விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்
கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்
தொகுhttps://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Wikipedia_mini_globe_handheld.jpg/1280px-Wikipedia_mini_globe_handheld.jpg படம் அழகாக உள்ளது. இதைப் பின்னணிப் படமாகக் கொள்ளலாம்.
எந்த அளவில் வேண்டும்? (A4, Demy, etc)?--Anton (பேச்சு) 08:11, 20 செப்டம்பர் 2013 (UTC)- இரு வடிவங்கள் உள்ளன. --Anton (பேச்சு) 15:54, 20 செப்டம்பர் 2013 (UTC)
- அன்டன், இதை அச்சடிக்கப் போவது இல்லை. மின்சுற்றுக்கு மட்டுமே. அதனால் அளவு பிரச்சினை இல்லை. நீங்கள் கொடுத்துள்ள இரண்டு வடிவமைப்புகளுமே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கிறது ! வேறு தெளிவான எழுத்துரு இருந்தால் நன்றாக இருக்கும்.
Mr / Mrs குறிப்பும் வெற்றிடமும் தேவையில்லை. Tamil Wikipedia 10 Years Celebrations என்று தலைப்பு மேலேயும், கீழே இடம் - நேரத்தை மட்டும் தனியாக குறிப்ப வேண்டும். 09.00 AM - 05.30 PM என்று எண்களில் நேரத்தைக் குறிப்பிடலாம். நடுவே, மூன்று முக்கிய நிகழ்ச்சி நிரல்களைக் குறிப்பிடலாம்.
- Meet Tamil Wikipedians from all over the globe.
- Learn to contribute to Tamil Wikipedia.
- Brainstorm ideas to develop Tamil online.
என்பன போல் குறிப்பிடலாம். நிறைய சொற்கள் இருப்பது போல் இருந்தால் முதல் இரண்டை மட்டும் குறிப்பிடலாம்.
இந்த வடிவமைப்பு இறுதியான பிறகு, அப்படியே தமிழிலேயும் செய்து விடலாம்.--இரவி (பேச்சு) 17:44, 20 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் அன்டன், அழைப்பிதலை தமிழும் தாருங்கள்,. ஒவ்வொரு அழைப்பதழுக்கும் அதன் மூலைகளில் பயன்படுத்தப்படும் வெக்டார் டிசனை மாற்றியமையுங்கள். அனுமதி இலவசம் என்பதையும், இந்த கூடலில் கலந்து கொள்வதால் விக்கிப்பீடியாவை அறிய முடியும் போன்றவையையும் இணைக்க வேண்டுகிறேன். இந்த நிகழ்விற்கு வந்தால் எனக்கு என்ன கிடைக்கும் போன்ற கேள்விகள் முகநூலில் எழுப்பெற்றன. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:34, 20 செப்டம்பர் 2013 (UTC)
- இரவி, மாதிரி 1 மேம்படுத்தப்பட்டுள்ளது. முழு அளவிலான கோப்பு PNG-யாக பதிவேற்றப்பட்டுள்ளது. ஜெகதீஸ்வரன், நிறைய சொற்கள் அழகைக் கெடுப்பதுபோல் உணர்கிறேன். மேம்படுத்தப்பட்ட மாதிரியைப் பாருங்கள். தேவைப்படம் மாற்றங்களைக் குறிப்பிடுங்கள. வடிவமைப்பு இறுதியானதும் தமிழுக்கு மாற்றிவிடலாம். --Anton (பேச்சு) 02:29, 21 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி, அன்டன். இன்னும் கூட சொற்களைக் குறைத்து விடலாம் என்று நினைக்கிறேன். You are cordially invited .. Tamil Wikipedia on என்பது வரையான சொற்களை நீக்கி விடலாம். 29th September, 2013 என்பதை மட்டும் தலைப்புக்குக் கீழ் தரலாம். Main agenda என்ற தலைப்பையும் * குறிகளையும் நீக்கி விடலாம் அவற்றுக்குப் பதிலாக அந்த மூன்று வரிகளை இன்னும் எடுப்பாக சாய்வெழுத்துகளில் தரலாம். வரிகளுக்கு முன் ... என்பது போல் இடலாம். Tamil Wikipedians என்பதை கோட்டுக்கு மேல் வருமாறு இடலாம்.--இரவி (பேச்சு) 06:30, 21 செப்டம்பர் 2013 (UTC)
- \\நிறைய சொற்கள் அழகைக் கெடுப்பதுபோல் உணர்கிறேன்.\\ இவ்வாறு இருப்பதே அழகாக உள்ளது. இரவி கூறிய சில திருத்தங்களுடன் தொடருங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:42, 21 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் நண்பர்களே, கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வடிவமைப்பொன்றை தமிழில் செய்து திட்டப்பக்கத்தில் சேர்த்துள்ளேன். எளிமையான அத்தோடு Flat நிலை அம்சங்களோடான வடிவமைப்பாக இது இருப்பதோடு, இதில் காட்டப்பட்டுள்ள QR Code ஆனது, கூடல் பற்றிய மேலதிக விபரங்களைக் கொண்ட இந்தப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 08:09, 21 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் தாரிக், வடிவமைப்பு புதுமையாக உள்ளது. உள்ளடக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். அனுமதி இலவசம், நண்பர்களை அழைத்து வர கூறுவது, QR கோட் போன்றவை அருமை. முற்றிலும் வேறு விதமான ஒரு வடிவமைப்பினையும் இணைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:37, 21 செப்டம்பர் 2013 (UTC)
அன்டன், படிமம்:Tamil Wiki Invitation 3.png வடிவமைப்பு நிறைவாக உள்ளது. இது போதும். இதையே தமிழிலும் தந்து விடுங்கள். சொற்றொடர்கள் பின்வருமாறு இருக்கலாம்:
- உலகெங்கும் உள்ள விக்கிப்பீடியர்களைச் சந்தியுங்கள்.
- விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
- தமிழ் இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து உரையாடுங்கள்.
இடம்: TAG அரங்கம், கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
தாரிக், அன்டன் இருவரின் வடிவமைப்புமே சிறப்பாக உள்ளதால், இரண்டையுமே தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாரிக், உங்கள் வடிவமைப்பில் சில மாற்றங்கள் மட்டும் தேவை.
பத்தாண்டு நிறைவுக் கூடல் என்பதற்குப் பதில் பத்தாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் என்று இட்டு விடுங்கள்.
உலகம் பூராகவுள்ள என்பதை உலகெங்கும் உள்ள என்று மாற்றி விடுங்கள்.
அகிலமெல்லாம் தமிழோசை என்று தொடங்கும் வரிகளுக்குப் பதிலாக தமிழ் இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து உரையாட
உங்கள் நண்பர்களையும் என்று தொடங்கும் இரண்டு வரிகளை முற்றிலும் நீக்கி விட்டு வலது மூலையில் ta.wikipedia.org என்ற முகவரியை மட்டும் சிறிதாக குறிப்பிடலாம்.
இதே மாற்றங்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு வடிவமைப்பு தந்து விடுங்கள். வேறு புதிய வடிவமைப்பு தேவையில்லை. நன்றி. --இரவி (பேச்சு) 04:40, 22 செப்டம்பர் 2013 (UTC)
- இரவி, மேலே நீங்கள் ஆலோசித்த மாற்றங்களை பொருத்தமான வகையில், அழைப்பிதழில் சேர்த்து, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய நிலைகளில் அழைப்பிதழ்களை வடிவமைத்து திட்டப்பக்கத்தில் சேர்த்துள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 07:02, 22 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி, தாரிக். இறுதியாக, சில சிறு மாற்றங்கள்:
- ஆங்கிலப் பதாகையின் QR code, ஆங்கிலத்தில் உள்ள https://ta.wikipedia.org/s/38hf பக்கத்துக்குப் போக வேண்டும்.
- தமிழ் பதாகையில் பத்தாண்டுகள் என்பது கவனம் ஈர்க்காமலும் நிறைவுக் கொண்டாட்டங்கள் என்று உள்ளது எது நிறைவானது என்று புரியாமலும் உள்ளது. இயன்றால் பத்தாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் என்பதை ஒரு வரியாகவோ இரண்டு வரியாகவோ சிகப்புப் பின்னணியில் தரலாம். 10 ஆண்டுகள் என்று எண்ணாகவும் எழுதலாம்.
