உள்ளங்கை, பாத கசிவுநோய்
உள்ளங்கை, பாத கசிவுநோய் (Hyperhidrosis) இந்நோயை உடையவர்களுக்கு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அதிக அளவு வியர்க்கும் இயல்புடையதாக அமைகிறது. உலக மக்கள் தொகையில் 5சதவிகித மக்கள், அதாவது ஏறத்தாழ 3.67 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[3] மனித உடற்செயல்களில் ஒன்று, உடலின் வெப்ப சீராக்கல் ஆகும். இதில் வியர்வை சுரப்பிகளின் பங்கு குறிப்பிடத்தக்கன ஆகும். சிலருக்கு இயற்கை விதிகளுக்குப் புறம்பாக அதிக அளவில் வியர்க்கும். குறிப்பாக, உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் வியர்வை அதிகமாக, இந்நோயால் வருகிறது.[4] எனவே, உடலின் சீரான வெப்பம் மாற்றத்திற்கு உள்ளாகிறது.[5] இதனால் அவர்கள் மனதளவிலும், உணர்ச்சி வசப்படுதலிலும், அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.[6] சமூகத்தில் சிலர், இத்தகையத் தன்மைகளைப் பெற்றிருப்பவரை, அரவமற்ற மாற்றுத்திறனாளி என்று அழைப்பர்.[7] ஏனெனில், கையால் பிடித்துச் செய்யும் வேலைகளைச் செய்யும் பொழுது, ஏற்படும் அதீத உள்ளங்கை வியர்வையால் அவர்களுக்கு, உள்ளங்கைப் பிடிப்பு போதுமான அளவு ஏற்படாமல் போகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எழுத்தருக்கு இத்தகைய நோயிருப்பின், அவர் எழுதுகோலால் பிடித்தெழுதுவதை, எளிமையாகச் செய்ய முடிவதில்லை. மேலும், வியர்வை ஏற்படும், அக்குள் போன்ற, பிற உடற்பகுதிகளில் பாக்டீரியாத் தொற்று ஏற்படுகிறது.
உள்ளங்கை, பாத கசிவுநோய் | |
---|---|
உள்ளங்கை, பாத கசிவு நோய்க்கான(hyperhidrosis), பார்வை அளவீடுகள்: இவ்வரைபடங்கள் உலர்ந்த, இயல்பற்ற, அதிக வியர்வையான, சொட்டும் வியர்வை நிலைமைகளைக் குறிக்கின்றன..[1][2] | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | தோல் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | R61. |
ஐ.சி.டி.-9 | 780.8 |
ம.இ.மெ.ம | 144110 144100 |
மெரிசின்பிளசு | 007259 |
ஈமெடிசின் | topic list |
பேசியண்ட் ஐ.இ | உள்ளங்கை, பாத கசிவுநோய் |
நோயின் இயல்பு
தொகுஅளவுக்கு அதிகமான வியர்வைச் சுரப்பு, இந்த நோயினால், ஆண், பெண், பெரியவர், சிறுவர் என வேறுபாடு அற்று மாந்தரில் நிலவுகிறது. இந்த அதீத வியர்வைச் சுரப்பு நோயை, அதன் தோற்றத்தைக் கொண்டு இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- உள்ளங்கை, பாத கசிவுநோய் (Primary focal hyperhidrosis )
- இது மரபணு (hereditary)காரணமாகத் தோன்றுவதில்லை. உடலின் இரு பகுதிகளிலும் (symmetric), ஒரே மாதிரியாகவே பெரும்பாலும் வியர்வைச் சுரக்கின்றன. குறைந்த அளவில், குறைவான உடற்பரப்பில் வியர்க்கும். மாதம்/வாரம் ஓரிரு முறை இருக்கும். மருந்துகளினாலோ பக்க விளைவுகளாகவோ, , சில நோய்களின் அறிகுறிகளாகவோத் தோன்றுவதில்லை.
