விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்
யார் கையொப்பமிடுவது?
தொகுபாராட்டுச் சான்றிதழில் உலகளாவிய விக்கிமீடியா சார்பாக யாராவது கையெழுத்திட முடியுமா என்று வினவியுள்ளேன். தமிழ் விக்கிப்பீடியா சார்பாக மயூரநாதன், செங்கைப் பொதுவன் போன்றோர் கையெழுத்திடலாம் என்று முன்பு பலர் பரிந்துரைத்திருந்தோம். எனது பரிந்துரை என்னவென்றால்: ஒவ்வொருவருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்குப் பிடித்த சில பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். அவர்கள் நம்மை வழிகாட்டிச் செப்பனிட்டவர்களாக இருப்பார்கள். நமது பங்களிப்புக்களுக்கு உந்துதலாக சிலர் இருப்பார்கள். எனவே, தமிழ் விக்கிப்பீடியா சார்பாக அவரவருக்குப் பிடித்த பங்களிப்பாளர்களிடம் இருந்து கையெழுத்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றால் அது ஒரு autograph போல் நல்ல நினைவுகளையும் தரும். தவிர, விக்கி பண்பாடே மையப்படுத்தி எவரொருவரையும் முன்னிறுத்துவது கிடையாது என்பதால் எல்லாரும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக கையெழுத்திட வல்ல உரிமையுள்ளவர்கள் என்ற நல்லுணர்வையும் தரும். எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவின் ஆக இளைய பங்களிப்பாளர் ஒருவரை எனக்காக கையெழுத்திட்டுத் தருமாறு கேட்பேன். நிச்சயம், இது அவருக்கு ஒரு பெருமிதத்தையும் தமிழ் விக்கிப்பீடியாவின் போல் ஒரு ஈடுபாட்டையும் உருவாக்கும் என்று எண்ணுகிறேன். இப்பரிந்துரை உங்களுக்குப் பிடித்திருந்தால், விருப்பக் குறி இடுங்கள். ஒவ்வொருவருக்கும் பிடித்த ஓரிரு தமிழ் விக்கிப்பீடியர்களின் கையெழுத்தைச் சான்றிதழில் பெற்றுத் தர முனைவோம். --இரவி (பேச்சு) 08:03, 20 செப்டம்பர் 2013 (UTC)
ஆதரவு
தொகுமிகுந்த விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 20 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம் எனக்கு சிவகுருநாதன் கையொப்பமிட்டது வேண்டும். :) எல்லோரின் கையொப்பங்களையும் பின்னணியில் வாட்டர்மார்க் போல் வைத்தாலும் கூட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:28, 20 செப்டம்பர் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில், அனைவர் கையொப்பங்களையும் நிகழ்வுக்கு முன்பே பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்பதால் இதைச் செய்ய இயலாது. இந்தப் பரிந்துரையை இப்போது தான் காண்கிறேன். சான்றிதழும் அச்சுக்கும் போய் விட்டது.--இரவி (பேச்சு) 20:06, 23 செப்டம்பர் 2013 (UTC)
- பரவாயில்லை இரவி, அடுத்த முறை எல்லாரது கையொப்பங்களையும் பெற முயல்வோம். அனைத்தையும் புகைப்பட வடிவில் எடுத்து அனுப்பச் சொல்லி, பயன்படுத்தலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:29, 2 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில், அனைவர் கையொப்பங்களையும் நிகழ்வுக்கு முன்பே பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்பதால் இதைச் செய்ய இயலாது. இந்தப் பரிந்துரையை இப்போது தான் காண்கிறேன். சான்றிதழும் அச்சுக்கும் போய் விட்டது.--இரவி (பேச்சு) 20:06, 23 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:22, 26 செப்டம்பர் 2013 (UTC)
எதிர்ப்பு
தொகுஎதிர்ப்புஇரவியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பாராட்டுச் சான்றிதழில் விக்கிப்பீடியா உருவாக்குநர் ஜிம்மி வேல்ஸ் கையொப்பம் பிரதி செய்து இடம் பெறச் செய்வதும், இரண்டாவதாக தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகத் திகழும் இ. மயூரநாதன் கையொப்பம் பெறுவதுமே முழுப் பொருத்தம். இல்லையெனில், யாராவது தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் இருவரைத் தேர்வு செய்து (வயது அல்லது பங்களிப்பு என்கிற ஏதாவது ஒரு நடைமுறையைப் பின்பற்றலாம்) அவர்கள் கையொப்பத்தை பெற்றிட வேண்டும். அனைத்துப் பாராட்டுச் சான்றிதழ்களிலும் ஒரே மாதிரியான கையொப்பம் இடம் பெறுவதே வரவேற்கக் கூடியது. (இரவி விரும்பினால் மலரும் நினைவுகளுக்காக நினைவுக் குறிப்புப் புத்தகம் (ஆட்டோகிராப்) ஒன்றை வாங்கி வந்து நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களிடமும் கையொப்பம் பெற்று மகிழலாம். நினைவுகளுக்காகப் பாதுகாக்கலாம்.) பாராட்டுச் சான்றிதழில் பங்களிப்பாளரின் விருப்பம் போல், பலர் கையொப்பமிட்டுத் தரும் தவறான நடைமுறையை எதிர்க்கிறேன். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:12, 26 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்
- தமிழ் விக்கிப்பீடியா சார்பாக மயூரநாதன், செங்கைப் பொதுவன் போன்றோர் கையெழுத்திடலாம்,
- தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 04:45, 26 செப்டம்பர் 2013 (UTC)
