ஓசோன் குறைபாடு என்பது வேறுபட்ட ஆனால் தொடர்புடைய இரண்டு நிகழ்வுகளை விளக்குவதாகும். 1970ன் பிற்பகுதியில் இருந்து அவதானித்ததில் புவியின் அடுக்கு மண்டலத்தில் ஓசோனின் மொத்த அளவு ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் 8% அளவுக்கு குறைகிறது, இளவேனிற் காலத்தில் புவியின் வடதென் முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுகிறது என்பனவே அந்நிகழ்வுகள் ஆகும். இளவேனிற்காலத்தில் புவி முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுவது ஓசோன் ஓட்டை என அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், புவி முனைப் பகுதிகளின் மேற்பரப்பில், இளவேனிற் காலத்தின் போது நடைபெறுகின்றன.

Image of the largest Antarctic ozone hole ever recorded (September 2006).

துருவ பகுதிகளில் ஓசோன் துளைகள் ஏற்படுவதுக்கும் புவியின் மத்திய பகுதியில் ஏற்படுவதுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இரண்டிலும், அடோமிக் க்ளோரினும் ப்ரோமினும் வினைவேக மாற்றிகளாக செயல்பட்டு அழிவை கொண்டு வருகின்றன.[1]க்லோரோப்ளூரோகார்பன் கூட்டுகளின் ஒளி பிரிதலால் ஏற்படும் பிரியானாலும்,ப்ரோமோப்ளூரோகார்பன் கூட்டுகளின் ஒளி பிரிவினால் ஏற்படும் ஆலோனினாலும், அடுக்கு மண்டலத்தில் ஆலசன்அணுக்கள் உண்டாகின்றன.மேற்பரப்புகள் இந்த கூடுகளை வெளிவிட்டதுக்கு பின்னர், இவை அடுக்கு மண்டலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.[2] ஓசோன் குறைபாடுகள் க்லோரோப்லூரோகார்பன்கள் வெளி தள்ளப்படுவதினாலும், ஆலோன்கள் அதிகரிப்பதினாலும் ஏற்படுகின்றன.

க்லோரோப்லூரோகார்பன்கள் , அதைப்போன்று பண்புகளைக்கொண்ட மற்ற பொருட்கள் ஓசோன் குறைபாட்டு காரணிகள் (ஓசோன்-டிப்லீடிங் சப்ச்டன்சஸ் ) என்று அழைக்கப்படுகின்றன.(ODS ) புற ஊதா வெளிச்சத்திலிருந்து வெளிவரும் புற ஊதா UVB அலைநீளங்களை (270–315 nm), ஓசோன் பாளம், புவியின் காற்று மண்டலத்துக்குள் வருவதை தடுக்கிறது. ஓசோன் பாளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, CFC ,ஆலோன்கள் மற்றும் ஓசோன் குறைபாடுடன் சம்மந்தம் கொண்ட கார்பன் டெட்ராக்ளோரைட், ட்ரைக்லோரோஈதேன் போன்ற மற்ற பொருட்களை தடை செய்ய மாண்டிரியால் ப்ரோடோகோல் கைஒப்பந்தம் செய்யப்பட்டது.உயிரியல் சம்மந்தம்மான ஏராளமான குறைபாடுகள், சர்ம புற்றுநோய், செடிகளுக்கு பாதிப்பு, கடலின் ஒளிபாளத்தில் ப்லான்க்டனின் குறைபாடு போன்ற பாதிப்புக்கள் புற ஊதா கதிர்கள் நேரடியாக புவியை வந்து அடைவதால் ஏற்படுகின்றன. இது ஓசோன் குறைபாட்டினால் நடக்கிறது.

ஓசோன் வட்ட கண்ணோட்டம்

தொகு

உயிரியமின் மூன்று புறவேற்றுமையுரு ஓசோன்-உயிரியம் சக்கரத்தில் ஈடுபட்டுள்ளன: உயிரியம் அணுக்கள்(O அல்லது அடாமிக் ஆக்சிஜன்), உயிரியம் வாயு (O2 அல்லது டைஅடாமிக் ஆக்சிஜன்), மற்றும் ஓசோன் வாயு (O3 அல்லது ட்ரைஅடாமிக் ஆக்சிஜன்). அடுக்கு மண்டலத்தில் உயிரிய மூலக்கூறுகள்,புற ஊதா போடோனை உள்வாங்குவதினால் ஒளி பிரிவு ஏற்படுகிறது. இந்த போடோனின் அலைநீளம், 240 nm க்கும் குறைவாக இருக்கிறது. இதனால் ஓசோன் உருவாகிறது. இதன் மூலம் இரண்டு உயிரிய அணுக்கள் பிறக்கின்றன. இந்த உயிரியம் அணுக்கள் உயிரிய வாயுவுடன் சேர்ந்து (O2) ஒசோனை உருவாக்குகிறது.( O3). 310-200 nm க்கு நடுவே உள்ள UV ஒளியை ஓசோன் மூலக்கூறுகள் உள்ளிழுப்பதால்,ஓசோன் உயிரியம் மூலக்கூறாகவும்( O2) உயிரியம் அணுவாகவும் பிரிகிறது.உயிரியம் அணு மறுபடியும் ஒசோனை உருவாக்க உயிரியம் மூலக்கூறுடன் சேருகின்றது.இது தொடர்ச்சியான நடைமுறையாகும். இது உயிரியம் அணு ஓசோன் மூலக்கூறுடன், இரண்டு O2 மூலக்கூறுகளை உண்டாக்க, மறுபடியும் சேரும்போது ஒரு முடிவுக்கு வருகிறது. O + O3 → 2 O2

 
ஓசோனின் உலகளாவிய மாதாந்தர சராசரி மொத்த கூட்டு

ஒளி இரசாயனம் உற்பத்தியை மற்றும் மறு இணைப்பை சமன் செய்தல் மூலம் அடுக்கு மண்டலத்தில் உள்ள மொத ஓசோன் அளவை கணக்கிடலாம்.

முழுமையாக தொடர்பற்ற வினை இயக்கிகள் மூலம் ஒசோனை அழிக்க முடியும். அவற்றுள் மிகவும் முக்கியமானவை:ஹைட்ராக்சில் ராடிகல் (OH·), நைட்ரிக் ஆக்சைட் ராடிகல் (NO·), அடாமிக் க்ளோரின் (Cl·) மற்றும் புரோமின் (Br·). இவை அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனால் செய்யப்பட்ட மூலங்களை கொண்டுள்ளன.தற்சமயம், அடுக்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான OH· மற்றும் NO· இயற்கையாகப் பிறந்தன. அனால் மனிதன் செய்கின்ற செயல்களினால் அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.இந்த க்ளோரின் மற்றும் புரோமின் பொருட்கள் நிலையான கரிம கூட்டுப்பொருட்களில் காணப்படுகின்றன.எடுத்து சொல்ல வேண்டுமென்றால், க்லோரோப்லூரோகார்பன்கள் (CFCs), அடிவெளி மண்டலத்தில் அழிக்கப்படாத நிலையில் அடுக்கு மண்டலத்தை சென்று அடைகின்றன.அடுக்கு மண்டலத்தை அடைந்த Cl மற்றும் Br அணுக்கள் தாய் கூட்டுப்பொருளிலிருந்து வெளிப்படுத்தப்படுகின்றன. இது புற ஊதா ஒளியினால் நடைபெறுகிறது.எடுத்துக்காட்டுக்கு, ('h' என்பது பிளாங்க்ஸ் கான்ஸ்டன்ட், 'ν' என்பது மின்காந்தகதிர்வீச்சின் அதிர்வெண்)

CFCl3 + hν → CFCl2 + Cl

க்ளோரின் மற்றும் புரோமின் அணுக்கள் ஓசோன் மூலக்கூறுகளை பல்வேறான வினைவேக இயக்கி சக்கரங்கள் மூலம் அழிக்க முடிகிறது.அந்த சக்கரத்தைப் பற்றிய எளிமையான எடுத்துக்காட்டில்,[3] ஒரு க்ளோரின் அணு ஓசோன் மூலக்கூறு பொருளுடன் சேர்ந்து போது, ஒரு உயிரியம் அணுவையும் தன்னுள் எடுத்துக்கொள்கிறது.இதன் மூலம் ClO ஐ பிறக்கச்செய்து,சாதாரண உயிரியம் மூலக்கூறு பொருளை விட்டுச்செல்கிறது. இந்த க்ளோரின் மோனாக்சைட்(அதாவது, ClO) ஓசோனின் இரண்டாவது மூலக்கூறு பொருளுடன் சேரும் போது,(அதாவது, O3) அது, ஒரு க்ளோரின் அனுவையும் இரண்டு உயிரியம் மூலக்கூறுகளையும் உற்பத்தி செய்கிறது.இந்த வாயு நிலையை சுருக்கமாக இரசாயனவியலில் கூறலாம்:

Cl + O3 → ClO + O2

ClO + O3 → Cl + 2 O2

இதனால் ஓசோனின் அளவு குறைகிறது.மேலும் பல சிக்கலான செயல்முறைகள் அடுக்கு மண்டலத்தின் கீழ் தட்டுகளில் இருக்கும் ஒசோனை குறையச் செய்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சக்கரத்தில் ஹைட்ரஜென் க்ளோரைட் (HCl) மற்றும் க்ளோரின் நைட்ரேட் (ClONO2) பிறக்கவில்லை என்றால், ஒரு க்ளோரின் அணு ஒசோனை சுமார் இரண்டாண்டு காலத்திற்கு அழித்துக்கொண்டே இருக்கும்.(ஆகவே அது வினைவேக இயக்கி என்று அழைக்கப்படுகிறது) இந்த இரண்டாண்டு காலம் என்பது அடிவெளி மண்டலத்திற்கு சென்று திரும்பும் கால நேரமாகும்.ஒரு அணு அடிப்படையில் பார்க்கப்போனால் புரோமின் க்லோரினை விட ஒசோனை அழிப்பதில் ஒரு படி மேலானது. அனால் காற்று மண்டலத்தில் புரோமின் குறிந்த அளவில் தான் தற்சமயம் இருக்கிறது.இதன் விளைவால் க்ளோரின் மற்றும் புரோமின் காற்று மண்டலத்தில் ஓசோன் குறைய காரணமாக உள்ளன.ஒத்தவடிவ வினைவேக இயக்க சக்கரங்களில் ப்ளோரின் மற்றும் அயோடின் அணுக்கள் பங்கு கொள்கின்றன என்று ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.ஆனால் புவியின் அடுக்கு மண்டலத்தில் ப்ளோரின் அணுக்கள் தண்ணீருடனும் மீதேனுடனும் வேகமாக செயலாற்றுகின்றன. இதனால், பலமாக ஒருங்கிணைந்து இருக்கும் HF அயோடின் கொண்ட கரிம மூலக்கூறுகள்வேகமாக காற்றுமண்டலத்தின் அடி தட்டுக்கள் மீது செயலாற்றுகின்றன. இதன் காரணத்தால் போதிய அளவில் இவை அடுக்கு மண்டலத்தில் உயர முடிவதில்லை.மேலும் ஒரு தனிப்பட்ட க்ளோரின் அணு 100,000 ஓசோன் மூலக்கூறுகளுடன் செயல் படும் ஆற்றலைக்கொண்டுள்ளது.இதனுடன் சேர்ந்து, வருடா வருடம் காற்று மண்டலத்தில், க்லோரோப்லூரோகார்பனினால் வெளிப்படும் க்லோரினின் அளவு சுற்றுப்புற சூழலுக்கு மிகவும் அபாயகரமானது என்று எடுத்துக் காட்டுகின்றது.[4]

இரசாயன ஓசோனின் இழப்பு முறை

தொகு

ஓசோன் குறைய காரணமாக இருக்கும் இந்த ரசாயனங்களின் மூலக்கூறுகள் (டைக்லோரின் பெராக்சைட் {Cl2O2}) மீது நடத்தப்படும் ஆராய்ச்சிகள்,காற்று மண்டலத்தின் துருவ முனைகளில் நடக்கும் ஓசோன் குறைபாட்டைப்பற்றி கேள்வி கேட்கின்றன.காலிபோர்னியா பஸதேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் லாபரட்டரி இரசாயனவியல் அறிஞர்கள் 2007 ல், அடுக்கு மண்டலத்தில் கதிர்வீச்சுகளின் வெப்பமும் அவற்றின் நிறமாலைகளும் தீவிரத்தன்மையும், இரசாயன பொருட்கள் உடைந்து செயல் பட போதிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதில்லை என்றும் போதிய அளவில் க்ளோரின் ராடிகல்களும் வெளிபடுத்தப்படுவதில்லை என்றும் கண்டுபிடித்துள்ளனர்.ஆய்வுக்கூடங்களில் நடக்கும் சோதனைகள் முக்கியமான மூலக்கூறுகளின் சிதைவு அடுக்கு மண்டலத்தில் நாம் நினைத்ததை விடவே அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளன.[5][6][7]

இதனை ஊர்ஜிதப்படுத்த நடத்திய மற்ற சோதனைகளும் இந்த விளைவை, சிதைவின் அளவை மேற்படுத்தியே காட்டுகின்றன. புதிதாக வெளிவந்த சோதனை முடிவுகள் நிலையாக இருந்தால், பிறகு அபாயகரமான விளைவுகளை எளிதில் தவிர்க்கலாம்.[8]

ஓசோன் பாளத்தின் குறைபாடு

தொகு

ஓசோன் குறைபாடு பெரிய அளவில் அடுக்கு மண்டலத்தின் கீழ் பகுதியில் காணப்படுகின்றது.ஓசோன் துளைகளின் அளவை, ஓசோன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த சீற்றத்தில் இருக்கிறது என்று கணக்கிடுவதன் மூலம் கண்டறிய முடியாது(இது ஒரு மில்லியன் பகுதிகளில் சிலவற்றாக இருக்கின்றன). ஆனால், புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மேற்பரப்பில், மொத்த காலம் ஓசோனில்column ozone குறைவை மதிப்பிடுவதன் மூலம் கண்டறியலாம்.இதனை டாப்சன் யூனிட் (DU) கொண்டு நாம் தெளிவாக விவரிக்கலாம்.டோடல் ஓசோன் மாப்பிங் ஸ்பெக்டிரோமீடர் (TOMS) போன்ற கருவிகளைக் கொண்டு அண்டார்க்டிக் கோடை மற்றும் வசந்த காலங்களில் ஏற்படும் காலம் ஓசோன் குறைபாட்டை 1970 களில், மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் கணக்கிட்டனர்.[9]

 
ஓசோன் துளையில் வருடா வருடம் டாம்சால்(TOMS) கணக்கிடப்படும் மிகக்குறைந்த மதிப்பளவு

தெற்கு அரைகோளத்தில் வருகின்ற ஆஸ்டிரல் வசந்தத்தின் போது ஓசோன் குறைபாடு கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வரை அதிகரித்திருந்தது. அண்டார்க்டிகா மேல் உணரப்பட்ட இந்த குறைபாட்டை பார்மன் மற்றும் குழுவினர் 1985 ஆம் வருடம் கண்டறிந்தனர்.[10] 1990 கள் முழுவதிலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் காலம் ஓசோனின் அளவு ஓசோன் துளைகள் ஏற்படுவதற்கு முன்னர் இருக்கும் மதிப்பீட்டை விட 40 இலிருந்து 50 சதவிகிதம் வரை குறைந்திருந்தது.அண்டார்க்டிக்கில் தொலைந்த அளவைவிட ஆர்க்டிக் பகுதியில் தொலைந்த அளவு வருடத்துக்கு வருடம் வேறுபாடு நிக்கிறது.இதுவரை காணப்பட்டதில், பனி காலம் மற்றும் வசந்த காலம் பொழுது 30 சதவிகிதம் வரை குறையும் நிலை தான் மிகவும் கடுமையானது. இது அடுக்கு மண்டலம் மிகவும் குளிர்ந்த நிலையில் இந்த காலங்களில் இருப்பதால் நிகழ்கிறது.