- உள்ளங்கை, பாத கசிவுநோய் (Secondary generalized hyperhidrosis)
- இது மரபணுக் காரணமாகத் தோன்றுகிறது. இது சில நோய்களின் (idiopathic)அறிகுறிகளாகவும், மருந்துகளின் பக்கவிளைவுகளாகவும் தோன்றுகிறது. உடலின் நரம்பு மண்டலச் செயற்பாடு காரணமாக, இரு பகுதிகளிலும், பெரும்பாலும் வேறுபட்ட அளவில், அதாவது ஒரு பக்கம் வியர்க்கும் போது, அதே போல உள்ள உடலின் மறுபக்கம் வியர்ப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வலது உள்ளங்கையில் வியர்த்தால், இடது உள்ளங்கையில் வியர்ப்பதில்லை. உடலின் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கம்மக்கட்டை எனப்படும் அக்குள் பகுதிகளிலும், முதுகிலும், உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் அதிகமாக, மாதம் இருமுறையாவது, பொதுவாக வியர்க்கும். தூங்கும் போது, இந்த வியர்வைச் சுரப்பு, பெரும்பாலும் தோன்றுவது இல்லை.
வகைகள்
தொகுஇந்நோயாளிகளிடம் இதன் இயல்புகள் வேறுபட்டு காணப்படுகிறது. அந்த இயல்புகளைக கொண்டு பின்வருமாறு, நோயாளிகளை வகைப்படுத்தலாம்.
- ICD (International Classification of Diseases) வரம்பிட்ட பத்து குறியீடுகள் ( 1 அக்டோபர் 2015 தேதி முதல் நடைமுறையில் பின்பற்றப் படுகிறது)[8]
- L74.5 - குவிய உள்ளங்கை, பாத கசிவுநோய்
- L74.51 - முதல்நிலை குவிய உள்ளங்கை, பாத கசிவுநோய்
- L74.510 - அக்குள்
- L74.511 - முகம்
- L74.512 - உள்ளங்கை
- L74.513 - உள்ளங்கால்
- L74.519 - குறிப்பிடப் படாதது
- L74.52 - இரண்டாம்நிலை குவிய உள்ளங்கை, பாத கசிவுநோய்
- L74.8 - பிற வியர்வைச் சுரப்பியின் வியர்வைப் பிறழ்வு
- L74.9 - குறிப்பிடப்படாத வியர்வைச் சுரப்பியின் வியர்வைப் பிறழ்வு
நோயின் தாக்கம்
தொகுமுதல்நிலை தாக்க உடைய (Focal sweating) இந்நோயாளிகளின், உள்ளங்கைகள், அக்குள்கள், உள்ளங்கால்களையே அதிக வியர்வைச் சுரப்பு காணப்படும். அந்த வியர்வைச் சுரப்பு, இருபுறமும் பொதுவாக சமமாகவே இருக்கும். வாரமொன்றில், ஏதாவது ஒரு தடவையாவது, இவ்வாறான வியர்வைச்சுரப்பு காணப்படும். பொதுவாக இவ்வாறான நிலைமை 25 வயதிற்கு முன்னதாகவே தொடங்கியிருக்கும். இரவு நேரத்தில் வியர்த்தல், எதிர்பாரா உடல் இழப்பு, இதயபடபடப்பு போன்ற நோய்களின் அறிகுறிகள் இருந்தால், தவறாமல் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், இந்த அறிகுறிகள் நோயின் இரண்டாம் நிலைத் தாக்கத்தினை (Gustatory sweating) குறிப்பதாகவே பெரும்பாலும் இருக்கின்றன. மதுக்குடித்தல், புகைப்பிடித்தல், அதிகமாக காஃபி குடித்தல், அதிக நுறுமண நுகர்தல் போன்றவைகளும் இந்நோய் ஏற்பட காரணிகளாக இருக்கின்றன. சூடான உணவுப் பொருட்களை உண்ணும் போது, உதடுகளைச் சுற்றி அதிகம் வியர்க்கும். சில நேரங்களில் எக்காரணமுமின்றி, இத்தகைய வியர்வைச்சுரப்பு, அவ்விடத்தில் நிகழும். மேலும், உடலின் ஒரு பகுதி வியர்வை அதிகமாக இருக்கும். அதுபோன்றே இருக்கும், உடலின் மறுபக்கத்தில் வியர்வை இருக்காது. இத்தகையவர் நரம்பு அடிப்படையிலான நோய்(neurologic abnormality) தாக்கத்தைப் பெற்றிருப்பர். இந்நோயாளிகளின் மேலுடை நனையும் அளவு வியர்வை சுரப்பு இருக்கும்.
