அரிதான இனம்
அரிதான இனம் (Rare species) என்பது மிகவும் அரிதான, எண்ணிக்கை குறைந்த அல்லது எப்போதாவது காணக்கூடிய உயிரினங்களாகும்.
விளக்கம்
தொகுஅரிதான இனம் என்பது மிகவும் அரிதான, எண்ணிக்கை குறைந்த அல்லது எப்போதாவது காணக்கூடிய உயிரினங்களாகும். அரிதான இனம் என்பதைத் தாவரம் அல்லது விலங்கு உயிரலகிற்கு பயன்படுத்தப்படலாம். மேலும் இது அருகிய இனம் அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளானது என்ற சொல்லிலிருந்து வேறுபட்டது. தேசிய அரசாங்கம், மாநிலம் அல்லது மாகாணம் போன்ற ஒரு அலுவல் பூர்வ அமைப்பால் ஒரு அரிய இனத்தினை உருவாக்கலாம். குறிப்பிட்ட அளவுகோல்களைக் குறிப்பிடாமல் இந்த சொல் பொதுவாகத் தோன்றுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் பொதுவாக இத்தகையப் பெயர்களை உருவாக்காது. ஆனால் அறிவியல் விவாதங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.[1]
உலகெங்கிலும் 10,000க்கும் குறைவான எண்ணிக்கையிலான உயிரினங்கள் இத்தகையப் பிரிவின் கீழ் வருகின்றன. மிகக் குறுகிய உள்ளூர் வரம்பு அல்லது வாழிடத் துண்டாக்கம் இந்த அரிதான இனக் கொள்கையினை முன்மொழிகிறது.[2][3] அறியப்பட்ட உயிரினங்களில் கிட்டத்தட்ட 75% "அரிதானது" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.[4]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தனிமைப்படுத்தப்பட்ட புவியியல் இடங்களில் காணப்படும் உயிரினங்களுக்கான பெயராக "அரிதான" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இவை ஆபத்தானவை அல்ல, ஆனால் "ஆபத்தில் உள்ளவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.[5][6]
ஒரு இனம் ஆபத்தானதாகவோ அல்லது பாதிக்கப்படக்கூடியதாகவோ இருக்கலாம். ஆனால் இது பெரிய, சிதறடிக்கப்பட்ட எண்ணிக்கையினைக் கொண்டிருந்தால் அரிதாகக் கருதப்படாது. அரிதான இனங்கள் பொதுவாக அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இதன் சிறிய எண்ணிக்கையின் காரணமாகச் சுற்றுச்சூழல் பேரழிவுகளிலிருந்து மீள முடியாத்தாக உள்ளது.[சான்று தேவை]
அரிதான இனங்கள் சிறிய மக்கள்தொகை கொண்ட இனங்களாக உள்ளன. எதிர்மறையான காரணிகள் தொடர்ந்து செயல்பட்டால், இவை ஆபத்தான அல்லது பாதிக்கப்படக்கூடிய வகைக்குள் செல்கிறது. அரிதான உயிரினங்களின் எடுத்துக்காட்டுகளில் இமயமலை பழுப்புக் கரடி, பாலைவன நரி, ஆசியக் காட்டெருமை மற்றும் இருவாய்ச்சி ஆகியவை அடங்கும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வேளாண் அமைச்சகத்தின் தாவரங்கள் தரவுத்தளத்தின் மூலம் ஒரு அரிய தாவரத்தின் சட்டப்பூர்வ நிலையைக் காணலாம்.
