Area - நீரேந்து பகுதி / நீரேந்து பரப்பு
Glacier lake - பனியாற்று ஏரி.

மயூரநாதன் 17:55, 17 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஒலிபெயர்ப்பு செய்தல்

தொகு

--Natkeeran 00:55, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

மயூரநாதன் அவர்களின் பங்களிப்பில் 5 ஆவது ஆண்டு நிறைவு (தொடக்கம்: நவம்பர் 20, 2003)

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கருமமே கண்ணாயினார் என்னும் வகையில் ஒப்பற்ற ஈடுபாட்டோடும், விரிவாகவும் ஆழமாகவும், பலதுறைகளில் மிகப்பெரிய அளவில் பங்களித்து வரும் மயூரநாதனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இன்றளவும் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பாக வளர்ந்துகொண்டிருப்பதற்கு அடிப்படையான உயிரூற்றுகளில் இவருடைய ஆக்கம் ஒன்று என்றால் மிகையாகாது. மேலும் மேலும் ஆக்கங்கள் தந்து, பல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் --செல்வா 02:45, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

சற்றும் தளராமல், தொலை நோக்கி சிந்தித்து, யார் வந்து போனாலும் அமைதியாய் பங்களித்து, நல்வழிகாட்டும் சிறந்த பயனர். மயூரநாதனுக்கு மிக்க நன்றி. --Natkeeran 02:49, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
ஆம், அவரிடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும் வேறு யாருமே இல்லாத நாட்களில் தொடர்ந்து பங்களித்து த.விக்கிப்பீடியாவை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிந்திருக்காது. -- சுந்தர் \பேச்சு 07:03, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவில் நான் இணைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன என்று எண்ணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. என்னால் விக்கிப்பீடியா பயனடைகிறதோ இல்லையோ, விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதன் மூலம் நான் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லலாம். ஓய்வு நேரங்களை வீணடிக்காமல் ஒரு நல்ல செயலைச் செய்வதற்கு உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பணிபுரிவதில் உள்ள திருப்தி இதில் முக்கியமானது. இங்கே பங்களிப்பதன் மூலம் நிறைய விடயங்களையும் அறிந்துகொண்டிருக்கிறேன். த.வி. எனது அன்றாட வாழ்வின் முக்கியமான பங்காளிகளிலும் ஒன்று எனலாம். உங்களுடைய வாழ்த்துக்கள், இன்னும் நீண்ட காலம் உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பை எனக்குத் தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நன்றி. மயூரநாதன் 15:37, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