நோயினால் ஏற்படும் மனஉளச்சல்கள்
தொகுஇந்த நோய் உடையவர்கள் யாரும் இறப்பதில்லை. ஆனால், அவர்களின் மனதில் ஏற்படும் ஏக்கங்களும், வாழ்வியல் இடர்களும் மனஉளச்சல்களாக மாறி, அன்றாட வாழ்வினை நடத்த இயலாத மனஊனமுற்றவர்களாக (silent handicap)மாற்றி விடுகிறது. எடுத்துக்காட்டாக;-
- இரண்டாம் நிலை நோய் தாக்குண்டவர் கைவிரல்கள் எப்பொழுதும் நனைந்து இருப்பதால், இத்தகைய நோயாளிகள் தொடுதிரை கணிமைக் கருவிகளை பயன்படுத்த இயலாது.
- குழந்தையை பெற்ற தாயினை குறிப்பிட்ட நாட்களுக்கு, அவர் குழந்தையைத் தொட, பல மேற்கத்திய மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. அதனால் பெற்றவளுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதிகமாகி வருகிறது.
- விளையாட்டுத்திறன் இருந்தும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் இவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் அவர்களுக்கு கிடைக்கும் அரசு ஊதியம் / உதவிகள் கிடைப்பதில்லை. அதனால் அத்தகையவர்களின் வாழ்வின் போக்கே மாறிவிடுகிறது.
- மேற்கத்திய நாட்டில் கைகுலுக்கி முகமன் கூறுதல், அவர்கள் பாரம்பரிய வழக்கம். அத்தகையச் செயலை, செய்ய இயலாததால், சமூக புறக்கணிப்பு மனஅழுத்தம் ஏற்படுகிறது.
- தட்டச்சுப் பணி, மேடைப்பேச்சு போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும், வரவேற்பாளர்களுக்கும் இதனால் பணி சார்ந்த மனஅழுத்தம் ஏற்படுகிறது.
- மாட்டிறைச்சி போன்ற உணவுகளால், உடலின் வியர்வை நாற்றம் அதிகமாகிறது. அதனால் பிறருடன் பழகும் வாய்ப்பைக் குறைத்துக் கொள்கின்றனர். பலர் தாங்கள் விரும்பும் உணவை, விரும்பிய அளவு உண்பதில்லை.
- மனஉளச்சலைத் தடுக்க எடுத்துக் கொள்ளப்படும் மருத்துகள் பல, (Propantheline bromide, Glycopyrronium bromide, Glycopyrronium bromide, Oxybutynin, Methantheline, Benzatropine) சில பக்கவிளைவுகளை உண்டாக்க வல்லன. அமுக்கிரா கிழங்கு இதற்கு மாற்றாக சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது.
- வியர்வை பொது இடங்களில் இருக்கும் போது, உடையில் வெளிப்படா வண்ணம் தடுக்க. நமது உடலுக்கு ஏற்ற வியர்வை அட்டைகளை வைத்துக் கொள்ளலாம். மொத்தமான பனியன்களை உடுத்திக் கொள்ளலாம். இதற்கென முதுகில் அதிகம் வியர்வை வருபவர்களுக்கு, பஞ்சு அட்டைகள் பொருத்திய உள் ஆடைகள், அக்குளில் பொருத்த வல்ல பஞ்சட்டைகள் விற்பனையில் உள்ளன.
நோய்பரவலியல்
தொகுவடஅமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 2.8% நபர்கள் இதனால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.[9] 25–64 வயதிற்கு இடைப்பட்ட ஆண், பெண் என இருபாலரிடமும் இந்நோய் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.[9] குழந்தைப்பருவத்திலும் இது காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.[9] இவற்றில் 30-50 % பாதிப்படைந்தோர், மரபியல் காரணமாகவே, இந்நோயினைப் பெற்றிருக்கின்றனர்.[9] இலங்கையில் இந்நோயின் தாக்கம்,[10] ஆண்களை விட பெண்களையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பதின்ம வயதினரையே அதிகம் காணப்படுகிறது. பொதுகணக்கெடுப்பில், 65% குடும்பத்தாரிடையே, குடும்பத்தில் ஒருவராவது, இந்நோயினால் தாக்கப்பட்டு உள்ளனர்.