- மயூரநாதன், செங்கைப் பொதுவன் போன்றோர் கையெழுத்திடுவதற்கு நான் ஆதரவு.--192.248.66.5 08:08, 26 செப்டம்பர் 2013 (UTC)
--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:09, 26 செப்டம்பர் 2013 (UTC)
விருப்பம் இவ்விசயத்தில் தேனி. மு. சுப்பிரமணி கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் இருவரைத் தேர்வு செய்து (வயது அல்லது பங்களிப்பு என்கிற ஏதாவது ஒரு நடைமுறையைப் பின்பற்றலாம்) அவர்கள் கையொப்பத்தை பெற்றிட வேண்டும். அனைத்துப் பாராட்டுச் சான்றிதழ்களிலும் ஒரே மாதிரியான கையொப்பம் இடம் பெறுவதே வரவேற்கக் கூடியது.--ஹிபாயத்துல்லா (பேச்சு) 17:39, 26 செப்டம்பர் 2013 (UTC)
- தங்களுக்குப் பிடித்த இருவரிடமிருந்து அல்லது சிறப்பான மரியாதை வைத்திருக்கும் இருவரிடமிருந்து கையெழுத்துப் பெறுவதற்காக அவர்களை வரிசைப்படுத்துவது என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் இருவருக்கு அல்லது மூவருக்கு மேற்பட்டவரை எமக்குப் பிடித்திருந்தால், எவரிடம் கையெழுத்தைப் பெறுவது? இரண்டோ, மூன்றோ எண்ணிக்கைக்கு மேற்பட்டவர்கள் மேல் மரியாதை கொண்டிருந்தால் என்ன செய்வது? பலரில் ஒரேயளவு மரியாதை கொண்டிருந்தால் எப்படி அவர்களை வரிசைப்படுத்துவது? அல்லது நாம் கையெழுத்து வாங்க விரும்புபவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ சென்னை ஒன்றுகூடலுக்கு வரவில்லையெனில் என்ன செய்வது? தமிழ் விக்கிப்பீடியர்களில் ஒவ்வொருவரிடம் கையெழுத்துப் பெற ஒவ்வொரு காரணமிருக்கும். அவர்களில் எவரையும் கூட்டியோ, குறைத்தோ மதிப்பிட முடியாமல் இருக்கும். அவற்றில் இருவரையோ, மூவரையோ மட்டும் தெரிவு செய்வதும், அப்படித் தெரிவு செய்தல், அவர்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்துதல் என்ற இந்த நடைமுறையில் எனக்குச் சம்மதமில்லை. அதனால், நான் பட்டியலில் அவ்வாறு செய்ய முடியாதுள்ளேன்.--கலை (பேச்சு) 21:30, 26 செப்டம்பர் 2013 (UTC)
நடுநிலை
தொகு- விக்கிகுடும்பத்தில் அனைவரும் சமமே. ஓரிரு பதிவு செய்தாலும், ஓராயிரம் பதிவு செய்தாலும் அனைவருக்கும் சம உரிமைகள் இருக்கின்றன. சான்றிதழ், பத்திரம் போன்றவைகளுக்காக இங்கே இருப்பவர்கள் செயற்படுவதில்லை. இத்தகையதொரு நடைமுறை வேண்டாமென்றே எண்ணுகிறேன். இருப்பினும், அவ்வப்போது உரியபதிவுகளை நாம் பாராட்டியே வருகிறோம். அதுவே சிறந்த நடைமுறை. சூடான உரையாடற்பக்கங்கள் இருப்பினும், அதுவும் இச்சமூக வளர்ச்சிக்கே நடந்துள்ளது. எனக்கும், இன்னும் சில தமிழ்விக்கியருக்கும், மும்பையில் பாராட்டுரை வழங்கியபோது மகிழ்வே ஏற்பட்டது. அப்பாராட்டுரையை பெறும் போது, நம் தமிழ் மொழியை பிறர் கவனிக்கின்றனர் என்ற மகிழ்வு ஏற்பட்டாலும், நம் சமூகத்துள்ள நடந்த உரையாடல்கள் என்னை சிந்திக்க வைத்தது. அதன்படி, பாரட்டு சான்றிதழ் வழங்கும் நிலைக்குத் தேவையான நடைமுறைகள் வலுவாக நம்மிடம் இல்லை என்றே எண்ணினேன். இந்நேரத்தில் செய்வது, அவசரத்தில் செய்யப்படுவதே ஆகும். முதற்பக்கத்தில் எனது படத்தை போட விரும்பாத எனக்கு, இப்பாரட்டு பத்திரம் பெறுவதற்கும் மனம் ஒப்பவில்லை. எனவே, என் பெயரை நீக்குக. என்னைப் போல பலரும் எண்ணலாம். நம் சமூகம் மிகச்சிறியது. அதனை வளர்த்தெடுக்க நாம் ஒவ்வொருவரும் உழைக்கிறோம். நம் சமூகம், என் குடும்பம் என்பதே என் எண்ணம். நாம் நம் குடும்பத்தை, ஆலமரம் போல வளர்த்தெடுப்போம். நம் பத்திரத்திற்கு மதிப்பு கூட, பல்வேறு அளவு கோல்கள் வேண்டும். அப்பொழுது தான் அப்பத்திரத்திம் காலத்தை கடந்து நிற்கும். எனவே, எண்ணுக. வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 11:59, 26 செப்டம்பர் 2013 (UTC)
இது பாராட்டுப் பத்திரம் என்பதால் பாராட்ட விரும்புபவர் கையொப்பமிடலாம். விக்கியில் பதக்கம் அளித்தல் எவ்வாறு பாராட்டின் அடிப்படையில் அளிக்கப்படுகின்றதோ அவ்வாறே இதுவும் அமையலாம். ஒருவருமே பாராட்ட விரும்பாவிட்டால், விழா ஒருங்கிணைப்பாளர்கள் கையொப்பமிடலாம். --Anton (பேச்சு) 03:33, 27 செப்டம்பர் 2013 (UTC)
கருத்து
தொகுதனிப்பட்ட முறையில் இது போல் சான்றிதழ்கள் பெறுவதில் எனக்கு ஈடுபாடில்லை. நான் 20 ஆண்டுகள் படித்து உயர் கல்வி நிறுவனங்களில் வாங்கிய பட்டச் சான்றிதழ்களையே எந்த மூலையில் போட்டு வைத்திருக்கிறேன் என்று தேடித் தான் பார்க்க வேண்டும் :) ஆனால், இத்தகைய ஒரு சான்றிதழ் பலருக்கும் உந்துதலாக இருப்பதை உணர்ந்ததன் அடிப்படையிலேயே இம்முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். ஆகவே, யாராவது ஓரிருவர் தான் கையெழுத்திட வேண்டுமா யார் வேண்டும் என்றாலும் கையெழுத்திட வேண்டுமா என்று எனக்குத் தனிப்பட்ட நிலைப்பாடு இல்லை. ஓரிருவர் தான் போட வேண்டும் என்று கோருவது மையப்படுத்திய அதிகார மனநிலையில் இருந்து வருவது. பங்களிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க