அயராது உழைக்கும் மூவர்

தொகு

மயூரநாதன் அவர்களின் பங்களிப்பில் 5 ஆவது ஆண்டு நிறைவு பெரும் இந்நாளில் அயராது உழைத்து வளம் சேர்த்துவரும் மயூரநாதன், கனகு, நற்கீரன் ஆகிய மூவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இடையறாது புதிய கட்டுரைகளை ஆக்கி விக்கிப்பீடியாவை சீராக முன்னேற்றிக்கொண்டே செல்வதில் இவர்களுடைய பங்கு மிகப்பெரியது. மற்றவர்களும் கைகொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.---செல்வா 02:55, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஆம், எத்தனை உழைப்பு, எத்தனை ஒழுக்கம், வியப்பூட்டுகின்றனர்! இவர்களுக்கு நாம் கட்டாயம் கைகொடுக்க வேண்டும். ஊர்கூடி தேரிழுக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:08, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
ஆம் தொடர்ச்சியாகப் பங்களிக்கும் இவர்கள் நிச்சயாமாக ஓர் முன்னுதாரணாக இருக்கின்றார். இவர்களின் ஆக்கமும் ஊக்கமும் நிச்சயமாக தமிழ் விக்கிபீடியாவை மேலும் முன்னெடுக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. --உமாபதி \பேச்சு 16:20, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
இம்மூவரைக் கடந்த சில ஆண்டுகளாகப் பாராட்டிப் பாராட்டி நாம் களைத்துப் போகும் அளவுக்குப் பாராட்டுக்குறியவர்களாக இருக்கிறார்கள் :) என்னுடைய நன்றியும் உரித்தாகுக--ரவி 14:00, 24 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
உண்மை ரவி :) ஆனால் இயன்றால், இயன்றவாறு நாம் ஒரு கிழமைக்கு (வாரத்திற்கு) ஒரு 5-வரி கட்டுரையாவது எழுதி கைகொடுக்க வேண்டும், கூட்டுழைப்பை இவ்வடிவிலும் தரவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களைப் போலவும் சுந்தரைப்போலவும், கோபியைப் போலவும் பின்னணியில் பணி செய்பவர்கள் குறைவு. அறிவேன். என்றாலும் முடிந்தபொழுது ஒரு 5-வரி கட்டுரையை ஒரு கிழமைக்கு (வாரத்திற்கு) ஒன்று எழுதித்தர முடிந்தால் நன்றாக இருக்கும். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது ஒரு மாமந்திரம். ஒரு 7 பேர், ஒரு மாதத்திற்கு 8-10 கட்டுரைகள் எழுதியிருந்தால் மயூரநாதன் 92 கட்டுரைகள் எழுதுவதற்கு மாறாக 10-12 கட்டுரைகளை விரிவாக எழுதியிருப்பார். டெரன்சு, தானியல் பாண்டியன், கோபி, நீங்கள், கோபி, கார்த்திக், வெர்க்லோரும் இன்னும் இங்கு பங்களித்த ஒரு 10-12 பேர் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் குறைந்தது ஒரு 5-வரி கட்டுரையை எழுதி துவக்கி இருக்கக் கூடுமோ என்று எண்ணுகிறேன். என்னாலும் சிலநேரங்களில் ஒரு வரிகூட எழுத முடியாத (ஏன் தமிழ் விக்கியையே பார்க்கக் கூட இயலாத) நாட்கள் பல உண்டு, தொடர்ச்சியாய் ஒரு மாதம் கூட அப்படி பணிச்சுமைகள் வருவதுண்டு. என்றாலும், கிழமையிறுதி நாட்களில் சனி-ஞாயிறுகளில் ஒரேயொரு 5-வரி கட்டுரையாவது எழுத முடியுமா என்று எண்ணிப்பார்க வேண்டும். 100 பேர் பிடித்து இழுத்தால் தேர் விறுவிறு என்று நகரும், 4-5 பேர் மட்டும் பிடித்து இழுத்தால் மிகக்கடினம். நாம் நம் நன்றியையும், மகிழ்ச்சியையும் பங்களிக்கும் எல்லோருடனும் சேர்ந்து, இயன்றவாறு சிறிது கட்டுரையாக்கம் செய்தும் கைகொடுக்க வேண்டும் என்பது என் அவா. யாரும் அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது என் நினைப்பு, பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே --செல்வா 16:12, 30 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இணைய இதழ்கள்

தொகு

பெரியார் பிஞ்சு, விடுதலை, உண்மை ஆகிய திராவிடர் கழக இதழ்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. பல கட்டுரைகள் உள்ளன. நமது கட்டுரைகளில் பொருத்தமான இடங்களில் வெளி இணைப்புகளில் சேர்க்கலாம். மேலும் ஒரு பக்கத்தில் இந்த இதழ்களை சேர்த்து தொகுத்து வைக்கலாம். நக்கீரனுக்கு இதில் விருப்பம் இருக்கக் கூடும். இன்று ஓரிரு கட்டுரைகளுக்கு பெரியார் பிஞ்சு என்னும் சிறுவர் இதழில் இருந்த கட்டுரைகளுக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.--சிவக்குமார் \பேச்சு 17:42, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை

தொகு
  • http://tamilwikipedia.blogspot.com/
  • கருத்துக்கள் ஏதும் இருந்தால் அங்கேயே தெரிவுக்கவும். நன்றி.