- அடுத்த கட்ட வளர்ச்சி என்பதற்குப் பதில் அடுத்த கட்டம் என்று இட்டால் எல்லா வரிகளும் ஒரே அளவில் வரும்.
- விக்கிப்பீடியர்களைச் சந்திக்க, தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கக் என்ற இடங்களில் ஒற்று வர வேண்டும்.
--இரவி (பேச்சு) 08:08, 22 செப்டம்பர் 2013 (UTC)
- தமிழ் உள்ளடக்கங்களில் இரண்டாவதாக வருகின்ற \\தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கக் கற்றுக் கொள்ள\\ என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து கற்றுக் கொள்ள, தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க கற்றுக் கொள்ள என்பதைப் போன்று வர வேண்டும் என நினைக்கிறேன். சரிபார்க்கவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:31, 22 செப்டம்பர் 2013 (UTC)
- நாட்டுக்குப் பங்களியுங்கள், நாட்டில் பங்களியுங்கள் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். நாட்டுக்கு என்பது கூடுதல் பொருத்தமாக இருக்கும். --இரவி (பேச்சு) 08:50, 22 செப்டம்பர் 2013 (UTC) விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:55, 23 செப்டம்பர் 2013 (UTC)
ஆயிற்று - இரவி, மேலே சொல்லப்பட்ட மாற்றங்கள் சேர்க்கப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட பதிப்புகளை பதிவேற்றியுள்ளேன். திட்டப்பக்கத்தில் காண்க. நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 14:17, 22 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி, தாரிக். உங்கள் இரு பதாகைகள் வடிவமைப்பு நிறைவுற்றதாக கருதலாம்.
அன்டன், உங்கள் பதாகையின் தமிழ் பதிப்பு நன்று. அதில் இரண்டு சிறு திருத்தங்கள் தேவை. 10 வருட என்பதற்குப் பதில் பத்தாண்டுகள் என்று ஒரே சொல்லாக எழுதி விடுங்கள். அடுத்த கட்ட வளர்ச்சி என்பதற்குப் பதில் அடுத்த கட்டம் என்று மாற்றி விடுங்கள். இதன் மூலம் அந்த மூன்று வரிகளும் சம அளவுடையதாக வரும். இந்த மாற்றங்களுடன் இந்த வடிவமைப்பு நிறைவுற்றதாக கருதுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 02:50, 23 செப்டம்பர் 2013 (UTC)
அரங்கப் பதாகை
தொகுஅரங்கப் பதாகையின் அளவு (நீளம் x அகலம்) என்ன? --Anton (பேச்சு) 08:11, 20 செப்டம்பர் 2013 (UTC)
- அரங்கப் படத்தை http://www.cegalumni.org/uploads/11tag1.jpg பக்கத்தில் காணலாம். துல்லியமாக எவ்வளவு நீளம், அகலம் என்று இப்போது சொல்ல இயவில்லை. Projector திரைக்கு இடப்பக்கமோ வலப்பக்கமோ பதாகையை இடலாம். அதற்கு ஏற்ற விகிதத்தில் அச்சடித்தால் பிறகு தேவைக்கு ஏற்றவாறு பெரிதாகவோ சிறிதாகவோ அச்சடித்துக் கொள்ளலாம். அழைப்பிதழுக்குச் செய்த அதே வடிவமைப்பில் சொற்களை மட்டும் மாற்றினால் போதும்.
தமிழ் விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
ta.wikipedia.org
என்ற வரிகள் மட்டும் ஒன்றன் கீழ் ஒன்றாக பெரிதாக வேண்டும். பதாகை அச்சடிப்பு செலவுகள் அதிகம் என்பதால், இதே பதாகையை வேறு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பதாகையின் கீழ் தமிழ் விக்சனரி, விக்கிநூல்கள், விக்கி செய்திகள், விக்கிமூலம் ஆகிய சின்னங்களைச் சிறிய அளவில் இட்டு அவற்றின் கீழ் பெயரையும் குறிக்கலாம். இது மற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கும் உதவும்.
இதே பதாகை ஒரு பேருந்தின் முன்னோ பின்னோ கட்டும் அளவுக்கும் தேவைப்படும்.--இரவி (பேச்சு) 06:40, 21 செப்டம்பர் 2013 (UTC)
- அன்டன்
ஒரே பதாகையில் இரண்டு விக்கி உருண்டைகள் இருப்பது உகப்பாக இல்லை. மனிதப் பிணைப்பை உணர்த்த விக்கி உருண்டையைத் தூக்கிப் பிடித்திருக்கும் படம் மட்டும் இருக்கட்டும். பதாகையின் அடியில் சிறிய அளவில் பிற திட்டங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். தமிழில் இருக்கும் விக்கித் திட்டங்களுடன் பொதுவகம் பற்றி மட்டும் குறிப்பிடலாம். நடுவில் உள்ள பெயரும் முகவரியும் மிகப் பெரும் இடத்தை அடைத்திருப்பதாகத் தோன்றுகிறது. பின்னணியில் உள்ள gradientம் இன்னும் வெளிர்ந்து இருக்கலாம். இன்று மாலைக்குள் திருத்தங்கள் கிடைத்தால் அச்சடிக்கக் கொடுக்க வசதியாக இருக்கும். --இரவி (பேச்சு) 04:33, 26 செப்டம்பர் 2013 (UTC)
- விக்சனரி, விக்கிமூலம், விக்கிசெய்தி, விக்கிநூல்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க அளவு தமிழில் உள்ளதால் சேர்க்கலாம் என நினைக்கிறேன். மேலும், தனியே பொதுவகம் எடுப்பாக இருக்காது. விக்கி உருண்டையைத் தூக்கிப் பிடித்திருக்கும் படத்திற்கு இசைவாக கரும் வண்ணமும் சேர்க்க வேண்டியதாகிறது. --Anton (பேச்சு) 08:53, 26 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி, அன்டன். பிற திட்டங்கள் என்ற குறிப்பை நீக்கி விடலாம். அது தானாகவே புரிந்து கொள்ளப்படும் என்று நினைக்கிறேன். திட்டங்களின் வரிசையை விக்சனரி, விக்கிமூலம், விக்கிசெய்தி, விக்கிநூல்கள், விக்கிமேற்கோள், பொதுவகம் என்ற வரிசையில் வைக்கலாம் (திட்டங்களின் அளவு, செயற்பாடு அடிப்படையில்.. இறுதியாக பொதுவான திட்டம்). எனக்கு வேறு மாற்றங்கள் எதுவும் தோன்றவில்லை. உடனிருக்கும் வடிவமைப்பாளர் என்ற முறையில் தாரிக்கின் கருத்தையும் கேட்டுப் பாருங்கள். உங்கள் இருவரின் பதாகைகளையும் அச்சடிக்கப் போகிறேன். திருத்தங்கள் முடிந்தவுடன் psd கோப்பை cmyk வடிவில் dropboxல் போட்டு விட்டு இணைப்பு அனுப்பி வையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 13:25, 26 செப்டம்பர் 2013 (UTC)
- தாரிக்
மூலைகளில் உள்ள விக்கிமீடியா வண்ணங்கள் நன்று. பதாகையின் அடியில் தமிழில் உள்ள திட்டங்களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதும். விக்கியினங்கள், விக்கி பல்கலை, மேல் விக்கி வேண்டாம். நிறைய வண்ணங்களைத் தவிர்த்து கறுப்பு வெள்ளையாக மட்டும் பதாகை இருப்பதில் ஏதேனும் நோக்கம் உள்ளதா? உங்கள் அழைப்பிதழ் வடிவமைப்பில் வலது கீழ் மூலையில் தள முகவரியைத் தந்திருந்த விதம் நன்றாக இருந்தது. இன்று மாலைக்குள் திருத்தங்கள் கிடைத்தால் அச்சடிக்கக் கொடுக்க வசதியாக இருக்கும். --இரவி (பேச்சு) 04:33, 26 செப்டம்பர் 2013 (UTC)
- இரவி, பெரும்பாலும் அரங்கங்களின் பின்னணிகள் கறுப்பாகவே காணப்படும். அந்நிலையில் பதாகையின் பின்னணி அதற்கு முரணான (வெள்ளை) இருக்கின்ற நிலையில் பதாகையை வெளிச்சமாகக் காட்டும் என நம்புகின்றேன். அதனாலேயே, நிறைய நிறங்களைத் தவிர்த்து கறுப்பு வெள்ளையாக பதாகையை வடிவமைத்தேன். நீங்கள் சொன்ன மாற்றங்களோடு பதாகையை இற்றைப்படுத்தி, திட்டப்பக்கத்தில் இணைத்துள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 10:16, 26 செப்டம்பர் 2013 (UTC)