யார் வேண்டுமானாலும் போட்டுத்தரலாம் என்பது விக்கி வழமையைப் பின்பற்றி அனைவருக்கும் பொறுப்பும் பெருமிதமும் தரும் ஒரு முறை. விக்கியில் பதக்கங்கள் அளித்துக் கொள்வது போல். ஓரிருவர் போட்டால் மட்டும் அதற்கு உயர் மதிப்பு வரும் என்றும் யார் வேண்டுமானாலும் போட்டால் சான்றிதழ் மதிப்பு இழந்து விடும் என்று நான் நினைக்கவில்லை. யார் கையெழுத்து போட்டால் மதிப்பு வரும் என்று அவரவர் எண்ணுகிறார்களோ அதற்கான சுதந்திரத்தையும் சேர்த்தே தற்போது பரிந்துரைக்கப்படும் நடைமுறை உள்ளது. உண்மையிலேயே இச்சான்றிதழின் பெறுமதியை ஒரு பல்கலையோ அரசு நிறுவனமோ கணக்கில்கொள்ளுமானால் அவர்களுக்கு எல்லா கையெழுத்தும் ஒரு கையெழுத்து தான். ஆக, நமக்கு எஞ்சியிருப்பவை நல்ல நினைவுகள் மட்டுமே ! ஆனால், மலரும் நினைவுகள் தான் தேவை என்றால் ஒளிப்படம் எடுக்கலாம், நீங்கள் கூறியது போல் autograph புத்தகம் வாங்கலாம். ஆனால், இந்தப் பரிந்துரையின் முக்கிய நோக்கமே ஒவ்வொருவரும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக செயல்படக்கூடிய பொறுப்பும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை உணர்த்துவதும் திட்டத்தின் மீதான பிணைப்பையும் பெருமிதத்தையும் அளிப்பதே. வழமையான சமூகத்தில் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் கிடைப்பது இல்லை. இங்கு நாம் அந்த நடைமுறையைக் கொண்டு வருவது வருங்கால தமிழ் விக்கிப்பீடியர்களிடம் மிகப் பெரும் பொறுப்புணர்வையும் எழுச்சியையும் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இதைப் பொறுத்தவரை நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே செல்வசிவகுருநாதனைப் பெயர் தெரிவு பொறுப்பை ஏற்க வேண்டினேன். அதே போல் யார் கையெழுத்து போடுவது என்ற பஞ்சாயத்துக்கும் ஒரு முடிவுக்கு வந்து ஞாயிறு காலைக்கு முன் தெரிவித்து விட்டால் செயற்படுத்தி விடலாம் :)
பி.கு. - சிம்மி வேல்சின் கையெழுத்துப் படியைப் பெற முயன்றோம். இன்னும் பதில் வரவில்லை என்பதால் அது இல்லாமலேயே தான் சான்றிதழை அச்சுக்குக் கொடுத்திருக்கிறோம். --இரவி (பேச்சு) 13:02, 26 செப்டம்பர் 2013 (UTC)
- இரவி, எனக்கும் இந்த சான்றிதழ்களில் தனிப்பட்ட விருப்பம் எதுவுமில்லை. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து பல்வேறு இலக்கியப் போட்டிகளில் நான் பெற்ற பரிசுச் சான்றிதழ்கள் பல காணாமலே போய் விட்டன. ஆனால், ஒரு சிலர் சான்றிதழ்கள் மட்டுமில்லை, பல்வேறு பழைய பொருட்களைக் கூட நினைவுக்காகப் பாதுகாத்தும் வருகின்றனர். இங்கு தேனியில் உணவகம் ஒன்றில் மேலாளராக இருக்கும் ஒருவர் எம்.ஜி.ஆர். படம் எந்தப் பத்திரிகையில் இடம் பெற்றிருந்தாலும், அதை வாங்கி அந்தப் படத்தை அதற்காக வைத்திருக்கும் ஆல்பத்தில் ஒட்டி சேகரித்து வைத்து விடுவார். இப்படி அவர் சேர்த்த எம்.ஜி.ஆர் படங்கள் பத்தாயிரம் வரை இருக்கும். பல ஆல்பங்கள் போட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். இது போன்ற பாராட்டுச் சான்றிதழ்களையும் பலர் விரும்பக் கூடும். அதைச் சில சமயங்களில் அவருடைய தனிப் பயன்பாட்டுக்குக் கூடப் பயன்படுத்திக் கொள்ள முடியும். (உதாரணமாக, ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் போது, இது போன்ற சான்றிதழ்களை கூடுதல் மதிப்புக்காகச் சேர்த்துக் கொள்ள முடியும்) எனக்கு இந்தச் சான்றிதழால் எவ்விதப் பயனுமில்லை. இருப்பினும், இந்த பத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியர்களால் பரிந்துரைக்கப்பட்டதை பலரும் விரும்புவதால் மட்டுமே நான் ஆதரிக்கிறேன். இங்கு பாராட்டுச் சான்றிதழில் முதல் கையொப்பமாகத் தமிழ் விக்கிப்பீடியா தொடக்கத்துக்குக் காரணமானவர் என்கிற முறையில் இ. மயூரநாதன் கையொப்பம் பெறலாம். இது நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகக் கருதலாமே...! இரண்டாவது கையொப்பமாக செங்கைப் பொதுவன் கையொப்பம் பெறுவதிலும் தவறில்லை. வயதான காலத்திலும் இடைவிடாமல் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் அவருக்குச் செய்யும் மரியாதையாகக் கருதலாமே...! ஏன் நீங்களே கூட கையொப்பமிட்டுக் கொடுக்கலாம், இந்தக் கொண்டாட்டத்தை முன்னின்று செய்யும் தங்களுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதையாகக் கூடக் கருதலாம்! அவரவர் விருப்பப்படி கையொப்பம் பெறலாம் என்பது தமிழ் விக்கிப்பீடியா பயனர்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் செயலாகவே நான் கருதுகிறேன். இதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள பக்கத்தில் பயனர் பெயர், சான்றிதழில் இருக்க வேண்டிய பெயர், யார் யார் கையெழுத்திட வேண்டும் என்பது குறித்த வரிசை போன்றவற்றில் யார் யார் கையெழுத்திட வேண்டும் என்பது குறித்த வரிசை எனக்குப் பிடித்தமில்லை.
