ஆன் அரசமரபு

(ஹான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆன் அரசமரபு (The Han Dynasty) கிமு 206 தொடக்கம் கி.பி. 220 வரை 426 ஆண்டுகள் சீனாவில் நிலவிய ஒரு அரசமரபு ஆகும். இது கின் அரசமரபைத் தொடர்ந்தும், மூன்று இராச்சியங்களுக்கு முற்பட்டும் நிலை பெற்றிருந்தது. இந்த அரச மரபினர் புகழ் பெற்ற லியூ (Liu) என்னும் இனக்குழுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஆண்ட காலம் சீன வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகின்றது. சீனாவின் பெரும்பான்மைச் சமூகத்தினர் இன்றும் தம்மை ஆன் மக்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

ஆன் அரசமரபு
The Han Dynasty
漢朝
கிமு 206–கி.பி 220
கிமு 87 இல் ஆன் அரச மரபு
கிமு 87 இல் ஆன் அரச மரபு
நிலைபேரரசு
தலைநகரம்சாங்கான்
(கி.மு 206கி.பி 9)

லுவோயாங்
(கி.பி 25 - கி.பி 220)
பேசப்படும் மொழிகள்சீனம்
சமயம்
பௌத்தம், தாவோயிசம், கன்பூசியம், Chinese folk religion
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
வரலாறு 
• நிறுவனம்
கிமு 206
• கைக்சிய வேய்; சீனாவின் ஆன் ஆட்சி தொடக்கம்
கிமு 202
• ஆன் பேரரசு
கிமு 50[1] - கிபி 2[2]
9 - 24
• Abdication to காவோ வெய்
கி.பி 220
பரப்பு
6,000,000 km2 (2,300,000 sq mi)
முந்தையது
பின்னையது
கின் அரசமரபு
கவோ வேய்
ஷூ ஆன்
கிழக்கத்திய வூ
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

ஆன் அரசமரபினர் காலத்தில், சீனா அதிகாரபூர்வமாகக் கன்பூசிய மதத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டது. இக்காலத்தில் சீனா, வேளாண்மை, கைப்பணி, வணிகம் ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்திருந்ததுடன், மக்கள்தொகையும் ஐந்தரைக் கோடியைத் தாண்டியிருந்தது. அதே வேளை ஆன் பேரரசு, தனது அரசியல், பண்பாட்டுச் செல்வாக்கைக் கொரியா, மங்கோலியா, வியட்நாம், ஜப்பான், மத்திய ஆசியா முதலிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இது பின்னர் உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகக் குலைந்து போயிற்று.

ஆன் அரசமரபை இரண்டு பிரிவுகளாக அடையாளம் காண்பது உண்டு. முதலாவது, முந்திய ஆன் அரசமரபு அல்லது மேற்கத்திய ஆன் அரசமரபு என்றும், மற்றது பிந்திய ஆன் அரசமரபு அல்லது கிழக்கத்திய ஆன் அரசமரபு என்றும் அழைக்கப்படுகிறது. முந்திய ஆன் அரசமரபு, கி.மு 206 தொடக்கம் கிபி 24 வரையும் சாங்கானில் இருந்து ஆண்டு வந்தது. அடுத்தது, கி.பி 25 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 220 வரை லுவோயாங்கிலும் இருந்தது.

ஆன் பேரரசில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி

தொகு

ஆன் பேரரசில் நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு எளியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. ஏற்கனவே சிறந்திருந்த சீனப் பட்டுத்தொழில் மேலும் சிறப்புற்றது. கி.மு. 190ல் ஊயி (Hui) பேரரசனால் தொலைநோக்குப் பார்வையில் பட்டுப்பாதை உருவாக்கப்பட்டது. இதனால் சீனா, இந்தியா, இன்னும் சில ஆசிய நாடுகள், ஐரோப்பா போன்றவை மிகப்பயனடைந்தன. அரசப்பதவிகளுக்கு நாடளாவிய தேர்வுகளும் கல்வி நாட்டுடைமையும் ஆக்கப்பட்டது.[3] இன்னும் பல வளர்ச்சித் திட்டங்கள் அடிப்படை தேவைகளையும் ஆடம்பர ஆசைகளையும் நிறைவு செய்ததால் ஆன் பேரரசு காலம் சீனாவின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems research 12 (2): 219–229. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.ucr.edu/archive/vol12/number2/pdf/jwsr-v12n2-tah.pdf. பார்த்த நாள்: 12 August 2010. 
  2. Nishijima (1986), 595–596.
  3. எஸ்.எல்.வி. மூர்த்தி. "சீனா என்றொரு அதிசயம்". http://www.tamilpaper.net. http://www.tamilpaper.net. Archived from the original on 2014-03-31. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2014. {{cite web}}: External link in |publisher= and |work= (help)
  4. *Zhou, Jinghao (2003). Remaking China's Public Philosophy for the Twenty-First Century. Westport: Greenwood Publishing Group, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-275-97882-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_அரசமரபு&oldid=3543196" இலிருந்து மீள்விக்கப்பட்டது