வெங்காய வடகம்

வெங்காய வடகம் அல்லது தாளிப்பு வடகம் (சுருக்கமாக வடகம் என்றும் அழைப்பதுண்டு) (Vengaya Thalippu Vadagam) என்பது தமிழகத்தில் குழம்பு போன்றவற்றை தாலிக்கும் போது சுவைக்கும் மணத்துக்கும் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். இது பொதுவாக உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வரமிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், கடுகு, மிளகு, அரிந்த சிறிய வெங்காயம் போன்றவற்றை எண்ணை கலந்து இரண்டு நாட்கள் ஒரு பாத்திரத்தில் இட்டு ஊரவைப்பர். சிலர் எள் போடுவதுண்டு. சிலர் இதில் வெட்டிய பூண்டையும் சேர்ப்பதுண்டு. இதில் உள்ள பொருட்களில் ஊருக்கேற்றபடி சில மாற்றங்கள் இருக்கும். இந்த கலவையை நான்கைந்து நாட்கள் வெளியில் உலரவைத்து வெங்காயத்தில் ஈரத்தை வற்ற வைப்பர். பிறகு அதில் எண்ணை விட்டு சிறு பந்துகளாக உருட்டி, அவற்றை மீண்டும் வெயிலில் காயவைப்பர். இதில் சேர்க்க நல்லெண்ணெய், கடலையெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை தங்கள் வசதிக்கேற்ப்ப பயன்படுத்துவர். கடைசியில் பானை போன்றவற்றில் போட்டு இருப்பு வைத்துக் கொள்வர். இது ஒரு ஆண்டுவரையிலும் கெடாமல் இருக்கும்.[1]

காய வைப்பதற்கு முன்னதாக எண்ணையில் தொட்டு வடகம் உருட்டப்படுகிறது.

பவரலர் பண்பாட்டில்

தொகு

தமிழ்நாட்டு புலனாய்வுத் துறை தலைவராக இருந்த பி. சந்திரசேகரன் தன் பலனாய்வு அனுபவங்களைக் கொண்டு எழுதிய புத்தகமான கிரிமினல்கள் ஜாக்கிரதை என்ற நூலில் பணம் திருட்டுப்போன ஒரு வழக்கில் திருடியவனை கண்டுபிடிக்க வீட்டிலிருந்த வடகம் எவ்வாறு உதவியது என்பதை விளக்கியுள்ளார்.[2]

குறிப்பு

தொகு
  1. எல்லா குழம்பு வகைகளையும் மணக்கச் செய்யும், வெங்காய வடகம், வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது? dheivegam.com பார்த்த நாள் 2021 ஆகத்து 20
  2. தடய அறிவியல் நிபுணர் டாக்டர் பி. சந்திரசேகரன், கிரிமினல்கள் ஜாக்கிரதை, கட்டுரைத் தொடர், கல்கி 4. ஆகத்து. 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்காய_வடகம்&oldid=3277265" இலிருந்து மீள்விக்கப்பட்டது