- //இந்தப் பரிந்துரையின் முக்கிய நோக்கமே ஒவ்வொருவரும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக செயல்படக்கூடிய பொறுப்பும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை உணர்த்துவதும் திட்டத்தின் மீதான பிணைப்பையும் பெருமிதத்தையும் அளிப்பதே. வழமையான சமூகத்தில் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் கிடைப்பது இல்லை. இங்கு நாம் அந்த நடைமுறையைக் கொண்டு வருவது வருங்கால தமிழ் விக்கிப்பீடியர்களிடம் மிகப் பெரும் பொறுப்புணர்வையும் எழுச்சியையும் தரும் என்று உறுதியாக நம்புகிறேன். //
- விக்கிப்பீடியா திட்டம் குறித்து முழுமையாக அறிந்தே அனைவரும் பங்களித்து வருகிறார்கள். அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக செயல்படக்கூடிய பொறுப்பும் உரிமையும் உள்ளவர்கள்தான், இருப்பினும் சிலர் முன்னின்று செய்யும் செயல்கள் பாராட்டுக்குரியவையாக இருக்கின்றன. அவர்களை முன்னிலைப்படுத்துவதில் தவறில்லை. இந்தக் கொண்டாட்டப் பணிகளைத் தாங்கள் முன்னின்று செய்து வருகிறீர்கள். இதற்காகத் தங்களை நாங்கள் பாராட்டாமல் இருக்க முடியுமா? தாங்கள் குறிப்பிடுவது போல், எடுத்துக் கொண்டால், இங்கு பாராட்டுச் சான்றிதழ் 100 எனும் எண்ணிக்கையில் முடக்கப்பட்டது ஏன்? தற்போதைய நிலையில் செயல்படும் பயனர்களாக 275 பேர் இருக்கின்றனர். ஆனால், நீங்கள் 100 பேருக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்திருக்கிறீர்கள். அதாவது, 100 பேர் மட்டுமே பாராட்டுக்குரியவர்கள் என முடிவு செய்ததாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பங்களிப்பாக இருந்தாலும் சரி, ஓராயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பங்களிப்பாக இருந்தாலும் அவரைத் தமிழ் விக்கிப்பீடியா பயனர் என்றுதானே கொள்ள வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக செயல்படக்கூடிய பொறுப்பும் உரிமையும் உள்ள அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் அளிப்பதுதானே நியாயமானது. இங்கு நீங்கள் 100 பேர் மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் பாராட்டுச் சான்றிதழ் அளிப்பது சரியெனில், கையெழுத்திடுவதற்கும் குறிப்பிட்ட இருவரைத் தேர்வு செய்வதும் சரியானதுதான். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:15, 26 செப்டம்பர் 2013 (UTC)
- செங்கைப் பொதுவனுக்கும் மயூரநாதனுக்கும் செலுத்தும் மரியாதையாக இது இருக்கும் என்கிறீர்கள்... அதையே தான் நானும் சொல்கிறேன். ஒவ்வொருவருக்கும் தங்கள் விக்கி வாழ்க்கையில் சிலர் மீது சிறப்பான மரியாதை இருக்கும். அதனால்மற்றவர்கள் மேல் மரியாதை இல்லை என்று பொருள் இல்லை. ஆகவே, ஒவ்வொரு பயனரும் தங்களுக்குப் பிடித்தவருக்கு மரியாதை செலுத்தத் தரும் வாய்ப்பாக இதனைக் கருதலாமே? 100 பேருக்கு மட்டும் சான்றிதழ் என்று தேர்ந்தெடுக்கும் போது 2 பேரை மட்டும் ஏன் கையெழுத்து போட என்று தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற உங்கள் கேள்வியின் ஏரணத்தை இரசித்தேன் :) கடைசியாக ஒன்று, இந்த யோசனையை நான் பரிந்துரைத்திருந்தாலும் மற்றும் பலரும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டுகிறேன். அவரவருக்குப் பிடித்தமானவர் கையெழுத்திடலாம் என்றால் இங்கு அனைத்துப் பயனர்களுக்கும் சுதந்திர வாய்ப்பு தரப்படுகிறது. குறிப்பிட்ட இருவர் மட்டுமே என்றால் அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவ்வளவு தான். --இரவி (பேச்சு) 18:49, 26 செப்டம்பர் 2013 (UTC)
தேனி.மு.சுப்பிரமணியின் கூற்றும் (//தற்போதைய நிலையில் செயல்படும் பயனர்களாக 275 பேர் இருக்கின்றனர். ஆனால், நீங்கள் 100 பேருக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்திருக்கிறீர்கள். அதாவது, 100 பேர் மட்டுமே பாராட்டுக்குரியவர்கள் என முடிவு செய்ததாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பங்களிப்பாக இருந்தாலும் சரி, ஓராயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பங்களிப்பாக இருந்தாலும் அவரைத் தமிழ் விக்கிப்பீடியா பயனர் என்றுதானே கொள்ள வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக செயல்படக்கூடிய பொறுப்பும் உரிமையும் உள்ள அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் அளிப்பதுதானே நியாயமானது.//) கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் எனக் கருதுகின்றேன். தமிழ் விக்கியில் பங்களிக்க ஆர்வமிருந்தும், ஏதோ சில காரணங்களால், சரியாகப் பங்களிக்க முடியாமல் இருப்பவர்கள் இதில் தவற விடப்படுவார்களே.--கலை (பேச்சு) 21:45, 26 செப்டம்பர் 2013 (UTC)
