ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை

ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை (Coastline of Andhra Pradesh) வங்காள விரிகுடாவில் இந்திய தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இக்கடற்கரை பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முன்னாள் நிர்வாகப் பிரிவான வடக்கு சர்க்கார் மாவட்டங்களின் ஒரு பகுதியாகும். 975 கிமீ (606 மைல்) நீளம் கொண்ட இக்கடற்கரை குசராத்து மற்றும் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இக்கடலோர நடைபாதையில் பல துறைமுகப்பட்டினங்கள், துறைமுகங்கள், மணல் நிறைந்த கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள், நன்னீர் ஏரிகள் மற்றும் முகத்துவாரங்கள் அமைந்துள்ளன.[1][2]

ஆந்திர பிரதேச கடலோர வழித்தடம்

புவியியல்

தொகு

இக்கடற்கரையானது சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரத்திலிருந்து திருப்பதி மாவட்டம் வரை நீண்டு, புவியியல் ரீதியாக ஒரிசா மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. கரையோர ஈரநிலங்கள் 1,140.7 சதுரகிலோமீட்டர் (440.4 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன.[1]

கடற்கரையோர மாவட்டங்கள்

தொகு

ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் மொத்தம் 12 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில், 4 உத்தர ஆந்திரப்பிராந்தியத்திலும், 7 கோசுட்டா ஆந்திரப்பிராந்தியத்திலும், 1 இராயலசீமா பிராந்தியத்திலும் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

பொருளாதாரம்

தொகு

சுற்றுலா

தொகு

பீமிலி கடற்கரை, ருசிகொண்டா கடற்கரை, பாவனாபடு கடற்கரை, ராமகிருட்டிணா மிசன் கடற்கரை, யாரடா கடற்கரை, வோடரேவு கடற்கரை, சூர்யலங்கா கடற்கரை மற்றும் நர்சாபூர் கடற்கரை போன்ற கடற்கரைகள் சுற்றுலாவை மேம்படுத்த இந்த மாவட்டத்தில் உள்ளன. குறிப்பாக விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கடற்கரைகள் உள்ளன.

மீன்பிடிப்பும் வளர்த்தலும்

தொகு

கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் முதன்மைத் தொழிலாக மீன் பிடித்தல், மீன்வளர்த்தல், மெல்லுடலிகள் மற்றும் இறால் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். மாநிலத்தின் புவியியல் இருப்பிடம் கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் உற்பத்தி ஆகிய இரண்டையும் இம்மக்களுக்கு அனுமதிக்கிறது. நன்னீர் மற்றும் உவர் நீர் மீன் வளர்ப்பின் காரணமாக பாரம்பரிய விவசாயத்தை விட இத்தொழில் அதிக லாபம் கொடுக்கிறது.[3][4]

கனிம வளம்

தொகு

ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பாதையில் கடற்கரை மணல், இல்மனைட்டு, இலுகோக்சென் மற்றும் மோனாசைட்டு போன்ற கனரக கனிமப் படிவுகள் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. மாநிலக் கடற்கரையில் கடற்கரை மணலில் 241 மில்லியன் டன் கனிம இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5]

சிலிக்கா மணல் இருப்பு பிரகாசம், நெல்லூர் மற்றும் குண்டூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் அவை மணல், சோடியம் சிலிக்கேட்டு, பீங்கான் மற்றும் கண்ணாடி உற்பத்தி போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கர்னூல் மாவட்டத்தின் ஓர்வகலில் குவார்ட்சைட்டுகள் காணப்படுகின்றன.[6]

கடல் வர்த்தகம்

தொகு

இடைக்காலத்தில், ஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களும் இந்தியாவின் கடற்கரையோரத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச கடற்கரையும் அவர்களது இலக்குகளில் ஒன்றாக இருந்தது. பீமுனிப்பட்டினம் போன்ற சில கடற்கரை நகரங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. கடற்கரையோரம் பெரிய, இடைநிலை மற்றும் சிறிய துறைமுகங்கள் மற்றும் பிற நாடுகளுடன் கடல் வணிகத்திற்கான மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. விசாகப்பட்டினம் துறைமுகம் கிழக்கு கடற்கரையில் உள்ள மிகப்பெரிய துறைமுகமாகும். மேலும்சிறீகாகுளம் மாவட்டத்திற்கும் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருட்டிணாப்பட்டினம் துறைமுகத்திற்கும் இடையே வேறு பல துறைமுகங்கள் இருந்துள்ளன.[7]

புயல் பாதிப்புகள்

தொகு

வங்காள விரிகுடாவில் 1892-1997 காலகட்டத்தில் கடலோரப் பகுதியில் 71 சூறாவளிகள் பதிவாகி, கடுமையான சூறாவளிகள் அடிக்கடி ஏற்படுவதற்கு அறியப்படுகிறது. நெல்லூர் மாவட்டம் 11 கடுமையான மற்றும் 21 சாதாரண புயல்களுடன் முன்னிலையில் உள்ளது. வெள்ளப் பாதுகாப்பு இல்லாதது, நீர்ப்பாசன அமைப்புகள், வடிகால் மற்றும் கரைகள் போன்ற பல காரணிகள் கடலோர மண்டலத்தில் உள்ள சொத்துக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.[8][9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Andhra Pradesh Fact File" (PDF). AP State Portal. Archived from the original (PDF) on 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 July 2014.
  2. "Length of coastline" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 21 September 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  3. AP top producer of shrimp: MPEDA - The Hindu
  4. M.A.Mannan (3 January 2013). "Fishing for a fortune". Krishna, West Godavari and Nellore: The India Today Group. பார்க்கப்பட்ட நாள் 16 July 2014.
  5. "Beach Sand deposits". Department of Mines & Geology. Archived from the original on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 16 July 2014.
  6. "Silica Sand deposits". Department of Mines & Geology. Archived from the original on 5 August 2014. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  7. "Andhra Pradesh : Opening Up Ports". AP Ports. Archived from the original on 22 July 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  8. "History of Cyclones in the AP". Disaster Management Department. Government of Andhra Pradesh. Archived from the original on 22 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  9. "Severe Cyclones in the Bay of Bengal (1970-1999)". India Meteorological Department. Archived from the original on 25 September 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.