- வடிவமைப்புக்கான விளக்கம் மிகவும் பிடித்திருக்கிறது. பிற திட்டங்கள் என்ற குறிப்பை நீக்கி விடலாம். அது தானாகவே புரிந்து கொள்ளப்படும் என்று நினைக்கிறேன். திட்டங்களுக்கான படங்களைச் சற்று வலப்புறம் நகர்த்தி ஒட்டு மொத்தப் பதாகைக்கு நடுவாகவோ "தமிழ் விக்கிப்பீடியா" என்று தொடங்கும் கோட்டுக்கு நேராகவோ கொண்டு வந்தால் நன்றாக இருக்குமா? திட்டங்களின் வரிசையை விக்சனரி, விக்கிமூலம், விக்கிசெய்தி, விக்கிநூல்கள், விக்கிமேற்கோள், பொதுவகம் என்ற வரிசையில் வைக்கலாம் (திட்டங்களின் அளவு, செயற்பாடு அடிப்படையில்.. இறுதியாக பொதுவான திட்டம்). எனக்கு வேறு மாற்றங்கள் எதுவும் தோன்றவில்லை. உடனிருக்கும் வடிவமைப்பாளர் என்ற முறையில் அன்டனின் கருத்தையும் கேட்டுப் பாருங்கள். உங்கள் இருவரின் பதாகைகளையும் அச்சடிக்கப் போகிறேன். திருத்தங்கள் முடிந்தவுடன் psd கோப்பை cmyk வடிவில் dropboxல் போட்டு விட்டு இணைப்பு அனுப்பி வையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 13:25, 26 செப்டம்பர் 2013 (UTC)
- இரவி, நீங்கள் சொன்னது போல், பிறதிட்டங்கள் குறிப்பை நீக்கிவிடலாம் -- அப்படி நீக்கும் போது, பிறதிட்டங்களின் இலட்சணைகளை கொஞ்சம் வலது பக்கமாக கொண்டுவரலாம். அப்போது, சமச்சீர் நிலை பேணப்படும் என நம்புகிறேன். அப்படியே செய்து, பிறதிட்டங்களின் அளவு வகையில் அவற்றையும் ஒழுங்குபடுத்தி, பதாகையை மேம்படுத்தியுள்ளேன். அதனை திட்டப்பக்கத்தில் இணைத்துள்ளேன். CMYK நிலையில் அமைந்த outline சேர்க்கப்பட்ட PDF மற்றும் EPS கோப்புகள் பதிவேற்றப்பட்டுள்ள இணைப்பை மின்னஞ்சலில் அனுப்புகிறேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 14:44, 26 செப்டம்பர் 2013 (UTC)
இரவி, உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதே. psd கோப்பு அதிக இடம் எடுத்துக் கொள்ளும் என்பதால், வடிவமைப்பை Adobe Illustrator இல் மேற்கொண்டிருந்தேன். அதன் ai கோப்பை பதிவேற்றியதும் சிறிது நேரத்தில் அனுப்பி வைக்கப்படும். குறிப்பு: முடியுமானால் அரங்கிலுள்ள "CEG's TAG AUDITORIUM" என்ற பெயர்ப்பலகையின் மேலாக பதாகை தொங்கவிட்டால் ஒளிப்படத்திற்கு நன்றாக இருக்கலாம். சிலவேளை அளவு காரணமாக பெயர்ப்பலகைளை மறைத்து மேலாக பதாகையினை தொங்கவிட வேண்டியிருக்கும். --Anton (பேச்சு) 14:07, 26 செப்டம்பர் 2013 (UTC)
சட்டை
தொகுஒரு குறிப்புக்கு: http://shop.wikimedia.org/ பக்கத்தில் ஏற்கனவே உள்ள சட்டைகளின் வடிவமைப்பையும் கருத்தில் கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 12:09, 29 ஆகத்து 2013 (UTC)
- நன்றி. இரு வடிவங்கள் உள்ளன. இன்னும் சில வடிவங்களை முயற்சிக்கிறேன். --Anton (பேச்சு) 14:40, 29 ஆகத்து 2013 (UTC)
- நன்றி, அன்டன். நாம் அடிக்கடி சட்டை அச்சிட மாட்டோம் என்பதால், பத்தாவது ஆண்டு விழா பற்றிய குறிப்பு இல்லாமல் பொதுவாக இருந்தால் நன்றாக இருக்கும். http://shop.wikimedia.org/products/wikipedia-polos சட்டை தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்திருக்கிறது. பெண்கள், மூத்தவர்கள், ஆசிரியர்கள், தொழிற்பணியில் உள்ளவர்கள் என்று பல்வேறு பின்னணியில் உள்ளவர்களும் தயங்காமல் அணிந்து செல்லும் வகையில் professionalஆக இருக்கிறது. கைப்பட்டை, பின்புறம் ஆகியவற்றிலும் உரிய வாசகங்களை இட்டால் முன்பக்கம் எளிமையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 17:52, 29 ஆகத்து 2013 (UTC)
வணக்கம் நண்பர்களே, அன்டன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நான் வடிவமைத்த சட்டை வடிவமைப்பு நிலைகளை பதிவேற்றியுள்ளேன். தங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாயுள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 00:36, 30 ஆகத்து 2013 (UTC)
- தங்கள் இருவரின் பேச்சுப் பக்கதிலும் என்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளேன். முன்பக்கம் மற்றும் கை விளிம்புகளின் வடிவமைப்புகள் மிகவும் அருமை. அப்படியே பின்பக்கம் வடிவமைப்பினையும் சிறப்பாக செய்து தருமாறு வேண்டுகிறேன். முன்பக்கத்தில் விக்கியின் சின்னம் பொறிக்கப்பட்டுவிட்டதால், பின்பக்கம் ஏதேனும் வசனம் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். அவை இல்லாமல் இருப்பது சிறந்தது என்று எண்ணமிருப்பின் அதனையும் தெரிவிக்கவும். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:35, 2 செப்டம்பர் 2013 (UTC)
- தாரிக் சொல்வது போல் எளிமையாக இருப்பது நன்று. சட்டைப் பை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வைப்பதாயிருந்தால் அதற்கு ஏற்றவாறு வடிவமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பின்பக்கம், கைப்பட்டை உட்பட எல்லா பக்கமும் அச்சடித்தால் கொச கொசவென்றாகி விடுமோ என்று ஒரு அச்சமும் இருக்கிறது. எளிமையான முன்பக்கம் + ஒரு கைப்பட்டை + (பின்புற வாசகம்) என்பது என் பரிந்துரை. இதற்கு மேல் கருத்து கூறி குழப்ப விரும்பவில்லை :) வடிவமைப்பாளரின் முடிவே இறுதியானது. அன்டனும் தாரிக்கும் கலந்து பேசி ஒரு முடிவைப் பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும் :)--இரவி (பேச்சு) 19:23, 2 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் இரவி சட்டைப் பை இல்லாதவற்றையே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். முன்பக்க வடிவமைப்பு எனக்கு நிறைவைத் தருகிறது. ஒரு கைவிளிம்பில் மட்டும் என்றால் வலது பக்கத்தினை தேர்வு செய்து கொள்ளலாம். அங்கு தமிழ் விக்கிப்பீடியா என்று பதிக்கவேண்டுமா அல்லது விக்கி இணைப்பா என்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்து பின்புற வசனத்தினை வடிவமைத்து இறுதி செய்ய வேண்டும். பின்புற வசனத்திற்கு ஏதேனும் உதாரணங்களை வைத்திருக்கின்றீர்களா. சில சிபாரிகளை செய்தால் வடிவமைப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வெண்சட்டை எனும் பொழுது இணைப்பில் உள்ளவாறு தோற்றம் பெறும் என்று தெரிகிறது. அன்டன் மற்றும் தாரிக் இருவரின் கருத்துகளாக காத்திருக்கிறேன். இனி அவர்கள் பாடு :-) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:11, 3 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் நண்பர்களே, இங்கு ஆலோசிக்கப்பட்டது போல் ஒரு