- இரவி, நான் மறைமுகமாகக் குறிப்பிட்டதை கலை மிக அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவருடைய//தங்களுக்குப் பிடித்த இருவரிடமிருந்து அல்லது சிறப்பான மரியாதை வைத்திருக்கும் இருவரிடமிருந்து கையெழுத்துப் பெறுவதற்காக அவர்களை வரிசைப்படுத்துவது என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் இருவருக்கு அல்லது மூவருக்கு மேற்பட்டவரை எமக்குப் பிடித்திருந்தால், எவரிடம் கையெழுத்தைப் பெறுவது? இரண்டோ, மூன்றோ எண்ணிக்கைக்கு மேற்பட்டவர்கள் மேல் மரியாதை கொண்டிருந்தால் என்ன செய்வது? பலரில் ஒரேயளவு மரியாதை கொண்டிருந்தால் எப்படி அவர்களை வரிசைப்படுத்துவது? அல்லது நாம் கையெழுத்து வாங்க விரும்புபவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ சென்னை ஒன்றுகூடலுக்கு வரவில்லையெனில் என்ன செய்வது? தமிழ் விக்கிப்பீடியர்களில் ஒவ்வொருவரிடம் கையெழுத்துப் பெற ஒவ்வொரு காரணமிருக்கும். அவர்களில் எவரையும் கூட்டியோ, குறைத்தோ மதிப்பிட முடியாமல் இருக்கும். அவற்றில் இருவரையோ, மூவரையோ மட்டும் தெரிவு செய்வதும், அப்படித் தெரிவு செய்தல், அவர்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்துதல் என்ற இந்த நடைமுறையில் எனக்குச் சம்மதமில்லை. அதனால், நான் பட்டியலில் அவ்வாறு செய்ய முடியாதுள்ளேன்.// என்பது முற்றிலும் உண்மை. இந்த மனநிலையில்தான் பலரும் இருக்கக்கூடும். உதாரணமாக, யார் கையெழுத்திடுவது என்கிற பட்டியலில் தற்போது மணியன் குறிப்பிட்டுள்ள ”வந்துள்ளோரில் குலுக்கல் முறையில் இருவர்” என்பதை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யார் கையொப்பமிட்டாலும் பரவாயில்லை என்பதுடன் இங்கு யாரையும் அவர் குறிப்பிட விரும்பவில்லை. இது அவருடைய தயக்கத்தின் வெளிப்பாடே. இது போல் பலரும் நினைக்கக் கூடும், தயக்கம் காட்டக்கூடும். நம்முடைய விருப்பம் என்பது வேறு. பொதுவான நடைமுறை என்பது வேறு. நம்முடைய விருப்பத்தை நடைமுறைப்படுத்துவதை விட பொதுவான நடைமுறைக்கு வருவதே சிறப்பு. சான்றிதழில் யார் கையொப்பமிடுவது என்பதை ஏதாவது ஒரு அடிப்படையில் முன்பே முடிவு செய்திருக்க வேண்டும். இங்கு பலரும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது, இந்தப் பாராட்டுச் சான்றிதழில் யார் கையொப்பமிட்டால் என்ன? நமக்குப் பாராட்டுச் சான்றிதழால் எந்தப் பயனுமில்லை என்று எண்ணுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே முதற்காரணமாக இருக்கக் கூடும். பாராட்டுச் சான்றிதழ் பெயரளவில் என்பதாக இல்லாமல் பயனுள்ளதாக அமைந்திட வேண்டும். இதற்குப் பொதுவான நடைமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:39, 27 செப்டம்பர் 2013 (UTC)
ஒரு சில தகவல்களை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்:
- 100 என்ற எண்ணிக்கை, கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஆரம்பத்தில் நான் இந்த எண்ணத்தை முன்மொழிந்தபோது 100 எனக் குறிப்பிட்டேன், அவ்வளவே. எனது முன்மொழிவிற்கு பதிலளித்த ரவி, இதில் இறுக்கமான எண்ணிக்கை தேவையில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். காண்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள், பாராட்டுப் பத்திரம் எனும் தலைப்பின்கீழ் அமைந்துள்ள பேச்சுகள்.
- தற்போது 100 படிகள் மட்டுமே அச்சில் இருந்தாலும் தேவைப்படின் கூடுதலாக அடித்துக்கொள்ளலாம் என ரவி தெரிவித்துள்ளதை இந்தப் பேச்சுப் பக்கத்திலே நாம் காணலாம்.
- குறிப்பிடத்தக்க பங்களிப்பு தந்தவர்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நீண்ட நாட்களாக விக்கியில் பணியாற்றும் பங்களிப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவர்கள் இந்தப் பட்டியலை இற்றை செய்து வருகின்றனர்.
- யார் கையெழுத்திடுவது என்பதற்கு முறையான முடிவினை கண்டிப்பாக எடுப்போம். பட்டியலின் தலைப்புகளையும் தற்போது மாற்றியுள்ளேன். தயைகூர்ந்து அனைவரும் தங்களின் தகவல்களை பட்டியலில் இற்றைப்படுத்த வேண்டுகிறேன்.
- தனிப்பட்ட சொந்த கருத்து 1: இந்தச் சான்றிதழ் என்பது, விக்கியன்பு எனும் திட்டத்தின்கீழ் நாம் தரும் பதக்கம் போன்றதே; கொண்டாட்டம் என்பதனால்... அச்சிட்டு வழங்குகிறோம். மாணவர்களையும், இளைஞர்களையும் இச்சான்றிதழ் ஊக்குவிக்கும் எனும் எண்ணத்தை மனதில் நிறுத்தி இத்திட்டம் தீட்டப்பட்டது!