துருவ அடுக்கு மண்டல மேகங்களால்(PSCs) ஏற்படக்கூடிய விளைவுகள், ஓசோன் குறைபாட்டின் மீது அதிக ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன.[11] இந்த PSC கள் மிக சுலபமாக அண்டார்க்டிக் பகுதிகளில் உள்ள அடுக்கு மண்டலத்தில் அதிகமான குளிரினால் உருவாகின்றன.இந்த காரணத்தினால் தான் அண்டார்க்டிகாவில் ஓசோன் துளைகள் முதலில் தோன்றியது மட்டும்மல்லாது அங்கு இருக்கும் துளைகள் ஆழமானவையாகவும் இருக்கின்றன.முதன் முதலில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் ஓசோன் குறைபாட்டை படிப்படியானது என்று கூறின. இது எதனால் என்றால்,நடத்திய ஆய்வுகள் PSC க்களை கணக்கில் கொள்ளவில்லை என்பதனாலே ஆகும். இந்த ஆய்வு முடிவு இப்படி இருந்ததால் அண்டார்க்டிகாவில் ஏற்பட்ட துளையை காணும்போது அது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.[மேற்கோள் தேவை]

புவியின் மத்திய நில நடுக்கோடுகள் இருக்கும் இடங்களில் ஓசோன் துளைகள் இருக்கின்றன என்று கூறாமல் ஓசோன் குறைபாடு இருக்கிறது என்று கூறலாம்.1980 களுக்கு முன்னர் குறைபாடு 35–60°N பகுதிகளில் மூன்று சதவிகிதமாகவும், 35–60°S பகுதிகளில் ஆறு சதவிகிதமாகவும் இருந்தது. இதில் எந்த ஒரு தெளிவான மற்றும் நிரந்தரமான படிவமும் தென்படவில்லை.[மேற்கோள் தேவை]

அடுக்கு மண்டலம் மற்றும் மேல் அடிவளி மண்டலத்தில் காணப்படும் தட்ப வெப்ப மாற்றங்களுக்கு இந்த குறைப்பதே காரணம்.[12][13] அடுக்கு மண்டலம் சூடாக இருப்பதற்கு ஓசோன் புறஊதா கதிர்களை தனக்குள்ளே இழுத்துக் கொள்வதே தான் காரணம். நாம் இதனால் அறிவது என்னவென்றால் குறைந்த ஓசோனால் அடுக்கு மண்டலம் குளிரும்.சில சமயங்களில் CO2 போன்ற பைங்குடில் வலிமங்களாலும் அடுக்கும் மண்டலம் குளுமையாகிறது; இருப்பினும், ஓசோனால் அதிகரிக்கும் குளிர்ந்த தன்மையின் ஆற்றலே அதிகமாக இருக்கின்றது.[மேற்கோள் தேவை]

ஓசோன் அளவுகளை முன் கூட்டியே கூறுவது என்பது கடுமையானது.மாண்டிரியால் பிரோடோகாலுக்கு ஆதரவாக வெளிவந்த வேர்ல்ட் மீடியோராலாஜிகள் ஆர்கனைசேஷன் கிலோபல் ஓசோன் ரிசர்ச் அண்ட் மானிடரிங் பிராஜக்ட் - ரிபோர்ட் எண். 44,ஓசோன் குறைபாட்டைப் பற்றி, 1994-1997 ஆண்டுகளுக்காக வெளிவந்த UNEP 1994 மதிப்பீட்டை மிகைப்படுத்தி கூறிய ஒன்றாகும் என்று கூறுகிறது.

காற்று மண்டலத்தில் இருக்கும் இரசாயனங்கள்

தொகு

காற்று மண்டலத்தில் இருக்கும் CFC க்கள்

தொகு

1920 களில் க்லோரோபிலூரோகார்பன்கள் (CFCs), தாமஸ் மிட்க்லே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.அவை, 1980 களுக்கு முன்னர், குளிர் சாதன/ பெட்டிகளில் எரோசால் ஸ்ப்ரே ப்ராபெலன்ட்ஆகவும் நுண்ணியமான மின்னணுவியல் கருவிகளை சுத்தம் செய்வதிலும் பயன்படுத்தப்பட்டன.சில இரசாயன செயல்முறைகளின் விளைப் பொருளாகவும் இவை உருவாகின்றன.இவற்றை உண்டாக்கும் இயற்கையான மூலகர்த்தாவாக எதனையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. காற்று மண்டலத்தில் இவை இருக்க காரணம் முற்றிலும் மனிதனின் செயல் தான் என்று அடித்து கூறமுடிகிறது.மேல்கூறப்பட்ட ஓசோன் சுழற்சி ஆய்வின் படி, ஒசோனை குறைக்கும் இப்படிப்பட்ட பொருட்கள் அடுக்கு மண்டலத்தை அடைந்தவுடன், அவை புற ஊதா கதிர்களால் பிரிக்கப்பட்டு, அதனால் க்ளோரின் அணுக்களை உற்பத்தி செய்கின்றன.இந்த க்ளோரின் அணுக்கள் வினை வேக ஊக்கியாக இயங்குகின்றது. ஒரு க்ளோரின் அணுவுக்கு பல பத்தாயிரக்கணக்கான ஓசோன் அணுக்களை அடுக்கு மண்டலத்திலிருந்த அகற்ற கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கிறது.CFC மூலக்கூறுகளின் ஆயுள் காலம் நீண்டிருப்பதால், இவற்றால் உண்டாகும் சேதத்தை சரி செய்வதற்கும் நெடுங்காலமாகிறது.புவியின் நிலப்பரப்பிலிருந்து, மேல் காற்று மண்டலத்திற்கு செல்ல ஒரு CFC மூலக்கூறுவுக்கு பதினைந்து ஆண்டு காலம் ஆகிறது. அங்கு செல்கின்ற CFCமூலக்கூறுகள் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு இருந்து, ஒரு நூறாயிரம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கவும் சாத்தியம் கொண்டுள்ளன.[14]

கருத்துரைகளை சரிபார்த்து கொள்ளுதல்

தொகு

சிக்கலான இரசாயன போக்குவரத்து மாதிரி படிவங்கள் மூலம், விஞ்ஞானிகளால் ஓசோன் குறைபாட்டை CFC க்களில் இருந்து வெளிவரும் ஆண்திரோபோஜெனிக் ஆலசன் சேர்மங்களுடன் அதிகமாகவே தொடர்பு படுத்த முடிகிறது. இது அவர்கள் பார்த்து அறிந்து கொள்ளும் விஷயங்களுக்கு எதிராக அமைகிறது.(எ.கா. SLIMCAT பரணிடப்பட்டது 2006-06-02 at the வந்தவழி இயந்திரம், CLaMS). இந்த மாதிரி படிவங்கள் செயற்கைக்கோள் மதிப்பிடும் இரசாயன அளவுகளையும் மீடியாராலாஜிகள் பீல்ட்களில் இருக்கும் இந்த இரசாயனங்களின் எதிர்விளைவுகளையும் சேர்த்து வைத்து, சோதனைக்கூடங்களில் நடத்தும் ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற செய்கின்றன.இதன் மூலம் அவை முக்கியமான இரசாயன விளைவுகை மட்டுமல்லாது, CFC க்கள் எவ்வாறு போடோலைசிஸ் பொருட்களை ஒசோனுடன் தொடர்பு கொள்ள வைக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஓசோன் துளை மற்றும் அதன் காரணங்கள்

தொகு
 
1984 இல் மேர்கமேரிக்கவில் தென்பட்ட ஓசோன் துளை(இயற்கைக்கு மாறுபட்ட அளவில் வெப்பம் ஏற்படுத்தியது) மற்றும் 1997 இல் மேர்கமேரிக்கவில் தென்பட்ட ஓசோன் துளை(இயற்கைக்கு மாறுபட்ட அளவில் குளிர் ஏற்படுத்தியது). மூலம்: நாசா[19]

அண்டார்க்டிக் அடுக்கு மண்டலத்தில், அண்டார்க்டிக் ஓசோன் துளை என்னும் பகுதியில் தற்போதைய ஓசோன் அளவு 33 சதவிகிதமாக அதாவது 1975 களுக்கு முன்னர் இருந்த அளவைவிட குறைந்து உள்ளது.இந்த ஓசோன் துளை அண்டார்க்டிக் வசந்த காலம் பொழுது அதாவது செப்டம்பர் முதல் டிசம்பர் முதல் பாதி வரை உருவாகின்றது. வெஸ்டேர்லீஸ் எனும் காற்று அண்டார்க்டிகா கண்டத்தை சுற்றி அடித்து காற்று மண்டல உள்ளடக்கியை உண்டாக்குகின்றது.இந்த துருவ சுழலுக்குள் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட அடுக்கு மண்டல ஓசோன், அன்டார்கிடிக்கா வசந்தம் பொழுது அழிக்கப்படுகின்றது.[15]

முன்னர் விளக்கியதிலிருந்து நம்மால், ஓசோன் குறைபாடு க்ளோரின் கொண்ட மூல வாயுக்களால் (முதன்மையாக CFC மற்றும் தொடர்புடைய ஹெலோகார்பன்கள்) உண்டாகின்றது, என்பதை உணர முடிகிறது.புற ஊதா வெளிச்சம் இருக்கும் போது, இந்த வாயுக்கள் பிரிந்து க்ளோரின் அணுக்களை வெளிப்படுத்துகின்றன. இது ஓசோன் அழிவை வேகப்படுத்துகின்றது.க்லோரினால் வேகப்படுத்தப்படும் இந்த ஓசோன் குறைபாடு, வாயு நிலையிலும் ஏற்படலாம். ஆனால் இது பெருமளவில் துருவ அடுக்கு மண்டல மேகங்களின் முன்னிலையில் தான் நடக்கின்றன.(PSCs).[16] 2008 ல் ஓசோன் குறைபாட்டின் மூல கர்த்தாவாக நைட்ரஸ் ஆக்சைட் மாறியது.(N2O), இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய காரணியாக இது இருக்க எதிர்பார்க்கப்படுகிறது.[17]

விரிக்கும் குளிரில், குளிர் காலத்தின் பொழுது தான் இந்த துருவ அடுக்கு மண்டல மேகங்கள் உருவாகின்றன.இந்த துருவ பனிக்காலம் சூரிய கதிர்வ்வீச்சுகள் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு இருட்டில் தான் இருக்கின்றன.சூரிய கதிர்கள் இல்லாதது ஒருகாரணமாக இருக்கையில், துருவ சுழல்கள் தட்ப வெப்பத்தை தன்னுள் அடைத்து காற்றை குளுமை படுத்துகிறது, மற்றொரு காரணமாக இருக்கிறது.தட்ப வெப்பம் -80 °C யை, இந்த காலத்தில் தழுவிகிறது. இந்த குறைவான தட்ப வெப்பம் மேக சிறுதுணுக்குகளை (நைட்ரிக் ஆசிடால் (Type I PSC) அல்லது பனியால் (Type II PSC)) உருவாக்குகின்றது.இரண்டு வகைகளும் இரசாயன விளைவுகள் நடக்க வழி வகுத்து கொடுக்கின்றன. இதனால் ஓசோன் அழிவும் ஏற்படுகின்றது.[மேற்கோள் தேவை]

போடோகெமிகல் நடைமுறைகள் சிக்கலானவை அனால், அவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம்.சாதாரண வேளையில் பெரும்பாலான க்ளோரின் அடுக்கு மண்டலத்தில் நிலையான சேமக்கலம் சேர்மின்களில்(முதன்மையாக ஹைட்ரோகிலோறிக் ஆசிட்(HCl) மற்றும் க்ளோரின் நைட்ரேட்(ClONO2)) இருக்கின்றன.அண்டார்க்டிக் பனி மற்றும் வசந்த காலம் போது துருவ அடுக்கு மண்டல மேக துணுக்குகளின் மேற்பரப்பில் இருக்கும் இந்த சேமக்கலம் சேர்மங்களின் எதிர்வினைகள், எதிர்வினை செய்யும் ராடிகல்களாக மாற்றுகின்றன(Cl and ClO). இந்த மேகங்கள் காற்று மண்டலத்திலிருந்து NO2வை நைட்ரிக் அச்சிடாக மாற்றுவதன் மூலம் அகற்றுகின்றன.இது புதிதாக தோன்றிய ClO, மீண்டும் ClONO2வாக மாறாமல் தடுக்கிறது.