கைவிளிம்பில் மட்டும் வடிவமைப்பைச் சேர்த்தல் இன்னும் எளிமையான தன்மையைக் கூட்டுவதோடு, கவர்ச்சியையும் கூட்டும். இரவி சொன்னது போல், எல்லாப்பக்கங்களும் அச்சடித்தால் சட்டையின் தோற்றம் "கொச கொசவென்றாகி" விடும் என்ற கூற்றோடு நானும் உடன்படுகிறேன். முன்பக்கமும், வலது கையின் விளிம்பிலும் அச்சடித்தால் சட்டையை எடுப்பாக்கிக் காட்டும். யாவரும் அணிந்து கொள்ள ஆர்வங்காட்டுவர். ஒரு கையின் விளிம்பில் அச்சடிக்கின்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தள உரலி ஆகிய இரண்டையும் அந்தக் கைவிளிம்பில் அச்சடிக்கலாம். அந்நிலையில், தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வைக் கூட்டுவதோடு, தளம் தொடர்பான பரப்புரையாகவும் அமைந்து விடும். "ஒரு கல்லில் பல மாங்காய்கள்" போன்ற நிலை அற்புதமாய் அங்கு தோன்றும். :) இதனைக் கருத்திற் கொண்டு, சட்டையின் வடிவமைப்பை மேம்படுத்தி, வலது கையின் விளிம்பில் எவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தள உரலி ஆகியவற்றை எளிமையாகச் சேர்க்கலாம் என்ற நிலையைக் காட்டும் வகையில் மாதிரியை வடிவமைத்துச் சேர்த்துள்ளேன். திட்டப் பக்கத்தில் காண்க. உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 12:08, 3 செப்டம்பர் 2013 (UTC)
- தாரிக்கின் வடிவமைப்பை இறுதியாகக் கொள்ளலாம். முன்பக்க இடது பக்கத்தில் விக்கி சின்னம் (விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம்). பை அமைப்பதாயிருந்தால் வலது பக்கத்தில் விக்கி சின்னம். ஒரு கைப்பட்டையில் தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org. --Anton (பேச்சு) 01:39, 4 செப்டம்பர் 2013 (UTC)
- அன்டன் கூறியது போல இந்த வடிவமைப்பு அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இதனையே இறுதியாகக் கொள்ளலாம். மிகக் குறுகிய கால அளவிற்குள் நல்லதொரு வடிவமைப்பினை தந்துள்ளீர்கள். இருவருக்கும் மிக்க நன்றி. வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட விக்கியின் சின்னம், இறுதி வடிவமைப்பு போன்றவற்றை sagotharan.jagadeeswaran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:40, 4 செப்டம்பர் 2013 (UTC)
வடிவமைப்பு நிறைவுற்றதாகக் கொள்கிறேன். இல்லாவிட்டால் தெரிவிக்கவும். --Anton (பேச்சு) 03:01, 8 செப்டம்பர் 2013 (UTC)
- வடிவமைப்பு மிகச்சிறப்பாக நிறைவுற்றது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:35, 8 செப்டம்பர் 2013 (UTC)
கையேடு
தொகுகையேடு சேலைகள் முடிவடையவில்லையென நினைக்கிறேன். முடிந்ததும் வடிவமைப்பைத் தொடங்கிவிடலாம். பொதுத்தகவல்களை (எ.கா: அளவு - 4R) இதன் முன் பக்கத்தில் தெரிவியுங்கள். --Anton (பேச்சு) 02:12, 4 செப்டம்பர் 2013 (UTC)
- அன்டன், கையேட்டுக்கான அட்டையை மட்டும் .tiff வடிவில் உடனடியாக வடிவமைக்க முடியுமா? PDF கோப்பினை ஆக்க விக்கிப்பீடியாவின் ODT கோப்பாகத் தரவிறக்கி அதில் இருந்து மாற்றிக் கொள்ள எண்ணியுள்ளோம்.--இரவி (பேச்சு) 06:21, 16 செப்டம்பர் 2013 (UTC)
- நீங்கள் தந்திருக்கும் மாதிரிப்படம், விக்கிமீடியா வண்ணத்தில் மிகச் சிறப்பாக உள்ளது. பத்தாண்டு விழா என்பதைக் குறிக்கும் வாசகங்கள் தேவை இல்லை. சிகப்புக் கட்டத்தை வெற்றாகக் கூட விடலாம். https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Wikipedia_mini_globe_handheld.jpg/1280px-Wikipedia_mini_globe_handheld.jpg படம் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எனவே, இதை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ, பயன்படுத்திப் பாருங்கள் :) --இரவி (பேச்சு) 22:05, 19 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம் பின்பக்க அட்டையில் ஜிம்மி வேல்சு, மயூரநாதன் படங்களுடன் கையேட்டின் அறிமுகத்திலிருந்து சில சுருக்கங்கள் அச்சிடலாம். அல்லது விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கி செய்திகள் மற்றும் விக்கிமூலத்தின் முதற்பக்க திரைக்காட்சிகளை collage செய்து வடிவமைக்கலாம்.--மணியன் (பேச்சு) 00:34, 20 செப்டம்பர் 2013 (UTC)
- முன்பக்க அட்டைப்பட மாற்றங்கள் சிறப்பாக வந்துள்ளன. அவ்வடிவமைப்பு நிறைவுற்றதாக கருதுவோம். பின்பக்கத்தில் மணியன் சொன்ன பரிந்துரையில் சிறிய மாற்றத்தை வேண்டுகிறேன். சிம்மி வேல்சு உலகம் பூராவும் பல இடங்களில் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதால் அவரை விட்டு விடுவோம் :) பின்பக்க அட்டையின் வாசகங்கள் பங்களிப்பாளர்களைத் தூண்டும் வண்ணம் வேண்டும். யாராவது எழுதித் தந்தால் நலம். மயூரநாதனின் படத்துடன் ஒரு மூத்தவர், இளையவர், பெண், நடுவயதுக்காரர் படங்களையும் இடலாம். இவர்களின் தெரிவு தமிழ்நாடு, இலங்கை மற்றும் உலகெங்கும் உள்ள பங்களிப்பாளர்களின் பரப்பைக் காட்டுமாறு இருக்க வேண்டும். அடுத்தடுத்த பதிப்புகளில் புதிய முகங்களையும் காட்டலாம். பல்வேறு பின்னணிகளில் உள்ளவர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் பால் ஈர்க்கப்பட இந்த பல்வகைமையைக் காட்டுவது அவசியம். பின்னட்டை வடிவமைப்புகளும் முடிந்த பிறகு .tiff கோப்புகளாகத் தந்து விடுங்கள். எதிர்வரும் கூடலுக்குப் பிறகு, இந்த வடிவமைப்புக்குத் தேவையான உயர் நுணுக்க ஒளிப்படங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.--இரவி (பேச்சு) 06:45, 21 செப்டம்பர் 2013 (UTC)
- நீங்கள் தந்திருக்கும் மாதிரிப்படம், விக்கிமீடியா வண்ணத்தில் மிகச் சிறப்பாக உள்ளது. பத்தாண்டு விழா என்பதைக் குறிக்கும் வாசகங்கள் தேவை இல்லை. சிகப்புக் கட்டத்தை வெற்றாகக் கூட விடலாம். https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Wikipedia_mini_globe_handheld.jpg/1280px-Wikipedia_mini_globe_handheld.jpg படம் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எனவே, இதை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ, பயன்படுத்திப் பாருங்கள் :) --இரவி (பேச்சு) 22:05, 19 செப்டம்பர் 2013 (UTC)
பாராட்டுச் சான்றிதழ்
தொகுபாராட்டுச் சான்றிதழ் மூவர் ஒப்பமிடுவதா அல்லது தனி ஒப்பமா? என்பதை தீர்மானித்தல் அவசியம். வேறு சில மாதிரியாக்கங்களையும் அன்ரன் முன் வைப்பீர்களாயின் பலரதும் தெரிவுக்கு ஒப்ப அமைக்கலாம். ஒப்பமிடுபவர் யாவர் எனத் தெரிந்து அவரது விபரத்தினை அச்சிடுதல் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:39, 18 செப்டம்பர் 2013 (UTC)