- தனிப்பட்ட சொந்த கருத்து 2:- தமிழ் விக்கியில் பங்களித்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை; அது மிகப் பெரிய திட்டம்! பணியாளர்களைக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அது சாத்தியம் என்பது எனது கருத்து. நட்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 27 செப்டம்பர் 2013 (UTC)
- சிவகுரு, ஒரு வேளை யார் கையெழுத்திடுவது என்று முடிவெடுக்கும் போது ஆதரவு / எதிர்ப்பு வாக்குகளைக் கருத்தில் கொள்வீர்கள் என்றால், திட்டப்பக்கத்தில் பலர் தங்கள் விருப்பக் கையெழுத்துகளைத் தெரிவிப்பதையும் கவனத்தில் கொள்ளவும். அவர்களில் பலர் இங்கு ஆதரவு வாக்கு இடவில்லை என்ற போதிலும் இது ஒரு வகையான ஆதரவே. இந்தச் சிக்கலுக்கு எனக்கு ஒரு தீர்வு தோன்றுகிறது. அனைத்து சான்றிதழ்களிலும் குறிப்பிட்ட இருவர் கையெழுத்தை இடலாம். அது யார் என்பது பிரச்சினையில்லை. பெரும்பாலானோர் வேண்டுவது போல் செங்கைப் பொதுவன், மயூரநாதன் கையெழுத்துகள் கூட சரியே. ஆனால், அதற்கு மேலும் சிலர் கையெழுத்து வேண்டும் என்று சிலர் ஆசைப்பட்டால் அதற்கான இடத்தையும் நாம் தரலாமே? இல்லை, கண்டிப்பாக இருவர் மட்டும் தான் கையெழுத்திட வேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாடு எடுக்கப்படும் என்றால் சான்றிதழ் என் கைக்கு கிடைத்தவுடன் எனக்குப் பிடித்தவர்களிடம் கூடுதல் கையெழுத்துகள் வாங்கிக் கொள்வேன் :)--இரவி (பேச்சு) 18:22, 27 செப்டம்பர் 2013 (UTC)
- எனக்குக் கிடைக்கும் குறைந்த இணைய நேரத்தால் இங்கு உடனடியாக உரையாட இயலவில்லை. இப்போதுதான் எனது செயலுக்கான தேனியாரின் "உதாரணமாக, யார் கையெழுத்திடுவது என்கிற பட்டியலில் தற்போது மணியன் குறிப்பிட்டுள்ள ”வந்துள்ளோரில் குலுக்கல் முறையில் இருவர்” என்பதை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யார் கையொப்பமிட்டாலும் பரவாயில்லை என்பதுடன் இங்கு யாரையும் அவர் குறிப்பிட விரும்பவில்லை. இது அவருடைய தயக்கத்தின் வெளிப்பாடே." என்ற விளக்கத்தைப் பார்த்தேன். காலம் கடந்துபோனாலும் எனது நிலையை தெளிவுபடுத்த வேண்டியவனாக உள்ளேன்.
- "ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?" என்ற கவியரசரின் பாடலுக்கேற்ப வழமையான ஒரு சிலரே கையொப்பமிடவேண்டும் என்ற மையப்படுத்தப்பட்ட சிந்தனையிலிருந்து விடுதலை பெற்ற புதிய வருங்காலத்திற்கு வித்திடும் இரவியின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.
- என்னை விக்கிக்கு வரத்தூண்டிய இரவியைச் சொல்வதா, முதலில் வரவேற்ற சிவகுமாரைச் சொல்வதா, எனது தமிழை ஒழுங்குபடுத்திய செல்வா, பாகிம், மதனாகரனைச் சொல்வதா, சமூக விழிப்புணர்வுடன் பங்காற்ற வழிகாட்டிய சுந்தர், தகவலுழவனைச் சொல்வதா, எனது இனிய நண்பர்களாக சிக்கல்களில் கைகொடுக்கும் கனக்சு, சோடாபாட்டில், சூர்யபிரகாசு, பவுல், கலையரசி, மாகிர், பரிதிமதி என விரியும் பட்டியலில் யாரைத் தேர்வது என்ற குழப்பத்திலேயே ”வந்துள்ளோரில் குலுக்கல் முறையில் இருவர்” எனக் குறிப்பிட்டேன். அண்மையில் கடிந்துரைத்த கிருட்டினமூர்த்தி கூட "எழுதுவது நமக்குப் புரிவது முக்கியமில்லை; பெறுவோருக்குப் புரியும் வகையில் அமைய வேண்டும்" என்பதை கற்றுக் கொடுத்தார்.
- சைவ சமயக் கொள்கையான அடியாருக்கும் அடியேன் என்பதையொட்டி தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் மூலமாக தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்றும் அனைவருக்கும் நான் அடியேன். எனவே யார் கையொப்பமிட்டாலும் பரவாயில்லை என்றநிலை பாராட்டுப் பத்திரத்தை பயனற்றதாகக் கருதியல்ல; அனைவருமே இணையானவர்கள் என்ற இரவியின் ஏரணத்தின் அடிப்படையிலேயே என்பதை இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன்.
- --மணியன் (பேச்சு) 11:55, 28 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்--இரவி (பேச்சு) 20:35, 1 அக்டோபர் 2013 (UTC)
- எனக்குக் கிடைக்கும் குறைந்த இணைய நேரத்தால் இங்கு உடனடியாக உரையாட இயலவில்லை. இப்போதுதான் எனது செயலுக்கான தேனியாரின் "உதாரணமாக, யார் கையெழுத்திடுவது என்கிற பட்டியலில் தற்போது மணியன் குறிப்பிட்டுள்ள ”வந்துள்ளோரில் குலுக்கல் முறையில் இருவர்” என்பதை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யார் கையொப்பமிட்டாலும் பரவாயில்லை என்பதுடன் இங்கு யாரையும் அவர் குறிப்பிட விரும்பவில்லை. இது அவருடைய தயக்கத்தின் வெளிப்பாடே." என்ற விளக்கத்தைப் பார்த்தேன். காலம் கடந்துபோனாலும் எனது நிலையை தெளிவுபடுத்த வேண்டியவனாக உள்ளேன்.
