ஏபெய் மாகாணம்

(ஹேபெய் மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏபெய் (சீனம்: 河北பின்யின்: Héběi), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். ஆன் அரசமரபு ஆட்சிக்காலத்திலிருந்த ஜி மாகாணத்திலிருந்து இது உருவானதால் 'ஜி' எனும் ஓரெழுத்துச் சுருக்கக் குறியீட்டால் குறிக்கப்படுகின்றது. இது வட சீனப்பகுதியில் அமைந்துள்ளது. ஏபெய் எனும் பெயர் "ஆற்றின் வடக்கே" எனப் பொருள்படும். இது மஞ்சள் ஆற்றுக்கு வடக்கே அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.

ஏபெய் மாகாணம்
பெயர் transcription(s)
 • சீனம் (Héběi Shěng)
 • சுருக்கம் (pinyin: Jì)
Map showing the location of ஏபெய் மாகாணம்
சீனாவில் அமைவிடம்: ஏபெய் மாகாணம்
பெயர்ச்சூட்டு hé—"(மஞ்சள்) ஆறு"
běi—"வடக்கு"
"மஞ்சள் ஆற்றின் வடக்கே"
தலைநகரம்போடிங் (1949-58, 1966)

தியாஞ்சின் (1958-65)

சிஜியாசுவாங் (1967-தற்போது)
பெரிய நகரம்சிஜியாசுவாங்
பிரிவுகள்12 அரச தலைவர், 172 கவுண்டி மட்டம், 2207 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்சா கேசி
 • ஆளுநர்சாங் கிங்வீ
 • பரப்பளவு தரவரிசை12வது
மக்கள்தொகை
 (2015)[1]
 • மொத்தம்7,33,26,101
 • தரவரிசை6வது
  அடர்த்தி தரவரிசை11வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஆன்: 96%
மஞ்சு: 3%
ஊய்: 0.8%
மொங்கோல்: 0.3%
 • மொழிகளும் கிளைமொழிகளும்Jilu Mandarin, Beijing Mandarin, Jin
ஐஎசுஓ 3166 குறியீடுCN-13
GDP (2014)CNY 2.942 ட்ரில்லியன்
US$ 478.92 பில்லியன்[2] (6வது)
 • per capitaCNY 40,124
US$ 6,531 (14வது)
HDI (2010)0.691[3] (medium) (16வது)
இணையதளம்www.hebei.gov.cn
(Simplified Chinese)
english.hebei.gov.cn (ஆங்கிலம்)
ஏபெய் மாகாணம்
சீனம் 河北
Hanyu Pinyin Héběi
சொல் விளக்கம் "(மஞ்சள்) ஆற்றின் வடக்கே"
வேறு பெயர்கள்
Simplified Chinese 直隶
Traditional Chinese 直隸
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

1928இல் சிலி மாகாணத்தை மத்திய அரசு கலைத்த பின்னர் இம்மாகாணம் உருவாக்கப்பட்டது.

பெய்ஜிங் மற்றும் தியாஞ்சின் மாநகரங்கள் ஏபேய் மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. இது வடகிழக்கில் லியாவோனிங் மாகாணத்தையும் வடக்கில் உள் மங்கோலியாவையும் மேற்கில் சாங்சி மாகாணத்தையும் தெற்கில் ஹெனான் மாகாணத்தையும் தென்கிழக்கில் சாண்டோங் மாகாணத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

வரலாறு

தொகு

சுமார் 200,000 முதல் 700,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏபெய் மாகாணத்தின் சமவெளியில் பீக்கிங் மனிதன் வாழ்ந்தான். சீனாவிம் இளவேனில்-இலையுதிர் காலம் என அழைக்கப்படும் கி.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இதன் வட பகுதி யான் அரசினாலும் தென்பகுதி ஜின் அரசினாலும் ஆட்சி செய்யப்பட்டது. கி.மு. 221 இல் கின் அரசமரப்னரால் சீனா ஒன்றாக்கப்பட்டது. பின்னர் இப்பிரதேசம் பல அரச மரபினரின் ஆட்சிக்குட்பட்டது.

