உறுமி மேளம்
உறுமி மேளம் ஒரு தாள தோல் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, மலேசியாவில் உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.
|
இந்த இசைக்கருவி உறுமி மேளம், நையண்டி மேளம் ஆகிய இசைக்குழுக்களில் இடம்பெறுகிறது. தேவராட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், காவடியாட்டம் ஆகிய நிகழ்த்துக் கலைகளிலும், சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. தேவராட்டக் கலைஞர்கள் இந்தக் கருவியை தேவதுந்துபி என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால் உருவாக்கப்பட்டது என்றும் தேவருலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.[1]
வடிவமைப்பு
தொகுஉறுமி மேளம் இரண்டு முகங்கள் உடையது. இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்தக் கருவியின் ஒரு முகப்பகுதியை நீளமான வளைந்த குச்சியைக் கொண்டும் தேய்த்தும், மறுபக்கத்தில் நேரான குச்சியைக் கொண்டு தட்டியும் ஒலி எழுப்பப்படுகிறது.
வாசித்தல்
தொகுஇந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர். இந்தக் கருவியை ஒரு துணி கொண்டு கட்டி தோள்பட்டைக்கு குறுக்கே தொங்கவிட்டு நடந்தும் நின்று கொண்டும் இசைப்பர்.[1]
குழுக்கள்
தொகுமலேசியா
தொகுஉறுமி மேளமும் பாட்டும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ 1.0 1.1 ச. கோபாலகிருஷ்ணன் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். p. 195.
- வாழ்வியற் களஞ்சியம். தொகு 5.
வெளி இணைப்புகள்
தொகு- Urumi பரணிடப்பட்டது 2007-08-18 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- சிவசக்தி உறுமி மேளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- கறுப்பண்ணா சங்கிலி உறுமி
- vanamma vanamma
தொகு | தமிழிசைக் கருவிகள் |
---|---|
தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
|
நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
|
காற்றிசைக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
|
கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|
பிற | கொன்னக்கோல் | கடம் |
|