வேளாளர்

(வேளாளர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேளாளர் (Vellalar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும். ஆறுநாட்டு வேளாளர், சோழிய வெள்ளாளர், கார்காத்த வேளாளர், கொங்கு வேளாளர், சைவ வெள்ளாளர், துளுவ வெள்ளாளர் மற்றும் இலங்கை வெள்ளாளர் ஆகிய சமூகங்கள், தங்களை ஒரு வேளாளராக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.[2][3] 13 ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி வரை 600 ஆண்டுகளாக இவர்கள் தமிழ் விவசாய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்திய சமூகங்களாகவும், அரசியல் அதிகாரத்திலும் இருந்தனர்.[4]

வேளாளர்
மதங்கள்இந்து, கிறிஸ்தவம்
மொழிகள்தமிழ்
தொடர்புடைய குழுக்கள்தமிழர்

வேளாளர் விளக்கம்

வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது சேக்கிழார் என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.[5]

பட்டங்கள்

வேளாளர் இன பட்டங்கள்:

  1. பிள்ளை
  2. முதலியார் அல்லது முதலி
  3. கவுண்டர்
  4. உடையார்
  5. தேசிகர்
  6. குருக்கள்
  7. ஓதுவார்

சைவ வேளாளர்

இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

உட்பிரிவு சாதியினர்

மேற்கோள்கள்

  1. https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/vellala
  2. Derges, Jane (2013). Ritual and Recovery in Post-Conflict Sri Lanka (in ஆங்கிலம்). Routledge. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1136214887.
  3. Ramaswamy, Vijaya (2017). Historical Dictionary of the Tamils. Rowman & Littlefield. p. 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-53810-686-0.
  4. Moffatt, Michael (2015). An Untouchable Community in South India: Structure and Consensus. Princeton University Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-40087-036-3.
  5. சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 1069.
  6. Castes and tribes of south India, volume 1, page 4, https://archive.org/stream/castestribesofso01thuriala#page/4/mode/2up
  7. http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=63094

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாளர்&oldid=3179252" இலிருந்து மீள்விக்கப்பட்டது