சூரிய வெளிச்சத்தின் ஈடுபாடு ஓசோன் குறைபாட்டில் பெரிதும் இருப்பதினால் தான் அண்டார்க்டிக் பகுதியில் வசந்த காலத்தில் ஓசோன் குறைபாடு அதிகமாக இருக்க காரணமாகிறது.பனி காலத்தில் PSC க்கள் அதிக அளவில் காணப்பட்டாலும், இரசாயன எதிர்விளைவுகளை இயக்க தேவையான அளவு, துருவங்களில் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது.வசந்தம் பொழுது சூரியன் வெளிவந்து போடோகெமிகல் வினைகளை இயக்க போதிய ஆற்றலை தந்து. துருவ அடுக்கு மண்டல மேகங்களை உருக்கி சிறைப்படுத்தப்பட்ட சேர்மங்களை வெளிப்படுத்துகின்றன.[மேற்கோள் தேவை]

அழிக்கப்படுகின்ற பெரும்பாலான ஓசோன் அடுக்கு மண்டலத்தின் கீழ் பகுதியல் தான் உள்ளது. இது ஹோமொஜீனஸ் கேஸ் பேஸ் போது விளையும் ஓசோன் குறைபாட்டிற்கு எதிர்மறையாக இருக்கிறது. இது அடுக்கு மண்டலத்தின் மேல் பகுதியில் பெரும்பாலும் நடக்கிறது.[மேற்கோள் தேவை]

வசந்த காலத்தின் முடிவில் இருக்கும் சூடான தட்ப வெப்பம் டிசம்பர் நடுவில் சுழலை உடைக்கின்றது.கீழ் நில நடு கோடுகளிலிருந்து சூடான ஓசோன் நிறைந்த காற்று வருவதினால் PSC க்கள் அழிக்கப்படுகின்றன. ஓசோன் குறைபாட்டு செய்முறை தடைப்படுகின்றது. ஓசோன் துளையும் மூடிக்கொள்கிறது.[மேற்கோள் தேவை]

ஓசோன் மண்டலத்தில் இருக்கும் குறைபாட்டின் மீதான ஆர்வம்

தொகு

அண்டார்க்டிக் ஓசோன் துளையுடன் ஒப்பிடும்போது, ஒரு பத்தாண்டுக்கு நான்கு சதவிகிதமாக ஓசோன் குறைபாடு உலக அளவில் இருக்கையில் அதனை பற்றி அறிய ஆவல் மிகையாகி இருக்கிறது:

  • ஒரு அறுபதாண்டு காலத்திற்கு ஓசோன் பாளத்தின் குறைபாடு ஏழு சதவிகிதம் ஆக இருக்கும் என்று 1980 களின் ஆரம்பகாலத்தில் கூறப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]
  • திடீர் என்று 1985 இல், ஓசோன் பாலத்தில் மிகப்பெரிய துளை உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.அண்டார்க்டிகாவில் மிக வேகமாக நடக்கின்ற ஓசோன் குறைபாட்டின் மதிப்பீடு தவறானது என்ற கருத்து நிராகரிக்கப்பட்டது.[மேற்கோள் தேவை]
  • உலகில் பல இடங்களில் ஓசோன் துளைகள் தோன்ற கூடும் என்று பலரும்[மேற்கோள் தேவை] வருத்தப் பட துவங்கினார். அனால் இது நாள் வரையில் மிக பெரிய ஓசோன் துளை ஆர்க்டிக் வசந்தத்தில் வட துருவத்தில் காணப்பட்ட ஒரு சிறிய ஓசோன் துளை தான் ஆகும்.ஓசோன் மத்திய நில நடுக்கோடுகள் இருக்கும் இடங்களில் குறையத்துவங்கியுள்ளன. அனால் அவை மிக சிறிய அளவாகவே இருக்கிறது.(சுமார் 4–5% குறைவு).
  • சூழல்கள் தீவிரமாகும் நிலையில் (குளிர்ந்த அடுக்கு மண்டல தட்ப வெப்பம், அதிகரித்த அடுக்கு மண்டல மேகங்கள், செயல்படக்கூடிய க்ளோரின்), உலகளாவிய ஓசோன் குறைபாடு மிக விரைவில் நடைபெறும்.அடுக்கு மண்டலம் குளுமையாகும் என்று ஸ்டாண்டர்ட் குளோபல் வார்மிங்கோட்பாடு முன்னரே குறித்துள்ளது.[18]
  • அன்டார்க்டிகாவிலுள்ள ஓசோன் துளை உடையும் பொது அதிலிருந்து தப்பிக்கும் ஓசோன் குறைந்த காற்று அருகிலிருக்கும் பகுதிகளுக்கு செல்கிறது.அண்டார்க்டிகா ஓசோன் துளை உடைந்த அடுத்த மாதத்தில் நியூசிலாந்தில் ஓசோன் அளவு பத்து சதவிகிதம் குறைந்ததாக அறிக்கைகள் உள்ளன.

ஓசோன் பாளம் சிதைவால் உண்டாகும் விளைவுகள்

தொகு

ஓசோன் பாளம் சூரியனிலிருந்து UVB புற ஊதா கதிர்களை உள்வாங்கிக்கொள்வதால், ஓசோன் பாளத்தின் சிதைவு UVB அளவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தோல் புற்று நோய் போன்ற அபாயங்களை உண்டாக்குகிறது மாண்டிரியால் பிரொடோகாளுககான காரணம் இதுவாக இருந்தது.அடுக்கு மண்டலத்தில் இருக்கும் ஓசோன் குறைபாடு CFC க்களுடன் சம்பந்தம் கொண்டிருந்தாலும், கோட்பாடுகள் ஓசோன் குறைவு மேற்பரப்பில் UVB அதிகரிப்பை உண்டாக்கும் என்பதை கூறினாலும், ஓசோன் சிதைவு மனிதரிடத்தில் அதிகமான அளவில் தோல் புற்றுநோயை உண்டாக்குகின்றது என்பதற்கான நேரடியான ஆதாரம் இன்னும் நமக்கு கிடைக்க வில்லை.இதற்கு காரணம், தோல் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் மற்றொரு கதிர்வீச்சாகிய UVA, ஓசோனால் உள்வாங்கிக் கொள்ளப்படுவதில்லை. வாழ்க்கையில் நடக்கும் நடைமுறை மாற்றங்களை புள்ளி விவர இயல் மூலம் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது ஒன்றாகும்.

அதிகரிக்கின்ற UV

தொகு

ஓசோன் புவியில் மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் இது UVB கதிர்வீச்சுகளை தனக்குள் உள்வாங்கிக்கொள்வதில் பெரும்பங்கு கொள்கிறது.ஓசோன் பாளத்தை துளைக்கும் UVB கதிர்வீச்சுகளின் ஊடுருவல் பெருமளவில் குறைவது பாளத்தின் சரிந்த பாதை மொத்தத்தை பொருத்து உள்ளது.காற்று மண்டலத்தில் ஓசோன் குறையும் பொது புவியின் மேற்பரப்பில் UVB அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேடியேடிவ் டிரான்ஸ்பர் மாடல் மதிப்பீடுகள் மூலம் மேற்பரப்பில் நடக்கும்UVB அதிகரிப்பை கணக்கிடலாம் என்பது நம்பிக்கை. அனால் இது துள்ளியமான அளவுகோல்கள் இலாத காரணத்தினாலும், ஓசோன் துளைக்கு முந்தைய காலத்தை பற்றிய குறிப்புகளும் இல்லாத காரணத்தினாலும் இயலாமல் போகிறது. தற்கால அளவுகோல் முறைகள் இருந்தாலும் இது கடினமாகிறது.(எ.கா. லௌடேர், நியூசிலாந்து).[19]

பிராண வாயுவைக்கொண்டு O2 ஒசோனை ஓசோன் பாளத்தில் தயாரிப்பது இதே புற ஊதா கதிர்வீச்சுகள் என்பதால், அடுக்கு மண்டலத்தில் ஓசோன் குறைவதால் அது அடிவளி மண்டலத்தின் கீழ் பகுதியில் போடோகெமிகல் தயாரிப்பு அதிகரிக்கின்றது. மொத்தமான காலம் ஓசோன் அளவில் குறைவு இருக்கிறது. ஓசோனால் தயாரிக்கப்பட்டவையின் போடோகெமிகல் ஆயுள் காலம் குறைந்திருக்கிறது. இதனால் இவை மேலே செல்வதற்கு முன்னதாகவே அழிக்கப்படுகின்றன.[மேற்கோள் தேவை]

உயிரியல் சம்பந்தப்பட்ட விளைவுகள்

தொகு

பொது மக்கள் பெரிதும் நினைத்து கவலைப்படுவது என்னது என்றால் அது மனிதனின் ஆரோக்கியத்தின் மீது UV இனால் ஏற்படும் விளைவுகள் ஆகும்.இதுவரை ஓசோன் சிதைவுகள் கண்ட சில பகுதிகள் சிறு அளவையே காட்டியுள்ளதால், இதனால் உண்டாகும் ஆரோக்கிய சீர்குலைவையும் நமால் தெளிவாக கூற முடிவதில்லை.அதிக அளவில் சிதைவு காணப்படும் இடங்களில் விளைவுகள் அதிபயங்கரமாக இருக்க கூடும் அண்டார்க்டிகா மீது காணப்பட்ட துளை இப்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்தின் மேலும் காணப்படுவதால் சுற்றுப்புற சூழல் விஞ்ஞானிகள் UV யின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பயம் கொள்கின்றனர்.[மேற்கோள் தேவை]

மனிதர்கள் மேலான விளைவுகள்.

தொகு

தோல் புற்றுநோய்க்குப் பொதுவான காரணியாக UVB (ஓசோனால் உள்ள இழுத்துக்கொள்ளப்படும் அதிக ஆற்றல் கொண்ட UV கதிர்வீச்சு) ஒத்துக்கொள்ளப்படுகிறது.சொல்லப்போனால், மேற்பரப்பு UV அதிகம் ஆகும் பட்சத்தில் அடிவளி மண்டலத்தில் இருக்கும் ஒசோனை அதிகரிக்கிறது. இதனால் மனிதர்களின் ஆரோக்கியத்கிற்கு கேடு விளைகிறது.[மேற்கோள் தேவை] இந்த மேற்பரப்பு UV அதிகரிப்பினால் சூரியனிலிருந்து வெளிவரும் வைட்டமின் D இன் செயற்கைத்தனத்தின் அளவும் அதிகரிக்கிறது.[20]

புற்று நோயை தடுக்கக்கூடிய ஆற்றலை கொண்ட வைட்டமின் D ஓசோன் சிதைவின் விளைவுகளை தடுக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?db=pubmed&cmd=Retrieve&dopt=AbstractPlus&list_uids=17344960&query_hl=4&itool=pubmed_docsumhttp://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?db=pubmed&cmd=Retrieve&dopt=AbstractPlus&list_uids=17143048&query_hl=4&itool=pubmed_DocSum In terms of health costs, the possible benefits of increased UV irradiance may outweigh the burden. http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?db=pubmed&cmd=Retrieve&dopt=AbstractPlus&list_uids=16159309&query_hl=8&itool=pubmed_DocSum

1.பேசல் மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமஸ் -- இது மனிதரிடத்தில் காணப்படும் மிக பொதுவான புற்றுநோயாகும், பேசல்,ஸ்குவாமஸ் செல் கார்சினோமஸ் ஆகிவ இரண்டும் UVB க்கு வெளிப்படுவதினால் உண்டாகக்கூடியவை.UVB எப்படி புற்றுநோயை உண்டாக்குகின்றது என்பது நன்கு அறிந்த ஒரு செயல்முறையாகும் — UVB கதிர்வீச்சுகளை உள்வாங்கிக்கொள்வதினால் DNA மூலக்கூறுகளில் உள்ள பிரமடின் அடித்தளங்கள் டைமேர்களை(dimer) உண்டு பண்ணுகின்றன. இதனால் DNA இர்ரடிப்பு அடையும் போது பிழைகள் உருவாகின்றன.இந்த புற்றுநோய்கள் உயிரை கொல்லக்கூடிய அளவிற்கு அபாயகரமானவை அல்ல. இருப்பினும் சமயங்களில் இந்த ஸ்குவாமஸ் கார்சினோமசை குணமாக்க சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்ய நேரிடுகிறது.தோல் சம்பந்தப்பட்ட விஷயங்களை விலங்கியலுடன் ஒருங்கிணைக்கும் போது, விஞ்ஞானிகள் ஓசோனின் ஒரு சதவிகித குறைவு , அடுக்கு மண்டல ஓசோன் புற்றுநோயை விளைவிப்பதில் 2% உயருகிறது என்று கண்டறிந்துள்ளனர்.[21]

2.மாலிஞன்ட் மெலனோமா -- புற்றுநோயின் மற்றொரு வகை மாலிஞன்ட் மெலனோமா. இது பொதுவாக காணப்படும் நோயல்ல. அனால் கண்டுபிடித்த 15% இருந்து 20% வரை இவை மிகவும் பயங்கரமானதுமாக இருக்கின்றது.புற ஊதா கதிர்வீச்சுக்கும் மாலிஞன்ட் மெலனோமாவிற்கும் உள்ள தொடர்பு இன்னும் சரிவர புலப்படவில்லை. இதில் UVB மற்றும் UVA , ஆகிய இரண்டும் பங்குகொள்கின்றன என்பது அறிய கூடிய விஷயம் ஆகிறது.கண்ணுக்கு தெரிகின்ற கதிர்வீச்சுகளாலும், UVA வினாலும் 90 இலிருந்து 95% வரை மாலிஞன்ட் மெலனோமா வர காரணமாக இருக்கின்றன, என்று மீன்களின் மேல் செய்த சோதனைகள் குறிப்பிடுகின்றன.[22] ஆனால் ஓபசம்ஸ் மீது செய்த சோதனைகள் UVB இன் பங்கை மிகைப்படுத்தி காட்டுகின்றது.[21] இந்த காரணத்தினால் மெலனோமாவில் ஓசோன் சிதைவின் பங்கை நம்மால் தெளிவர கூற முடிவதில்லை.ஒரு ஆய்வு UVB 10% அதிகம் ஆகும் போது அது ஆடவர்களிடத்தில் 19% மும் பெண்களிடத்த்ல் 16% மெலனோமா அதிகரிப்பை உண்டாக்குகின்றது என்று கண்டுபிடித்துள்ளது.[23] பண்டா அரினாஸ் மக்கள் மீது கொண்ட ஆய்வில், சிலியின் தெற்கு முனையில் மெலனோமா 56% அதிகரிப்பையும் மெலனோமா அல்லாத புற்றுநோய்கள் 46% கடந்த ஏழுவருடங்களில் காட்டுகின்றன. இது ஓசோன் குறைவுடனும் UVB அளவின் அதிகரிப்புடனும் கைகோர்க்கிறது.[24]

