ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான்

பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துவன்வா மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்
(ஹரிபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹரிபூர் மாவட்டம் (Haripur) (The Town of Hari or God), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவன்வா மாகாணத்தில் ஹரிபூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் ஹரிபூர் நகரமாகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில், பாகிஸ்தானில் ஹரிபூர் நகரம் மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற பௌத்த நினைவுச் சின்னங்களான ஜௌலியன் விகாரை மற்றும் பாமலா தூபி உள்ளது.

ஹரிபூர் மாவட்டம்
மாவட்டம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
Established1992
தலைமையிடம்ஹரிபூர்
பரப்பளவு
 • மொத்தம்1,725 km2 (666 sq mi)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்8,03,000
 • அடர்த்தி466/km2 (1,210/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
District Councilx seats
வட்டங்களின் எண்ணிக்கை2
இணையதளம்http://www.Hazara.gov.pk/

நிர்வாகம் தொகு

 
ஹரிபூர் மாவட்ட வரைபடம்
 
ஹரிபூர் மாவட்டம் மற்றும் இஸ்லாமாபாத் இடையே தில்லா சரொளனியின் அமைவிடம்

1992இல் ஹரிபூர் மாவட்டம் புதிதாக துவக்கும் வரை ஆப்டாபாத் மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டமாக இருந்தது. ஹரிப்பூர் மாவட்டம், அலி கான் (கைபர் பக்துன்வா) மற்றும் பக்ரா (கைபர் பக்துன்வா) என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. இரண்டு வருவாய் வட்டங்களை மேலும் 44 ஒன்றியக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஒன்றியக் குழுக்கள் நகர்புறத்தில் அமைந்துள்ளது. அவைகள்;

  • அலி கான், கைபர் பக்துன்வா
  • பக்ரா, கைபர் பக்துன்வா
  • பைத்கலி
  • பக்கா, கைபர் பக்துன்வா
  • பந்தி சேர் கான்
  • பார்கோட், கைபர் பக்துன்வா
  • பீர், கைபர் பக்துன்வா
  • பெக்கி
  • பெராரி
  • பீரீலா
  • தர்வாஷ்
  • தீண்டா
  • தின்கி
  • காஜி, கைபர் பக்துன்வா
  • ஹரிபூர் நடு
  • ஹரிபூர் வடக்கு
  • ஹரிபூர் தெற்கு
  • அட்டார்
  • ஜாபிரி
  • ஜாட்டி பிந்த்
  • கலிஞ்சர், கைபர் பக்துன்வா
  • காலாபாத் நகரியம்
  • கான்பூர், கைபர் பக்துன்வா
  • கோலியன் பாலா
  • கோட் நஜிபுல்லா
  • கோட்டேரா
  • குந்தி, கைபர் பக்துன்வா
  • லந்தர்மன்க்
  • மன்க்ராய்
  • மக்சூத்
  • நஜிப்பூர்
  • நாரா அமாஸ்
  • பந்தக்
  • பனியன்
  • பிந்த் ஹஸ்ஹாம் கான்
  • பிந்த் கமல் கான்
  • காஜிப்பூர்
  • ரெஹனா
  • சராய் சலே
  • செராய் நியாமத் கான்
  • சிக்கந்தர்பூர்
  • ஸ்ரீகோட்
  • சிர்யா
  • தர்பெலா
  • டோபிகியன்

வரலாறு தொகு

பண்டைய & மத்தியகால வரலாறு தொகு

காந்தார கலாசாரத்தின் மையமாக ஹரிபூர் மாவட்டம் திகழ்ந்தது. அலக்சாண்டர் காலத்திய பேரரசில் தட்சசீலம் கிழக்கு காந்தாரத்தின் பகுதியாக இருந்தது. இங்கு பாயும் சிந்து ஆற்றின் கரையோரம், ஆரியர்கள் வேதங்களை தொகுத்தனர். திபெத்திய பௌத்த கதைகளின்படி, ஹரிபூரில் அசோகர் ஆளுனரான இருந்தார் என தெரியவருகிறது.

துருக்கியர் ஆட்சி தொகு

துருக்கிய-மங்கோலிய கலப்பினத்தனவரான, தைமூரின் தலைமையில் 1399இல் காபூல் நகரத்தில் தங்கி இப்பகுதியை ஆண்டனர். பின்னர் தைமூர் வழிவந்த துருக்கியர்கள் 18ஆம் நூற்றாண்டு வரை ஹரிபூரை ஆண்டனர்.

துராணிப் பேரரசில் தொகு

துராணிப் பேரரசின் மன்னர் அகமது ஷா துரானி தனது அரசை பஞ்சாப் வரை விரிவாக்கம் செய்யும் போது ஹரிபூர் மாவட்டம் துராணி பேரரசில் 1760முதல் 1818/1819 முடிய இருந்தது. பின்னர் 1820இல் ஹரிபூர் சீக்கியப் பேரரசு பகுதியின் கீழ் வந்தது.

