இந்தியாவின் நிலவியல் அமைப்பு

இந்தியாவின் நிலவியல் வேறுபட்டது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு புவியியல் காலங்களைச் சேர்ந்த பாறைகள் உள்ளன. அவை ஈயோர்ச்சியன் சகாப்தம் வரை உள்ளன. சில பாறைகள் மிகவும் சிதைக்கப்பட்டு வளருருமாற்றங்களுக்கு ஆட்பட்டுள்ளன. பிற படிவுகளில் அண்மையில் படிவ்வு செய்யப்பட்ட அலுவியம் எனப்படும் வண்டல் மண்ணும் அடங்கும். இது இன்னும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்திய துணைக் கண்டத்தில் பெரும் அளவில் கனிம மூலங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் புதைபடிவப் பதிவு கூட ஆர்வமூட்டுவதாக உள்ளது. இதில் சுண்ணாம்புப்பாறை அடுக்கு, முதுகெலும்பிலிகள், முதுகெலும்பிகள் மற்றும் தாவர புதைபடிவங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இந்தியாவின் புவியியல் நிலப்பரப்பை தக்கானச் சரிவுகள் கோண்ட்வானா மற்றும் விந்திய மலைத்தொடர் பகுதிகள் என வகைப்படுத்தலாம்.

தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கோட்பாட்டின் படி, பூமியின் மேலோட்டத்தில் தட்டுகள்

குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திராவின் ஒரு பகுதியான மகாராஷ்டிரா முழுவதையும் தக்காணச் சரிவுகள் ஓரளவு உள்ளடக்கியது. கோண்ட்வானாவின் மற்ற பகுதிகளிலிருந்து, பிரிந்த பின் வடக்கு நோக்கி பயணித்தபோது, இந்திய தட்டு புவியியல் ஹாட்ஸ்பாட் எனப்படும் எரிமலை வளையம், ரீயூனியன் எரிமலை வளையம் ஆகியவற்றின் வழியாகச் செல்கிறது. இது இந்திய நிலைக் கண்டப்பகுதிக்கு அடியில் விரிவாக உருகுவதற்கு காரணமாக அமைந்தது. ஒரு பெரிய எரிமலை வெடிப்பினால் உருவான பசால்ட் வெள்ள நிகழ்வில் நிலைக் கண்டப்பகுதியின் மேற்பரப்பு உருகி தக்கானச் சரிவுகளை உருவாக்கியது. ரீயூனியன் எரிமலை வளையம் மடகாசுகரையும் இந்தியாவைம் பிரிக்கக் காரணமாக அமைந்தது என்றும் கருதப்படுகிறது.

ஆகியவை மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகியவை கோண்ட்வானா, விந்திய மலைத்தொடர் பகுதிகளுக்குள் அடங்கும். கோண்ட்வானா வண்டல்கள் பெரிமியன் எனப்படும் கடைத்தொல்லுயிர் ஊழி, நிலக்கரி ஊழி நேரத்தில் படிவு செய்யப்பட்ட ஆற்றுச் செயல் விளைவுப் பாறைகளின் தனித்துவமான வரிசையை உருவாக்குகின்றன. கிழக்கு இந்தியாவின் தாமோதர் மற்றும் சோன் நதி பள்ளத்தாக்குகள் மற்றும் ராஜ்மஹால் மலைகள் கோண்ட்வானா பாறைகளின் பதிவுகளைக் கொண்டுள்ளன.

இந்திய அரசின் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் இந்தியாவில் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. [1] [2] [3] அதில் ராஜ்மஹல் மலைகள் இடம்பெற்றுள்ளன.

தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு தொகு

இந்திய நிலைக் கண்டப்பகுதி ஒரு காலத்தில் பாஞ்சியா எனப்படும் மகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த நேரத்தில், இப்போது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை மடகாஸ்கர் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இணைக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் கிழக்கு கடற்கரை ஆஸ்திரேலியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜுராசிக் காலகட்டத்தில் அதாவது சுமார் 160 மா ஆண்டு ( ஐசிஎஸ் 2004), காலத்தில் பிளவுபடுதல் எனும் நிகழ்வு, நிலப்பகுதிகள் இரண்டு மகா கண்டங்களாகப் அதாவது கோண்ட்வானா (தெற்கே) மற்றும் லாராசியா (வடக்கே) எனப் பிரியக் காரணமாக அமைந்தது, . சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (ஐ.சி.எஸ் 2004), மகா கண்டம் ஆரம்பகால கிரீத்தேசியக் காலத்தில் பிளவுபடத் தொடங்கும் வரை, இந்திய நிலைக் கண்டப்பகுதி கோண்ட்வானாவுடன் இணைந்திருந்தது. இந்தியத் தட்டு பின்னர் யூரேசிய தட்டு நோக்கி, வடக்கு நோக்கி நகர்ந்தது, இது எதேனும் ஒரு தட்டில் அறியப்பட்ட வேகமாக இயக்கம் காரணமாக இருக்கலாம். சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (ஐ.சி.எஸ் 2004) இந்திய தட்டு மடகாஸ்கரில் இருந்து பிரிந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இருப்பினும் சில உயிர் புவியியல் மற்றும் புவியியல் சான்றுகள் மடகாஸ்கருக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான தொடர்பபானது இந்திய தட்டு யூரேசிய தட்டுடன் மோதிய நேரத்தில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது. 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (ஐசிஎஸ் 2004). [4] இன்றும் தொடரும் இந்த மலையுருவாக்கச் செயல்முறை,டெதிஸ் பெருங்கடல் மூடலுடன் தொடர்புடையதாகும். அதாவது ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலைத் தொடரையும், மேற்கு ஆசியாவில் காக்கேசிய வரம்பையும் உருவாக்கிய இந்த டெதிஸ் பெருங்கடலின் மூடலானது, இமய மலைத்தொடர் மற்றும் தெற்காசியாவில் திபெத்திய பீடபூமியை உருவாக்கியது. தற்போதைய ஓரோஜெனிக் நிகழ்வு ஆசிய கண்டத்தின் சில பகுதிகள் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி ஓரோஜனின் இருபுறமும் சிதைக்க காரணமாகின்றன. இந்த மோதலுடன் ஒரே நேரத்தில், இந்தியன் தட்டு அருகிலுள்ள ஆஸ்திரேலிய தட்டுக்குச் சென்று இணைந்து, இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு என்ற புதிய பெரிய தட்டை உருவாக்கியது.

புவிமேலோட்டுப் பரிணாமம் தொகு

 
கண்ப் பெயர்ச்சி காரணமாக, இந்தியத் தட்டு மடகாஸ்கரில் இருந்து பிரிந்து யூரேசிய தட்டுடன் மோதியது, இதன் விளைவாக இமயமலை உருவானது.

புவிமேலோட்டுப் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டம் ஆர்க்கியன் சகாப்தத்தில் (2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பூமியின் மேற்பரப்பின் மேல் மேலோட்டை குளிர்வித்தல் மற்றும் திடப்படுத்துவதன் மூலம் குறிக்கப்பட்டது. இது குறிப்பாக தீபகற்பத்தில் கினீஸ்கள் மற்றும் கிரானைட்டுகளின் வெளிப்பாட்டால் குறிக்கப்படுகிறது. இவை இந்திய நிலைக்கண்டப்பகுதியின் மையத்தை உருவாக்குகின்றன. ஆரவல்லி மலைத்தொடர் என்பது ஆரவாலி-டெல்லி மலைப்பிறப்புப் பட்டை என்று அழைக்கப்படும் ஆரம்பகால புரோட்டரோசோயிக் ஓரோஜனின் எச்சமாகும். இது இந்திய நிலைக் கண்டப்பகுதியை உருவாக்கும் இரண்டு பழைய பிரிவுகளில் இணைந்தது. இது சுமார் 500 கிலோமீட்டர்கள் (311 mi) வரை நீண்டுள்ளது அதன் வடக்கு முனையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட மலைகள் மற்றும் பாறை முகடுகள் வரை ஹரியானாவுக்குள் சென்று டெல்லிக்கு அருகில் முடிகிறது.

 
இந்தியாவின் காலவரிசை பிரிவுகளின் வரைபடம்
 

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "National Geological Monument, from Geological Survey of India website". Archived from the original on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  2. "Geo-Heritage Sites". pib.nic.in. Press Information Bureau. 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
  3. national geo-heritage of India, பரணிடப்பட்டது 2017-01-11 at the வந்தவழி இயந்திரம் INTACH
  4. Briggs, John C. (2003) The biogeographic and tectonic history of India. Journal of Biogeography 30:381–388