3.கார்டிகல் கேடராக்ட் -- பல ஆய்வுமுறைகளை கொண்டு தெளிவு படுத்திய ஆய்வுகள் UVB க்கு வெளிபடுதளுக்கும் ஆகுலர் கார்டிகல் கேடராக்ட்டுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன என்று கூறியுள்ளன.UV-B க்கு ஆகுலர் வெளிப்படுவதைப்பற்றிய படிப்பு செஸபீக் பே வாட்டர்மேன் மீது நடத்தப்பட்டது. வருடா வருடம் ஆகுலருக்கு வெளிப்படுவது கார்டடிகல் ஓபெசிடிக்கு அபாயம் விளைவிக்கிறது.[25]. வெள்ளை ஆடவர்கள் மீது நடத்திய ஆய்வு இன்று வரை வெளிவந்த ஆய்வுகளின் முடிவுகளிலேயே மிகவும் பலம் வாய்ந்தது. இது கார்ட்டிகல் ஒபேசிடிக்கும் சூரிய வெளிச்ச்சட்டுக்கு வெளிபடுவதுக்கும் தொடர்பு உண்டு என்று ஆதாரம் தந்துள்ளது.பீவர் டாமில் (WI) நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு இந்த முடிவு ஆடவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று காட்டியுள்ளது.பீவர் டாம் ஆய்வில் பெண்கள் ஆண்களைவிட மிக குறைவாகவே வெளிப்படுகின்றனர் என்றும் இது இரண்டுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.[26] இன்னும் சொல்லப்போனால் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு சூரிய வெளிபாட்டினால் வரும் கேடராக்ட் பற்றிய செய்திகள் சேகரிக்கப்படவில்லை. மற்ற இனத்தவர்களிடையே இருக்கும் மற்ற கண் நோய்களைவிட ஆபிரிக்க அமெரிக்கர்களிடம் கார்டிகல் ஒபேசிட்டி அதிக அளவில் காணப்படுகின்றது.[27][28]

4.அடிவளி மண்டல ஓசோன் அதிகரிப்பு -- மேற்பரப்பு UV அதிகரிப்பு அடிவளி மண்டல ஒசோனை அதிகரிக்கிறது.பூமியில் இருக்கும் ஓசோன் பொதுவாக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. ஓசோனில் ஆக்சிடன்ட் பண்புகள் இருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது.இந்த சமையத்தில், பூமியிலுள்ள ஓசோன் , பெரும்பாலாக UV கதிர்வீச்சினாலும், வாகனங்களில் இருந்து வெளிவரும் எரி வாயுகளாலும் உற்பத்தியாகின்றது.[மேற்கோள் தேவை]

நெற்பயிர்கள் மீதான விளைவுகள்

தொகு

UV கதிர்வீச்சின் அதிகரிப்பு நெற்பயிர்களையும் தாக்கும்.மிகவும் முக்கியமான தாவிர வகைகள் தங்கள் வேர்களில் உள்ள நயிற்றஜேனை தக்கவைத்துக்கொள்ள, எடுத்துக்காட்டுக்கு அரிசி, சியானோ பாக்டீரியா தேவைப்படுகிறது.சியானோ பாக்டீரியா UV ஒளியினால் பாதிக்கப்படுகின்றன.[29]

ஓசோன் துளைக்கான பொது கொள்கைகள்

தொகு
 
க்லோரோப்லூரோகார்பன்கள் தடை செய்யப் படாவிட்டால் அடுக்கு மண்டலத்தில் ஓசோன் அளவின் தாக்கத்தைப்பற்றிய நாசா கணிப்பு

CFC ஓசோன் பாளத்திற்கு எவ்வளவு கேடு விளைவித்திருக்கிறது என்பது இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இது இன்னும் சில ஆண்டுகளுக்கு தெரியவும் வராது. எனினும் காலம் ஓசோன் அளவு குறைவது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.(மேலே)

1976 ஆய்வு முடிவுக்கு பின்னர், U.S. நேஷனல் அகாடெமி ஆப் சயின்சஸ் ஓசோன் சிதைவு மேல் ஒரு விஞான பூர்வமான ஆதாரத்தை தந்தது. ஐக்கிய அமெரிக்க நாடுடன் சேர்ந்து கேனடா, ஸ்வீடன், நார்வே போன்ற ஒரு சில நாடுகள் ஸ்ப்ரே கேன்களிலிருந்து CFC க்களை முற்றிலுமாக அகற்றின.அந்த சமையத்தில் இது மிகவும் பெரிதாக பேசப்பட்டாலும், நாளடைவில் இந்த கொள்கையின் செயலாக்கத்தின் வீரியம் குறைந்தது.( ரீகன் ஆட்சி, ஹாலோகார்பன் தொழில் துறையிலிருந்து வந்த எதிர்ப்பு போன்ற அரசியல் சம்பந்தப்பட்ட காரணங்களால்). மேலும் வந்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது பூதாகாரமாக உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவு படுத்தி இருக்கிறது.1978 ல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் சபிக் க்களை எரோசால் கேன்களிலிருந்து மிற்றிளுமாக அகற்றின.ஐரோப்பிய நாடுகள் இந்த திட்டத்தை செயலாக்காமல் நிராகரித்தன.CFC க்கள் தொடர்ந்து பிரிட்சுகளிலும் சர்கியூட் போர்ட்கள் சுத்தம் செய்வதிலும் பயன் படுத்தப்பட்டன.உலகம் முழுவதிலும், U.S. எரசால் தடைக்கு பின்னர் CFC தயாரிப்பு வீழ்ச்சி அடைந்தது. ஆயினும் 1986 ஆம் ஆண்டு இது 1976 ஆம் ஆண்டு அளவிற்கு திரும்பியது.1980 ஆம் ஆண்டில்துபொன் ஹாலோகார்பன் மீது நடத்திய தனது ஆய்வை மூடியது.

மறுபடியும் 1983 ஆம் ஆண்டில் US அரசாங்கத்தின் எண்ணம் மாறத் துவங்கியது. இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மையத்திலிருந்துஆண் எம். பர்போர்த் விலகி வில்லியம் ரகேல்ஷாஸ் ஆட்சி ஏற்றபோது நடந்தது.ரகேல்ஷாசும் அவரைத்தொடர்ந்த லீ தாமஸ் அவர்களும் EPA வை ஹாலகார்பன் பொருத்து உலகளாவிய நடவடிக்கைகளை எடுக்க முனைந்தனர்.1985 ஆம் ஆண்டில் ஓசோன் பாளத்தை பாதுகாக்க வியன்னா கன்வென்ஷனை இருபது நாடுகள் கையோப்பந்தம் இட்டனர்.அதே ஆண்டு அண்டார்க்டிகாவில் ஓசோன் துளை இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது மக்கள் பார்வையை தன பால் ஈர்த்தது.1987 ஆம் ஆண்டில் 43 நாடுகள் மாண்ட்ரியல் பிரோடோகாலை கையொப்பம் இட்டன. இந்த சமயத்தில் ஹாலோகார்பன் தொழில் துறை தனது ஆர்வத்தை CFC தயாரிப்பை குறைப்பதில் திருப்பியது.இதன் காரணம் " ஜூன் 30, 1980 ஆம் வருடம், Dr. முஸ்தபா டோல்பாவால் (UN சுற்றுப்புற சூழல் பிரோக்ராமின் முன்னால் தலைவர்) தி நியூ சயிண்டிச்டில்,'...1987 ஆம் ஆண்டில் இரசாயன தொழில் துறை மாண்டிரியால் பிரோடோகாலை ஆதரித்ததற்கு காரணமாக இருந்த CFC க்கள் ஒழிப்புக்கான நடவடிக்கைகள், தற்போது பேடண்டுகளால் பாதுகாக்கப்படவில்லை.இது நிறுவனகளை மேலும் இலாபம் தரக்கூடிய சேர்மின்களை தயாரிக்க செய்தது.'" என்று கூறுகிறார்.[30][30]

மாண்டிரியாலில் பங்கு கொண்டவர்கள் CFC தயாரிப்பை 1986 அளவில் நிறுத்திவைக்கவும் 1999 ஆம் ஆண்டுக்குள் அதனை 50% சதவிதமாக குறைக்கவும் முடிவு எடுத்தனர்.ஒரு தொடரீதியான விஞ்ஞான அண்டார்க்டிகா பிரவேசத்திற்கு பின்னர், ஓசோன் துளைகள் மனிதனால் உண்டாக்கப்படும் ஒர்கேனோஹாலோஜென்களிலிருந்து வெளிவரும் க்ளோரின் மற்றும் ப்ரோமினால் உண்டாக்கப்படுகிறது என்று கண்டு பிடித்து, 1990 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த மாண்டிரியால் பிரோடோகோல் மேலும் பலப்படுத்தப்பட்டது.பங்களிப்பாளர்கள் CFC மற்றும் ஆலங்களை 2000 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிப்பதற்கு முனைப்பட்டனர்.(முக்கியான பயன்பாட்டை தவிர்த்து எ.கா.,ஆஸ்த்மா சுவாசக்குழாய்)1992 ஆம் ஆண்டு காப்பேன்ஹேகனில் நடந்த சந்திப்பில் இந்த ஒழிப்பு வருடம் 1996 ஆக மாற்றப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு CFC க்கள் குறைவாக அச்சுறுத்தும் ஹயிட்ரோ க்லோரோ ப்ளூரோ கார்பன்களால் மாற்றப்பட்டுள்ளன.(HCFCs),HCFC க்கள் பற்றியும் ஐயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.சில செயல் முறைகளில் CFC க்களுக்கு பதிலாக ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள் பயன்படுத்தப்படுகின்றன(HFC).HFC இல க்லோரினும் ப்ரோமினும் இல்லாததால் இது ஒசோனை சிதைப்பதில்லை; ஆனால் இது பைங்குடில் வளியாக கருதப்படுகிறது.வாகனங்களில் இருக்கும் குளிர் சாதனங்களில் இருக்கும் CFC-12 (R-12) முற்றிலுமாக மாற்றி இருப்பது, HFC-134a (R-134a) சேர்மின்கள் தான்.சோதனை கூடம் ஆய்வு செய்யும் கருவிகளில் ஓசோன் சிதைவு பொருட்களை குறைத்துக்கொண்டு அதற்கு பதிலாக சால்வெண்ட்களை பயன்படுத்தலாம்.[31]

ரிசார்ட் பெனேடிக் எழுதிய ஓசோன் டிப்லோமேசி (ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகம், 1991) மாண்டிரியால் பிரோடோகாளில் நடந்த விவாத செய்முறை பற்றிய தெளிவான விரிவுரையை அளிக்கிறது. பெயில்கீ மற்றும் பேட்சில் CFC க்களால் உண்டாகும் ஓசோன் சிதைவைப் பற்றிய அறிவியலுக்கு ஆரம்பகால US அரசாங்கத்தின் பதில்கள்.

இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

தொகு
 
ஓசோன் துளை ஏற்படுத்தும் வாயுக்களின் படிவம்

மாண்டிர்யால் பிரோடோகாலை பின்பற்ற தொடங்கியதிலிருந்து, CFC க்களின் ஆதிக்கம் காற்றுமண்டலத்தில் பேரம் அளவில் குறைந்துள்ளது.மிகவும் மெதுவாக இந்த பொருட்கள் காற்று மண்டலத்திலிருந்து அகற்றப்படுகின்றன.2015 ஆம் ஆண்டுக்குள் அண்டார்க்டிக் ஓசோன் துளை இருப்பது ஐந்தில் 1 மில்லியன் km² ஆக குறைந்திருக்கும்.(நியூமேன் மற்றும் குழுவினர். , 2004); துளை முற்றிலுமாக 2050 ஆம் ஆண்டு வரை மூடாது.வர்க ஓசோன் அளவு தெரியும்படியாக உயருவது 2024 ஆண்டிற்கு பிறகுதான் என்று குறிப்பிட்டு உள்ளார்.இப்படி இருந்தால் 2068 ஆம் ஆண்டு இது 1980 அளவைத் தொடும்.[32]

ஓசோன் சிதைவை உண்டு பண்ணும் இரசாயனங்கள் கூட புரோமின் கொண்ட இரசாயனங்களால் பாதிக்கப்படுகின்றன.காற்று மண்டல மீதில் ப்ரோமயிடுக்கு (CH3Br) இயற்கையான மூலம் உண்டு என்று தேறி பொருள்கள் தெரிவிக்கின்றன.[33]

நவம்பர் மாதம் , 2004 ஆம் முடிவடைந்த 2004 ஓசோன் துளை, அண்டார்க்டிகாவில் உள்ள கீழ் அடுக்கு மண்டல தட்ப வெப்பத்தை குறைக்கின்றன. இது மிதமான சூடாக இருப்பதால் தருவ அடுக்கு மண்டல மேகங்கள் இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே உருவாகின்றன .[34]

2005 ஆம் ஆண்டு ஆர்க்டிக் ம\பனிக்காலம் அடுக்கு மண்டலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது.PSC க்கள் உயரமான நிலா நடுக்கோடுகள் இருக்கும் பல இடங்களில் அதிகமாக காணப்பட்டன.அவை திடீரென கரையத்துவங்கின. இது ஆர்க்டிகின் மேல் அடுக்கு மண்டலத்தில் பிப்ரவரி மாதம் துவங்கி மார்ச் முழுவதும் நீடித்து இருந்தது.ஆர்க்டிக் பகுதியின் ஓசோன் அளவு 2004-2005 இல மிகவும் குறைந்து இருந்தது. இது 1997 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட கணக்கு எடுப்புகளின் அளவை விட மிக குறைந்தது. இந்த நிலை ஆர்க்டிக் பகுதியின் 2004-2005 ஆம் ஆண்டில் நடந்ததற்கு காரணம் குறைவான் அடுக்கு மண்டல வேட்பத்தினாலும் மீடியாராலாஜிகள் நிலைகளாலும் தான். இவற்றால் ஓசோன் சிதைவு ஏற்படுகின்றது.[35]

ஓசோன் பாலம் பிரச்சனைகளைப் பற்றிய 2005 [[[8] ^ தட்பவெப்பநிலை மாற்றத்திற்காக அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை|IPCC]] பொழிப்புரை,உலகளாவிய ஓசோன் சிதைவு தற்போது ஒரு நிலைக்கு வந்துள்ளது என்று கூறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஓசோனில் வித்தியாசத்தை எதிர்பார்த்தாலும், (ஓசோன் சிதைவு அதிகமாக இருக்கும் துருவ பகுதிகளில் கூட) வருகின்ற ஆண்டுகளில் ஓசோன் பாலம் முற்றிலுமாக முழுமையடைய எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, மாண்டிடியல் பிரோடோகாலுக்கு பிறகு உலகில் குறைந்த ஓசோன் சிதைக்கும் பொருட்களே காரணம்.[36]

