கர்னூல்
கர்னூல் (ஆங்கிலம்:Kurnool), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது ஆந்திராவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது துங்கபத்ரா ஆறு மற்றும் ஹந்திரி ஆறுகளின் தென்கரையில் அமைந்துள்ளது. 1953 முதல் 1956 வரை கர்னூலே ஆந்திராவின் தலைநகரமாக இருந்தது.
கர்னூல் | |
---|---|
மாநகரம் | |
அடைபெயர்(கள்): இராயலசீமையின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
மாவட்டம் | கர்னூல் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு ஜி வீரபாண்டியன் |
பரப்பளவு[1] | |
• மாநகரம் | 69.51 km2 (26.84 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 107 |
ஏற்றம் | 274 m (899 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மாநகரம் | 4,25,214 |
• தரவரிசை | 109வது (இந்தியா) 5வது (ஆந்திரப் பிரதேசம்) |
• அடர்த்தி | 6,100/km2 (16,000/sq mi) |
• பெருநகர்[3] | 4,84,327 |
இனங்கள் | கர்னூல்காரன் |
மொழிகள் | |
• அலுவள் | தெலுங்கு |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அ.கு.எ. | 518001, 518002, 518003, 518004, 518005, 518006, 518007 |
வாகனப் பதிவு | AP-21[4] |
இணையதளம் | கர்னூல் மாநகராட்சி |
புவியியல் தொகு
இவ்வூரின் அமைவிடம் 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 274 மீட்டர் (898 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு தொகு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,25,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7][2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குர்நூல் மக்களின் சராசரி கல்வியறிவு 77.37% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83.01%, பெண்களின் கல்வியறிவு 71.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 73% விட கூடியதே.
மதம் தொகு
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இறுதித் தரவுகளின்படி, கர்னூல் நகர்ப்புறத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். கர்னூலில் காணப்படும் பிற மதக் குழுக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜைனர்கள்[8]
மொழி தொகு
தெலுங்கு (67.91%) அதிகாரப்பூர்வ மற்றும் அதிகம் பேசப்படும் மொழியாகும். உருது (28.17%) மற்றும் இந்தி (1.02%) ஆகியவையும் பேசப்படுகின்றன.[9]
ஆதாரங்கள் தொகு
- ↑ "Kurnool Municipal Corporation |" இம் மூலத்தில் இருந்து 2019-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191203042250/http://kurnool.cdma.ap.gov.in/.
- ↑ 2.0 2.1 "Cities having population 1 lakh and above, Census 2011". Office of the Registrar General & Census Commissioner, India. https://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Office of the Registrar General & Census Commissioner, India. https://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_3_PR_UA_Citiees_1Lakh_and_Above.pdf.
- ↑ "Registration | District Codes | Transport Department Government of Andhra Pradesh – India". https://aptransport.org/html/registration-districtcodes.html.
- ↑ "Kurnool". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/2/Kurnool.html. பார்த்த நாள்: அக்டோபர் 20, 2006.
- ↑ "Kurnool City Population Census 2011-2019 | Andhra Pradesh". https://www.census2011.co.in/census/city/419-kurnool.html.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: அக்டோபர் 20, 2006.
- ↑ 8.0 8.1 "Table C-01 Population by Religion: Andhra Pradesh". Registrar General and Census Commissioner of India. 2011. https://censusindia.gov.in/2011census/C-01/DDW28C-01%20MDDS.XLS.
- ↑ 9.0 9.1 "Table C-16 Population by Mother Tongue: Andhra Pradesh (Town level)". Registrar General and Census Commissioner of India. https://censusindia.gov.in/nada/index.php/catalog/10254/download/13366/DDW-C16-TOWN-STMT-MDDS-2800.XLSX.
வெளியிணைப்புகள் தொகு
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: கர்னூல்
- Kurnool district Mandal Information