--Natkeeran 03:50, 22 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

த.வி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுப் பரப்புரைகளை வலைப்பதிவில் மேற்கொண்டு வருவதற்கு நன்றி, நற்கீரன்--ரவி 14:00, 24 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

Kerala 'Department of Culture will donate the contents of the Malayalam Encyclopaedia to the Malayalam Wikipedia'

தொகு

State to set up global centre - --Natkeeran 04:48, 22 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

Chennai Wikipedia Academy - Where are the Tamil Wikipedians???....

தொகு

--Natkeeran 20:15, 22 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இது குறித்து முன் கூட்டியே தெரியாததால் கலந்து கொள்ள இயலவில்லை. அடுத்தடுத்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளப் பார்க்கிறேன்.--ரவி 13:52, 24 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
ரவி இப்பொழுது சென்னையிலா இருக்கிறீர்கள்? மயூரநாதன் 16:07, 24 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

த.வி எழுத்துப்பெயர்ப்பு பொத்தான்

தொகு

மலையாளம் போன்ற இந்திய மொழி சில இந்திய மொழி விக்கிகளில் அவர்களது மொழியை தட்டச்சு செய்யதக்க வாறு ஏற்பாடு செய்துள்ளார்கள். தமிழ் தட்டச்சே ஒரு பெரிய தடை. தமிழ் 99 சிறந்தது என்றாலும், ஒரு வழியும் இல்லாமல் இருப்பதை விட இது சிறந்ததே. எனவே தயவு செய்து 3-6 மாதத்துக்கு இதை அனுமதித்து பாக்கலாம். கடும் ஆட்சோபனை இல்லாவிடின் இதை நிறைவேற்ற முயல்வேன். நன்றி. --Natkeeran 21:40, 23 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

சோதனை முயற்சியாக சில மாதங்களுக்கு இதை இட்டுப் பார்க்கலாம்.--ரவி 14:00, 24 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
நற்கீரன் இது நல்லதோர் முயற்சி. ஆரம்பியுங்கள் :) --உமாபதி \பேச்சு 14:13, 24 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
தொகு

பெரும்பாலான விக்கிகளில் இந்த மேல்பட்டை வாசகங்களை மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழில் ஏன் இன்னும் மொழி பெயர்க்க வில்லை என்று தெரியவில்லை. இதற்கான கோப்பு எங்குள்ளது என்று தெரிவித்தால், நானும் மொழி பெயர்க்க முயல்வேன்

இதன்வழி சென்றதில் இது கிடைத்தது. -- சுந்தர் \பேச்சு 03:49, 25 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர்!--செல்வா 04:34, 25 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

