இலாவண்யா

இந்திய நடிகை

லாவண்யா (Lavanya) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் தோன்றியுள்ளார். 1990 களில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் முன் 1990 களில் தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். [2]

இலாவண்யா
பிறப்புஏ. இலாவண்யா தேவி
திசம்பர் 1, 1979 (1979-12-01) (அகவை 44)[1]
மற்ற பெயர்கள்இலாவண்யா நீலிமா
பணிநடிகை

தொழில் தொகு

லாவண்யா சென்னையில் உள்ள எம். ஏ. கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர் தமிழ்நாட்டின் ஒசூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் தோன்றிய ஆரம்பகால குறிப்பிடத்தக்க வேடங்களில் கே. எஸ். ரவிக்குமாரின் படையப்பா (1999) படத்தில் நாசரின் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்தார். மேலும் ஜோடி (1999), சேது (1999), தெனாலி (2000) ஆகிய படங்களிலும் நடித்தார். இவர் முன்னணி நடிகையாக குறிப்பாக மலையாள படமான ஆரம் இந்திரியம் (2001) சில படங்களில் நடித்தார். பின்னர் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்தார். [3] [4]

2000 களில், லாவண்யா தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்தார். வரலாற்று நாடகத் தொடரான ரோமாபுரி பாண்டியனில் ஒரு இளவரசியாக நடித்தார். [5] விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற தீமைக்கு எதிரான தர்மத்தின் வெற்றியின் கதையான, நான் தான் பாலா (2014) படத்தில் இவர் துணை பாத்திரத்தில் நடித்தார். [6]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1997 சூரிய வம்சம் ஸ்வப்னா
1998 கொண்டாட்டம் புருசோத்தமனின் மகள்
1998 உயிரோடு உயிராக அஞ்சலியின் தோழி
1999 படையப்பா சூரியபிரகாசின் மனைவி
1999 சுயம்வரம் பல்லவனின் சகோதரி
1999 சங்கமம் செல்வத்தின் சகோதரி
1999 ஜோடி உமா
1999 கண்ணுபடப்போகுதய்யா மகமகள்
1999 சேது அபிதாவின் சகோதரி
2000 தெனாலி ராஜ் தோலைக்காட்சி செய்தியாளர்
2000 கண்ணால் பேசவா சந்தியா
2001 அரம் இந்திரியம்
2001 12பி Deepa
2002 காமராசு
2002 வில்லன்
2002 சுந்தரா டிராவல்ஸ் தொலைக்காட்சி செய்தியாளர்
2002 அற்புதம் வசந்தி
2002 சமஸ்தானம் சுதா
2002 ஜகதி ஜெகதீஷ் இன் டவுன் ரசிகா மலையாளப் படம்
2002 ரன்
2003 எதிரி பிரியாவின் தோழி
2003 மிலிட்டரி நந்தினி
2003 சிந்தாமல் சிதறாமல்
2003 திருமலை உமா
2003 அலை மீராவின் தோழி
2003 ஜூட் ஈஸ்வரனின் மைத்துனி
2003 அன்பே உன்வசம்
2003 ஆஞ்சநேயா
2004 கஜேந்திரா
2006 ஐயப்ப சாமி
2006 தலைமகன் அபிராமி
2007 மணிகண்டா மணிகண்டாவின் சகோதரி
2009 சிந்தனை செய் மது
2010 பெண் சிங்கம் சிவகாமி
2010 நானே என்னுள் இல்லை வாணி
2010 ஆனந்தபுரத்து வீடு ராதிகா
2011 உச்சிதனை முகர்ந்தால் திருமதி சார்லஸ் ஆண்டனி
2013 மச்சினிச்சி
2013 திருமதி தமிழ்
2014 நான் தான் பாலா பூச்சியின் மனைவி

குறிப்புகள் தொகு

  1. "A.Lavanya Devi: South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". Nadigarsangam.org. 2009-10-30. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14.
  2. "Picture 1153161; Tamil TV Serial Actress Lavanya; New Movie Posters". Moviegalleri.net. 2017-01-31. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14.
  3. "Star Kitchen 120; Actress Lavanya Special Cooking". YouTube. 2015-12-14. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14.
  4. "Star Kitchen 121; Actress Lavanya Special Cooking". YouTube. 2015-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14.
  5. Share on FacebookShare on Twitter (2016-03-12). "Lavanya to don a new avatar — Times of India". Times of india. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14. {{cite web}}: |last= has generic name (help)
  6. "Naan Than Bala movie review". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாவண்யா&oldid=3298483" இலிருந்து மீள்விக்கப்பட்டது