- ஒப்பமிடுபவர்கள் யார் யார் என இரு நாட்களில் உறுதிப்படுத்துகிறேன். சான்றிதழின் உரை தமிழ், ஆங்கிலம் என அடுத்தடுத்து இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: This is to certify that / இச்சான்றிதழ் (பயனர் பெயர் விவரம்) has given excellent contribution to the growth of Tamil Wikipedia especially in the areas of / தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியுள்ளார். குறிப்பாக, (பயனர் ஈடுபாட்டுப் புலங்கள்)
இது எடுத்துக்காட்டு உரை மட்டுமே. என்ன வாசகம் எழுதலாம் என்று பரிந்துரை தேவை. வடிவமைப்பை உறுதி செய்து விட்டால், வாசகத்தை மாற்றிக் கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 09:10, 18 செப்டம்பர் 2013 (UTC)
- பாராட்டுச் சான்றிதழின் வடிவம் மிகவும் நவீனமாக உள்ளது. சான்றிதழ் என்பதால் சற்று பழைமையான தோற்றத்தினைப் போன்று வடிவமைக்க வேண்டுகிறேன். தலைப்பு மற்றும் உள்ளடக்கம் இரண்டுமே ஒரு எழுத்துருவில் இருப்பதற்கு பதிலாக வேறு வேறு எழுத்துருவில் இருந்தால் நன்றாக இருக்கும். மாதிரி பழங்கால எழுத்துரு போன்று தலைப்பினை அமைக்கலாம் Billion Stars Personal Use, Royal போன்ற சில எழுத்துருவை இணையத்தில் பார்த்தேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:17, 18 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் நண்பர்களே, பாராட்டுச் சான்றிதழ் வடிவமைப்பொன்றை திட்டப்பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். தங்களின் கருத்துக்களை அறிய ஆவல். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 03:35, 20 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் தாரிக், பாராட்டுச் சான்றிதழ் வடிவமைப்பு அருமை. இந்த படத்தினைப் பாருங்கள். இருபுறமும் இரண்டு கோடுகள் வருவதும், மேலுள்ள வெக்டாரும் அழகைக் குறைக்கின்றன. இவற்றுக்குப் பதில் வேறுமாதிரி செய்திட வேண்டுகிறேன். தலைப்பு வடிவமைப்பும், அதன் ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்களும் அருமை. அதிலும் தமிழ் எழுத்துரு மிகவும் அருமை. உள்ளடக்கத்தினை இன்னும் மெருகேற்றினால் அற்புதமான வடிவமைப்பாக இது இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:57, 20 செப்டம்பர் 2013 (UTC)
- தாரிக், செகதீசுவரன் பரிந்துரைத்த வடிவமைப்பும் அதற்கு நீங்கள் தந்த ஒளி வடிவமும் தாறு மாறாக இருக்கிறது :) அவர் பரிந்துரைத்தபடி பக்கஅக் கோடுகள், மேலே உள்ள படத்தை எடுத்து விட்டு, நான்கு மூலைகளிலும் அதே படங்களை இடலாம். எழுத்துகளை பொன்னிறத்தில் இடலாம். விக்கிமீடியா சார்பாக சிலர் கையெழுத்திட முடியுமா என்று கேட்டிருக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா சார்பாகவும் ஒருவர் கையெழுத்திட வேண்டும். இது முடிவான பிறகு, சான்றிதழ் வடிவமைப்பை நிறைவு செய்து விடலாம். இதே பாணியில் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களைத் தந்தாலும் நன்றாக இருக்கும்.
- செகதீசுவரன், இதனையும் நிகழ்வுக்கான flex பதாகைகளையும் அச்சிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் உங்கள் நிறைய விக்கி புண்ணியம் கிடைக்கும். சான்றிதழின் எழுத்துகள் தடவிப் பார்த்தாலேயே கையில் படுமாறு தகதகவென பொன்னிறத்தில் அச்சிட முடியுமா என்று பாருங்கள். கோடம்பாக்கம் மேனகா அழைப்பிதழ் உலகம் போன்றவற்றில் செய்து தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 07:29, 20 செப்டம்பர் 2013 (UTC)
- இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன் நண்பரே. சனியன்றும் அலுவலகம் இருப்பதால் வரும் வாரத்திற்கு இருநாட்களுக்கு விடுமுறை கேட்டுள்ளேன். அதில் ஒரு நாள் உறவினர் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டிய பணியுள்ளது. இடையே சட்டை மாதிரியை நேரில் காணவும், பிறகு அதனைப் பெறவும் காலம் வேண்டும். கோடம்பாக்கத்திலும், பிராட்வேயிலும் அச்சகங்கள் இருக்கின்றன. திருமண வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுத்த பிறகு உள்ளடக்கங்களை அச்சிட்டு தருவார்கள். ஆனால் சான்றிதல் முழுமையையும் அச்சிட்டு தரக்கூடியவர்கள் பற்றி தெரியவில்லை. சான்றிதல் அளவு, FLEX அளவு அதன் மாதிரி போன்ற தகவல்களை தந்தால் போன் மூலம் விசாரித்துப்பார்க்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:34, 20 செப்டம்பர் 2013 (UTC)
தாரிக், மேலே நான் குறிப்பிட்டுள்ள மாற்றங்களுடன் பின்வரும் மாற்றங்களும் செய்து தாருங்கள். பின்னணியில் நீர்ப்படமாக இருக்கும் விக்கி உருண்டை வேண்டாம். கீழே உள்ள விக்கி சின்னத்துக்கு வலப்புறம் On behalf of Tamil Wikipedians / தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக என்று எழுதி விடுங்கள். இதன் மேலே இருவர் கையெழுத்திடும் அளவு இடம் விட்டு விடுங்கள். அதன் கீழே Chennai / சென்னை, 2013. சான்றிதழ் A4 அளவு இருக்கும். நாளை அச்சுக்குக் கொடுதால் தான் நிகழ்வன்று கிடைக்கும் என்பதால் இதன் வடிவமைப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:56, 20 செப்டம்பர் 2013 (UTC)
- இரவி, குறித்த மாற்றங்களைச் சேர்த்து, பாராட்டுச் சான்றிதழை பதிவேற்றிவிடுகிறேன். அச்சுக்கு உகந்த PDF கோப்பை எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென அறியத்தாருங்கள். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 18:18, 20 செப்டம்பர் 2013 (UTC)
- திட்டப்பக்கத்தில் மாதிரியைச் சேர்த்துள்ளேன். நீங்கள் சொல்லியுள்ள மின்னஞ்சலுக்கு அப்படியே அனுப்பி விடுகிறேன். அச்சு நிலையில் எழுத்துக்களும் வடிவமைப்பும் மிகச் துல்லியமாக அச்சாகித் தெரிய வேண்டுமென்பதற்காய் நான் வடிவமைப்புகளை Illustrator கொண்டே வடிவமைத்துள்ளேன். உங்கள் மின்னஞ்சலுக்கு, PDF மற்றும் EPS ஆகிய நிலைகளை அனுப்புகிறேன். தொலைபேசி எண் பற்றிய விடயத்தை மின்னஞ்சலில் தருகிறேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 18:47, 20 செப்டம்பர் 2013 (UTC)
- தாரிக், சான்றிதல் வடிவமைப்பு அட்டகாசமாக உள்ளது. வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:17, 20 செப்டம்பர் 2013 (UTC)
சான்றிதழ் அழகாக உள்ளது, ஆனால் தமிழ் வரிகள் முதலிலும், ஆங்கில வரிகள் அதன் கீழும் வருதல் வேண்டும் என்ரு கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 10:02, 23 செப்டம்பர் 2013 (UTC)
- வழிமொழிகிறேன். கட்டாயம் முதலில் தமிழில் வருவதே பொருத்தம். -- சுந்தர் \பேச்சு 10:46, 23 செப்டம்பர் 2013 (UTC)