தொகு

வார்ப்புருக்களை எங்கே தேடுவது? --குறும்பன் 19:56, 27 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தில் கட்டுரைகள் :அகர வரிசை - துறை வரிசை - புதியன என்பதில் அகர வரிசையைத் தேர்ந்தெடுங்கள். அங்கிருந்து ஏதாவதொரு அகரவரிசையைத் தேர்ந்தெடுத்து, பெயர்வெளி என்பதில் வார்ப்புருவைத் தேர்ந்தெடுங்கள். வார்ப்புருக்கள் பல ஆங்கிலப் பெயர்களையே கொண்டிருப்பதால் ஆங்கில அகரவரிசையையும் பார்க்கலாம். இதை விட வேறு வழி எனக்குத் தெரியவில்லை. வார்ப்புருக்களை அந்தந்தப் பகுப்புகளிலும் சேர்த்தால் தேடுவதற்கு இலகுவாகவிருக்கும். பலவற்றை அவ்வாறும் இணைத்துள்ளேன்.--Kanags \பேச்சு 20:19, 27 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
பல வார்ப்புருக்கள் (73) பகுப்பு:வார்ப்புரு ஆவணப்படுத்தல் பகுப்பில் உள்ளன. ஒரு வார்ப்புருவை உருவாக்கும் பொழுது அதனை [[பகுப்பு:வார்ப்புரு ஆவணப்படுத்தல்]] என்று ஒரு பகுப்பில் இட்டால், அவை எளிதில் சிக்க வாய்ப்புண்டு.--செல்வா 20:28, 27 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
இந்தப் பக்கத்தைப் பாருங்கள், பகுப்பு:வார்ப்புருக்கள். உங்களுக்கு எந்த வார்ப்புரு வேண்டும் என்று கூறினால் குறிப்பாக சுட்ட முடியும். --Natkeeran 21:41, 27 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள், தற்போது நிகழும் நிகழ்ச்சி போன்ற வார்ப்புருக்களை தேடினேன். மும்பாய் தாக்குதலில் இதை பயன்படுத்த நினைத்த பொழுது முடியாமல் போனது. நக்கீரன் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் வார்ப்புருவை மாற்றி இணைத்தார். தற்போது நிகழும் நிகழ்ச்சி வார்ப்புருவை இணைத்தால் நன்று, ஏனென்றால் அத்தாக்குதலைப்பற்றிய முழுமையான செய்திகள் இன்னும் யாருக்கும் தெரியவில்லை. --குறும்பன் 23:24, 27 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஒரு மாதத்தில் ஏறத்தாழ 330 கட்டுரைகள் (அக்டோபர் 30-நவம்பர் 29)

தொகு

அக்டோபர் 30, 2008 முதல் நவம்பர் 29, 2008 வரையிலான காலப் பகுதியில் தமிழ் விக்கியில் பங்களிக்கும் பயனர்கள் ஏறத்தாழ 330 கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். பின் வரும் பட்டியலைப் பார்க்கவும்:

நற்கீரன் மயூரநாதன் கனகு செல்வா சிவக்குமார் அருநாடன்2 சந்திரவதனா வாசு இதயத்துல்லா உமாபதி மற்றவர்கள்
100 92 34 15 11 13 7 6 4 4 மீதி

மிகப்பெரும்பாலான கட்டுரைகளை அயராது உழைக்கும் மூவராகிய மயூரநாதன், நற்கீரன், கனகு அவர்களே தொடங்கியுள்ளார்கள். பல நல்ல பயனர்கள் 1-2-3 என கட்டுரைகள் எழுதி ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு கட்டுரைகள் ஆக்கியிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் நன்றிகள். நான் நவம்பர் 13 முதலே மீண்டும் பங்களிக்க இயன்றது. இன்னும் ஒருசிலர் மிக அண்மையிலேயே பங்களிக்க வந்துள்ளார்கள். இன்னும் எத்தனையோ பயனர்கள் உரைதிருத்தம் செய்தும், கட்டுரைகளை மிக நேர்த்தியாக விரிவாக்கியும் உதவியிருக்கிறார்கள். யாரொருவரும், அழுத்தம் ஏதும் இன்றி, அவரவர்களால் இயன்றவாறு, இயன்றபொழுது பங்களித்து உதவினால் நன்றாக த.வி. முன்னேறும். ஆண்டிறுதிக்கு முன்னர் இது சட்டென்று பார்க்கும் ஒரு குறும்பார்வை.--செல்வா 19:40, 29 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

பயனர்கள் பரவலாகக் கட்டுரைகளை ஆக்கியிருப்பதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. ஒன்றிரண்டு கட்டுரைகளே எழுதினாலும் நிறையப் பயனர்கள் வந்து பங்களிக்கவேண்டும். அப்போது தான் தமிழ் விக்கிப்பீடியா வேகமாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். விரைவில் இது நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நற்கீரன் பெருமளவில் துப்புரவுப் பணிகள், பரப்புரை போன்ற பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டு 100 கட்டுரைகளையும் தொடங்கியுள்ளார். அவரது ஆர்வமும் உற்சாகமும் என்றும் நிலைத்திருக்க எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 16:22, 30 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தின் வடிவமைப்பு