2006 ஆர்க்டிக் பனி காலத்தின் தட்ப வெப்பம், ஒரே சீராக ஜனவரி முடிவு வரை இருந்தது. ஆனால் இந்த குளுமையான நிலையில் PSC க்கள் உருவாக நிறைய சந்தர்பங்கள் இருந்தன. இதற்கு பின்னர் ஜனவரியின் கடைசி வாரத்தில் புவியை சாடாக்க ஒரு விஷயம் நடந்தது. இது PSC க்கள் உருவாக ஆதரிக்கவில்லை.மார்ச் மாதத்தில் தட்ப வெப்ப நிலை ஒழுங்கான நிலைக்கு திரும்பியது. இதில் PSC க்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் மிகவும் குறைவு.[37] ஆரம்பகால செயற்கைக்கோள்களில் எடுக்கப்பட்ட ஓசோன் மேப்புகளின் பதிவுகள், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓசோன் அளவு மெல்லமாக உயருகிறது என்று கண்டு பிடித்துள்ளது.இது வாடா துருவ பகுதிக்கு தேவையான அளவு இல்லாமல் இருந்தாலும், சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாகவே காணப்பட்டு இருக்கின்றன.[38] மார்ச் 2006 இன் பொழுது, ஆர்க்டிக் அடுக்கு மண்டலம், அதாவது 60 டிகிரீ வடக்கு நடுக்கொடுகளில் ஓசோன் நிறைந்து காணப்பட்டது. ஆனால் 17 மார்ச்சிலிருந்து 19 வரை ஒரு மூன்று நாள் காலத்திற்கு இந்த நிலை 300 DU க்கு கீழ் வட அட்லேண்டிக் பகுதியில் க்ரீன்லாதிலிருந்து ஸ்கேண்டினேவியா வரை வந்தது.[39]

காலம் ஓசோன் எந்த பகுதியில் 220 DU க்கும் குறைவாக 20 ஆகஸ்ட் ௨௦௦௬ வரை குறைந்து இருந்ததோ(ஓசோன் துளைக்கான வரைமுறை ) அந்த பகுதியின் அளவு மிக குறைந்தே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.அந்த நாள் முதல் ஓசோன் துளை பகுதி விரைவாக உயர ஆரம்பித்தது.24 செப்டம்பர் அன்று 29 மில்லியன் km² ஐ தொட்டது.அக்டோபர் 2006 ல், NASA 7 செப்டம்பர் முதல் 13 அக்டோபர் 2006 வரை புது ஓசோன் பகுதிகளின் அளவு 26 மில்லியன் km² ஆக இருந்தது என்று அறிவித்து இருக்கிறது. ஓசோனின் மொத்த அளவு 85 DU வைவிட கீழே விழுந்தது, 8 அக்டோபர் அன்று. ஓசோன் வரலாற்றிலேயே ஓசோன் சிதைவு மிகவும் அதிகமாக இருந்த ஆண்டு 2006. அதற்கு முக்கியமான இரு காரணிகள் உள்ளன.அண்டார்க்டிக் மேல் இருக்கும் தட்ப வெப்பம் குறைவான பதிவை அடையும் பொது சிதைவுகள் ஆரம்பிக்கின்றன, என்று 1979 பதிவுகள் முதல் காட்டப்பட்டு வருகின்றன.[40][41]

அக்டோபர் 2008 இல ஈகடோரியன் ஸ்பேஸ் ஏஜன்சி HIPERION அறிக்கையை வெளியிட்டது. இது பத்து செயற்கை கோள்களிலிருந்து கடந்த 28 ஆண்டு காலத்திற்கான செய்திகளை கொண்டு உருவாக்கப்பட்டது. இதனுடன் செம்மையான பல கருவிகளையும் உதவிக்கு கொண்டிருந்தது, இந்த ஆய்வு. இது புவியின் நாடு பகுதிக்கு ஓசோன் சிதைவு நினைத்ததை விட மிக விரைவிலேயே வந்து சேரும் என்று பரைசாற்றியது.ஜனத் தொகை அதிகம் உள்ள நகரங்களில் UV கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கின்றன என்று, இது 24 UVI வரை சென்று இருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. WHO UV Index பஅதிநோன்ரையே மிக அதிகமான ஒரு நிலை என்று கருதுகிறது. இது மனதின் ஆரோக்கியத்துக்கு மிகுந்த கேடு விளைவிக்கிறது.ஆய்வின் முடிவு புவியின் நடுப்பகுதிகளில் உள்ள மக்களை ஓசோன் சிதைவு இப்போதே பெருமளவில் பாதிக்கின்றது என்று கண்டு பிடித்து உள்ளது.பின்னர், CONIDA என்கிற பெரு ஸ்பேஸ் ஏஜன்சி சொந்தமாக ஒரு ஆய்வை மேற்கொண்டது.இதன் முடிவு ஈகடோரியன் ஆய்வின் முடிவை ஒத்து இருந்தது.

அண்டார்க்டிக் துளைகள் இன்னும் வரும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும்.கீழ் அடுக்கு மண்டலத்தில் ஓசோன் அளவு அண்டார்க்டிகாவில் 2020 ஆண்டுக்குள் 5%–10% ஆக இருக்கும். 2060–2075 ஆண்டுகளில் தான் இது 1980 ஆண்டுக்கு முன் இருந்த அளவுக்கு செல்லும். முன் கூடி சொன்னதை விட 10–25 ஆண்டுகள் வரை தாமதம் ஆகின்றது. இது என்னென்றால் ஓசோன் சிதைவை ஏற்படுத்தும் பொருட்கள் காற்று மண்டலத்தில்அதிகமாகி உள்ளன. இது வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாகவே காணப்படுகிறது.மற்றொரு காரணம் என்னெவென்றால், அடுக்கு மண்டலத்துக்கு மேல் இருக்கும் நைற்றஜென் ஆக்சைடுகளை கீழே கொண்டுவருவதன் மூலம் காற்று படிவங்களில் மாற்றம் ஏற்படுகின்றது.[42]

ஆய்வின் வரலாறு

தொகு

அடிப்படையான இயற்பியல் மற்றும் இரசாயனவியல் செயல்முறைகள் கொண்டு ஓசோன் பாளம், புவியின் அடுக்கு மணடலத்தில் உருவாகின்றது என்பதை 1930 இல் கண்டறிந்தவர்,சிட்னீ சாப்மேன்.இது ஓசோன் உயிரியம் சுழல் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது— குறைந்த அலை நீளம் கொண்ட UV கதிர்வீச்சு உயிரியம் (O2) கூறுகளை இரண்டு உயிரியம் அணுக்களாக பிரிக்கின்றது. இது மற்றொரு உயிரியம் அனுவுடன் சேர்ந்து ஓசோனாக மாறுகிறது.உயிரியம் அணுவும் ஓசோன் மூலக்கூறும் மறுபடியும் இரண்டு உயிரியம் மூலக்கூறுகளை உண்டாக்க சேரும்போது, ஓசோன் அகற்றப்படுகிறது. O + O3 → 2O2. 1950 களில், டேவிட் பேட்ஸ் மற்றும் மார்செல் நிகொலேட் ஹயிட்ராக்சில்(OH) மற்றும் நைட்ரிக் ஆக்சைட்(NO) ப்ரீ ராடிகல்கள் பற்றி புதிய ஆதாரத்தை காட்டினர். இவை ஓசோன் அளவை குறைக்க வினை வேக இயக்கிகளாக செயல் படக்கூடும் என்று எடுத்துக்காட்டியுள்ளனர்.இந்த பிரீ ராடிகல்கள் அடுக்கு மண்டலத்தில் இருந்ததால், இவற்றின் இருப்பு இயற்கையானது என்று கருதப்பட்டது– இவை இல்லாத நிலையில் ஓசோன் பாலம் தற்போது உள்ளதை விட இரண்டு மடங்கு மொத்தமாக இருக்கும்.

1970 இல் பேராசிரியர் பால் குருட்சென், புவியின் மேற்பரப்பில் இருக்கும் நயிற்றஸ் ஆக்சைடின் (N2O) வெளிப்பாடு அடுக்கு மண்டலத்தில் இருக்கும் நயிற்றிக் ஆக்சைடை (NO) பாதிக்கிறது. நைட்ரஸ் ஆக்சைட் நமாநிளிருக்கும் பாக்டீரியாவால் உருவாகும் நீண்ட ஆயுளை கொண்ட ஒரு வளியாகும்.. நைட்ரஸ் ஆக்சைட் அடுக்கு மண்டலத்தை அடைவதற்கான நீண்ட ஆயுளை கொண்டுள்ளது என்று குருட்சென் கூறுகிறார். அண்டு அது NO வாக மாற்றப்படுகிறது. குருட்சென் அடுக்கு மண்டலத்தில் இருக்கும் நைட்ரஸ் ஆக்சைட் பூமியில் அதிக அளவில் செயற்கை உறங்களை பயன்படுத்துவதால் தான் என்றும் கூறுகிறார்.மனிதன் மேற்கொள்ளும் செயலினால் அடுக்கு மண்டல ஓசோன் பாளம் பாதிக்கப்படுகிறது.அடுத்த ஆண்டில் , குருட்சென் மற்றும் ஹரோல்ட் ஜான்ஸ்டன் தனித்தனியே நடத்திய ஆய்வுகளில்,சூபர்சொனிக் விமானங்களில் இருந்து வெளிவரும் NO வும் அடுக்கு மண்டல அடித்தளத்தில் இருக்கும் ஓசோன் பாலத்தை சிதைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

ரோலாந்து மோலினா கருதுகோள்

தொகு

1974 ஆம் ஆண்டில் பிராங்க் ஷெர்வுட் ரோலாந்து, இரவினில் உள்ள கேலிபோர்நியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இராசயனவியல் பேராசிரியரும் அவரது உதவியாளருமான டாக்டர் மரியோ J. மோலினா, CFC போன்று நீண்ட ஆயுளை கொண்ட ஆர்கேனிக் ஆலசன் சேர்மின்கள் கிருத்சென் நைட்ரஸ் ஆக்சைடுக்கு கூறியவாறு நடந்துகொள்ளலாம் என்று கூறுகின்றனர்.கையா கருதுகோளின் கர்த்தா என்று அன்புடன் அழைக்கப்படும் ஜேம்ஸ் லவ்லாக்,1971 இல் அவர் தெற்கு அட்லாண்டிக்கில் சுருப்பயணம் கொள்ளும்போது, 1930 ஆம் ஆண்டு முதல் கண்டுபிடித்த அத்தனை CFC சேர்மின்களும் அந்த காற்று மண்டலத்தில் காணப்பட்டது என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் கண்டு பிடித்துள்ளார்.CFC க்களும் N2O போலவே அடுக்கு மண்டலத்தை அடையும் பொது UV வெளிச்சம் அவற்றை பிரித்து Cl அணுக்களை உண்டாக்கும் என்று ரோலாந்தும் மொளினாவும் கண்டு பிடித்தனர்.(இதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்,மிகிகன் பலகளைக்கழகத்தை சேர்ந்த ரிச்சர்ட் ச்டோலார்ஸ்கி மற்றும் ரால்ப் சிசரோன் Cl, NO வை விட ஒசோனை அழிப்பதில் ஆற்றல் வாய்ந்த வினைவேக இயக்கி யாக செயல் படமுடிகிறது என்று கண்டறிந்துள்ளனர்.ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் மேகேல்றாய் மற்றும் ஸ்டீவன் வுப்சி இதே முடிவுக்கு தான் வந்தனர்.இவர்கள் அனைவருமே CFC யை அடித்தலமாகக்கொண்டு தங்களது சோதனைகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் வான ஊர்த்தியிலிருந்து குறைந்த அளவில் வெளிவரும் HCl, அடுக்கு மண்டலத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைப்பற்றி ஆராய்ந்தனர்.)

எரோசால் மற்றும் ஹாலோகார்பன் தொழில் துறையை சார்ந்தவர்கள் ரோலாந்து மோலினா கருதுகோளைப்பற்றி நிறைய விவாத்தித்தனர்.துபொன் குழுவின் தலைவர் ஓசோன் சிதைவு கோட்பாட்டைப் பற்றி, "ஒரு அறிவியல் சார்ந்த கற்பனை கதை ....குப்பை ...முற்றிலும் அறிவ்ற்றது ", என்று கூறியுள்ளார்.[30] பிரசிஷன் வால்வு கார்பரேஷனின் தலைவர் ராபர்ட் அப்ப்ளானால்ப்,(முதல் எரோசால் ஸ்ப்ரே கேன் வாலவை கண்டுபிடித்தவர்) இர்வினிலுள்ள கேலிபோர்நியா பலகலைக்கழக துணைவேந்தருக்கு ரோலாந்தின் அறிக்கையை பற்றி புகார் அனுப்பியுள்ளார். (ரோவன், பக்கம் 56.) அடுக்கு மண்டலத்தை நேரடியாக கண்காணிப்பதன் மூலமும் சோதனை கூட ஆய்வுகளின் மூலமும் ரோலாந்து, மோலினா கூறியது உண்மை என்று தெளிவு படுத்தப்படுகிறது.மூல வளிகள் (CFC மற்றும் தொடர்புடைய சேர்மின்கள்) மற்றும் க்ளோரின் சேமக்கலம் வகைகள் (HCl and ClONO2) அடுக்கு மண்டலம் முழுவதிலும் அளக்கப்பட்டன.இதன் மூலம் CFC க்கள் தான் அடுக்கு மண்டல க்லோரினுக்கு அதிக காரணமென்றும், வெளிப்படுகின்ற CFC க்கள் ஒரு நாள் கண்டிப்பாக அடுக்கு மண்டலத்தை சென்று அடைகின்றன.இதனை மேலும் பல படுத்தியது, அடுக்கு மண்டலத்தில் க்ளோரின் மோனாக்சைட்(ClO) பற்றி ஜேம்ஸ் G. ஆண்டர்சனின் கண்டுபிடிப்பு. ClO, Cl ஒசோனுடன் சேரும்போது பிறக்கிறது. Cl ராடிகல்கள் அடுக்கு மண்டலத்தில் இருப்பதை தவிர அவை ஒசோனை அழிப்பதிலும் பங்குவகிக்கின்றன.ரோலாந்து மோலினாவின் ஆய்வின் தொடர்ச்சியாக, மேக்கேல்ராயும் வுப்சியும் புரோமின் அணுக்கள் வினை வேக இயக்கிகளாக க்லோரினை விட பலமானவையாக எவ்வாறு செயல் படுகின்றன என்று ஆராய்ச்சி செய்தனர். நெருப்பு அணைப்பு மருந்துகளில் இருக்கும் ஆலன் என்னும் இரசாயனம் அடுக்கு மண்டலத்தில் இருக்கும் பிறோமினுக்கு பெரும்காரணம் என்றும் கண்டு பிடித்துள்ளனர்.1976 ஆம் ஆண்டில் U.S. நேஷனல் அகாடெமி ஆப் சயின்ஸ் தனது ஆய்வு முடிவை அறிவித்தது. அதில் அதனது ஓசோன் சிதைவு கருதுகோள் மிக பலமான அறிவியல் ஆதாரங்களை கொண்டிருந்தது.CFC இன் தயாரிப்பு தற்போது இருக்கும் அளவில், ஆண்டு ஒன்றனுக்கு 1990 வரை 10% ஆக இருக்கும் பட்சத்தில் CFC ஒசோனை 5 to 7% 1995 ஆம் ஆண்டுக்குள் சிதைக்கிறது. மேலும் ௨௦௫௦ ஆம் ஆண்டுக்குள் 30 to 50% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு பதிலடியாக ஆயக்கிய அமெரிக்க நாடுகள், கேனடா மற்றும் நார்வே CFC க்களின் பயன்பாட்டை எரசால் ஸ்ப்ரே கேங்களிலிருந்து 1978 ஆம் ஆண்டு முற்றிலுமாக தடை செய்தது. மேற்படுத்திய ஆய்வுகளில், 1979 முதல் 1984 வரை, நேஷனல் அகாடெமி தனது அறிக்கைகளில் இதற்கு முனால் கூறப்பட்ட ஓசோன் இழப்பு அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.[மேற்கோள் தேவை]

