ஆர். எஸ். என். ராயர்

மலேசிய அரசியல்வாதி

ஆர்.எஸ்.என். ராயர் எனும் சனீசுவர நேதாஜி நாயர் (ஆங்கிலம்; மலாய்: RSN Rayer எனும் Sanisvara Nethaji Rayer s/o Rajaji Rayer; சீனம்: 雷尔 (马来西亚); சாவி: رسن راير‎); (பிறப்பு: 11 சூன் 1971) என்பவர் 2018 மே மாதம் முதல் பினாங்கு, ஜெலுத்தோங் மக்களவை தொகுதியின் (Jelutong Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார்.

ஆர்.எஸ்.என். ராயர்
YB RSN Rayer
பினாங்கு ஜெலுத்தோங் மக்களவை
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மே 2018
பெரும்பான்மை38,171 (மலேசியத் தேர்தல் 2018)
38,604 (மலேசியத் தேர்தல் 2022)
பினாங்கு மாநில சட்டமன்றம்
செரி டெலிமா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
8 மார்ச் 2008 – 9 மே 2013
பெரும்பான்மை2,128
(2008 பினாங்கு சட்டமன்றத் தேர்தல்)
பினாங்கு மாநில சட்டமன்றம்
செரி டெலிமா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2013–2018
பெரும்பான்மை9,277
(2013 பினாங்கு சட்டமன்றத் தேர்தல்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Sanisvara Nethaji Rayer s/o Rajaji Rayer

11 சூன் 1971 (1971-06-11) (அகவை 52)
அலோர் ஸ்டார், கெடா, மலேசியா
அரசியல் கட்சிஜசெக (DAP)
பிற அரசியல்
தொடர்புகள்
பி.ஆர் (PR)
(2008–2015)
பாக்காத்தான் (PH)
(2015-இல் இருந்து)
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்rsnrayer.blogspot.com

இதற்கு முன்னர் இவர் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2018-ஆம் ஆண்டு வரையில், செரி டெலிமா சட்டமன்றத் தொகுதியின் (Penang State Seri Delima Constituency) உறுப்பினராகவும் இரு தவணைகள் சேவை செய்து உள்ளார்.

அரசியல் தொகு

பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) கூட்டணி; மற்றும் முந்தைய பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) கூட்டணி; ஆகியவற்றின் ஓர் உறுப்பியக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) உறுப்பினர் ஆவார்.

ஆர்.எஸ்.என். ராயர் அவர்களின் அரசியல் வாழ்க்கை 1988-இல் தொடங்கியது, மலேசியாவின் பிரபல அரசியல்வாதியான கர்பால் சிங்கின் (Karpal Singh) பொதுத் தேர்தல் பிரசாரத்தில் குறுகிய காலம் ஈடுபட்டு இருந்தார். அதன் பின்னர், ஆர்.எஸ்.என். ராயர் ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார்.

செரி டெலிமா சட்டமன்றத் தொகுதி தொகு

மலேசியப் பொதுத் தேர்தல், 2008 மற்றும் மலேசியப் பொதுத் தேர்தல், 2013 பொதுத் தேர்தல்களில் பினாங்கு மாநிலச் சட்டமன்றத் தொகுதியான செரி டெலிமா தொகுதிக்கு (Seri Delima Constituency) ஆர்.எஸ்.என். ராயர் இரண்டு முறை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஜெலுத்தோங் மக்களவை தொகுதி தொகு

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், ஆர்.எஸ்.என். ராயர், பினாங்கு ஜெலுத்தோங் மக்களவை தொகுதியில் (Jelutong Federal Constituency) போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றம் தொகு

மலேசிய நாடாளுமன்றத்தில் கர்ப்பால் சிங்கிற்கு அடுத்தபடியாக துணிச்சலுட்ன் கருத்துகளை முன் வைக்கும் மக்களவை உறுப்பினர் என்று அறியப் படுகிறார். அந்த வகையில் அவர் இரு முறை மலேசிய நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் செய்த தவறுகளுக்காக வருத்தப்பட வேண்டும்; அதற்குப் பதிலாக நாடு முழுவதும் சுற்றுலா மேற்கொள்வது தவறு; என்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.[2]

இரண்டாவது முறை வெளியேற்றம் தொகு

ஒரு கட்டத்தில் மக்களவை துணைச் சபாநாயகர் சசீட் அசுனோன் (Rashid Hasnon) கருத்துகளுக்கும் மாற்றுக் கருத்துகளை முன் வைத்தார். அதனால் 2022 மார்ச் 2-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தில் இருந்து ஆர்.எஸ்.என். ராயர் வெளியேற்றப்பட்டார்.[3][4]

2022 மார்ச் 2-ஆம் தேதி பிரதமர் நஜீப் ரசாக் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தின் போது, அமைதியாக இருக்கும்படி மக்களவை சபாநாயகர் விடுத்த கோரிக்கையை ஆர்.எஸ்.என். ராயர் ஏற்க மறுத்ததால் மலேசிய நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[4][5]

வாழ்க்கை தொகு

1995-ஆம் ஆண்டு, வழக்கறிஞர் கர்பால் சிங் சட்ட நிறுவனத்தின் (Karpal Singh & Co) மூலமாக தன் வழக்கறிஞர் மாணவர் படிப்பை (Barristers' Chambers Pupillage) ஆர்.எஸ்.என். ராயர் முடித்துக் கொண்டார். அதன் பின்னர் பிறகு மலேசிய வழக்கறிஞர் மன்றத்தில் (Malaysian Bar) அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, இவர் பினாங்கு ஜார்ஜ்டவுன், மாநகரில் நேதாஜி ராயர் சட்ட நிறுவனம் (R. Nethaji Rayer & Co.) எனும் சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது தொகு

மலேசிய அரசியல் கட்சியான் அம்னோவின் சில உறுப்பினர்களைத் தரக் குறைவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.எஸ்.என். ராயர்; மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act) கீழ் 27 ஆகத்து 2014-இல் கைது செய்யப்பட்டார்.[6]

இருப்பினும், ஆர்.எஸ்.என். ராயர் பயன்படுத்திய வார்த்தைகள் குற்றம் சாட்டப்படும் அளவிற்குத் தேசத் துரோகமாக இல்லை என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம் அவரை விடுவித்தது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "2013 General election results". The Star. The Star Publications. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.
  2. "Show some remorse, RSN Rayer tells Najib".
  3. "Melaka Polls: Health officials to keep an eye on Najib after alleged SOP violations emerge in video". The Star (in ஆங்கிலம்).
  4. 4.0 4.1 "Rayer kicked out for 20 minutes for refusing to stay silent".
  5. Chie, Kow Gah (2022-03-02). "Parliament: MP interjects Najib's debate, gets ejected". Malaysiakini.
  6. "Rayer charged with sedition". New Straits Times. 27 August 2014. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014.
  7. "Court acquits R.S.N Rayer of sedition court". 28 July 2016. http://english.astroawani.com/malaysia-news/court-acquits-r-s-n-rayer-sedition-court-112303. 

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எஸ்._என்._ராயர்&oldid=3905740" இலிருந்து மீள்விக்கப்பட்டது