தொகு

நம் முதற்பக்கம் நன்றாக உள்ளது. ஆனால் வரவேற்பு மொழியும், முதற்பக்கத்தின் வடிவமைப்பும் சிறிது மாற்றல் வேண்டும் என நினைக்கிறேன். குறிப்பாக "முதற்பக்கக் கட்டுரைகள்" "செய்திகளில்" முதலான கட்டங்களின் தலைப்பை ஒரு பட்டைக்குள் இட்டுக் காட்டல் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். கட்டுரைப் பகுப்புகளும் (வாயில்கள்) வேறுவிதமாக அழகாக காட்டல் வேண்டும் என நினைக்கிறேன். பொதுவாக வரவேற்பு, தலைப்பைத் தவிர மற்ற எல்லாமும் தமிழ் விக்கியில் அழகாக உள்ளன. வரவேற்புப் பட்டையை மாற்ற சில முயற்சிகள் செய்து பார்த்தேன்.இங்கு பார்க்கவும். ஒப்பீட்டுக்கு, ஆங்கிலம் அல்லது டேனிசிய பக்கத்தையோ, இந்தி, மராத்தி பக்கத்தையோ பார்க்கலாம். எனக்கு மராத்தியும் இந்தியும் பிடித்துள்ளது. பிற பயனர்களும் கருத்துத் தெரிவித்தால் மாற்றங்கள் செய்யலாம். தெரன்சு, சுந்தர் போன்றவர்கள் உதவக்கூடும். நன்றி. --செல்வா 01:40, 3 டிசம்பர் 2008 (UTC)

  • அ, ஆ, இ, ஈ ஆகியவை இப்போது இருக்கும் தெரிவுகள். ஈ da/en பின்பற்றி செய்யப்பட்டது.
  • தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு நல்ல அறிமுகக் கட்டுரை தேவை. அதையே முதல் இணைப்பாக தர வேண்டும்.
--Natkeeran 02:28, 3 டிசம்பர் 2008 (UTC)
எனக்கு 'ஈ' குறியீடிடப்பட்ட அமைப்பு பிடித்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 14:18, 5 டிசம்பர் 2008 (UTC)
எனக்கும் ஈ என்னும் தேர்வு பிடித்துள்ளது, ஆனால் இட-வலமாக உள்ள அகலத்தைக் குறைக்க வேண்டும். யாரேனும் இத்திருத்தத்தைச் செய்து, முதற்பக்க வடிவமைப்பை மாற்ற்றலாம். மேலும் தலைப்புகளை ("முதற்பக்கக் கட்டுரைகள்", "செய்திகளில்" முதலானவை) ஒரு கட்டம்கட்டிய பட்டையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். டேனிசிய பக்கத்தையோ, இந்தி, மராத்தி முதலான விக்கி முகப்புகளையோ பார்க்கலாம். --செல்வா 14:28, 5 டிசம்பர் 2008 (UTC)
'ஈ' தான் எனக்கும் பிடித்துள்ளது. மயூரநாதன் 20:42, 6 டிசம்பர் 2008 (UTC)

வாழ்த்துக்கள்

தொகு

அன்புள்ள விக்கிபிடிய நிருவனத்திற்கு வாழ்த்துக்கள். அதில் உழைக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். நான் விக்கிபீடியாவில் எழுத விருப்பப்படுகிறேன். அதற்கான வழிமுறைகள் எனக்கு தெரியவில்லை. எப்படி எழுதுவது என்று தயவு செய்து கூறுங்கள். மேலும் விக்கிபீடியவின் எப்பொழுது தோற்றம் பெற்றது. தெரிந்தால் மாணவர்களுக்குத் தெரிவிப்பேன்.