நோய் கண்டறிதல்
தொகுமுதல்நிலை நோய் தாக்கத்தில், குறிப்பாக உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் ஆகிய இடங்களில், அதிக அளவு வியர்வைச் சுரப்பு இருக்கும்.[6] இரண்டாம் நிலை நோய் தாக்கத்தில், உடலின் ஒரு பக்கத்தில் வியர்வை அதிகம் சுரக்கும்.[6] இத்தகைய அறிகுறிகள் கீழ்கண்ட நோய்தாக்குதல்களினாலும், தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்வதினாலும் ஏற்பட வாய்ப்புண்டு.
நோய் காரணிகளியல்
தொகுநோய் காரணிகளியலின் படி(etiology), இந்நோயுக்குரியக் காரணிகள் பல உள்ளன. அவற்றினைக் கொண்டு, இந்நோய் தாக்கத்தினை, பின்வருமாறு இருவகையாகப் பிரிக்கலாம்.
- முதல்நிலை நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் நோய்கள் : மூளையழற்சி, பாத எரிச்சல், நீல இரப்பர் பெருங்கொப்புள நோய்க்குறி(Blue rubber bleb nevus), குருதிக் குழாய் பின்னல் தொகுதிக் கட்டி(Glomus tumor), 'டாகட்சுகி' நோய்(POEMS syndrome), கால்வெடிப்பு நோய் (trench foot)
- இரண்டாம்நிலை நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் நோய்கள் : காசநோய், மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் போது, உட்கொள்ளப்படும், சில வகை மருந்துகளாலும் எடுத்துக்காட்டு, இன்சுலின், நீரிழிவு, தைராய்டு அதிசுரப்பு நிலையிலும் (Hypethyrodism), சில அகஞ்சுரப்பிகளில் ஏற்படும் நோய் (Hyperpituitarism, Phalochromoaytoma) நிலைமைகளினாலும், சில வகைப் புற்றுநோய்களினாலும் (Lymphoma), இதய செயலிழப்பு, பதற்றம் (Anxiety), பாரிசவாதம், மாதவிடாய் நிறுத்தக் காலங்களிலும் அதிகமான வியர்வை சுரத்தல் காணப்படும்.
மரபணுத்தடம்
தொகுமரபணு : 2006 ஆம் ஆண்டில், யப்பானிலுள்ள சாகா பல்கலைக்கழகம், முதல்நிலை உள்ளங்கை வியர்த்தல் நோய்க்கு (primary palmar hyperhidrosis), gene locus 14q11.2–q13 என்ற மரபணு காரணமாக இருப்பதாகக் கண்டறிந்து உள்ளது.[11]
மருத்துவச் சோதனைகள்
தொகுஉள்ளங்கைச் சோதனை
தொகுபல நோயாளிகளைக் கண்ட மருத்துவர், சோதனைக்கு வந்தவரின் கைகளைக் கண்டு, தனது பார்வையாலேயே அவரின் நோயின் தன்மையை அறிந்து விடுவார். அதுபற்றி வலப்பக்கம் மேலுள்ள படங்கள் விவரிக்கும். அதாவது பின்வரும் உள்ளங்கை நிலைகளைக் கொண்டு, இந்நோயின் தாக்க அளவைக் கண்டறிவார். உலர்ந்த உள்ளங்கை, இயல்பான நோய் தாக்கமில்லா உள்ளங்கை, ஈரபதம் உள்ளவை, வியர்வையால் நனைந்தவை, நீரில் நனைத்து எடுத்தது போன்ற தோற்றம் உடையவை, நீர் சொட்டிக் கொண்டிருக்கும் நனைத்தெடுத்த கைகளைப் போன்றவை என, மருத்துவர் பாகுபடுத்துவார்.
சோதனைச் சாலை
தொகுஅயோடின், மாவுச் சோதனை (Iodine and starch test) : இச்சோதனையின் மூலம், ஒரு நோயாளிக்கு இந்நோய் இருக்கிறதென உறுதி செய்யப் படுகிறது. இதன்படி, முதலில் அயோடின் கரைசல் நோயாளியின் நோய் தாக்கப்பட்டுள்ளப் பகுதியில் பூசப் படுகிறது. அப்பூச்சு உலர்ந்த பிறகு, அதன் மேல் சோளமாவு தூவப் படுகிறது. அப்பொழுது அம்மாவு படர்ந்த இடம் கருமையாக மாறும். அதனைக் கொண்டு, ஒரு நோயாளியின் வியர்வை சுரப்பிகள் பாதிக்கப்பட்ட இடத்தை எளிதாகக் கண்டறிவர். இத்தகையக் கண்டறிதல், அறுவை மருத்துவர்களுக்கு மிகவும் பயனாகிறது. ஏனெனில், வியர்வை சுரப்பி அகற்ற வேண்டிய இடத்தை எளிதில் முடிவு செய்வர்.
பண்டுவம்
தொகுநோயாளிகள் இடையே தோன்றிய நோயின் தோற்றத்தின் அடிப்படையிலும், நோய் தாக்கத்திற்கு ஏற்பவும், நோயாளியின் உடற்செயலியல் நிலையையும், பிற உடல்நிலை காரணிகளையும் கணக்கில் கொண்டு, இவருக்கு மருந்து அளிக்கப்படுகிறது. அவற்றுள் சில கீழே சுருக்கமாக விவரிக்கப் படுகின்றன.
நோயினை குறைப்பதற்கான பழக்க வழக்கங்கள்
தொகுநமது உணவு, பழக்க வழக்கங்களில் மாறுபாடு செய்து கொள்வதன் மூலமாக, இந்நோயின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். உடலின் வெப்பம் சிறிது குறைந்தால் கூட, வியர்வை சுரப்பு குறைய, நிறைய உடல் தொழியியல் காரணங்கள் இருக்கிறது.
- அக்குள் போன்ற இடங்களில் வியர்வை உறிஞ்சிகளை வைத்துக் கொள்ளலாம். அங்கு உள்ள முடிகளை, வழித்து எடுத்து விடலாம். அதனால் அங்கு துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்கள் வளரா வண்ணம் தடை செய்ய முடிகிறது. எலுமிச்சை பழத்தை நறுக்கி, அந்த இடத்தில் பூச வேண்டும். பின் உலர்ந்த பிறகு, உடைகளை போட்டுக் கொள்ளலாம். இப்பூச்சானது அங்கு அந்த பாக்டீரியாக்கள் வளராமல், பெரும்பாலும் அழியும்.
- மனஉளச்சல்களைத் தவிர்க்க இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போகும் முன், அலோபதி மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அதனால், நாளடைவில் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அது குறித்து மேலே சொல்லப் பட்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, அசுவகந்தா என்ற இயற்கைப் பொருளை, அளவுடன் எடுபத்துக் கொள்ளலாம் என பரவலாகக் கருதுகின்றனர்.[12]
- அதிக நீரைப் பருகும் போது, உடலில் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைகின்றன. மேலும், உடலின் சூடும் குறைகிறது. மூலிகை டீ (புதினா, எலுமிச்சை, சேஜ் Salvia officinalis, இலவன்டுலா ) டேனிக் அமிலம் (Tannic acid) எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் உடலைக் குளிர்ச்சி அடைய வைக்கிறது. அதனால் வியர்வைச் சுரப்பு குறைகிறது.
- மருத்துவரின் வழிகாட்டுதலோடு, வெறும் வயிற்றில் செயலூட்டிய மரக்கரியை(Activated charcol) வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், மருந்துகளினால் நம் உடலில் ஏற்படும் நச்சு உறிஞ்சப் படுகிறது
- மஞ்சள் உடலின் கொழுப்பைக் குறைக்கிறது. உடலின் கொழுப்பு குறைந்தால், உடலில் சுரக்கும் வியர்வை குறையும். மேலும், மஞ்சள் பலவித தோல் நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டதாக, ஆய்வகங்களில் நிரூபிக்கப் பட்டு உள்ளது.
- பேக்கிங் சோடா (Sodium bicarbonate)வை, உடலின் வியர்க்கும் பகுதியில் பூசிக் கொள்வதினால், தோலில் தோன்றும் கிருமிகள் வளருவதில்லை. (Natural deodorant)
- வேப்பஎண்ணெய் சிறந்த கிருமிநாசினி. எனவே, மேற்பூச்சாக இதனைப் பயன்படுத்தலாம். மேலும், பாலில் ஐந்து சொட்டுகள் விட்டு, படுக்கப் போவதற்கு முன் பருகினால், உடலில் வியர்க்கும் தன்மை, பலருக்கு குறைகிறது.
- துத்தநாகம் (zinc): இச்சத்தானது, அண்ணீரகச் சுரப்பி உடலின் சுரப்பி நன்கு வேலை செய்ய உதவுகிறது. இது வியரவைச் சுரப்பிகளைக் கட்டுப் படுத்தும் திறன் உடையதாக உள்ளது.
- சுண்ணாம்புச் சத்து ( calcium), மக்னீசியம் (Magnesium) சத்தை, உடல் அதிகம் உறிஞ்சுக் கொள்ள பயன் படுகிறது. இந்த மக்னீசியம் சத்தானது, உடலின் வியர்வைச் சுரப்பிகள் சிறப்பாகச் செயற்பட உதவுகிறது. எனவே, இவையுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, வாழைப்பழ வகைகள், பழங்கள், கேரட், அவரை, ஆட்டுக்கறி போன்றவைகளில் இச்சத்து மிகுந்து காணப்படுகிறது.
- மசாலா உணவுகள் (spicy food), காபி, குடிப்பழக்கம், புகைப்பிடித்தல், புத்துணர்ச்சி பானங்கள் ( energy drinks), துரித உணவுகள் (Junk foods) முதலியவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
- குளிப்பதற்கு பாக்டீரியாக்களைக் கொல்லும் திறனுள்ள, மருத்துவ ஆலோசனைகளோடு, நமக்கு ஏற்ற, சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் குறையும்.
அலுமினியம் குளோரைடு முறை
தொகுஇம்முறையில் அலுமினியம் குளோரைடு எக்சாஐட்ரேட்டு கரைசல் (Aluminum chloride hexahydrate solution) பயன்படுத்தப்படுகிறது. அக்குள் போன்ற இடங்களில், இவ்வேதிப்பொருள் பசை போல, அடர்வாக பயன்படுத்தப் படுகிறது. இதனால் நோயின் தாக்கம் குறைந்து, நல்ல மாற்றம் ஏற்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளன.[13] இருப்பினும், இம்முறையில் தோலில் அரிப்புத் தன்மை அதிகமாவதை, நோயாளிகள் உணருகின்றனர்.
அயனியாக்கத் தொட்டி முறை
தொகுஅயனியாக்கலை ஒத்த (Tap-water iontophoresis) இம்முறையில், உப்பு அயனிகள் மின்னூட்டத்தால் வியர்வைத் தோலில் இடப்படுகின்றன. இந்நேரத்தில் நோயாளிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீர் இருக்கும் இரு பாத்திரத்தில், நோய் தாக்கிய பகுதிகள், குறிப்பாக கைகள்/கால்கள் 10 முதல் 20 நிமிடங்கள், ஒரு வாரத்திற்கு வைக்கப்படுகின்றன. ஒரு கை/கால் இருக்கும் பாத்திரத்தில், இடத்தில் மற்றொரு கை/கால் வைக்கக் கூடாது. இதே முறையில் ஒவ்வொரு வாரமும் அல்லது இரு மாதத்திற்கு ஒருமுறை வைக்கப் படுகிறது. அந்நீரில், மின்னூட்டம் இடப்படுகிறது. இம்மின்னூட்டத்தில் 15 முதல் 25 மில்லி ஆம்பியர் மின்சாரம் இருக்கும். பெரும்பாலான நேரங்களில், கூரிய கூச்ச உணர்வு அதிகமாகும் வரை மின்சாரத்தின் அளவு அதிகப் படுத்துகின்றனர். இது குறித்த பல யூடியூப் நிகழ்பாடங்கள், வீட்டிலேயே குறைந்த செலவில் அமைத்துக் கொள்ள இருக்கின்றன. இம்முறையில் நேரவிரயம் அதிகம் ஆகிறது என்று நோயாளிகள் அலுத்துக் கொண்டாலும், இதன் பலன் பக்க விளைவுகள் அற்று அதிகமாகிறது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
வீட்டில் பின்பற்ற வல்ல, எளிய முறை
தொகுஒரு 12 வோல்ட் தரவல்ல ஒரு மின்கலத்தில், இரு மின்முனைகள் (நோ் மின்முனை+எதிர்மின்முனை- இருக்கும். அவற்றின் ஒருமுனையை நோய் தாக்கிய கை/கால் வைக்கும் அளவுக்கு உள்ள ஒரு தட்டுடன் இணைக்க வைக்க வேண்டும். இவ்விதமாக இணைப்புக் கொடுப்பதற்கு முன், அத்தட்டில் உள்ளங்கை/உள்ளங்கால் மூழ்கும் அளவுக்கு, நீர் ஊற்ற வேண்டும். அந்நீரில் உப்பை கரையும் அளவுக்கு சற்று குறைவாக கரைக்க வேண்டும். பிறகு, மின் முனைகளை இணைத்த பிறகு, கையை பத்து நிமிடங்கள், உப்பு கரைசலும், மின்னூட்டம் பெற்ற, அத்தட்டுகளில் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். இதே மாதிரி, கைகளை மாற்றி, மின்னூட்டம் தந்தால், கையில் வியர்வை வரும் தன்மை குறையும். இது தொடக்க காலத்தில், வாரம் ஒருமுறை பின்பற்ற வேண்டிய மருத்துவமுறை. எனினும், மருத்துவரின் ஆலோசனைப் பெற்று, தொடர்ந்து இம்மின்அயனியாக்க முறையைப் பின்பற்றினால், இந்நோயின் பிடியில் இருந்து தப்பலாம்.
போடுலினம் மருந்துப் பொருள்
தொகுஇந்த மருந்து மகிவும் கவனத்துடன் தரவேண்டும். ஏனெனில், இது நஞ்சு வகையானது.
வாய்வழி மருந்துகள்
தொகு- காலின் வினையியலான வாய்வழி மருந்துகள்(Oral anticholinergic) நோயின் தன்மைக்கு ஏற்ப தரப்படுகிறகிறது.
- பித்தநீர் நரம்புக் கோளாறு தடுப்பு மருந்துகள்(anticholinergics) இரண்டாம் நிலை நோய் தாக்குண்டவர்களுக்கு பலனைத் தருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.[14]
அறுவை மருத்துவம்
தொகுஅறுவை முறையில் நான்கு விதமான மருத்துவ முறைகள் பின்பற்றப் படுகிறது. மூன்றும் வியர்வைச் சுரப்பியினை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப் படுகிறது.
- ஊசியின் மூலம் சரிவர இயங்காத அல்லது அளவுக்கு அதிகமாக இயங்கும் வியர்வைச் சுரப்பிகள் இனங்காணப்பட்டு, உறிஞ்சி, அகற்றப் படுகின்றன.
- வியர்வையைச் சுரக்க நரம்பு மண்டல கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகிறது. எனவே,ஒரு குறிப்பிட்ட மருந்தானது உட்செலுத்தப்பட்டு, அத்தகைய நரம்பு மண்டல தகவல்கள், குறிப்பிட்ட வியர்வைச் சுரப்பிக்கு சென்றடையாமல், தடுக்க வகைச் செய்யப் படுகிறது. இதனால், வியர்வைச் சுரப்பி நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை, நோயாளிகளின் நோயின் தன்மைக்கு ஏற்ப, வியர்வையைச் சுரப்பதில்லை. மீண்டும் இதே முறையில் மருந்து செலுத்தப்பட்டு, வியர்வை உருவாக வண்ணம், வியர்வைச் சுரப்பியைச் சுற்றி, நரம்பு மண்டல சமிக்கைகளைத் தடுக்க, தடுப்பு வளையம் உருவாக்கப் படுகிறது.
- முன்பு கூறப்பட்ட முறை போன்றே, இதிலும் நரம்பு மண்டல சமிக்கைகள் தடுக்கப்படுகின்றன. ஆனால், நிரந்தராமாக தடுக்கப் படுகின்றன. இம்முறையில், கையின், வியர்வைச் சுரப்பைத் தூண்டும், நரம்பானாது நிரந்தரமாக வெட்டப்பட்டுத் துண்டிக்கப் படுகிறது. இந்த மருத்துவம், மருந்துகளாலும் கட்டப்பாட்டுக்கு வராத நோயாளிகளுக்கே செய்யப்படுகிறது. ஒப்பீட்டு அளவில், நோயாளிகளுக்கு சிறு சிறு பக்க விளைவுகள் இருந்தாலும், மிகவும் பலன் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Roberto de Menezes Lyra, Campos JR, Kang DW, Loureiro Mde P, Furian MB, Costa MG, Coelho Mde S; Sociedade Brasileira de Cirurgia Torácica. (Nov 2008). "Guidelines for the prevention, diagnosis and treatment of compensatory hyperhidrosis.". J Bras Pneumol. 34 (11): 967–77. doi:10.1590/s1806-37132008001100013. பப்மெட்:19099105. http://www.jornaldepneumologia.com.br/detalhe_artigo.asp?id=740.
- ↑ Roberto de Menezes Lyra. (July–August 2013). "Visual scale for the quantification of hyperhidrosis.". J Bras Pneumol. 39 (4): 521–2. doi:10.1590/s1806-37132013000400018. பப்மெட்:24068276. பப்மெட் சென்ட்ரல்:4075875. http://www.jornaldepneumologia.com.br/detalhe_artigo.asp?id=2176.
- ↑ http://www.sweathelp.org/sweatsolutions-newsletter/news-blog/375-the-year-hyperhidrosis-went-mainstream.html
- ↑ James, William; Berger, Timothy; Elston, Dirk (2006). Andrews' Diseases of the Skin: Clinical Dermatology (10th ed.). Saunders. pp. 777–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7216-2921-6.
- ↑ "Hyperhidrosis". Sweat Fighter. Sweat Fighter. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015.
- ↑ 6.0 6.1 6.2 Vary JC Jr (November 2015). "Selected Disorders of Skin Appendages-Acne, Alopecia, Hyperhidrosis". The Medical Clinics of North America 99 (6): 1195–1211. doi:10.1016/j.mcna.2015.07.003. பப்மெட்:26476248.
- ↑ Swartling, Carl et al. (2011). "Hyperhidros - det "tysta" handikappet" (in Swedish). Läkartidningen 108 (47): 2428–2432.
- ↑ http://www.sweathelp.org/home/diagnosing-hyperhidrosis.html
- ↑ 9.0 9.1 9.2 9.3 Haider, A.; Solish, N (2005). "Focal hyperhidrosis: Diagnosis and management". Canadian Medical Association Journal 172 (1): 69–75. doi:10.1503/cmaj.1040708. பப்மெட்:15632408.
- ↑ http://www.jaffnadiabeticcentre.org/archives/2017
- ↑ Higashimoto, Ikuyo; Yoshiura, Koh-Ichiro; Hirakawa, Naomi; Higashimoto, Ken; Soejima, Hidenobu; Totoki, Tadahide; Mukai, Tsunehiro; Niikawa, Norio (2006). "Primary palmar hyperhidrosis locus maps to 14q11.2-q13". American Journal of Medical Genetics Part A 140A (6): 567–72. doi:10.1002/ajmg.a.31127. பப்மெட்:16470694.
- ↑ http://www.webmd.com/vitamins-supplements/ingredientmono-953-ASHWAGANDHA.aspx?activeIngredientId=953&activeIngredientName=ASHWAGANDHA
- ↑ Reisfeld, Rafael; Berliner, Karen I. (2008). "Evidence-Based Review of the Nonsurgical Management of Hyperhidrosis". Thoracic Surgery Clinics 18 (2): 157–66. doi:10.1016/j.thorsurg.2008.01.004. பப்மெட்:18557589.
- ↑ Togel B1, Greve B, Raulin C. (May–June 2002). "Current therapeutic strategies for hyperhidrosis: a review". US National Library of Medicine. National Institutes of Health.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
வெளியிணைப்புகள்
தொகு- தமிழில் இருக்கும் யாழ்ப்பாண நீரிழிவு நடுவ இணையப்பக்கத்தின், பொதுமக்களுக்குரிய விழிப்புணர்வுக் கட்டுரை
- ஆங்கிலத்தில் இருக்கும், விருது பெற்ற, இலாப நோக்கமற்ற 'வியர்வையுதவி' என்ற இணையத்தளம் உள்ளங்கை, பாத கசிவுநோயாளிகளையும், மருத்துவர்களையும், இதுகுறித்த அனைத்துலகச் செய்திகளையும், குறிப்புகளையும் தந்து ஒருங்கிணைக்கிறது.
- ஆங்கிலத்தில் இருக்கும், மருத்துவர்களுக்கான கையேட்டுக் குறிப்புகள் அடங்கிய இணையப்பக்கம்
- ஆங்கிலத்தில் இருக்கும், விரிவான மருத்துவக் கட்டுரை - முழுமையாகப் படிக்க இத்தளத்தில் இலவச உறுப்பினர் ஆக வேண்டும்.