சென்னையில் உள்ள விக்கிப்பீடியர்கள் உதவி தேவை
தொகுபாராட்டுப் பத்திரம் அச்சிடல் தொடர்பாக மயிலாப்பூரில் உள்ள அச்சகம் ஒன்றுடன் இணையத்தின் மூலம் பேசி முடித்துள்ளேன். அச்சிடல் உத்தரவு கொடுக்கும் முன் நம் விக்கிப்பீடியர்கள் யாராவது ஒருவர் நேரில் சென்று மாதிரிப் பதிப்பை பார்த்து உறுதி செய்தால் நன்றாக இருக்கும். நாளை (சனிக்கிழமை) இதற்கு நேரம் ஒதுக்க வல்லவர்கள் உதவவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:50, 20 செப்டம்பர் 2013 (UTC)
- அச்சுக்குக் கொடுத்தாகி விட்டது. சனிக்கிழமைக்கு முன்பு கையில் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். --இரவி (பேச்சு) 20:06, 23 செப்டம்பர் 2013 (UTC)
- எத்தனைப் பிரதிகள் திட்டமிட்டுள்ளோம் என்பதனைத் தெரிவிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:15, 26 செப்டம்பர் 2013 (UTC)
100 படிகளுக்கு உத்தரவு கொடுத்துள்ளோம். ஒன்றிரண்டு பிழை விட்டு வீணாகப் போனாலும், 95 பேருக்காவது தர முடியும். தேவைப்பட்டால் வருங்காலத்தில் கூடுதல் படிகள் அடித்துக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 13:02, 26 செப்டம்பர் 2013 (UTC)
யார் யாருக்கு யார் யார் கையெழுத்து வேண்டும் - பட்டியல் தாருங்கள்
தொகுபேச்சுப் பக்கத்தின் தொடக்கத்தில் உள்ள பரிந்துரை பிடித்திருந்தால், யார் யாருக்கு யார் யார் கையெழுத்து வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுங்கள். அவர்களில் நிகழ்வுக்கு வரும் இருவரின் கையெழுத்தைப் பெற்றுத் தருவோம். இன்னும் நிறைய கையெழுத்து வேண்டும் என்றால் நீங்கள் இன்னும் நிறைய பங்களித்து அடுத்த கொண்டாட்டத்தில் வாங்கிக் கொள்ளலாம் :)
- சான்றிதழில் இருக்க வேண்டிய முழுப்பெயரைப் பொதுவில் இட விரும்பாவிட்டால் ravidreams at gmail dot com க்கு எழுதுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 26 செப்டம்பர் 2013 (UTC)
பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு
தொகுபாராட்டுப் பத்திரத்தை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து வழங்குவதா? அல்லது வேறு மார்க்கம் உண்டா? கலந்துகொள்ளாத பயனர்களுக்கு எப்படி பத்திரங்களைச் சேர்ப்பிப்பது. என்பவை பற்றியும் கலந்துரையாடினால் நல்லது. கலந்து கொள்ளாத இலங்கைப் பயனர்களுக்கு உள்ளூரில் அஞ்சல் செய்வது இலாபமானது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:29, 26 செப்டம்பர் 2013 (UTC)
- நிகழ்வுக்கு வரும் பயனர்கள் அனைவருக்கும் மேடையிலேயே தரலாம். ஆனால், நேரம் குறைவு காரணமாக ஒவ்வொருவரைப் பற்றியும் மிகவும் சுருக்கமான அறிமுகமே தர இயலும். எஞ்சியோருக்கு அஞ்சலில் அனுப்பலாம். இலங்கையில் உள்ளவர்களுக்கு சஞ்சீவி சிவக்குமார் / சிவகோசரனிடம் கொடுத்து அனுப்பி உள்ளூர் அஞ்சலில் அனுப்பச் சொல்லலாம்.--இரவி (பேச்சு) 13:04, 26 செப்டம்பர் 2013 (UTC)
விருப்ப வரிசை
தொகுமேலே தேனி சுப்பிரமணி கூறிய கருத்தை ஒட்டி விருப்ப வரிசையில் மூவர் பெயர் என்பதை மாற்றி விடலாம் என நினைக்கிறேன். நிகழ்வுக்கு நீங்கள் விரும்பிய மூவருமே வந்திருந்தால் அல்லது ஒரு சிலர் வராவிட்டால் யாரிடம் கையெழுத்து வாங்குவது என்றகுழப்பத்திலேயே அவ்வாறு பரிந்துரைத்திருந்தேன். மூவரும் வந்திருந்தால் மூவரிடமும் வாங்கி விடலாம். அல்லது, வந்திருக்கும் ஒருவர் அல்லது இருவரிடம் வாங்கிக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 18:54, 26 செப்டம்பர் 2013 (UTC)
- எனது விக்கிப்பீடியா வாழ்க்கையின் துவக்கம் முதல் சரியான பாதை காட்டி பக்கபலமாக இருந்த மூவரை குறிப்பிட்டுள்ளேன். மூவரில் வருகை தந்திருப்போரிடம் வாங்கிக்கொள்வது, நான் அறியாதவர்களிடம் பெற்றுக்கொள்ளுகின்றதை விடவும் கூடுதல் மகிழ்வாக இருக்கும் ஐயமில்லை. மூவரிடமும் பெற்றுக்கொள்ளலாம் என்பது பெருமகிழ்வு... --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:20, 27 செப்டம்பர் 2013 (UTC)
ஆங்கில எழுத்துகளில் பெயர்
தொகுஉங்கள் முழுப்பெயரை ஆங்கிலத்திலும் தந்து விடுங்கள். இச்சான்றிதழ் கல்வி, வேலை வாய்ப்பில் பயன்படும் என்றால் இப்பெயர் சரியாக அமைய வேண்டியது முக்கியம்.--இரவி (பேச்சு) 19:01, 26 செப்டம்பர் 2013 (UTC)
இறுதி முடிவு...