அன்புடன் முனைவர் துரை.மணிகண்டன். விரிவுரையாளர் தேசியக்கல்லுரி திருச்சிராப்பள்ளி. தமிழ் நாடு. mkduraimani@gmail.com

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்ற அறிஞர்கள் இங்கு எழுத முன்வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் என்ற உதவிப் பக்கத்தைப் பாருங்கள். உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். உங்கள் பங்களிப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். -- சுந்தர் \பேச்சு 07:38, 3 டிசம்பர் 2008 (UTC) (பி.கு. இதை அன்பரின் மின்னஞ்சலுக்கும் அனுப்பியுள்ளேன்.)

ஒலித்திரிபுக் குறிகள்

தொகு

ஒரு கட்டுரையைத் தொகுக்கும் பொழுது ˘ என்னும் ('பிரீவ் breve) என்னும் குறி தேவைப்பட்டால், அதனை நேரடியாக பயன்படுத்த தொகுப்புப்பக்கத்தின் கீழே "குறியீடுகள்" என்னும் வரிசையில் இரண்டாவதாக உள்ளது. பேச்சுப் பக்கங்களில், காற்றொலி சகர ஒலியைக் குறிக்க (எ.கா: Sa = ˘ச, Si = ˘சி என்பன) இது பயன்படும். அதே போல அ̀ , அ́ அ̈ , அ͆ ̥̥கா ̥̥கூ ̥̥கி ̥̥கீ ̥̥கு ̥̥கூ ̥̥̥̥கெ ̥̥கே ̥̥கை ̥̥ப ̥̥பு ̥̥பூ ̥̥பி போன்ற எத்தனையோ குறியீடுகளை நேரடியாக தொகுக்க உதவுமாறு தரவும் இயலும். இவ்வசதி இருப்பதை இங்கு குறிப்பிடுகிறேன். --செல்வா 16:37, 3 டிசம்பர் 2008 (UTC)

பரிந்துரை: தொகுத்தல் துணைவன்

தொகு

நமது விருப்பத்தேர்வுகளில் 'Gadget' என்ற தலைப்பிட்ட படிவத்திற்குச் சென்று, பல சிறப்பு தொகுத்தல் வசதிகளைச் சேர்த்துக் கொள்ள முடியும். அதிலும் நான் அண்மையில் கண்ட wikEd எனும் துணைவன் அருமையாக உள்ளது. மேற்கோள்களைச் சேர்த்தல், அட்டவணைகளைச் சேர்த்தல், மீயுரை அல்லது வேறு பக்கங்களிலிலிருந்து கவர்ந்து ஒட்டப்படும் உரைகளை தன்னியக்கமாக விக்கிப்படுத்துதல், உரைகளில் நாம் குறிப்பிடும் சொற்றொடர்களைத் தாமாகக் கண்டுபிடித்துத் தேவையான மாற்றங்களைச் செய்தல் போன்ற அருமையான வசதிகள் இதில் உள்ளன. அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:57, 5 டிசம்பர் 2008 (UTC)

தகவலுக்கு நன்றி சுந்தர். --செல்வா 14:30, 5 டிசம்பர் 2008 (UTC)
மிகவும் அருமையான கருவி. வண்ணமயமாக உள்ளது :)--சிவக்குமார் \பேச்சு 17:08, 5 டிசம்பர் 2008 (UTC)
நன்றி சுந்தர் மிகவும் நன்றாக உள்ளது :) --உமாபதி \பேச்சு 17:14, 5 டிசம்பர் 2008 (UTC)

புதுப்பயனர் வரவேற்பு

தொகு

புதுப்பயனர்களை வரவேற்று, வழிகாட்ட நாம் இடும் முதல் பக்கத்தை ஒரு வார்ப்புரு மூலம் எளிதாக பேச்சுப்பக்கத்தில் இடலாம். இப்பொழுது அந்த வார்ப்புருவை, {{புதுப்பயனர்}}, தொகுப்புப் பக்கத்தின் கீழே உள்ள கட்டத்தில் உள்ள இத் தொடரைச் சொடுக்கினாலே போதும். இப்படி தொகுப்புக் பக்கத்தில் சேர்ப்பது தவறாக இருந்தால் (தவறான வழிமுறையாக இருந்தால்) இதனை நீக்கிவிடுகிறேன். --செல்வா 16:16, 6 டிசம்பர் 2008 (UTC)

