வில்லு (திரைப்படம்)

பிரபுதேவா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(வில்லு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வில்லு (Villu) என்பது 2009 ஆம் ஆண்டில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், வடிவேலு போன்ற பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரித்து மற்றும் விநியோகித்துள்ளது, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரவி வர்மன், படத்தொகுப்பை கோலா பாஸ்கர் கையாண்டுள்ளார்.

வில்லு
இயக்கம்பிரபுதேவா
தயாரிப்புகே.கருணாமூர்த்தி
அருண் பாண்டியன்
கதைஏசி முகில்
ரெபெல் ரவி
(உரையாடல்)
திரைக்கதைபிரபுதேவா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புவிஜய்
நயன்தாரா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
ஒளிப்பதிவுரவி வர்மன்
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடு12 ஜனவரி 2009
ஓட்டம்150 நிமிடங்கள்
(மூலம்)
135 நிமிடங்கள்
(வெட்டிய பின்பு)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு30 கோடி
மொத்த வருவாய்50 கோடி[1]

இப்படம் 12 சனவரி 2009 ஆம் ஆண்டில் வெளியாகி,[2][3] விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக மிதமான வெற்றி அடைந்தது.

கதைச் சுருக்கம்

தொகு

இப்படத்தின் ஆரம்ப கதை பல வருடங்களுக்கு முன்பு நடப்பது போன்று சித்தரிக்கப்படுகின்றது. நேர்மையான ராணுவ மேஜர் சரவணன் (விஜய்). அவர் தங்களது தேசத்துரோக செயலுக்கு இடையூறாக இருப்பதால் நான்கு ராணுவ அதிகா‌‌‌ரிகள் அவரை சுட்டுக் கொல்கிறார்கள். அத்துடன் சரவணன் ஒரு தேசத் துரோகி என அனைவரையும் நம்ப வைக்கிறார்கள். இதன் காரணமாக சரவணனின் இறுதி சடங்கில் நியாயமாக கிடைக்க வேண்டிய ராணுவ ம‌‌‌ரியாதை கிடைக்காமல் போவதுடன், சரவணனின் மனைவி மற்றும் மகனை ஊரார் தள்ளிவைக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு பிறகு வில்லன்கள் நால்வரும் இப்போது சர்வதேச அளவில் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள். இந்தியா வரும் அவர்களில் ஒருவரை காவல் துறையிடமிருந்து காப்பாற்றுகிறார் புகழ் (விஜய்). இன்னொரு வில்லனான ஜே.டியின் (பிரகாஷ் ராஜ்) மகள் ஜானவி (நயன்தாரா) காதலித்து அவரது மாப்பிள்ளை ஆகிறார். மூன்றாவது வில்லனின் மகன் என்று நாடகமாடுகிறார்.

இப்படி வில்லன்களை ஏமாத்தி கண்ணாமூச்சி காட்டும் புகழ் (விஜய்), அவர்களின் ரகசியங்களை தெ‌ரிந்து கொள்வதுட‌‌ன், உடன் இருந்தே அவர்களின் உயிர் பறிக்கிறார். இதனிடையில் உண்மை ஜே.டிக்கு தெ‌ரிய வருகிறது. அவரை எப்படி புகழ் பழி வாங்கி தனது தந்தை தேசத் துரோகி இல்லை என்று நிறுவிப்பதே இப்படத்தின் கதை ஆகும்.

நடிகர்கள்

தொகு

சிறப்பு தோற்றம்

தொகு

தயாரிப்பு

தொகு

வளர்ச்சி

தொகு

விஜய் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் வந்த போக்கிரி திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு மீண்டும் இருவரின் கூட்டணியில் அடுத்த படத்தின் முயற்சியை பிரபுதேவா 2007 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கினார். இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிக்க இருந்தது. இப்படத்திற்கு முதலில் 'புகழ்' என்று பெயரிடப்பட்டது.[5] பின்னர் பிரபுதேவா சிங்கம் என்று தலைப்பு அறிவித்தார். இருப்பினும், இயக்குனர் ஹரி ஒரு படத்தின் தலைப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிங்கம் தலைப்பு தொடர்பாக பதிப்புரிமை சிக்கல் எழுந்தது. பின்னர் வில்லு என்ற தலைப்பு படத்தின் அதிகாரப்பூர்வ பெயராக மாறியது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Villu collects 50 crore and becomes average success". News7. பார்க்கப்பட்ட நாள் 2024-03-28.
  2. "Villu (2009)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  3. "Chennai Box Office - sify.com (1970)". archive.is. 19 December 2017 இம் மூலத்தில் இருந்து 19 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171219123953/http://www.sify.com/movies/boxoffice.php?id=pluppHedibbbf. 
  4. "A 'new old' heroine for Vijay". Behindwoods. 19 November 2008. பார்க்கப்பட்ட நாள் 19 June 2013.
  5. "Name games and Vijay rules". IndiaGlitz. 6 June 2008. Archived from the original on 7 June 2008. பார்க்கப்பட்ட நாள் 19 June 2013.
  6. "Vijay and Prabhu Deva together again". IndiaGlitz. 4 June 2008. Archived from the original on 5 June 2008. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லு_(திரைப்படம்)&oldid=3917675" இலிருந்து மீள்விக்கப்பட்டது