அம்ரிதா ராவ்
அம்ரிதா ராவ் (Amrita Rao கன்னடம்: ಅಮೃತಾ ರಾವ್, இந்தி: अमृता राव); IPA: [əmrita raʊ]; பிறப்பு: சூன் 7, 1988)[1] என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக பாலிவுட் திரைப்படங்களிலும், தெலுங்கு மொழியில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான அப் கி பராஸ் என்னும் திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் வெளியான விவாஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[2]
அம்ரிதா ராவ் | |
---|---|
2019 இல் வெளியான சிங் சாப் தெ கிரேட் திரைப்பட வெளியீட்டின் போது | |
பிறப்பு | அம்ரிதா தீபக் ராவ் 7 சூன் 1988 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2002 – தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | ஆர். ஜே. அன்மோல் |
உறவினர்கள் | பிரீத்திகா ராவ்(சகோதரி) தீபக் ராவ் (தந்தை) |
2004 ஆம் ஆண்டில் வெளியான மெயின் ஹூ நா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஸ்டார் டஸ்ட் விருது மற்றும் 2008 இல் வெளியான வெல்கம் டூ சஜ்னாபூர் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்த 50 விருப்பமான பெண்களில் ஒருவராகத் தேர்வானார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் 1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை தீபக் ராவ் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.[4] இவரின் சகோதரி பிரீத்திகா ராவ் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் கனோசா பெண் துறவியர் மடத்தில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். சோபியா கல்லூரியில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[5] அம்ரிதா ராவின் தாய்மொழி தெலுங்கு ஆகும். மேலும் இவர் மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பேசுகிறார்.[4]
தொழில் வாழ்க்கை
தொகு2002-2006
தொகுதிரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக தனது கல்லூரிக் காலங்களில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஊ பியார் மேரா எனும் இசை நிகழ்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[6]
2002 ஆம் ஆண்டில் வெளியான அப் கி பராஸ் எனும் கனவுருப்புனைவு திரைப்படத்தில் அஞ்சலி தபார் எனும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[7][8] இவரின் கள்ளங்கபடமற்ற முகத்தோற்றம் மற்றும் நடனத் திறமை, நடிப்புத் திறன் ஆகியவை சிறப்பாக உள்ளதாக பிளானட் பாலிவுட் விமர்சனம் செய்தது.[9] 2003 இல் ஷாஹித் கபூருடன் இணைந்து இஷ்க் விஷ்க் எனும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக 2003 ஆம் ஆண்டின் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருதுகள் (2004) போன்றவற்றைப் பெற்றார்.[10]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதனது நண்பரான அன்மோல் என்பவரை மே 15, 2016 இல் மும்பையில் திருமணம் புரிந்தார்.[11]
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுஆண்டு | விருது | வகை | திரைப்படம் | முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2003 | ஸ்டார் ஸ்கீரின் விருது | சிறந்த புதுமுக நடிகை | அப் கி பராஸ் | பரிந்துரை | |
பிலிம்பேர் விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை | பரிந்துரை | |||
2004 | ஜீ சினிமா விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை | இஷ்க் விஷ்க் | பரிந்துரை | |
சர்வதேச இந்தியத் திரைப்பட விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை | வெற்றி | |||
ஸ்டார்டஸ்ட் விருதுகள் | நாளைய பெண் நட்சத்திர நடிகை | வெற்றி | |||
2005 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த பெண் துணை நடிகை | மெயின் ஹூன் நா | பரிந்துரை | |
2007 | ஸ்டார் ஸ்கீரின் விருது | சிறந்த நடிகை | விவாஹ்| | பரிந்துரை | |
ஸ்டார்டஸ்ட் விருதுகள் | சிறந்த துணை(ஜோடி) | பரிந்துரை | |||
2009 | ஸ்டார்டஸ்ட் விருதுகள் | சிறந்த நடிகை | வெலகம் டூ சஞ்சனாபூர் | வெற்றி |
பிற விருதுகள்
தொகுஆண்டு | விருது | வகை | திரைப்படம் | முடிவு | குறிப்புகள். |
---|---|---|---|---|---|
2004 | சான்சுயி விருதுகள் | சிறந்த அறிமுக நடிகை | இஷ்க் விஷ்க் | வெற்றி | |
2007 | GR8 பெ
ண்கள் விருதுகள் |
இளம் வயது சாதனையாளர் | விவாஹ் | வெற்றி | |
தாதாசாகெப் பால்கே விருது | வெற்றி | [12] | |||
ஆனந்ததாலோக் விருதுகள் | சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் (பெண்) | வெற்றி | |||
உலக விளையாட்டு விருதுகள் | சிறந்த துணை விருது | வெற்றி | |||
2012 | கொல்கத்தா திரை விருதுகள் | சிறந்த நடிகை | " லவ் யூ மிஸ்டர் கலகர்" | வெற்றி | [13][14] |
திரைப்பட விவரங்கள்