குருட்சென், மோலினா, மற்றும் ரோலாந்துக்கு, 1995 ஆம் ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஓசோன் துளை

தொகு

பிரிடிஷ் அண்டார்க்டிக் சர்வே விஞ்ஞானிகளான பார்மேன், கார்டினர், மற்றும் ஷான்கிளின் கண்டுபிடித்த அண்டார்க்டிகா ஓசோன் துளை (நேச்சர் என்ற செய்தித்தாள் மே 1985, அறிவித்தது) மற்ற விங்காநிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது ஏன் என்றால் நினைத்த அளவை விட ஓசோன் துளை பெரியதாக இருந்த்து தான் காரணம்.[மேற்கோள் தேவை] இந்த அசமயத்தில் செயற்கை கோள்கள் தென் துருவத்தில் ஓசோன் சிதைவை படம் எடுத்து காட்டத் துவங்கின இவை ஆரம்ப காலங்களில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நிராகரிக்கப்பட்டன.(இவை கணக்கீட்டில் நடந்த பிழை என்று கருதப்பட்டது); ஓசோன் துளை செயற்கை கோளினால் மட்டுமே காட்டப்பட்டது.தடைகள் இல்லாமல் இந்த சாப்ட்வேர்களை பின்னோக்கி ஓடவிட்ட போது, ஓசோன் துளை 1976 ஆம் ஆண்டு காணப்பட்டிருக்கிறது என்று கண்டறிந்தனர்.[43]

சுசன் சாலமன் என்கின்ற காற்று மண்டல இரசாயனவியல் அறிஞர், நேஷனல் ஓசியானிக் அண்ட் அட்மோஸ்பியரிக் அட்மிநிஸ்டிரேஷனில் (NOAA),துருவ அடுக்கு மண்டல மேகங்கள்(PSCs) மீது இரசாயங்களால் உண்டாகும் விளைவுகள், குளிர்ந்த அண்டார்க்டிக் அடுக்கு மண்டலத்தை உருவாக்கின்றது. இதில் க்ளோரின் அளவு அதிகம் ஆவதினால் ஓசோன் அழிக்கப்படுகிறது.வெப்ப நிலை குறைந்து இருக்கும் வேளையில் தான் துருவ அடுக்கு மண்டல மேகங்கள் அண்டார்க்டிகாவில் உருவாகின்றன.-80 டிகிரி C யாக இருக்கலாம். அவை ஆரம்பகால வசந்தத்திலும் உருவாகலாம்.அந்த சமயங்களில் மேகங்களில் இருக்கும் பனி பளிங்குகள் க்ளோரின் சேர்மின்களை ஓசோன் சிதியாவு பொருட்களாக மாற்றக்கூடிய ஆற்றலைக் கொள்கின்றன.

அண்டார்க்டிகா மீது உருவாகின்ற துருவ சுழல் இறுக்கமாக உள்ளது. இதனால் பனி பளிங்கு மேற்பரப்பில் நடுக்கும் விளைவுகள் அடுக்கு மண்டலத்தில் நடப்பனவற்றை விட வித்தியாசமானவை.இந்த நிலைகள் அணித்தும் அண்டார்க்டிகாவில் ஓசோன் துளை உண்டாவதற்கு காரணங்களாக உள்ளன.இந்த கருதுகோள் முதலில் சோதனைக்கூட முடிவுகளால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. பின்னர், பூமியிலிருந்து எடுத்த நேரடியான மதிப்பீடுகள்,மற்றும் உயர பறக்கும் விமானங்களிலிருந்து எடுத்த மதிப்பீடுகள் அண்டார்க்டிக் பகுதியில் க்ளோரின் மோனாக்சைட்(ClO) அதிகம் உள்ளது என்பதை காட்டுகின்றன.[மேற்கோள் தேவை]

ஓசோன் துளை சூரிய புற ஊதா கதிர்வீச்சினால் அல்லது காற்று மண்டல சுழற் படிவத்தின் மாற்றத்தினாலும் உண்டாகிறது என்ற மாற்று கருதுகோள்களும் சோதிக்கப்பட்டன.[மேற்கோள் தேவை]

பூமியிலிருந்து மதிப்பீடு செய்யும் டாப்சன் ஸ்பெக்க்டோமீடர் ஒரு பிரத்தியேக குழுவுக்கு ஓசோன் பாளம் எல்லா இடங்களில் சிதைகிறதா என்பதை கண்டுபிடிக்க உதவி இருக்கிறது.[மேற்கோள் தேவை] இந்த மதிப்பீடுகள் செயற்கை கோள் படங்கள் மூலம் ஊர்ஜித செய்யப்பட்டது.இதன் விளைவாக ஹாலோகார்பன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் CFC, ஆலன்கள் மற்றும் தொடர்புடைய மற்ற சேர்மின்கள் உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்தன.இந்த செய்முறை 1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

1981 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அவை சுற்றுப்புற சூழல் நிரல் ஓசோன் சிதைவைப் பற்றிய அறிவியல் மதிப்பீடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளிலேயே தற்போது இருக்குக் துளையின் அளவு டிதான் மிகக் குறைவானது என்றும் ஓசோன் பாளம் ஓசோனால் நிறைவடைகிறது என்றும் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கை கோள் படங்கள் காட்டுன்கின்றன.http://abc.net.au/news/stories/2007/11/16/2092527.htm.

ஓசோன் சிதைவு மற்றும் புவி சூடாகுதல்

தொகு

தொலை சாதனங்களில் அடிக்கடி சம்பந்தபடுத்தி பேசினாலும் பூமி சூடாகுதலுக்கும் ஓசோன் சிதைவுக்கும் வலுவான தொடர்புகள் கிடையாது.ஐந்து இடங்களில் நம்மால் தொடர்பு படுத்த முடிகிறது:

 
பைங்குடில் வாயுக்கள் மற்றும் மற்ற மூலங்களால் ஏற்படும் கதிரியக்க மாற்றங்கள்
  • உலகளாவிய மேற்பரப்பு வெப்பத்தை உண்டுபண்ணும் CO2 ரேடியேடிவ் போர்சிங் அடுக்கு மண்டலத்தை குளிர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[44] குளிரவைப்பதால் துருவஓசோன் (O3) சிதைவில் அதிகரிப்பு இருக்கிறது. இதனால் ஓசோன் துளைகளின் எண்ணிக்கையும் அதிகமாகின்றது.
  • ஓசோன் சிதைவு தட்ப வெப்ப அமைப்பில் ரெடியேடிவ் போர்சிங்கால் உருவாகிறது.இதனால் இரண்டு எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன: குறைவான ஓசோனால் அடுக்கு வண்டலம் குறைவான அளவே சூரிய கதிர்வீச்சை தன்னுள் இழுத்திக்கொல்கிறது. இதனால் அடுக்கு மண்டலம் குளுமை அடைகிறது. அடிவளி மண்டலம் வெப்பமடைகிறது; இதன் விளைவால் குளுமையான அடுக்கு மண்டலம் அடுக்கு மண்டலத்தை நோக்கி குறைவான நீளத்தை கொண்ட கதிர்வீச்சு அலைகளை வெளிவிடுகின்றது. இதனால், அடிவளி மண்டலமும் குளுமையாகிறது.குளுமையான நிலை பரவலாக நிலவுகிறது; IPCC, "கடந்த இருபது ஆண்டுகளில், கண்காணிக்கப்பட்ட அடுக்கு மண்டல O3 இழப்புகள் மேற்பரப்பு அடிவளி மண்டல அமைப்பில் நெகடிவ் போரிசிங்கை உண்டுபண்ணியுள்ளது. ", என்று கூறுகிறது. ([45]−0.15 ± 0.10 வாட்கள் ஒரு ச்குவேர் மீட்டருக்கு(W/m²)).[46]
  • பைங்குடில் வளிமங்களினால் அடுக்குமன்டலம் குளுமையடைகிறது என்று மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.[44] பைங்குடில் வளிமங்களினாலும் ஓசோன் சிதைவினாலும் குளுமை ஏற்படுகின்றது என்பதால் இவை இரண்டுயும் பிடித்து அவற்றின் மாற்றங்களின் விளைவுகளை நாம் எதிர்நோக்கத்தேவையில்லை.இதனை அடுக்கு மண்டல எண்கணித படிவம் மூலம் கையாளலாம்.நேஷனல் ஓசியானிக் அண்ட் அட்மொஸ்பியரிக் அட்மினிஸ்டிரேஷனின் ஜியோபிசிகள் பிலூயிட் டைனமிக்ஸ் லாபரடோரியில் இருந்து வெளிவந்த ஆய்வு முடிவுகள் 20 km (12.4 miles)க்கு மேல் , பைங்குடில் வளிமங்கள் குளுமைப்படுத்தும் செய்முறையை எளிதாக மேற்கொள்கின்றன என்று காட்டுகின்றன.[47]
  • ஒசோனை சிதைக்கும் இரசாயனங்களையும் பைங்குடில் வளிமங்கள் என்று அழைக்கலாம்.இரசாயனங்களில் அதிகரிப்பு, 0.34 ± 0.03 W/m² அளவு ரேடியேடிவ் போர்சிங்கை உண்டுபண்ணுகிறது. நன்கு கலக்கப்பட்ட பைங்குடில் வளிமங்களில் அதிகரிப்பு உண்டாகும் போது, இங்கு மொத்த ரெடியேடிவ் போர்சிங்கில் 14% உண்டாகிறது.[46]
  • இந்த செய்முறையை வழிப்படுத்த நெடுங்காலமாகிறது. அதற்கு பிறகு அதனை அளவுகோலிட்டு, ஆய்வு செய்து, கோட்பாட்டுகளை புகுத்தி, உலகளாவிய ஆதரவைப்பெற்று, பின் மேலோங்கி திகழ்கிறது.1980 களில் கருதுகோளிடப்பட்ட ஓசோன் சிதைவைப்பற்றிய கோட்பாடுகள், 1990 களில் பதிப்பிக்கப்பட்டன. அவை இன்றும் நிரூபிக்கப் பட்டுக்கொண்டே வருகின்றன.Dr டிரூ ஸ்கிண்டேல்,Dr பால் நியூமேன், NASA Goddard, 1990 களில் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தனர். இது SGI ஆரிஜின் 2000 சூப்பர் கம்யூட்டரை பயன்படுத்தி ஓசோன் அழிவை அமைப்பு படிவத்துக்குள் கொண்டுவந்தது. இந்த கோட்பாடு 78% ஓசோன் அழிந்துள்ளதாக கூறியுள்ளது.இந்த கோட்பாட்டை மேலும் மெருகேற்றும் போது, அது 89% ஓசோன் அழிவைக்காட்டியது. ஓசோன் மறுபடியும் புதுபித்து வர 75 ஆண்டுகள் ஆகும் என்று சொன்ன கணக்கை 150 ஆண்டுகள் ஆகும் என்று கூறி பின்தள்ளியுள்ளது.(இந்த படிவத்தில் முக்கிய அம்சம் என்ன வென்றால் அடுக்கு மண்டலத்தில் எலும்புகளில் இருந்து வரும் எரிப்போருட்களை கொண்டு பறக்கும் விமானகள் இல்லை என்று கூறுவதே ஆகும்)

ஓசோன் குறைபாட்டைப்பற்றிய தவறான கருத்துகள்

தொகு

ஓசோன் குறைபாட்டைப்பற்றிய ஒரு சில தவறான கருத்துகள் இங்கே கூறப்பட்டுள்ளன. மேலும் பல கருத்து பரிமாற்றங்கள் ஓசோன்-டிப்லீஷன் FAQ வில் கூறப்பட்டுள்ளன.

CFC கள் மிகவும் கனமாக இருப்பதால் அடுக்கு மண்டலத்தை அடைய சிரமப்படுகின்றன. CFC மூலக்கூறுகள் நைற்றஜென் மற்றும் ஆக்சிஜனை விட கனமாக இருப்பதால் இவை போதிய அளவுகளில் அடுக்கு மண்டலத்தை சில சமயங்களில் அடைய முடிவதில்லை.[48] அனால் காற்று மண்டல வாயுக்கள் அவற்றின் எடையால் பிரிக்கப்படுவதில்லை; காற்று காற்று மண்டலத்தில் வாயுக்களை ஒன்றுடன் ஒன்று கலப்பதற்கு முழுமையான ஆற்றல் கொண்டுள்ளது.CFC க்கள் காற்றை விட கனமானவை. ஆனால் ஆர்கான், கிரிப்டான் , நீண்ட ஆயுளைக்கொண்ட மற்ற கனமான வாயுக்களைப் போல், அவை ஒரே சீராக டர்போ ஸ்பியரில் பரவி கிடக்கின்றன. பின்னர் அடுக்கு மண்டலத்தின் மேல் தட்டையும் அடைகின்றன.[49]

இயற்கையான மூலங்கள் முன்னர் மனிதனால் செய்யப்பட்ட க்ளோரின் தனித்தன்மை இல்லாமல் போகிறது.