இதிலொன்றும் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை செல்வா. நல்ல வசதிதான். ஏற்கெனவே தொகுத்தல் பெட்டிக்குக்கீழே ஆங்கிலத்தில் உள்ள {{subst:newuser}} என்ற இணைப்பை நீக்கிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 16:59, 6 டிசம்பர் 2008 (UTC)
சுந்தர், நீங்கள் பரிந்துரைத்தவாறு {{subst:newuser}} என்னும் உருப்படியை நீக்கிவிட்டேன்.--செல்வா 18:24, 6 டிசம்பர் 2008 (UTC)
வழக்கமாக {{subst:newuser}} என்ற வார்ப்புருவைத்தானே புதுப்பயனர்களை வரவேற்கப் பாவித்தோம். subst இனிமேல் தேவையில்லையா?--Kanags \பேச்சு 20:59, 6 டிசம்பர் 2008 (UTC)
இங்கு பார்த்தால் subst பயன்படுத்த வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை பங்களிக்காத பயனரை வரவேற்க {{subst:புதுப்பயனர்}}, ஏற்கெனவே பங்களித்தவர்களை வரவேற்க {{subst:welcome}}, புகுபதிகை செய்யாத பங்களிப்பாளர்களை வரவேற்க {{subst:anonymous}} என்று கொள்ளலாம். இவற்றையே தொகுத்தல் பெட்டியின் கீழேயும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 04:49, 7 டிசம்பர் 2008 (UTC)
மேல் விக்கியில் நான் இரு வருடங்களுக்கு முன்னர் புதுப்பயனரை வரவேற்பதைற்குத் தமிழாக்கம் செய்திருந்தேன். பார்க்க http://meta.wikimedia.org/wiki/Template:Welcome இது போல நாமும் தமிழை default மொழியாக்கி வேண்டுமானால் மாற்று மொழிகளில் தரலாம் இல்லையா ஆகக்குறைந்தது ஆங்கிலத்தில் குறைந்த பட்சமாவது இருந்தால் நல்லது. பார்க்க http://meta.wikimedia.org/w/index.php?title=Template%3AWelcome&diff=494504&oldid=491699--உமாபதி \பேச்சு 08:25, 7 டிசம்பர் 2008 (UTC)
இதை எளிதாகச் செய்ய முடியுமானால் செய்யலாம். நல்லதுதான். -- சுந்தர் \பேச்சு 16:12, 7 டிசம்பர் 2008 (UTC)

அறிமுக பரிந்துரை

தொகு

ஆட்சோபனை இல்லாவிட்டால் பின்வரும் பகுதி முதற்பக்கத்தில் இடப்படும். --Natkeeran 02:46, 9 டிசம்பர் 2008 (UTC)

அழகாக உள்ளது.--Kanags \பேச்சு 03:06, 9 டிசம்பர் 2008 (UTC)
நன்றி கனக்ஸ்...மேலேயும் கருத்தொற்றுமை உள்ளதால், உடனேயே மாற்றிவிட்டேன். --Natkeeran 03:10, 9 டிசம்பர் 2008 (UTC)

முதற்பக்க வாசகம்

தொகு
  1. இலவச பயன்பாட்டுக் கலைக்களஞ்சியம். யாரும் தொகுக்கலாம்.
  2. கட்டற்ற கலைக்களஞ்சியம். யாரும் தொகுக்கலாம்.
  3. கட்டற்ற கலைக்களஞ்சியம். நீங்களும் தொகுக்கலாம்.
  4. கட்டற்ற கலைக்களஞ்சியம். இதை நீங்களும் தொகுக்கலாம்.