தொகுஇக்குறி வெளிவராத திரைப்படங்களைக் குறிக்கும் |
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | இதர குறிப்புகள் |
---|---|---|---|
2002 | அப் கே பராஸ் | அஞ்சலி தாபர்/நந்தினி | |
த லெஜண்ட் ஆஃப் பகத் சிங் | மன்னேவாலி | ||
2003 | இஷ்க் விஷ்க் | பாயல் மேஹ்ரா | பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
2004 | மஸ்தி | அஞ்சல் மேத்தா | |
மை ஹூன் நா | சஞ்சனா (சஞ்சு) பக்ஷி | பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். | |
தீவார் | ராதிகா | ||
2005 | வாஹ்! லைப் ஹோ டு ஐசி (2005) | பிரியா | |
ஷிக்கார் | மாத்வி | ||
2006 | பியாரே மோஹன் | பியா | |
விவாஹ் | பூனம் | ||
2007 | ஹேய் பேபி | ஹேய் பேபி பாடலில் சிறப்புத் தோற்றம் | |
ஆதித்தி | அம்ரிதா | தெலுங்கு திரைப்படம் | |
2008 | மை நேம் இஸ் அந்தோனி கோன்சல்வெஸ் | ரியா | |
ஷௌர்யா | நீர்ஜா ரத்தோட் | சிற
தோற்றம்[15] | |
வெல்கம் டூ சாஜ்ஜன்பூர் | காம்லா | வெற்றியாளர் , ஸ்டார்டஸ்ட் சிறந்த நடிகை விருது | |
2009 | விக்டரி | நந்தினி | |
தெ கான் இஸ் ஆன் | மான்சி | ||
லைப் பாட்னர் | அஞ்சலி குமார் | கௌரவத் தோற்றம் | |
2010 | த லிஜெண்ட் ஆப் குணால் | படப்பிடிப்பில் | |
ஹம் ஆப்கே ஹேய் ஹூன் 2 | படப்பிடிப்பில் | ||
ஹூக் யா க்ரூக் | படப்பிடிப்பில் | ||
2011 | லவ் யூ மிஸ்டர் கலகர் | ரிது | |
2013 | ஜாலி எல் எல் பி | சந்தியா | |
சிங் சாப் தெ கிரேட் | சிகா சத்ருவேதி | ||
சத்தியாகிரகா | சுமித்ரா | ||
2015 | தெ லெஅன்ட் ஆஃப் குணால் | காஞ்சன்மாலா | தயாரிப்பு பணியில் |
சத்சாங் | தயாரிப்பு பணியில்[16] | ||
2018 | சஞ்சு | ஐஸ்வர்யா ராய் |
குறிப்புதவிகள்
தொகு- ↑ "Ekta, Amrita Rao share birthday". சிஃபி. IBNS. 7 June 2012. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.
- ↑ "Want to work in films which remain memorable: Amrita Rao". The Indian Express. 30 August 2015. http://indianexpress.com/article/entertainment/bollywood/want-to-work-in-films-which-remain-memorable-amrita-rao/.
- ↑ "Times 50 Most Desirable Women of 2011 : The Winners". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Times Group. 4 February 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Times-50-Most-Desirable-Women-of-2011-The-Winners/articleshow/11753716.cms. பார்த்த நாள்: 1 August 2014.
- ↑ 4.0 4.1 "Amrita Rao biography". oneindia.in. One India Entertainment. Archived from the original on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "பிராமின்". Archived from the original on 2007-03-04. பார்க்கப்பட்ட நாள் 2007-03-04.
- ↑ "Amrita Rao's Debut Hit". YouTube. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
- ↑ "Ab Ke Baras- review, responses". bollywoodhungama.com/. Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
- ↑ "Movie review- Ab Ke Baras". rediff.com/. ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
- ↑ "Ab Ke Baras- Movie review (Planet Bollywood )". planetbollywood.com/. Planet Bollywood. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
- ↑ "IIFA Through the Years : Singapore". International Indian Film Academy Awards. Archived from the original on 20 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
- ↑ Amrita Rao’s husband RJ Anmol announces their marriage on Facebook; read here. The Indian Express (15 May 2016).i Retrieved on 15 May 2016.
- ↑ "திலீப் குமார் வில் ரிசீவ் த தாதாசாஹேப் பால்கேஅகாடெமி அவார்ட் ஆன் ஏப்ரல் 30- நியூஸ்-நியூஸ் & கோசிப்-இண்டியாடைம்ஸ் - மூவிஸ்". Archived from the original on 2009-01-11. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
- ↑ "Most Promising Actress trophy for Vivah.". The Telegraph. ABP Group. 20 November 2006. http://www.telegraphindia.com/1061120/asp/calcutta/story_7024807.asp. பார்த்த நாள்: 13 August 2014.
- ↑ "List of Awardees" (PDF). kalakarawards.co/. Kalakar Awards. Archived from the original (PDF) on 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
- ↑ இந்தியாFM கட்டுரை
- ↑ "Amrita Rao to feature in Prakash Jha's next, 'Satsang'". Pinkvilla (Pinkvilla). 10 September 2015 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303161307/http://www.pinkvilla.com/entertainment/news/340987/amrita-rao-feature-prakash-jhas-next-satsang. பார்த்த நாள்: 24 February 2016.