முகவீணை

(கட்டைக்குழல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி ஆகும். நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது [1] இந்தக் கருவி ஒன்றரை அடி உயரம் கொண்டது. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம்.[2]தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆச்சா மரத்தினால் செய்யப்படும் இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு அல்லது எட்டு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. ஒரு காலத்தில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் இசைக்கப்பட்டுவந்த இது தற்போது திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.

தற்பொழுது திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் மட்டுமே முகவீணை வாசிக்கும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும் வைணவக் கோயில்களில் அர்த்த ஜாம்ப் பூசையின்போது இதை வாசிக்கும் பழக்கம் உள்ளது. தவிலுடன் கூடிய நாகசுரத்தை பெரிய மேளம் என்றும், தவில் இல்லாம இந்தக் கருவியை சின்ன மேளம் என்றும் அழைக்கிறார்கள்.[3]

கோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 'Now it is keeping a low profile' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை
  2. வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.
  3. நவீன் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். p. 20.
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவீணை&oldid=3276328" இலிருந்து மீள்விக்கப்பட்டது