10கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
10கள் (10s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் இரண்டாம் பத்தாண்டைக் குறிக்கும்.
இக்கட்டுரை கிபி 10–19 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 10 முதல் 19 ஆண்டுகளைப் பற்றியது. 10களில் நடந்த நிகழ்வுகள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
10தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- பாக்டிரியா என்ற கிரேக்க வம்சம் அழிந்தது.
- பூபிளியசு கோர்னேலியசு டொலபெல்லா என்பவர் ரோமப் பேரரசின் ஆளுநரானார்.
11தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- ஜெர்மானியா உள்ளகம் (இன்றைய லக்சம்பேர்க், தெற்கு நெதர்லாந்து, பெல்ஜியத்தின் ஒரு பகுதி), மற்றும் ரைன் பகுதிகளை ஜெர்மானிக்கஸ் கைப்பற்றினான்.
ஆசியாதொகு
- இரண்டாம் அர்த்தபானுஸ், பார்தியாவின் (இன்றைய ஈரானின் வடகிழக்குப் பகுதி) அரசனானான்.
12தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- ரைன் ஆற்றுக்கு அப்பால் செருமனியைக் கைப்பற்ற அகத்தசு ஆணையிட்டான்.
- செருமானிக்கசு மற்றும் கப்பித்தோ ஆகியோர் உரோமைத் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.
- ஆர்மீனியாவின் அர்த்தாசியாட் வம்சம் உரோமர்களால் அழிக்கப்பட்டது.
அறிவியலும் கலையும்தொகு
- உரோமைக் கவிஞர் ஆவிட் உரோமை நாட்காட்டியில் காட்டப்பட்டிருக்கும் விழாக்கள் பற்றி 6 நூல்களை எழுதினார்.
13தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- ஒசுரீன் நாட்டின் அரசனாக எதெசாவின் அப்காரசு மீண்டும் முடி சூடினான்.
- செருமனியின் மீதான வெற்றியை அடுத்து திபேரியசு உரோமை நகரினூடாகத் தனது வெற்றி ஊர்வலத்தை நடத்தினான்.
ஆசியாதொகு
- சீனாவின் சின் வம்சத்தின் சிச்சியாங்கோ காலத்தின் இறுதி (3வது) ஆண்டு.
14தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- உரோமைப் பேரரசை நிறுவிய அகஸ்ட்டஸ் இறக்கிறான். இவன் கடவுளாக அறிவிக்கப்படுகிறான்.
- அகஸ்டசின் பெறாமகன் திபேரியசு பேரரசன் ஆகிறான்.
- அகஸ்டசின் இறப்பை அடுத்து ரைன் ஆற்றின் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்;[1] செருமானிக்கசு, துரூசசு ஆகியோர் கிளர்ச்சியை அடக்கினர்.
- செருமனியின் படைத்தளபதியாக செருமானிக்கசு நியமிக்கப்பட்டான். இவன் நடத்திய போர் 16 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.[2]
- செருமனியின் ரூர் ஆற்றுக் கரைகளில் வாழ்ந்த மார்சி இனத்துக்கெதிராக செருமானிக்கசு பெரும் தாக்குதலை நடத்தினான். மார்சி இனத்தவர் பலர் கொல்லப்பட்டனர்.[3]
- கணக்கெடுப்பு ஒன்றின் படி, உரோமைப் பேரரசில் 4,973,000 குடிமக்கள் வாழ்ந்தனர்.
ஆசியாதொகு
- சீனாவை பஞ்சம் தாக்கியது. சீனர்கள் பலர் தன்னின உயிருண்ணிகளாயினர்.
15தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- எமோனா (இன்றைய லியுப்லியானா) அமைக்கப்பட்டது.
- செருமானிக்கசு ஆர்மீனியசுடன் டுயூட்டபுர்க் என்னுமிடத்தில் போரிட்டான்.
- ஆர்மீனியசின் மனைவி துஸ்நெல்டாவை செருமானிக்கசு கைப்பற்றினான்.[4]
- டைபர் ஆறு பெருக்கெடுத்ததில் உரோமை நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.[5]
16தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- செருமானிக்கசின் தலைமையில் 50,000 உரோமை இராணுவத்தினர் செருமனியின் இராணுவத் தளபதி ஆர்மீனியசை வேசர் ஆற்று மோதலில் தோற்கடித்தனர்.[6]
- செருமானிக்கசின் படையினர் செருமனியரை வெற்றி கொண்டு திரும்பும் வழியில், பலத்த புயலில் சிக்கி பெரும்பாலான படையினரை இழந்தனர்.[7]
17தொகு
இடம் வாரியாகதொகு
உரோமப் பேரரசுதொகு
- மே 26 - செர்ருஸ்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்ரின் மேற்கே உள்ள செருமனியப் பகுதிகளை வெற்றி கொண்ட செருமானிக்கசு ரோம் திரும்பினான்.[8]
- கப்படோசியா (அனத்தோலியா) உரோமை மாகாணமானது.
ஐரோப்பாதொகு
- செருமானியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
இசுரேல்தொகு
- முதலாம் ஏரோதுவின் மகன் எரோட் அண்டிபாசு கலிலேயக் கடலின் மேற்குக் கரையில் திபேரியு நகரை அமைத்தான்.
ஆசியாதொகு
- அனத்தோலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சார்டிசு உட்படப் பல நகரங்கள் அழிந்தன.
கலைதொகு
- அப் ஊர்பி கொண்டிட்டா பற்றிய 142 பாகங்கள் அடங்கிய நூலை லிவி என்பவர் வெளியிட்டார்.
18தொகு
இடம் வாரியாகதொகு
ரோமப் பேரரசுதொகு
- செருமன் குடித் தலைவன் அர்மீனியசு மார்க்கோமன்னி இராச்சியத்தை அழித்தான்.
சிரியாதொகு
- உரோமைப் பேரரசின் புதிய தளபதியாக செருமானிக்கசு சீசர் சிரியா சென்றடைந்தான்.
பார்த்தியாதொகு
- செருமானிக்கசு பார்த்தியாவின் இரண்டாம் அர்த்தபானுசுவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தான். இதன் படி அவன் ரோமின் நண்பனாகவும், அரசனாகவும் அங்கீகரிக்கப்பட்டான்.
சீனாதொகு
- மஞ்சள் ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களை அடக்க வாங் மாங் அரசன் ஒரு இலட்சம் பேரடங்கிய இராணுவத்தினரை அங்கு அனுப்பினான்.
இந்தியாதொகு
- இந்தியாவில், இந்தோ-பார்த்தியர்கள் தக்சசீலாவைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்தனர்.
19தொகு
ரோமப் பேரரசுதொகு
- பேரரசர் டைபீரியசு எகிப்தியர்களை ரோம நகரத்திலிருந்து வெளியேற்றினார். மேலும் 4,000 யூதர்களை சிசிலியிலிருந்து வெளியேற்றினார்.
சிரியாதொகு
- பார்தியாவின் முதலாம் வொனொனெசு சிசிலியாவிற்கு நகர்த்தப்படுகிறார். அங்கிருந்து தப்பித்தாலும் கொல்லப்படுகிறார்.
ஆசியாதொகு
- சீன சின் வம்ச டியான்பெங் யுகத்தின் கடைசி ஆண்டாகும் (ஆறாம்).
- ஹன்சூவின்படி முதல் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது.