ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி (Kayts Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் கடலையும், கிழக்கிலே யாழ்ப்பாணக் குடாவையும் எல்லைகளாகக் கொண்டு, நெடுந்தீவு, ஊர்காவற்துறை உட்பட்ட சப்த தீவுகளை உள்ளடக்கியதாகும். 1960 மார்ச் தேர்தலில் காரைநகர் இத்தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[1]

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[2]. 1989 தேர்தலில் ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் படிமம் கட்சி காலம்
1934 நெவின்ஸ் செல்வதுரை
 
சுயேட்சை 1934-1936
1936 வைத்திலிங்கம் துரைசுவாமி 1936-1947
1947 அல்பிரட் தம்பிஐயா
 
1947-1952
1952 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்/ஐதேக 1952-1956
1956 வி. ஏ. கந்தையா
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1956-1963
மார்ச் 1960
சூலை 1960
1963 வி. நவரத்தினம்
 
1963-1970
1965
1970 கா. பொ. இரத்தினம்
 
1970-1977
1977 தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

அரசாங்க சபைத் தேர்தல்கள்

தொகு

1931 தேர்தல்கள்

தொகு

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.[3] தொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.[4] இதனால், இலங்கையின் வட மாகாணத்தின் அனைத்து நான்கு தொகுதிகளிலும் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.[4]

1934 இடைத்தேர்தல்

தொகு

வட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[5] ஊர்காவற்றுறைத் தேர்தல் தொகுதியில் நெவின்ஸ் செல்வதுரை தெரிவு செய்யப்பட்டார்.[5]

1936 தேர்தல்கள்

தொகு

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 56,723 ஆவர். 1936 சனவரியில் இடம்பெற்ற தேர்தல் நியமன நாளன்று வை. துரைசுவாமியை இ. முருகேசம்பிள்ளை பிரேரிக்க, பீலிக்சு பொன்னம்பலம் அனுமதித்தார். வேறு எவரும் போட்டியிட முன்வராததால், துரைசுவாமி போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.[6]

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

1947 தேர்தல்கள்

தொகு

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
அல்பிரட் தம்பிஐயா சுயேட்சை தராசு 5,552 31.01%
  ஏ. வி. குலசிங்கம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கை 5,230 29.21%
கே. அம்பலவாணர் குடை 3,701 20.67%
வைத்திலிங்கம் துரைசுவாமி சுயேட்சை ஈருருளி 2,438 13.62%
ஜே. சி. அமரசிங்கம் விளக்கு 981 5.48%
தகுதியான வாக்குகள் 17,902 100.00%
நிராகரிக்கப்பட்டவை 502
மொத்த வாக்குகள் 18,404
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 33,045
வாக்கு வீதம் 55.69%

1952 தேர்தல்கள்

தொகு

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  அல்பிரட் தம்பிஐயா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் யானை 9,517 43.44%
ஏ. தியாகராஜா சுயேட்சை தராசு 5,649 25.78%
கிளவ் பாலசிங்கம் சுயேட்சை ஈருருளி 5,090 23.23%
  வி. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[9] கை 1,420 6.48%
சோமசுந்தரம் சேனாதிராஜா சுயேட்சை சாவி 234 1.07%
தகுதியான வாக்குகள் 21,910 100.00%
நிராகரிக்கப்பட்டவை 199
மொத்த வாக்குகள் 22,109
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 30,138
வாக்கு வீதம் 73.36%

1956 தேர்தல்கள்

தொகு

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. கந்தையா இலங்கைத் தமிழரசுக் கட்சி[9] வீடு 16,308 71.19%
அல்பிரட் தம்பிஐயா தராசு 6,599 28.81%
தகுதியான வாக்குகள் 22,907 100.00%
நிராகரிக்கப்பட்டவை 189
மொத்த வாக்குகள் 23,096
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 32,410
வாக்கு வீதம் 71.26%

1960 (மார்ச்) தேர்தல்கள்

தொகு

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. கந்தையா இலங்கைத் தமிழரசுக் கட்சி[9] வீடு 10,820 56.61%
அல்பிரட் தம்பிஐயா சுயேட்சை கப்பல் 7,574 39.63%
  வி. வி. நல்லதம்பி லங்கா சமசமாஜக் கட்சி சாவி 719 3.76%
தகுதியான வாக்குகள் 19,113 100.00%
நிராகரிக்கப்பட்டவை 186
மொத்த வாக்குகள் 19,299
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,616
வாக்கு வீதம் 75.34%

1960 (சூலை) தேர்தல்கள்

தொகு

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. கந்தையா இலங்கைத் தமிழரசுக் கட்சி[9] வீடு 12,110 81.93%
  எஸ். சேனாதிராஜா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கப்பல் 2,671 18.07%
தகுதியான வாக்குகள் 14,781 100.00%
நிராகரிக்கப்பட்டவை 151
மொத்த வாக்குகள் 14,932
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,616
வாக்கு வீதம் 58.29%

வி. ஏ. கந்தையா 1963 சூன் 4 இல் இறந்தார்.

1963 இடைத்தேர்தல்

தொகு

ஆகத்து 1963 இல் இத்தொகுதில் நடைபெற்ற இடைத்தேர்தல்முடிவுகள்:[13][14]

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[9] 14,946 76.46%
ஏ. ஜி. இராஜசூரியர் சுயேட்சை 4,602 23.54%
தகுதியான வாக்குகள் 19,548 100.00%
நிராகரிக்கப்பட்டவை 143
மொத்த வாக்குகள் 19,691
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,473
வாக்கு வீதம் 62.56%

1965 தேர்தல்கள்

தொகு

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[15]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[9] வீடு 13,558 69.98%
  என். டி. சிவஞானம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 5,816 30.02%
தகுதியான வாக்குகள் 19,374 100.00%
நிராகரிக்கப்பட்டவை 170
மொத்த வாக்குகள் 19,544
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,785
வாக்கு வீதம் 61.49%

1970 தேர்தல்கள்

தொகு

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[16]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  கா. பொ. இரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[9] வீடு 13,079 53.35%
பி. கதிரவேலு சுயேட்சை சேவல் 5,013 20.45%
வி. நவரத்தினம் சுயேட்சை தராசு 4,758 19.41%
  என். ரி. சிவஞானம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 1,667 6.80%
தகுதியான வாக்குகள் 24,517 100.00%
நிராகரிக்கப்பட்டவை 95
மொத்த வாக்குகள் 24,612
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 32,015
வாக்கு வீதம் 76.88%

1977 தேர்தல்கள்

தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[17]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  கா. பொ. இரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 17,640 64.05%
வி. நவரத்தினம் சுயேட்சை தராசு 8,673 31.49%
எம். அமிர்தலிங்கம் சுயேட்சை யானை 661 2.40%
யோகேந்திரா துரைசுவாமி சுயேட்சை கதிரை 279 1.01%
தம்பையா பரநிருபசிங்கம் சுயேட்சை மணி 185 0.67%
கே. கனகரத்தினம் சுயேட்சை சாவி 103 0.37%
தகுதியான வாக்குகள் 27,541 100.00%
நிராகரிக்கப்பட்டவை 132
மொத்த வாக்குகள் 27,673
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 36,372
வாக்கு வீதம் 76.08%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கா. பொ. இரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[18].

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "நாடு கண்ட மூன்று தேர்தல்கள்". ஈழநாடு. 12-12-1959. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1959.12.12. பார்த்த நாள்: 11 நவம்பர் 2017. 
  2. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  3. "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம்.
  4. 4.0 4.1 K T Rajasingham (22 September 2001). "Chapter 7: State Councils - elections and boycotts". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 24 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  5. 5.0 5.1 T.D.S.A.Dissanayake. "Chapter 1: Was early universal franchise a disaster?". War or Peace... Sangam. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி: pp. 6. 19 சனவரி 1936. 
  7. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.
  8. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
  10. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.
  11. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.
  12. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.
  13. Sachi Sri Kantha (26 திசம்பர் 2006). "On V. Navaratnam (1910-2006)". Ilankai Tamil Sangam. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2009.
  14. "Result of Parliamentary ByElections" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-15.
  15. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.
  16. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  17. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.
  18. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.