புவியியல்

தொகு

ஏபெய் மாகாணத்தின் பெரும்பகுதி வட சீன சம்வெளியில் அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி தைஹாங் மலைத்தொடரில் இணைவதுடன் வடபகுதியில் யான் மலைத்தொடர் அமைந்துள்ளது. சீனப் பெருஞ் சுவர் ஏபெய் மாகாணத்தைக் கிழக்கு-மேற்காக ஊடறுத்துச் செல்கின்றது. 2882 மீட்டர் உயரமான சியாவோவுத்தாய் சிகரம் இதன் மிக உயர்ந்த இடமாகும்.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

இம்மாகாணம் 11 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 170 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 2207 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அரசியல்

தொகு

சீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார்.

பொருளாதாரம்

தொகு

2014இல், ஏபெய் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.942 ட்ரில்லியன் யுவான் ($479 பில்லியன் அமெரிக்க டொலர்[4] ஆகக் காணப்பட்டது. தனி நபர் வருமானம் 40,124 ரென்மின்பி ஆகக் காணப்பட்டது.

40% ஆன தொழிலாளர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழில்களில் ஈடுபடுகின்றனர். பிரதான பயிர்களாக கோதுமை, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, சோயா அவரை, எள் போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன.

மக்கட்பரம்பல்

தொகு

இம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். இங்கு 55 இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் மஞ்சு இனக்குழு (2.1 மில்லியன் மக்கள்), ஊய் இனக்குழு (6 இலட்சம் மக்கள்) மற்றும் மொன்கோல் இனக்குழு (1.8 இலட்சம் மக்கள்) என்பன முக்கியமானவை.

2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இனப்பரம்பல்
இனம் மக்கட்டொகை சதவீதம்
ஆன் சீனர் 63,781,603 95.65%
மஞ்சு இனக்குழு 2,118,711 3.18%
ஊய் இனக்குழு 542,639 0.78%
மொங்கோலியர் 169,887 0.26%
சுவாங் இனக்குழு 20,832 0.031%

இங்கு மக்கள் விடுதலை இராணுவ சேவையிலுள்ளோர் உள்ளடக்கப்படவில்லை.

மூலம்: Department of Population, Social, Science and Technology Statistics of the National Bureau of Statistics of China and Department of Economic Development of the State Ethnic Affairs Commission of China, eds. Tabulation on Nationalities of 2000 Population Census of China. 2 vols. Beijing: Nationalities Publishing House (民族出版社), 2003. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-105-05425-5)

போக்குவரத்து

தொகு

பெய்ஜிங் மற்றும் தியாஞ்சின் நகரங்களைச் சுற்றி இம்மாகாணம் அமைந்துள்ளதால் இந்நகரங்களிலிருந்து ஆரம்பிக்கும் பல தொடர்வண்டிப் பாதைகள் எபெய் ஊடாகச் செல்கின்றன. பெய்ஜிங்-சாங்காய் அதிவேக தொடர்வண்டிப்பாதை, பெய்ஜிங்-குவாங்சு அதிவேக தொடர்வண்டிப்பாதை ஆகியனவும் எபேய் ஊடாகச் செல்கின்றன.

சுமார் 2000 கிலோமீட்டர் நீளமான அதிவேக நெடுஞ்சாலைகளும் 40,000 கி.மீ. நீளமான நெடுஞ்சாலைகளும் எபேய் மாகாணத்திலுள்ளன.

பொகாய் கடற்கரையோரமாகப் பல துறைமுகங்களும் அமைந்துள்ளன.

ஊடகம்

தொகு

ஏபெய் தொலைக்காட்சி சேவை இம்மாகாணத்தில் ஒளிபரப்பாகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Communiqué of the National Bureau of Statistics of Peoples Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 ஏப்ரல் 2011. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. http://www.chinadaily.com.cn/m/hebei/2011-01/28/content_11935618.htm
  3. "UN Report" 《2013中国人类发展报告》 (PDF) (in சீனம்). United Nations Development Programme China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
  4. http://www.china-briefing.com/news/2012/01/27/chinas-provincial-gdp-figures-in-2011.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபெய்_மாகாணம்&oldid=3928293" இலிருந்து மீள்விக்கப்பட்டது