சே.. எனக்குத் தோன்றாமல் போய் விட்டதே ! இன்று பகலில் தான் அச்சுக்குப் போவதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டு வந்தோம். இன்னும் அச்சேறாமல் இருந்தால் மாற்றி விடுகிறேன். --இரவி (பேச்சு) 14:45, 23 செப்டம்பர் 2013 (UTC)
சான்றிதழ் அச்சுக்குப் போய் விட்டதால் மேலே கோரிய மாற்றத்தைச் செய்ய முடியவில்லை. தமிழ் விக்கிப்பீடியா சார்பில் இது போல் இனி செய்யப்படும் அனைத்து முயற்சிகளிலும் முதல் வரிசையில் தமிழ் என்பதை நினைவில் கொள்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 19:25, 24 செப்டம்பர் 2013 (UTC)
அஞ்சல் தலை
தொகுஇங்கே மாதிரி முன்வைக்கப்பட்டுள்ளது. மேலதிக மேம்படுத்தலுக்கு உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. --Anton (பேச்சு) 05:22, 29 ஆகத்து 2013 (UTC)
- அட்டகாசமாக உள்ளது, அன்டன்! விக்கிப்பீடியா இலச்சினையிலேயே ஒவ்வொரு மொழியின் எழுத்தும் உருண்டையின் முன் வருவது போல் ஒரு முறை வடிவமைத்து வெளியிட்டார்கள். அதில் வி என்று எழுத்து முன்னாலோ பக்கவாட்டிலோ தெரிவது போல் இருக்கும். அந்தப் படிமத்தை யாராவது கண்டுபிடித்துத் தந்தால் அதனைப் பயன்படுத்தலாம். அப்புறம், சிகப்புப் பின்னணியில் கருப்பு எழுத்து சற்று எடுப்பாக இல்லை. --இரவி (பேச்சு) 06:25, 29 ஆகத்து 2013 (UTC)
- கீழ்ப் பக்கம் - விக்கிப்பீடியா அடையாளச் சின்னம். --Anton (பேச்சு) 07:18, 29 ஆகத்து 2013 (UTC)
- ஓ! கீழ்பக்கமாக மட்டும் தான் வருகிறது என்றால் விட்டுவிடலாம். முன் பக்கத்திலேயே பார்த்த நினைவு. தவிர, ஒரே அஞ்சல் தலையில் இரண்டு உருண்டைகள் இருப்பது சரி வராது நினைக்கிறேன். விக்கிமீடியா வண்ணத்தில் உள்ள அஞ்சல் தலை கலக்கலாக உள்ளது. நீங்கள் முதல் வடிவமைப்பில் தந்தது போல் 2003, 2013 ஆகிய ஆண்டுகள் இரண்டு அடுக்கில் ஒன்றின் கீழ் ஒன்றாக hyphen இல்லாமல் இருப்பதே நன்றாக உள்ளது. hyphen இருந்தால் தமிழ் விக்கிப்பீடியா முடிந்து போய் விட்டது போன்ற ஒரு உணர்வு வருகிறது :) செப்டம்பர் என்ற குறிப்பும் தேவையில்லை. --இரவி (பேச்சு) 12:08, 29 ஆகத்து 2013 (UTC)
- அன்டன் வடிவமைத்துள்ள விக்கிமீடியா வண்ணநிலைக்கலவையில் தோன்றியுள்ள தபால் தலை அற்புதமாக உள்ளது. கூடவே, அதிக வர்ணங்களைப் பயன்படுத்தாது, நானும் இரண்டு தபால் தலை வடிவமைப்புகளை திட்டப்பக்கத்தில் பதிவேற்றியுள்ளேன். வடிவமைப்பு பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாயுள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 00:39, 30 ஆகத்து 2013 (UTC)
- அழகான வடிவமைப்பு. பின்புல நிறத்தை சற்று மேம்படுத்தியிருக்கலாம். --Anton (பேச்சு) 09:52, 2 செப்டம்பர் 2013 (UTC)
- அண்டன் வடிவமைப்பிலான வலதுபுறம் இடம் பெற்றிருக்கும் அஞ்சல் தலை நன்றாக இருக்கிறது. இந்த அஞ்சல் தலையின் வலதுபுறமுள்ள தமிழ் விக்கிப்பீடியா என்பதன் கீழுள்ள 10 தனித்துத் தெரிய வேண்டியதில்லை. மேலும் ஆண்டுக் குறியீடு (2003 - 2013)ஒன்றின் கீழ் ஒன்றாக இருப்பது நன்றாக இல்லை. தமிழ் விக்கிப்பீடியா என்பதற்குக் கீழ் 10 YEAR ANNIVERSERY OF ஒரு வரியிலும், அதன் கீழ் TAMIL WIKIPEDIA அடுத்த வரியிலும், அதன் கீழ் 2003 - 2013 என்றிருந்தால் மிக நன்றாக இருக்கும். ஆண்டுக் குறியீடு கீழே கொண்டு வர இடமில்லாத நிலையில் வாக்கியங்களின் இடது அல்லது வலது புறம் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லாமல் 2003 - 2013 என்று ஒரே வரியில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். என்பது என்னுடைய கருத்து.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:10, 30 ஆகத்து 2013 (UTC)
- 1வது அஞ்சல் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இருக்கும் வடிவமைப்புக்கள் போதுமா? இன்னும் சில தேவையா? --Anton (பேச்சு) 09:52, 2 செப்டம்பர் 2013 (UTC)
- வடிவமைப்புகள் நிறைவளிக்கின்றன, அன்டன். வாசகம் தொடர்பாக மட்டும் சுந்தரிடம் கருத்து கேட்டுள்ளேன். அஞ்சலகத்தில் ஏதேனும் குறிப்பிட்டு மாற்றம் கோரினால் அன்றி இந்த வடிவமைப்புகள் போதும். மிக்க நன்றி.--இரவி (பேச்சு) 12:19, 3 செப்டம்பர் 2013 (UTC)
- 10th year anniversary எனக் குறிக்கும் வழக்கம் இல்லை போலிருக்கிறது (அரிதாகச் சிலர் பயன்படுத்துகிறார்கள்). 10 year anniversary, 10th anniversary, 10 years போன்றவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். முதலாவது பரிந்துரையில் எண்ணும் எழுத்தும் இணையும் முறை பார்க்க அவ்வளவு எடுப்பாக இல்லை. மீதி இரண்டில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாம். கூகுளில் பல மாதிரிகள் கிட்டுகின்றன. -- சுந்தர் \பேச்சு 16:57, 3 செப்டம்பர் 2013 (UTC)
- வடிவமைப்புகள் நிறைவளிக்கின்றன, அன்டன். வாசகம் தொடர்பாக மட்டும் சுந்தரிடம் கருத்து கேட்டுள்ளேன். அஞ்சலகத்தில் ஏதேனும் குறிப்பிட்டு மாற்றம் கோரினால் அன்றி இந்த வடிவமைப்புகள் போதும். மிக்க நன்றி.--இரவி (பேச்சு) 12:19, 3 செப்டம்பர் 2013 (UTC)
- 1வது அஞ்சல் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இருக்கும் வடிவமைப்புக்கள் போதுமா? இன்னும் சில தேவையா? --Anton (பேச்சு) 09:52, 2 செப்டம்பர் 2013 (UTC)
- இறுதியான ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். வடிவமைப்பை முடித்துவிடலாம். --Anton (பேச்சு) 02:07, 4 செப்டம்பர் 2013 (UTC)
- இடப்புறம் 10 என்ற எண்ணுக்குக்கீழே "YEARS" என்று தந்து வலப்புறம் 2003 என்றும் அதன்கீழ் 2013 என்றும் வருமாறு தரலாம். அப்படித்தர இடம் இருந்தால் நடுவே Celebrating Tamil Wikipedia Anniversary எனத் தரலாம். அல்லது நடுவில் Tamil Wikipedia Anniversary என்று மட்டும் தரலாம். Tamil Wikipedia Dicennial Anniverary என்பது கலைக்களஞ்சியத்துக்குறிய மிடுக்குடன் இருந்தாலும் நீளமாகவும், சற்று கடினமாகவும் இருக்கக் கூடும்.
- என் தேர்வு: Tamil Wikipedia Anniversary என்று மட்டும் நடுவில் தந்து இடப்புறமும் வலப்புறமும் மேலே சொல்லியதுபோலத் தருவது. இடப்புறம் YEARS எனக்கீழே தரமுடியாவிட்டால் 10 என்று மட்டும் தந்துவிட்டு "years of Tamil Wikipedia" எனத் தொடரலாம். வலப்புறம் உள்ளபடியே இருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:19, 4 செப்டம்பர் 2013 (UTC)
- அன்டன், படிமம்:Tamil Wikipedia stamp 2013 - sample4.png படத்தை இறுதி வடிவமைப்பாகக் கொள்வோம். இதில் பின்வரும் மாற்றங்களைச் செய்து தர முடியுமா?