தொகுபட்டியலில் தனது விருப்பத்தை தெரிவித்தவர்களின் ஆசையை பூர்த்தி செய்வோம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:58, 29 செப்டம்பர் 2013 (UTC) மற்றவர்களின் சான்றிதழ்களில் பொதுவன் ஐயாவும் மயூரனாதன் அவர்களும் கையொப்பமிட வேண்டுவோம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:57, 29 செப்டம்பர் 2013 (UTC)
- நேற்று மேடையில் அளித்த சான்றிதழ்கள் அனைத்திலும் மயூரநாதன் மட்டும் கையெழுத்திட்டிருந்தார். கை நடுக்கத்தின் காரணமாக செங்கைப் பொதுவன் கையெழுத்திட முடியவில்லை. அதற்குப் பதிலாக அனைவருக்கும் அவரது கையால் சான்றிதழ்கள் வழங்கினோம். அவருடன் இணைந்து தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. ப. அர. நக்கீரனும் CIS-A2K அமைப்பின் திட்ட இயக்குநர் விசுணு வர்த்தனும் சான்றிதழ்களை வழங்கினார்கள். சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் அவர்களாகவே விரும்பி நிகழ்வுக்கு வந்திருந்த மற்றவர்களிடம் இருந்து கூடுதல் கையெழுத்துகளைப் பெற்றுக் கொண்டார்கள். அனைவரும் கையெழுத்திடுவதை எதிர்த்த தேனி. மு. சுப்பிரமணியும் இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டார். நிகழ்வுக்கு வராத மற்ற அனைத்துப் பயனர்களுக்குமான சான்றிதழ்களில் மயூரநாதன் கையெழுத்திட்டுள்ளார். இச்சான்றிதழ்கள் சில நாட்களுக்குப் பிறகு அஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ அனுப்பி வைக்கப்படும்.--இரவி (பேச்சு) 03:49, 30 செப்டம்பர் 2013 (UTC)
எஞ்சிய சான்றிதழ்கள்
தொகுசிவகுரு, சான்றிதழ்களைக் கையில் பெற்றவர்கள் பட்டியலை இற்றைப்படுத்தியுள்ளேன். இலங்கையில் உள்ள பயனர்களுக்கு என்று மயூரநாதனின் கையெழுத்து (மட்டும்) போட்ட சான்றிதழ்கள் சிலவற்றை சிவகோசரனிடமும் சஞ்சீவி சிவக்குமாரிடமும் தந்துள்ளேன். நற்கீரனிடம் தருவதற்கு என்று மயூரநாதனின் கையெழுத்து (மட்டும்) போட்ட ஒரு சான்றிதழைச் செல்வாவிடம் தந்துள்ளேன். எஞ்சிய கட்டுரைகளை எப்படி உரியவர்களிடம் சேர்ப்பது என்று முடிவு செய்து சொல்லுங்கள். அதனை அனுப்பி வைக்க பொறுப்பு எடுப்பவரிடம் எஞ்சியுள்ள சான்றிதழ்களைத் தந்து விடுகிறேன். இவற்றில் மயூரநாதனின் கையெழுத்து மட்டுமே இருக்கும். --இரவி (பேச்சு) 20:35, 1 அக்டோபர் 2013 (UTC)
- சான்றிதழ் எழுதும் போது நேர்ந்த எழுத்துப் பிழைகள் காரணமாக 100க்குக் குறைவான சான்றிதழ்களே வழங்கும் நிலையில் உள்ளது. ஆனால், சான்றிதழ் தெரிவுப் பட்டியலில் 100க்கு மேற்பட்டோர் உள்ளனர். அனைவருக்கும் தர வேண்டும் என்றால் மீண்டும் அச்சடிக்க வேண்டும். குறைந்தது 100 சான்றிதழ்கள் அடிப்பதற்கான தொகை இந்திய உரூபாய் 8000 (தற்போதைய விலை). எனவே, கூடுதல் சான்றிதழ் தேவைப்பட்டால் இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கிக் கொண்டுச் சொல்லுங்கள். எந்த அச்சகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரங்களைத் தந்து விடுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:37, 1 அக்டோபர் 2013 (UTC)
- இரவி, சான்றிதழை உரியவரிடத்து சேர்க்கும் பொறுப்பினை நான் எடுத்துக்கொண்டு இவ்வேலையினை முடிக்கிறேன். அதிகபட்சமாக 2 மாத காலம் ஆகலாம். எனினும் அதனால் பாதகமில்லை என்றே நினைக்கிறேன். உங்களிடம் நல்ல நிலையில் இருக்கும் பத்திரங்கள் எத்தனை உள்ளன என்பதை மிகச் சரியாக தெரிவிக்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:55, 2 அக்டோபர் 2013 (UTC)
- இரவி மற்றும் சிவகுரு என்னிடம் 13 சான்றிதழ்கள் உள்ளன. பட்டியலில் உள்ளவர்களில் கூடலில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளாதவர்களை தேர்ந்து இலங்கையில் எனக்கு சாத்தியமானவர்களிடம் சமர்ப்பிப்பேன். அப்பட்டியல் இங்கும் தரப்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:43, 2 அக்டோபர் 2013 (UTC)
- என்னிடம் 32 சான்றிதழ்கள் எஞ்சியுள்ளன. நல்கையில் சான்றிதழ்களுக்கு என்று கோரிய தொகை 2000 உரூபாய் மீதமுள்ளது. இவற்றை அஞ்சல் செலவுக்கு என உங்களிடம் ஒப்படைக்க முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 15:53, 2 அக்டோபர் 2013 (UTC)