 

மற்றொரு கருத்து வேறுபாடு என்னவென்றால் அடிவளி மண்டல க்லோரினின் இயற்கை மூலங்கள் (எரிமலை, ஓஷன் ஸ்ப்ரே) மனிதனால் உருவாக்கப்பட்ட க்லோரினை விட நான்கிலிருந்து ஐந்து மடங்கு வரை கனமானது .அடிவளி க்ளோரின் அவ்வளவு முக்கியமானது அல்ல.அடுக்கு மண்டல க்ளோரின் தான் ஓசோன் குறைபாட்டுக்கு வழி வகுக்கிறது.ஓஷன் ஸ்ப்ரே விலிருந்து வரும் க்ளோரின் கரையக்கொட்டியது. இதனால் அது, மழை நீரால் அடுக்கு மண்டலத்தை அடைவதற்கு முன்னரே கரைக்கப்படுகிறது.அனால் இதற்கு மாறாக, CFC க்கள் கரைக்க முடியாதவை. இவற்றின் ஆயுள் காலமும் நீளமானது. இதனால் இவை அடுக்கு மண்டலத்தை அடைவதில் எந்த தடையும் இல்லை.காற்று மண்டலத்தின் அடி தட்டில் ஸால்ட் ஸ்ப்ரேவிலுள்ள HCl ஐ விட CFC மற்றும் தொடர்புடைய ஹாலோஆல்கேன் வடிவில் உள்ள க்ளோரின் அதிக அளவில் உள்ளது. அடுக்கு மண்டலத்தில் ஹாலோகார்பன்கள் மிகவும் அதிக அளவில் உள்ளது.[50] ஹாலோ கார்பன் வகைகளிலேயே மீதில் க்ளோரைட் ஒன்றுக்கு மட்டும் தான் இயற்கையான மூலம் உள்ளது[51], இது அடுக்கு மண்டலத்தில் இருக்கும் க்லோரினில் இருபது சதவிகிதம் க்லோரினுக்கு காரணமாக உள்ளது; மீதமுள்ள 80% மனிதனால் உண்டாக்கிய சேர்மின்களால் உருவானவை.

மிகவும் பெரிய அளவில் உண்டாகும் எரிமலைகள் HCl ஐ நேரடியாக அடுக்கு மண்டலத்திற்கு அனுப்ப ஆற்றல் பெற்றிருக்கின்றன. ஆனால் மதிப்பிடுகள்[52] CFC களினால் உண்டாகும் க்ளோரின் தான் மிகவும் அபாயகரமானது என்று குறிப்பிடுகின்றன. மற்றொரு தவறான கருத்து என்னவென்றால் அன்டார்க்டிகாவிலுள்ள ஓசோன் துளை அந்த கண்டத்தில் உள்ள எரபஸ் மலையிலிருந்து வெளிவரும் கரையக்கூடிய ஆலசன் சேர்மின்கள் தான் என்பதே.[மேற்கோள் தேவை]

ஓசோன் துளையின் முதல் கண்டுபிடிப்பு

தொகு

G.M.B. டாப்சன் (எக்ச்ப்லோரிங் தி அட்மொச்பியர், 2 ஆம் பதிப்பு, ஆக்ச்போர்து, 1968) ஹாலே பேவில் வசந்த கால ஓசோன் அளவை கண்காணித்த போது அது ~320 DU ஆகா இருந்தது.இது 150 DU அளவு வசந்த கால அளவுடன் குறைந்து இருந்தது.ஆர்க்ட்கில் ~450 DU ஆக இருந்தது.இவை தட்ப வெப்ப நிலை மதிப்பில் ஓசோன் துளைகள் ஏற்படுவதுக்கு முன்னர் இருந்த மதிப்பீடுகள்.டாப்சன் ஓசோன் துளையை கணக்கிடும் அடித்தளமாக கருதுகிறார்: ஆனால் ஓசோன் துளைகள் மதிப்பீடுகள் 150–100 DU தொடர்ச்சியில் இருக்கின்றன.

ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் இடையே இருக்கும் முரண்பாடுகள் நேரத்தை பொருத்தது என்று டாப்சன் கூறுகிறார்: ஆர்க்டிக் வசந்த காலம் பொழுது, ஓசோன் அளவுகள் எந்த தடையும் இன்றி ஏறுகின்றன.இது ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை அடைகிறது. ஆனால், அண்டார்க்டிக்கில் வசந்த காலம் பொழுது அதே நிலையிலும் நவம்பெர் மாதத்தில் திடீர் எழுச்சியையும் காண்பிக்கின்றன.இது திடீர் என்று துருவ சுழர்ச்சி போது மாறுகிறது.

அண்டார்க்டிக் ஓசோன் துளையில் காணப்படும் நடத்தை முற்றிலுமாக வேறுபட்டது.அது ஒரே நிலையில் இல்லாமல் வசந்த கால ஓசோன் அளவு திடீரென்று பனிகால அளவைவிட குறைகின்றன. இது 50% ஆக கூட இருக்கின்றன. திரும்ப அவை சரசாரி நிலைக்கு திரும்ப டிசம்பர் வரை ஆகிறது. இந்த கோட்பாடுகள் மட்டும் சரியானவையாக இருந்தால் ஓசோன் துளை CFC மூலங்களுக்கு மேல் இருக்கும். CFC கள் அடிவெளி மண்டலத்திலும் அடுக்கு மண்டலத்திலும் நன்கு கலந்துள்ளன.அண்டார்க்டிகா மீது நிறைய ஓசோன் துளைகள் தோன்றுவதுக்கு காரணம் CFC கள் அல்ல. துருவ பகுதிகளின் மீது இருக்கும் அடுக்கு மண்டலத்தில் இருக்கும் மேகங்கள் தான் காரணம்.[53] த்முருன்பாடுடைய பல கண்டுபிடிப்புகள் உலங்கமேங்கும் பல தெளிவான அபாயகரமான ஓசோன் துளைகளை எடுத்துக்காட்டியுள்ளன.[54]

ஓசோன் துளை என்பது ஓசோன் பாள்ளத்தின் மீது இருக்கும் துளையாகும். ஓசோன் துளைகள் உருவாகும் போது அடுக்கு மண்டலத்தில் இருக்கும் அணித்து ஒசோனும் அழிந்து போகின்றது.அடுக்கு மண்டலத்தின் மேல் பகுதி மிக குறைவாகவே பாதிக்கப் படுகின்றது. ஆனால் கண்டத்தின் மீது இருக்கும் ஓசோனின் அளவு 50 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலாக குறைகின்றது.இந்த ஓசோன் துளை பாலத்தை முழுவதுமாக துளைக்காது. அதே சமயம், அது ஒரே மாதிரியாக பாளத்தை மெலிதும் படுத்து.இது ஒரு துளை என்று கூறினால், இது பூமியில் இருக்கும் துளை போன்றது, இது ஒரு பள்ளம். கண்ணாடியில் இருக்கும் துளை போல் அல்ல.

உலக ஓசோன் தினம்

தொகு

1987 இல் மாண்டிரியால் பிரோடோகால் கையொப்பம் செய்த பின்னர் அதனை நினைவு கூறும் வகையில்ஐக்கிய நாடுகள் அவை பொது கூட்டம் செப்டம்பர் பதினாறாம் நாளை "உலக ஓசோன் தினமாக" கொண்டாட 1994 ஆம் ஆண்டு வாக்களித்தது.

ஓசோன் படை

தொகு

ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும். இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.

ஓசோன் ஒட்சிசனின் விசேடமான ஒரு வடிவமாக உள்ளது. மூன்று ஒட்சிசன் அணுக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண இரு அணுக்களினை கொண்ட ஒட்சிசனை விட விசேட அமைப்பினை கொண்டது. ஓசோன் ஆனது படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், மற்றும் உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீசலின் மூலமும் உற்பத்தியாகின்றது. படை மண்டல ஓசோன் படையானது புவிக்கு நன்மை பயப்பிக்கும் விதத்தில் செயற்படுகின்றது. புறஊதாக்கதிர் வீசலினை புவியின் மேற்பரப்பை அடையாவண்ணம் தடுக்கின்றது. அறிவியலாளர்கள் 1920 இல் ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனா. 1974 இல் வேதியியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை உலகிலுள்ள அனைத்து மக்களையும் சார்ந்துள்ளது.

ஓசோன் தேய்விற்கான காரணங்கள்

தொகு

ஓசோன் தேய்விற்கு ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது அல்லது பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro floro Carban), கார்பன் தெட்ராகுளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதில் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குக் காரணமாக உள்ளன. இவ்வூறு விளைவிக்கும் காரணிகள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் சக்தி வாய்ந்த அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பொருட்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படுகின்றன. குளோரின் மற்றும் புரோமின் அணுக்களின் ஒன்றுகூடலானது மேல்வளிமண்டலத்தில் ஓசோன் அழிவு செயற்பாட்டினை துரிதப்படுத்தியதன் விளைவாக சிறப்பாக முனைவுப்பகுதிகளில் ஓசோனின் அளவினை தாழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. 1980 இல் பாரதூரமாக ஓசோனின் அழிவிற்கு ஹலோகனின் அழிக்கக்கூடிய நடவடிக்கைகள் காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதனையே ஓசோன் துவாரம் (Ozone hole) எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

ஓசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது ஏற்படுகின்ற விளைவுகள்

தொகு

ஓசோன் படையானது புவிக்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது. இப்படையானது சூரியனில் இருந்து வருகின்ற புற ஊதாக்கதிர்வீசலினை உறிந்துக்கொள்வதுடன் புவியின் மேற்பரப்பினை அடையும் அளவினையும் குறைக்கின்றது. ஓசோன் படையின் மட்டம் குறைவடைவதனால் UV அளவு அதிகரிப்பதுடன் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஆராய்வுகளின் படி UV-B கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. UV-B கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. UV-B தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. உயர் புறஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணியிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria) நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் நைதரசன் நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதானதொரு பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன. UV கதிர்வீசல் தாவர வளர்ச்சியினை பாதிக்கின்ற படியினால் தாழ்மட்ட விவசாய உற்பத்திக்கு ஏதுவாகின்றது. இதன் காரணமாக பிளான்தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவு வலையின் முதல்நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவ குறைவடைதலானது மீன்களின் அளவு குறைவடைவதற்கு வழிவகுக்கின்றது.(சமுத்திர உயிர் சூழலியல் செயற்பாட்டின் உணவூ சங்கிலி முறைமையினுடாக).

ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்காக பூகோள ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

தொகு

ஓசோன் படை தேய்வினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முக்கிய விடயமாகும். குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது ஓசோன் தேய்வு பொருட்களான குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையூம் விளைவிக்கின்றது. உலக மக்கள் ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில் எமது எதிர்கால சந்ததிகள் அதன் எதிர் விளைவினை சந்திக்க வேண்டி ஏற்படும். இவ் ஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விளைவிக்கும் பொருட்கள் வெளியேற்றப்படும் (ODS) பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட தேசத்திற்கோ மட்டும் தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் முழு சனத்தொகையுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஓசோன் படை தேய்வினை நோக்கிய பன்னாட்டு பிரயத்தனம்

தொகு

விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து 1985 இல் ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக வியன்னா மகாநாட்டினை உருவாக்கின. இச்சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது 1987 இல் மொன்றியல் சாசனம் ஓசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவதனை தடுப்பது தொடர்பாக உருவாக்கப்பட்டது. CFC, HCFC மற்றும் ஏனைய தேய்விற்கு பொருப்பான பொருட்களை வெளியிடாது சூழல்-நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்துமாறு வலியூறுத்தப்பட்டது.

பிரதான கடமைகள்

  • ODS பொருட்களை உற்பத்தி செய்வது நுகர்வது ஆகியவற்றினை கட்டுப்படுத்துதல்.
  • ODS இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல்.
  • ODS இன் வருடாந்த உற்பத்தி தரவுகளைப் பேணல். அபிவிருத்தியடைந்த நாடுகள் பல்பக்க நிதியூதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழினுட்பங்களை ODSவெளியேற்றத்திற்கு பயன்படுத்த கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான நிதிசம்பந்தமான விடயங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 7 அங்கத்தவர்கள் (அபிவிருத்தியடைந்த அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து) பொறுப்பு வகிப்பர்.
  • அடிப்படையில் இச்சட்டம் ODS பொருட்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
  • 1992 இல் லண்டன் சட்டம் அதிகப்படியாக ஓசோனை சேதப்படுத்தும் பொருட்களை வெளியிடும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்பானதாக இருந்தது.
  • 1996 இல் இச்சட்டம் விரைவுப்படுத்தப்பட்டது.

• 1995ல் வியன்னா, 1997ல் மொன்றியல் 1999ல் பீஜிங் ஆகிய நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

ஓசோன் படை தேய்வினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

தொகு

மானிடகாரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதனால் இயற்கை சமநிலை குலைகின்றது. மொன்றியல் சாசனத்தன் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் (CFC மற்றும் ODS பாவனையாளர்கள்) சூழல்-நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதனை ஊக்குவித்து வருகின்றன .மொன்றியல் சாசனமானது வழக்கத்தை மாற்றி புதுமையை புகுத்தும் விடயங்களையும் தொழில்நுட்பத்தினூடாக அவற்றின் வியாபித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவனரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகின்றது.

உலகரீதியாக நகரும் குளிரூட்டிகள் (Mobile Airconditioner) சூழல்-நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஓசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS பொருட்களினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றது. (ODS, Ozone Depleting Substances) 1970 காலகட்டங்களில் காணப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓசோன் முறைமையினை மொன்றியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் 5-6 தசாப்தங்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டல கணினி மாதிரிகள் காட்டிநிற்கின்றன.

மாற்றுத் தொழில்நுட்பங்கள்

தொகு

வெற்றிகரமானதொரு மாற்று தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி ழுனுளு இனை வெளியேற்றி ஏனைய உலக சூழலியல் சவால்களை எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது. ODS ஆனது பாரிய அளவில் கைத்தொழில் நடவடிக்கைகளினால் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக குளிரூட்டிகள் குளிர்சாதன பொருட்கள் போர் நடவடிக்கைகள் கரைசல்கள் விவசாயம் விண்துகல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட கைத்தொழில் நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. எனவே பாரிய கைத்தொழில் நிறுவனங்கள் புதிய ஓசோன் - நட்பான தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கு தேவையான வளங்களை பெற்றுள்ளன பெற்றவருகின்றன. ஆனால் சிறிய கைத்தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான அறிவினை வேண்டி நிற்கின்றன. ஆனது ODS வாயுவின் குறிப்பிடத்தக்க உற்பத்தி மற்றும் நுகர்வினை குறைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. தேசிய ரீதியாக மீள் சுழற்சி மற்றும் மீள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் ODS இன் உற்பத்தியினை குறைக்க கூடியதாக உள்ளது.

இரட்டை அனுகூலங்கள்

தொகு

மொன்றியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கொள்கைகளின் அமுலாக்கங்களானது ODS வளிமண்டலத்திற்கு ஏற்படுத்தும் கேடுகளை குறைப்பதுடன் குறிப்பிடத்தக்களவில் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. மொன்றியல் சாசனம் காலநிலை மீதான தாக்கங்களை குறைப்பதற்கு புதிய உபாய முறைகளை அபிவிருத்தி செய்ய ஊக்குவிக்கின்றது. மற்றும் பைங்குடில் வாயுக்களின் (GHG, Green House Gases) உற்பத்தியை குறைக்கவும் உதவுகின்றது. பல ஓசோன் தேய்வுப் பொருட்களை GH வாயுக்கள் கொண்டுள்ளன. மொன்றியல் பிரகடனமானது அபிவிருத்தியடைந்த அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ODS பொருட்களின் பாவனையை குறைக்கவும் மற்றும் ஓசோன் தேய்வினை தாழ்நிலையில் வைத்திருக்கவும் பூகோள வெப்பமடைதலினை (Global Warming) தாழ்நிலையில் வைத்திருக்கவும் ஊக்குவிக்கின்றது.