--Natkeeran 03:41, 9 டிசம்பர் 2008 (UTC)

கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பது சரியான சொல்லாட்சி என்றாலும், அதில் உள்ள சில நுணுக்கங்கள் எல்லோருக்கும் சட்டென விளங்காது. எழுத்துரிமம் ஏதும் இன்றி இயற்றப்பட்ட கலைக்களஞ்சியம், எனவே யாரும் எடுத்தாளலாம். இது இணையவழி இலசசமாக யாரும் பெற்றுப் பயன்பெறக்கூடியதும், முன் வந்து பங்களிக்கக் கூடியதும் ஆன ஒரு கலைக்களஞ்சியம். எனவே கட்டற்ற, இலவச பயன்பாட்டுக் கலைக்களஞ்சியம். யாரும் தொகுக்கலாம். என்று கூறலாம், ஆனால் ஒரு சொல் சற்று நீளமாக இருக்கின்றதோ என எண்ணுகிறேன். இம்மாற்றம் வேண்டாம் எனில், இப்பொழுது இருப்பதும் அழகாகவே இருக்கின்றது என நினைக்கிரேன். அறிமுக முகப்பை மாற்றியமைக்கு நன்றி! --செல்வா 14:39, 9 டிசம்பர் 2008 (UTC)

பயனர் கணக்கு முடக்கம் பற்றி

தொகு

அண்மையில் சில பயனர்களை நாம் முடக்கும்படி அமைந்துள்ளது. இது ஓரளவு நம் தளம் இணையத்தில் அறியப்படத் துவங்கியுள்ளதன் அறிகுறியே. :-) மற்றபடி, கணக்குகளை முடக்குவதற்கு முன்பு {{test}} போன்ற வார்ப்புருக்களைக் கொண்டு அறிவுறுத்திப் பார்க்கலாம். ஆங்கில விக்கியில் மூன்று எச்சரிக்கைகளுக்குப் பின்னரே பெரும்பாலும் முடக்குவர். ஏனெனில், எனக்கு நன்றாகத் தெரிந்த அளவில் ஆங்கில விக்கியில் இரண்டு நல்ல பங்களிப்பாளர்கள் கணக்கு முடக்கத்தின் விளிம்பிலிருந்து வந்துள்ளனர். ஒருவர் பத்துக்கும் மேற்பட்ட சிறப்புக் கட்டுரைகளை ஆக்கியிருக்கிறார்! அவர் யாரென நான் தெரிவிக்க விரும்பவில்லை. மற்றொருவரைப் பற்றி நான் உரிமையுடன் தெரிவிக்க முடியும். அது நானேதான்! இங்கு கடைசிக் கேள்விக்கான மறுமொழியைப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:41, 9 டிசம்பர் 2008 (UTC)

இது எந்த ஒரு குறிப்பிட்ட பயனர் கணக்கு முடக்கத்தைப் பற்றிய கருத்தல்ல, பொதுவானதே. அதேபோல், கணக்கு முடக்கம் பெரும்பாலும் ஒரு தடுப்பு நடவடிக்கையே, தண்டனைக்கானதல்ல. புண்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் ஒரேயொரு உயிரொலி தானே இடைவெளி? (இன்றைக்கு இவ்வளவு வசனம் போதும், எனக்கே புல்லரிக்கிறது. ;) -- சுந்தர் \பேச்சு 05:03, 9 டிசம்பர் 2008 (UTC)
:- )படித்துக் களித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன் சுந்தர்! (உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகின்கின்றேன்.)--செல்வா 14:31, 9 டிசம்பர் 2008 (UTC)
:-) -- சுந்தர் \பேச்சு 14:39, 9 டிசம்பர் 2008 (UTC)
நன்றி சுந்தர், நிச்சயமாக இன்றிலிருந்து பயனர் கணக்கு முடக்கத்தினை ஆற அமர யோசித்துவிட்டுத்தான் செய்வேன். --உமாபதி \பேச்சு 00:20, 10 டிசம்பர் 2008 (UTC)