வெளிர் ஈப்பிடிப்பான்
வெளிர் ஈப்பிடிப்பான் | |
---|---|
கென்யாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மியூசிகாபிடே
|
பேரினம்: | அக்ரிகோலா
|
இனம்: | அ. பாலிடசு
|
இருசொற் பெயரீடு | |
அக்ரிகோலா பாலிடசு (முல்லர், 1851) | |
வேறு பெயர்கள் | |
பிராடோமிசு பாலிடசு |
வெளிர் ஈப்பிடிப்பான் (Pale flycatcher)(அக்ரிகோலா பாலிடசு) என்பது சகாரா கீழ்மை ஆப்பிரிக்காவில் காணப்படும் பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயின் ஒரு குருவி சிற்றினம் ஆகும்.
வகைப்பாட்டியல்
தொகுவெளிர் ஈப்பிடிப்பான் முன்பு பிராடோர்னிசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 2010-ல் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதி வரலாறு ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் மெலனோர்னிசுக்கு மாற்றப்பட்டது.[2] பின்னர் 2023-ல் வெளியிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இது அக்ரிகோலா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[3][4]
சரகம்
தொகுஇது அங்கோலா, பெனின், போட்சுவானா, புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஐவரி கோஸ்ட், எரித்திரியா, எசுவாத்தினி, எத்தியோப்பியா, காபோன், காம்பியா, காம்பியா கினிபிசாவ், கென்யா, மலாவி, மாலி, மூரித்தானியா, மொசாம்பிக், நமீபியா, நைஜர், நைஜீரியா, உருவாண்டா, செனிகல், சியரா லியோனி, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சூடான், தான்சானியா, டோகோ, ஜிம்பாவே, மற்றும் சாம்பியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]
வாழ்விடம்
தொகுமிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், உலர் சவன்னா மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் நிலம் ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Agricola pallidus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709035A94189782. https://www.iucnredlist.org/species/22709035/94189782. பார்த்த நாள்: 5 November 2020.
- ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044. https://www.researchgate.net/publication/233731328.
- ↑ Zhao, M.; Gordon Burleigh, J.; Olsson, U.; Alström, P.; Kimball, R.T. (2023). "A near-complete and time-calibrated phylogeny of the Old World flycatchers, robins and chats (Aves, Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 178: 107646. doi:10.1016/j.ympev.2022.107646.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Chats, Old World flycatchers". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 July 2023.
வெளி இணைப்புகள்
தொகு- வெளிறிய ஃப்ளைகேட்சர் - தென்னாப்பிரிக்க பறவைகளின் அட்லஸில் உள்ள இனங்கள் உரை .