சீக்கியப் பேரரசில் தொகு

துராணி - சீக்கியப் போரில், சீக்கியர்கள் ஆப்கானியர்களை 1820இல் வென்று ஹரிபூரை கைப்பற்றி கொண்டனர்.

பிரித்தானி இந்தியா ஆட்சியில் தொகு

மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போருக்குப் பின்னர் ஹரிபூர் மாவட்டம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது.

இயற்கை வளங்கள் தொகு

இம்மாவட்டத்த்தில் தார்பெலா நீர்த்தேக்கம் மற்றும் கான்பூர் நீர்தேக்கம் அமைந்துள்ளது. நிலவியப்படி, இம்மாவட்டம், இஸ்லாமாபாத் மற்றும் ஹசரா பகுதிகளின் நுழைவிடமாக உள்ளது. 77,370 ஏக்கரில் வேளாண்மைத் தொழில் நடக்கிறது.

எல்லைகள் தொகு

 
ஹரிபூரின் எல்லைகள்

ஹரிபூர் மாவட்டத்தின் வடகிழக்கில் அப்போட்டாபாத் மாவட்டம், மற்றும் மன்செரா மாவட்டம், தென் கிழக்கில் பஞ்சாப் மகாகாணம், வடமேற்கில் சுவாபியும், தெற்கில் இஸ்லாமாபாத் எல்லைகளாக கொண்டுள்ளது.

மக்கள் பரம்பல் தொகு

1998ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஹரிபூர் மாவட்ட மக்கட்தொகை 6,92,228 ஆகும். 2005ஆம் ஆண்டு இறுதியில், 8,03,000ஆ உயர்ந்துள்ளது. 12.0% மக்கள் ஹரிபூர் நகரத்திலும், 88% மக்கள் கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர்.

ஹரிபூரின் பரப்பளவான 1725 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 403.3 மக்கள் வாழ்கின்றனர்.[1]

மொழிகள் தொகு

பாஷ்தூ மொழி ஹரிபூர் மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டாலும், தேசிய மொழியான உருதுவும் சிறிது அறியப்படுகிறது.

எழுத்தறிவு தொகு

ஹரிபூர் மாவட்ட மக்களில் 53.7% எழுத்தறிவுடையவர்களாக உள்ளனர். மகளிர் எழுத்தறிவு விகிதம் 37.4%ஆக உள்ளது. ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 63.6%ஆக உள்ளது. நகர மக்களின் எழுத்தறிவு விகிதம் 69.7%ஆகவும், கிராமப்புற எழுத்தறிவு விகிதம் 51.4%ஆகவும் உள்ளது.

கல்வி தொகு

ஹரிபூர் மாவட்டத்தில் இரண்டு அரசு உதவி பெறும் முதுகலை பட்டப் படிப்பு கல்லூரிகளும், நான்கு இளங்களை பட்டப் படிப்பு கல்லூரிகளும் உள்ளன. ஹரிபூர் பல்கலைக்கழகம் 2012இல் நிறுவப்பட்டது.

2000–2001இல் ஹரிபூர் மாவட்டத்தில் 656 ஆண்கள் மற்றும் 251 பெண்கள் அரசு ஆரம்பப் பள்ளிகள் உள்ளது. மேலும் பள்ளிவாசல்கள் நிர்வாகத்தில் சமயக் கல்வி போதிக்கும் 166 மதரஸாக்கள் உண்டு. ஆரம்பப் பள்ளிகளில் 5-9 வயதுடைய 101670 மாணவ மாணவியர்கள் படிக்கின்றனர். அவர்களில் மாணவர்கள் 51.38%; மாணவிகள் 49.61%ஆக உள்ளது.

2001இல் இம்மாவட்டம் 83 நடுநிலை பள்ளிகள் கொண்டிருந்தது. (மாணவர்களுக்கு 56ம், மாணவியர்களுக்கு 27ம் ).

தொழில் வளம் தொகு

ஹரிபூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டையும், உரத் தொழிற்சாலைகளும் அதிகம் கொண்டுள்ளது. முக்கிய உரத்தொழிற்சாலைகள்; காக்டஸ் உரத் தொழிற்சாலை. எஸ் எஸ் பி உரத்தொழிற்சாலை. பாஸ்பேட் கனிமம் நாளொன்றுக்கு 500 டன் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

வேளாண் தொழில் சிறப்பாக விளங்குகிறது. பெஷாவர், இஸ்லாமாபாத்], மற்றும் பஞ்சாப் மாகாணத்திற்கு தேவையான காய்கறிகள் ஹரிபூர் மாவட்டம் உற்பத்தி செய்கிறது.

ஹரிபூரின் பிரபல நபர்கள் தொகு

  • பீல்டு மார்ஷல் அயூப்கான், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் (1958 - 1969)
  • பிர் சபிர் ஷா, முதல்வர், வடமேற்கு மாகாணம் (1996 -1997)
  • ராஜா சிக்கந்தர் சமான், முதல்வர், வடமேற்கு மாகாணம் (1901–1955)

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Information Pakistan - Districts of Pakistan". Archived from the original on 2009-03-28. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.

மேலும் படிக்க தொகு