அரிய இனங்கள்
தொகுபொதுப் பெயர் | அறிவியல் பெயர் | பாதுகாப்பு நிலை | எண்ணிக்கை | உலகளாவிய வரம்பு |
---|---|---|---|---|
பாண்டா கரடி | ஐலுரோபோடா மெலனோலூகா | அழிவாய்ப்பு இனம் | 1,000 முதல் 3,000 வரை | சீனா (சிச்சுவான் மாகாணம்) |
காட்டு பாக்டிரியன் ஒட்டகம் | கேமலசு பெரசு | மிக அருகிய இனம் | 950 | கசக்கஸ்தான் / வடமேற்கு சீனா / உள் மங்கோலியா |
சிவிங்கிப்புலி | அசினோனிக்சு ஜூபாட்டசு | அழிவாய்ப்பு இனம் | 7,000 முதல் 10,000 வரை | ஆப்பிரிக்கா / தென்மேற்கு ஆசியா |
கலிபோர்னியா கழுகு | ஜிம்னோஜிப்சு கலிபோர்னியானசு | மிக அருகிய இனம் | 446 | மேற்கு வட அமெரிக்கா |
அலகோசு குராசோ | மிடு மிடு | காடுகளில் அழிந்தது | 130 (வளரிடத்தில்) | வட கிழக்கு பிரேசில் |
பிலிப்பீன் கழுகு | பிதெகோபாகா ஜெஃபெரி | மிக அருகிய இனம் | 200 இனப்பெருக்க இணைகள் | கிழக்கு லூசோன், சமர், லீடே மற்றும் மிண்டனாவ் |
கரு மென்னோடு ஆமை | நில்சோனியா நிக்ரிகன்ஸ் | காடுகளில் அழிந்தது | 150 முதல் 300 வரை ( செயற்கை வளரிட நிலையில்) | சிட்டகாங்கில் உள்ள சுல்தான் பயஜித் பஸ்தாமி ஆலயம் |
மரம்-கற்றாழை | பிலோசோசெரியஸ் ராபினி | மிக அருகிய இனம் | 7 முதல் 15 வரை | புளோரிடா கீஸ், மெக்சிகோ, போர்ட்டோ ரிக்கோ |
ஆந்தைக் கிளி | ஸ்ட்ரிகோப்சு ஹப்ரோப்டிலசு | மிக அருகிய இனம் | 149 | நியூசிலாந்து |
மௌயின் ஓங்கல் | செபலோரிஞ்சசு ஹெக்டோரி மௌய் | மிக அருகிய இனம் | 55 | நியூசிலாந்து |
வாகிடா | போகோனா சைனசு | மிக அருகிய இனம் | 12 | கலிபோர்னியா வளைகுடா (மெக்சிகோ) |
நௌபான் | நௌபான் இப்ராஹிம் | மிக அருகிய இனம் | 1 | ஜி.புளூவிங் (மாலத்தீவு) |
மேலும் பார்க்கவும்
தொகு- மிகுதி (சூழலியல்)
- பல்லுயிர் செயல் திட்டம்
- செலோனாய்டிஸ் நிக்ரா அபிங்டோனி
- பொதுவான இனங்கள்
- கிரிடிகல் டிபன்சேஷன்
- அழிந்து வரும் உயிரினங்கள் மீட்பு திட்டம்
- அரிய உயிரினங்கள் பாதுகாப்பு மையம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assessment Process". www.iucnredlist.org. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14.
- ↑ R. MacNally and G. W. Brown, Reptiles and Habitat Fragmentation in the Box-ironbush Forests of Central Victoria, Australia: Predicting Compositional Change and Faunal Nested-ness, Oecologia 128:116–125 (2001).
- ↑ Prendergast, J. R.; Quinn, R. M.; Lawton, J. H.; Eversham, B. C.; Gibbons, D. W. (1993-09-23). "Rare species, the coincidence of diversity hotspots and conservation strategies" (in en). Nature 365 (6444): 335–337. doi:10.1038/365335a0. Bibcode: 1993Natur.365..335P.
- ↑ Dinerstein, Eric (2013) The Kingdom of Rarities. Island Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610911955.
- ↑ "Rare Species". www.encyclopedia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-15.
- ↑ "IUCN – A brief history" இம் மூலத்தில் இருந்து 2017-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171115083201/https://www.iucn.org/node/29228.
வெளி இணைப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- கோர்புனோவ், ஒய்.என்., டிசிபோவ், டி.எஸ்., குஸ்மின், இசட்.ஈ. மற்றும் ஸ்மிர்னோவ், ஐ.ஏ. 2008. அரிதான மற்றும் அச்சுறுத்தப்பட்ட தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான தாவரவியல் பூங்காவிற்கான வழிமுறை பரிந்துரைகள் . பொட்டானிக் கார்டன்ஸ் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (பிஜிசிஐ).