பூகோள ரீதியான சவால்களை சந்திப்பதற்காக இலங்கை கொண்டுள்ள பிரயத்தனங்கள

தொகு

இலங்கை CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களையோ உற்பத்தி செய்யவில்லை. எவ்வாறிருப்பினும் அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் மொன்றியல் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடு என்ற ரீதியில் சாசனத்தில் உள்ள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருத்தல் வேண்டி உள்ளது. குளிர்சாதன தொழிற்சாலைகள் ODS இனை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை) ODS தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதனை பல்பக்க நிதிவசதிகளின் உதவியுடன் செய்துவருகின்றது. சூழல்-நட்பான தொழில்நுட்பங்கள் நாட்டிற்கு பல்வேறு வழிகளில் நன்மை பயப்பித்துள்ளன. தேசிய ரீதியாக இது தொடர்பான சட்ட அமுலாக்கங்கள் தேசிய ஓசோன் அமைப்பினால் (National Ozone Unit) செயற்படுத்தப்படுகின்றது. NOU ஆனது ஜனவரி 2008 இல் ODS இன் இறக்குமதியை தடை செய்தது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. இலங்கை அனைத்துலகரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறைமை(Coding) Harmonized System (H.S Code) ஒன்றினை ODS பொருட்களின் இறக்குமதியினை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. NOU ஓசோன் தேய்வுப் பொருட்கள் தொடர்பான தரவுகளையும் கையாண்டு வருகின்றது.

ஏதாவது ஒரு நாட்டின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு தொழில்நுட்பமானது அத்தியாவசியமான கருவியாக செயற்பட்டுவருகின்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடாக இலங்கை இருப்பதனால் அதன் நிலையான அபிவிருத்தியினை சூழல் பாதுகாப்புடன் கூடிய பொருளாதார அபிவிருத்தியினூடாக பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தியினை மொன்றியல் சாசனத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றியமைப்பு செய்கைக்குட்பட்ட தொழில் நுட்பங்களினூடாக சாதிக்ககூடியதாக உள்ளது. பல அரசாங்கங்கள் ODS இனை அடிப்படையாக கொண்ட பொருட்களை தடைசெய்ததுடன் பாரியளவில் சூழல்-நட்பு தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மொன்றியல் சாசனத்தினூடாக நிதி உதவியை அளிப்பதானது உற்பத்தியை அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் அதிகரித்துள்ளது. இவை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினை கட்டியெழுப்புவதற்கு தேவையான சக்தியினை வழங்கிவருகின்றது.

குறிப்புகள்

தொகு
  1. "Part III. The Science of the Ozone Hole". பார்க்கப்பட்ட நாள் 2007-03-05.
  2. "Chlorofluorocarbons (CFCs) are heavier than air, so how do scientists suppose that these chemicals reach the altitude of the ozone layer to adversely affect it?". பார்க்கப்பட்ட நாள் 2009-03-08.
  3. ஸ்டிராடோஸ்பியரிக் ஓசோன்: ஆன் இலக்டிரானிக் டெக்ஸ்ட் புக் , அதிகாரம் 5, பிரிவு 4.2.8, http://www.ccpo.odu.edu/SEES/ozone/class/Chap_5/index.htm
  4. ஸ்டிராடோஸ்பியரிக் ஓசோன் டிப்லீஷன் பை க்லோரோப்ளூரோகார்பன்ஸ் (நோபெல் லெக்சர்) - என்சயிகிலோபீடியா ஆப் எர்த்
  5. நேச்சர்
  6. "அல்டிராவயலெட் அப்சார்ப்ஷன் ஸ்பெக்டிரம் ஆப் க்ளோரின் பெராக்சைட், ClOOCl". Archived from the original on 2008-10-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  7. "புல்லேடின் - தி ஜர்னல் ஆப் தி வேர்ல்ட்மீடியாராலோஜிகள் ஆர்கநிசெஷன்". Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  8. http://www.sciencemag.org/cgi/content/full/sci;324/5928/781?maxtoshow=&HITS=10&hits=10&RESULTFORMAT=&searchid=1&FIRSTINDEX=0&volume=324&firstpage=781&resourcetype=HWCIT
  9. தி ஓசோன் ஹோல் டூர்: பாகம் II. ரீசன்ட் ஓசோன் டிப்லீஷன்
  10. "வேர்ல்ட் மீடியாராலோஜிகல் ஆர்கநிசெஷன் (WMO)". Archived from the original on 2007-04-25. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  11. U.S. EPA: ஓசோன் டிப்லீஷன்
  12. "கிளைமேட் சேஞ்சு 2001: தி சயிண்டிபிக் பேசிஸ்". Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  13. "http://www.giss.nasa.gov/edu/gwdebate/". Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05. {{cite web}}: External link in |title= (help); Unknown parameter |= ignored (help)
  14. chlorofluorocarbons – FREE chlorofluorocarbons Information | Encyclopedia.com: Facts, Pictures, Information!
  15. "அண்டார்க்டிக் ஓசோன் துளை". Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  16. அண்டார்க்டிக் ஓசோன் டிப்லீஷன் FAQ, பிரிவு 7
  17. NOAA ஆய்வு நைட்ரஸ் ஆக்சைடை உலகத்திலேயே மேலோங்கிய ஓசோன் சிதைவு பொருளாக அறிவிக்கிறது, NOAA, ஆகஸ்ட் 27, 2009
  18. "http://www.grida.no/publications/other/ipcc%5Ftar/?src=/climate/ipcc_tar/wg1/351.htm". Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14. {{cite web}}: External link in |title= (help)
  19. "http://www.niwa.co.nz/services/uvozone". Archived from the original on 2005-05-27. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05. {{cite web}}: External link in |title= (help)
  20. ஓசோன் அண்ட் சோலார் UV-B ரேடியேஷன்: கீவ் மற்றும் அண்டார்க்டிகாவில் உள்ள சூரிய வெளிச்சத்தினால் உண்டாகும் செயற்கையான வைட்டமின் D- இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ரிமோட் சென்சிங்
  21. 21.0 21.1 http://www.gcrio.org/CONSEQUENCES/summer95/impacts.html பரணிடப்பட்டது 2010-07-10 at the வந்தவழி இயந்திரம் Consequences (vol. 1, No. 2) - இம்பாக்ட்ஸ் ஆப் எ ப்ரோஜெக்டட் டிப்லீஷன் ஆப் தி ஓசோன் லேயர்
  22. Wavelengths effective in induction of malignant me...[][http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?db=PubMed&cmd=Retrieve&list_uids=8341684&dopt=Citation Proc Natl Acad Sci U S A. 1993] - PubMed Result
  23. Fears et al, Cancer Res. 2002, 62(14):3992–6
  24. அபர்கா, ஜேம் F. & காசிச்சியா, க்லாடியோ C. (2002) ஸ்கின் கேன்சர் அண்ட் அல்டிராவயலெட்-B ரேடியேஷன் அண்டர் தி அண்டார்க்டிக் ஓசோன் ஹோல்: சதேர்ன் சிலீ, 1987-2000. போடோடேர்மடாலாஜி, போடோஇம்முனாலாஜி & போடோமெடிசின் 18 (6), 294–302 http://doi.org/10.1034/j.1600-0781.2002.02782.x
  25. JAMA - சன்லயிட் எக்ஸ்போஷர் அண்ட் ரிஸ்க் ஆப் லென்ஸ் ஒபேசிடீஸ் இன் எ பாபுலேஷன்-பேஸ்ட் ஸ்டடி: தி சாலிஸ்பரி ஐ இவால்யுவேஷன் பிராஜக்ட், 26 ஆகஸ்ட் 1998, வெஸ்ட் எ ஆல். 280 (8): 714
  26. அல்டிராவயலெட் லயிட் எக்ஸ்போஷர் அண்ட் லென்ஸ் ஒபேசிடீஸ்: தி பீவர் டாம் ஐ ஸ்டடி. - Cruickshanks et al. 82 (12): 1658 - அமெரிக்கன் ஜர்னல் ஆப் பப்ளிக் ஹெல்த்
  27. ரேஷியல் டிபரன்சஸ் இன் லென்ஸ் ஒபேசிடீஸ்: தி சாலிஸ்பரி ஐ எவால்யுவேஷன் (SEE) பிராஜக்ட்
  28. Prevalence of lens opacities in the Barbados Eye S...[][http://www.ncbi.nlm.nih.gov/sites/entrez?cmd=Retrieve&db=PubMed&list_uids=9006434&dopt=AbstractPlus Arch Ophthalmol. ][http://www.ncbi.nlm.nih.gov/sites/entrez?cmd=Retrieve&db=PubMed&list_uids=9006434&dopt=AbstractPlus 1997] - PubMed Result
  29. R. P. Sinha; S. C. Singh and D.-P. Häder (1999). "Photoecophysiology of cyanobacteria". Journal of Photochemistry and Photobiology 3: 91–101. 
  30. 30.0 30.1 30.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  31. ஓசோன் சிதைப்பு பொருட்களை சோதனைக்கூடங்களில் பயன்படுத்துதல். பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம்TemaNord 516/2003 பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம்
  32. Newman, P. A., Nash, E. R., Kawa, S. R., Montzka, S. A. and Schauffler, S. M (2006). "When will the Antarctic ozone hole recover?". Geophysical Research Letters 33: L12814. doi:10.1029/2005GL025232. 
  33. "வேர்ல்ட் meetiyaaraalaajikal Meteorological Organization (WMO)" (PDF). Archived from the original (PDF) on 2007-01-24. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  34. "வேர்ல்ட் மீடியாராலாஜிகள் அர்கநிசெஷன் (WMO)" (PDF). Archived from the original (PDF) on 2007-01-24. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  35. CPC - ஸ்டிராடோச்பியர்: வின்டர் புல்லடின்ஸ்
  36. "http://www.ipcc.ch/press/SPM.pdf" (PDF). Archived from the original (PDF) on 2005-05-19. பார்க்கப்பட்ட நாள் 2005-05-19. {{cite web}}: External link in |title= (help)
  37. "Available Annual NCEP data". Archived from the original on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  38. "ஓசோன் மேப்புகளை தேர்தெடுத்தல், தனிப்பட்ட மூலங்கள்". Archived from the original on 2007-06-30. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  39. Index of /products/stratosphere/sbuv2to/archive/nh
  40. ஓசோன் துளை கண்காணிப்பு
  41. http://www.theregister.co.uk/2006/10/03/ozone_depletion
  42. "CNW Group | CANADIAN SPACE AGENCY | Canada's SCISAT satellite explains 2006 ozone-layer depletion". Archived from the original on 2008-01-11. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  43. ஓசோன் டிபலீஷன் , ஹிஸ்டரி அண்ட் பாலிடிக்ஸ் பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம் ஆக்சஸ்ட் 18 November 2007.
  44. 44.0 44.1 Hegerl, Gabriele C. "Understanding and Attributing Climate Change" (PDF). Climate Change 2007: The Physical Science Basis. Contribution of Working Group I to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Intergovernmental Panel on Climate Change. p. 675. Archived from the original (PDF) on 2018-05-08. பார்க்கப்பட்ட நாள் 2008-02-01. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  45. "Climate Change 2001: Working Group I: The Scientific Basis". Intergovernmental Panel on Climate Change Work Group I. 2001. pp. Chapter 6.4. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2007-03-04.
  46. 46.0 46.1 (PDF) IPCC/TEAP Special Report on Safeguarding the Ozone Layer and the Global Climate System: Issues Related to Hydrofluorocarbons and Perfluorocarbons (summary for policy makers). International Panel on Climate Change and Technology and Economic Assessment Panel. 2005 இம் மூலத்தில் இருந்து 2005-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050519101026/http://www.ipcc.ch/press/SPM.pdf. பார்த்த நாள்: 2007-03-04. 
  47. "The Relative Roles of Ozone and Other Greenhouse Gases in Climate Change in the Stratosphere". Geophysical Fluid Dynamics Laboratory. 2007-02-29. பார்க்கப்பட்ட நாள் 2007-03-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  48. "Phoenix - News - FREON EASY". Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  49. FAQ, part I, section 1.3.
  50. ஓசோன் டிப்லீஷன் FAQ, பார்ட் II, செக்ஷன் 4.3
  51. http://www.nature.com/nature/journal/v403/n6767/full/403295a0.html
  52. ஓசோன் டிப்லீஷன் FAQ, பார்ட் II, செக்ஷன் 4.4
  53. ஓசோன் டிப்லீஷன் FAQ, அண்டார்க்டிக்
  54. ozone hole: Definition and Much More from Answers.com

உசாத்துணைகள்

தொகு
  • Dr.Sumathipala W.L (Director) & Safinas I.P, (June/July 2008).,Economic Review: Global Warming And Environmental Threats., APeople’s Bank publication.
  • Aluvihare .D.W,(2003), Srilanka Country hand book on import/export licensing system on Ozone Depleting Substances(ODS),(47-49),SriLanka.
  • Montreal Protocol on Substances that deplete the Ozone Layer,Environmental effects of and Interaction with Climate change 2006 assessment,United Nations Environmental Programme,Kenya.
  • Scientific assessment of Ozone Depletion 2002,World Meteorological Organization. Global Ozone research and monitering project,Report no.47,Geneva.
  • Ozone Layer Depletion பரணிடப்பட்டது 2012-06-26 at the வந்தவழி இயந்திரம்
  • Introduction :Ozone Layer Depletion

தொழில்நுட்பமல்லாத நூல்கள்

தொகு

பொது கொள்கை பிரச்சனைகள் பற்றிய நூல்கள்

தொகு

ஆய்வு கட்டுரைகள்

தொகு
  • Newman, P. A., Kawa, S. R. and Nash, E. R. (2004). "On the size of the Antarctic ozone hole?". Geophysical Research Letters 31: L12814. doi:10.1029/2004GL020596. 
  • E. C. Weatherhead, S. B. Andersen (2006). "The search for signs of recovery of the ozone layer". Nature 441: 39–45. doi:10.1038/nature04746. 

பிற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசோன்_குறைபாடு&oldid=3731151" இலிருந்து மீள்விக்கப்பட்டது