- நீல நிறப் பட்டையில் உள்ள "தமிழ் விக்கிப்பீடியா" என்ற சொல்லை எடுத்து விடலாம். அஞ்சல் தலை முழுக்க நிறைய எழுத்துக்களாக உள்ளது சிறிய அளவில் பார்க்கும் போது எடுப்பாக இல்லாமல் போகும். தவிர, விக்கிப்பீடியா இலச்சினை தமிழில் இருப்பதும், பிறகு ஆங்கிலத்தில் தமிழ் விக்கிப்பீடியா என்று எழுதுவதுமே அஞ்சல் தலையின் நோக்கத்தை வெளிப்படுத்த போதுமானதாக இருக்கும்.
- மேலே சுந்தர் பரிந்துரைத்தபடி, இடப்புறம் 10 என்ற எண்ணுக்குக்கீழே "YEARS" என்று தந்து வலப்புறம் 2003 என்றும் அதன்கீழ் 2013 என்றும் வருமாறு தரலாம். நடுவே, Tamil Wikipedia Anniversary என்று மட்டும் குறிப்பிடலாம்.
நன்றி.--இரவி (பேச்சு) 06:57, 10 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி இரவி. மேம்படுத்தியுள்ளேன். விக்கிப்பீடியா சின்னத்தை அப்படியே எவ்வித மாற்றமும் இன்றி இட்டுள்ளேன். பார்க்க: தமிழ் விக்கிப்பீடியா. இச்சின்னத்தில் உள்ள எழுத்துருவின் நிறம் அப்படியே உள்ளது. தேவையான விமர்சனங்களை முன் வையுங்கள். --Anton (பேச்சு) 09:16, 10 செப்டம்பர் 2013 (UTC)
- அன்டன், அந்த நீல நிறப்பட்டை வேண்டும். அப்போது தான் விக்கிமீடியா வண்ணங்கள் வரும். அந்தப் பட்டையில் எதையும் எழுத வேண்டாம் என்றே கேட்டிருந்தேன். Tamil Wikipedia Anniversary என்று முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் போதும். இதை ஒரு படிமமாகவும், தபால் தலை போன்று சுற்றி உள்ள வளைந்த கோடு இல்லாமல் வடிவமைப்பை மட்டும் ஒரு தனிப்படிமமாகவும் தந்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 10 செப்டம்பர் 2013 (UTC)
எழுத்துரு
தொகுஅஞ்சல் தலை, சட்டை ஆகிய இரண்டிலும் உள்ளது என்ன எழுத்துரு? அதில் உள்ள பீ எழுத்து சற்று தெளிவற்று உள்ளது. அச்சில் வரப்போகும் வடிவமைப்பு என்பதால் வேறு அழகான எழுத்துரு இருந்தாலும் பயன்படுத்தலாம். ஆனால், அச்சிலும் கட்டற்ற எழுத்துருவையே பயன்படுத்தும் கொள்கை என்றால் விட்டு விடலாம் :)--இரவி (பேச்சு) 03:49, 30 ஆகத்து 2013 (UTC)
பத்தாண்டு கொண்டாட்ட சின்னம்
தொகுஅன்டன், ஆண்டு விழா என்று குறிப்பிடாமல் ஆண்டுகள் என்று மட்டும் குறிப்பிடலாம். சின்னம் தேர்வான பிறகு, கணினித் திரையின் முழு நீளம் வருகிற மாதிரி சில பதாகைகளும் தேவைப்படும்.--இரவி (பேச்சு) 16:40, 19 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் அன்டன், இரண்டாவது மாதிரி மிகவும் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது. எப்படி இத்தனை அழகாக வடிவமைக்கின்றீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:38, 19 செப்டம்பர் 2013 (UTC)
- அன்டன் வழங்கியுள்ள இரண்டாவது மாதிரி அழகாகவும் அற்புதமாயும் இருக்கின்றது. இதேவேளை, நானும் எளிமையான Flat நிலையில் வடிவமைக்கப்பட்ட, சின்ன மாதிரிகள் இரண்டை (ஒன்று நிறத்திலும், இன்னொன்று கருப்பு வெள்ளையிலும்) பதிவேற்றியிருக்கிறேன். உபரித்தகவல், குறித்த சின்னத்தைக் கொண்ட நிலையிலான ஒரு மாதிரிப் பதாகையை இங்கே பதிவேற்றியிருக்கிறேன். :) நன்றி.--தாரிக் அஸீஸ் உரையாடுக 01:57, 20 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் தாரிக், வட்ட வடிவில் தாங்கள் அமைத்திருக்கும் வடிவமைப்பினை பெரும் மாநாடாக நடத்தும் பொழுது சட்டைப் பையில் இட்டுக்கொள்ளும் அட்டைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இுணையம் வழி பரப்பரையே இம்முறை முக்கியத்துவம் பெறுவதால் அன்டனின் இரண்டாவது வடிவமைப்பு ஏற்றதாக உள்ளது. அதனை அவர் இரவி மற்றும் நக்கீரனின் திருத்தங்களுக்குத் தக்கவாறு மாற்றித்தந்தால், தாங்கள் தற்போது தந்துள்ள கணினிப் பதாகையில் சின்னத்தினை மட்டும் மாற்றி பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம். மற்றோர் விருப்பத்தையும் அறிய வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:09, 20 செப்டம்பர் 2013 (UTC)
- செகதீசுவரன் கருத்தை வழிமொழிகிறேன். Flat design நன்று. ஆனால், தற்போதைய நிகழ்வுக்குக் கொஞ்சம் வண்ணமயமாக இருந்தால் நன்றாக இருக்கும். அன்டனின் வடிவமைப்பிலேயே தக்க மாற்றங்களைச் செய்து மேம்படுத்தித் தந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.இன்னொரு குறிப்பு: Est 2003 என்பதை 2003 முதல் என்று சொன்னாலும் பொருந்தி வரும்.--இரவி (பேச்சு) 07:21, 20 செப்டம்பர் 2013 (UTC)
- மாதிரி 4,5 இரண்டும் அருமை.
மாதிரி 5ல் தங்க வண்ணத்திற்கு கருப்பு நிற எழுத்துரு எடுக்கவில்லை. அதைவைத்து பார்க்கையில் மாதிரி 4ஐ தேர்வு செய்யலாம் எனது கருத்து.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:33, 20 செப்டம்பர் 2013 (UTC)
- மாதிரி 4,5 இரண்டும் அருமை.
அலுவலகத்தில் இருக்கும் எஇடி மானிட்டரில் மாதிரி5ன் அழகு சரியாக பிடவில்லை. தற்போது வீட்டிலிருக்கும் சிஆர்டி மானிட்டரில் காணுகையில் அற்புதமாக உள்ளது. மாதிரி 4ஐ தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடுவதா இல்லை மாதிரி5க்கா என குழப்பமாக உள்ளது. மேலே கூறியுள்ள எழுத்துரு பற்றிய கருத்தை வாபஸ் பெருகிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:25, 20 செப்டம்பர் 2013 (UTC)
- நீல நிறத்தில் அமைந்த மாதிரி 4 நன்றாக இருக்கின்றது. அன்டனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். அதில் "ஒன்று" மற்றும் "பூச்சியம்" ஆகியவற்றின் உயரங்கள் வித்தியாசமாய் காணப்படுகின்றன என்றே தோன்றுகிறது. ஒரே அளவில் (ஒரே உயரத்தில்) இரண்டு எழுத்துக்களையும் (1,0) அமைத்தால் சின்னத்திற்கு இன்னும் எழில் கூடுமென நம்புகிறேன். அத்தோடு, தமிழ் விக்கிப்பீடியா என்று கருப்பு நிறத்தில் காணப்படும் எழுத்தை கடும்சாம்பல் நிறத்திற்கு (#333333) மாற்றினாலும், சின்னத்தின் கூறுகள் ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்து அமைந்துவிடுமெனவும் எனக்கு தோன்றுகிறது. அன்டன், முடிந்தால் இந்த நிலைகளை வடிவமைப்பில் சேர்த்து மேம்படுத்திப் பார்த்து இணையுங்கள். நன்றி. :) --தாரிக் அஸீஸ் உரையாடுக 06:52, 21 செப்டம்பர் 2013 (UTC)
தாரிக் பரிந்துரைத்த மாற்றங்களுடன் இதே வடிவமைப்பை விக்கிமீடியா வண்ணங்களில் முயன்று பார்க்க முடியுமா? வண்ணங்களின் தெரிவில் ஒரு theme இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது ஒரு வேண்டுகோள். ஏற்கனவே நிறைய உழைப்பைச் செலுத்தி வருகிறீர்கள் என்பதால் நேரம் பிடிக்கும் என்றால் இந்த வேண்டுகோளை விட்டு விடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:57, 21 செப்டம்பர் 2013 (UTC)
- மாதிரி 6 அத்தனை சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. நக்கீரன் கேட்டுக் கொண்டப்படி விரைந்து முடிவெடுத்தால் பரப்புரைக்கு பயன்படுத்த ஆரமிக்கலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:34, 23 செப்டம்பர் 2013 (UTC)
- மாதிரி-4 (நீலம்-சிவப்பு) மிகச்சிறப்பாக உள்ளது. மற்றவையும் அழகுதான், ஆனால் என் தேர்வு மாதிரி-4.--செல்வா (பேச்சு) 10:06, 23 செப்டம்பர் 2013 (UTC) எனது விருப்பம் அதேதான் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:54, 23 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டிச் சான்றிதழ்
தொகுA4 அளவு சரியானதா? வேறு தேவையா? கட்டுரைப் போட்டிச் சான்றிதழும் பாராட்டுச் சான்றிதழும் ஒன்றாக இருக்க வேண்டுமா? --Anton (பேச்சு) 08:11, 20 செப்டம்பர் 2013 (UTC)
Kindly correct as 'awarded'. Regards --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:42, 20 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி செல்வசிவகுருநாதன். இது மாதிரி மட்டுமே. வடிவமைப்பு தீர்மானிக்கப்பட்டதும் உள்ளடங்கங்களை மாற்றிவிடலாம். --Anton (பேச்சு) 08:13, 20 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டிச் சான்றிதழ்களில் தமிழ் இடம் பெற வேண்டும் இறுதி வடிவமைப்பில் இதை கவனித்தில் கொள்ளவும்--குறும்பன் (பேச்சு) 15:37, 5 அக்டோபர் 2013 (UTC)
சின்னம் இறுதிப்படுத்தப்படால் இதழ்களில், பரப்புரைகளில் பயன்படுத்தலாம்.
தொகுசின்னம் இறுதிப்படுத்தப்படால் இதழ்களில், பரப்புரைகளில் பயன்படுத்தலாம்.--Natkeeran (பேச்சு) 05:40, 22 செப்டம்பர் 2013 (UTC)
படிமம்:Tamil wiki 10th anniversary 4.png இறுதி செய்யப்பட்டுள்ளது.--இரவி (பேச்சு) 02:39, 25 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டிப் பதாகைகள்
தொகுகட்டுரைப் போட்டிப் பதாகை மாதிரியொன்று பதிவேற்றப்பட்டுள்ளது. இன்னும் சில பதிவேற்றப்படும். பதாகையின் நீளம், அகலம் பற்றிய அளவைக் குறிப்பிட்டால் நன்று. --Anton (பேச்சு) 13:45, 5 அக்டோபர் 2013 (UTC) விருப்பம் -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:53, 5 அக்டோபர் 2013 (UTC)
- வடிவமைப்பு நன்றாக உள்ளது. 30,000 என்பதன் முன் இந்திய உரூபாயின் குறியீட்டை இடலாம். முன்பு ஊடகப் போட்டிக்குச் செய்த பதாகைகளின் அளவு போதும். பெரும்பாலும் இவற்றைத் தள அறிவிப்பில் தான் இடப் போகிறோம். முகநூல் பரப்புரைக்கு என்று வேண்டுமானால் சற்று பெரிய சதுர அளவிலான பதாகைகள் செய்யலாம். கட்டுரைத் தலைப்புகளில் இருந்து வேறு வேறு படங்களை எடுத்து நிறைய பதாகைகளையும் செய்யலாம்.--இரவி (பேச்சு) 14:42, 5 அக்டோபர் 2013 (UTC)
- மேலேயுள்ள வடிவமைப்பு விரும்பத்தக்கதெனின் அளவைக் குறைக்கிறேன். அல்லது வேறு வடிவமைப்புகளைச் செய்கிறேன். 8-10 வடிவமைப்புகள் தேவையெனக் கருதுகிறேன் (?). முகநூல் பரப்புரைக்கு தேவையெனின் அதற்கான அளவிலும் செய்கிறேன். எனக்குத் தேவையானதெலாம் எந்த வடிவமைப்புத் தேவை, எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதே. :) --Anton (பேச்சு) 15:34, 5 அக்டோபர் 2013 (UTC)
- வணக்கம் அன்டன். இப்பதாகைகள் சிறப்பாக உள்ளன. பரப்புரையை நோக்கமாக கொண்டுள்ளமையால் முதற்பக்கத்தில் வெற்றியாளர் அறிப்பினையும், சிறப்பு பரிசு, முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளையும் பற்றி குறிப்புகள் இடம் பெற்றால் நல்லது. இது ஒரே பாதாகையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதிக சொற்கள் கொண்டு அமைத்தால் வடிவமைப்பு சிறப்பாக இருக்காது என்று தாங்கள் கூறியமை நினைவில் இருக்கிறது. இணைய வழியில் பரப்புரை செய்யப்போகிறோம் எனும் பட்சத்தில் வேறு வேறு பதாகைகளை பகிர்வது வரவேற்க கூடியது. முகநூலின் Profile Cover - 851px x 315px குழுமத்தின் Cover - 801px x 250px. என்ற அளவீட்டுனை பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 5 அக்டோபர் 2013 (UTC)
- அன்டன், கூடுதல் பதாகைகளை வடிவமைத்துத் தர முடியுமா? இரண்டாம் பதாகையில் சிங்கப்பூர் (தொகு) என்று குறிப்பிட்டுள்ளது ஒரு வேளை போட்டி சிங்கப்பூர் குறித்தது என்பது போன்ற குழப்பத்தைத் தருமோ? மற்றபடி, பதாகை சிறப்பு. மேற்கண்ட அளவுகள் போக, வலைப்பதிவுகள், பிற இடங்களில் பக்கப்பட்டை விளம்பரமாகப் பயன்படுத்தும் வகையில் சதுர வடிவிலான படிமங்கள் தேவை. 125x125, 250x250 மற்றும் இதே விகிதத்தில் உயர் நுணக்க, அளவுப் படங்கள் தேவை. சுருக்கமாகச் சொன்னால், தமிழ் விக்கி 10 சின்னம் மாதிரி. --இரவி (பேச்சு) 10:10, 15 அக்டோபர் 2013 (UTC)
- வணக்கம் அன்டன். இப்பதாகைகள் சிறப்பாக உள்ளன. பரப்புரையை நோக்கமாக கொண்டுள்ளமையால் முதற்பக்கத்தில் வெற்றியாளர் அறிப்பினையும், சிறப்பு பரிசு, முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளையும் பற்றி குறிப்புகள் இடம் பெற்றால் நல்லது. இது ஒரே பாதாகையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதிக சொற்கள் கொண்டு அமைத்தால் வடிவமைப்பு சிறப்பாக இருக்காது என்று தாங்கள் கூறியமை நினைவில் இருக்கிறது. இணைய வழியில் பரப்புரை செய்யப்போகிறோம் எனும் பட்சத்தில் வேறு வேறு பதாகைகளை பகிர்வது வரவேற்க கூடியது. முகநூலின் Profile Cover - 851px x 315px குழுமத்தின் Cover - 801px x 250px. என்ற அளவீட்டுனை பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 5 அக்டோபர் 2013 (UTC)
- ஜெகதீஸ்வரன், இரவி இரு நாட்களாக அதிக வேலையாக இருக்கிறேன். நாளைக்குப் பின் வடிவமைப்புகளில் ஈடுபட முடியும். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:21, 16 அக்டோபர் 2013 (UTC)
- மேலேயுள்ள வடிவமைப்பு விரும்பத்தக்கதெனின் அளவைக் குறைக்கிறேன். அல்லது வேறு வடிவமைப்புகளைச் செய்கிறேன். 8-10 வடிவமைப்புகள் தேவையெனக் கருதுகிறேன் (?). முகநூல் பரப்புரைக்கு தேவையெனின் அதற்கான அளவிலும் செய்கிறேன். எனக்குத் தேவையானதெலாம் எந்த வடிவமைப்புத் தேவை, எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதே. :) --Anton (பேச்சு) 15:34, 5 அக்டோபர் 2013 (UTC)