காட்டு மல்லி

மல்லி இனங்களில் ஓரினம்

காட்டு மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum abyssinicum ; ஆங்கிலம்: Forest jasmine) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[3], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[4] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரம் யாசுமினம் அபிசினியம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது.[5] இவ்வினத்தாவரங்கள், மலைப்பகுதியின் உயர்மட்டத்தில் வளரும் கொடியினத் தாவர வகையாகும். இதன் தண்டுப்பகுதி 13 செ. மீ. வரை வளரும் இயல்புடையது. தண்டில் இலைகள் பச்சை நிறத்திலும், எதிர் இலையமைவு வகையில் இருக்கின்றன. பூக்களின் பெரும்பகுதி வெண்நிறமாகவும், வெளிப்புறத்தே உப்பிய நிலையிலும் இளஞ்சிவப்பு நிறம் விரவியும் காணப்படுகின்றன.[6]

காட்டு மல்லி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. abyssinicum
இருசொற் பெயரீடு
Jasminum abyssinicum
Hochst. ex DC.[1]
வேறு பெயர்கள் [2]
  • Jasminum butaguense De Wild.
  • Jasminum fraseri Brenan
  • Jasminum mearnsii De Wild.
  • Jasminum rutshuruense De Wild.
  • Jasminum ruwenzoriense De Wild.
  • Jasminum wittei Staner
  • Jasminum wyliei N.E.Br.

பேரினச்சொல்லின் தோற்றம்

தொகு

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[7] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[8]

வாழிடம்

தொகு

உயர் மட்ட காடுகளில் இவ்வினம் செழிப்பாக வளர்கின்றன.[9] எனவேதான், இவ்வினத்திற்கு காட்டு மல்லி என பெயர் அமைந்தது.

பிறப்பிடம்

தொகு

புருண்டி, கமரூன், எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, குவாசுலு-நதால், மலாவி, மொசாம்பிக், வட பெருவட்டாரம், உருவாண்டா, சூடான், தன்சானியா, உகாண்டா, சாம்பியா, சாயிர், சிம்பாப்வே ஆகிய நிலப்பரப்புகள், இத்தாவரயினத்தின் பிறப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[10]

வேறு பெயர்கள்

தொகு

இச்சிற்றினத்தின் பெயரானது, வேறு/ஒத்த/இணைப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக, அதன் அமைப்பு, தோற்றம் கொண்டு இவைகளை இருவகைப் படுத்துகின்றனர். அவை 1. ஒருவகைய(Monotypic) ஒத்த பெயர்கள்,[11] 2. வேறுவகைய(Heterotypic) ஒத்த பெயர்கள்[12] என அழைக்கப்படுகின்றன. ஆனால், கீழ்காணும் வேறுவகைய ஒத்த பெயர்கள் மட்டும் உள்ளன.

  1. Jasminum abyssinicum var. amplifolium Fiori in Nuovo Giorn. Bot. Ital., n.s., 47: 34 (1940)
  2. Jasminum butaguense De Wild. in Rev. Zool. Bot. Africaines 9(Suppl. Bot.): 84 (1921)
  3. Jasminum fraseri Brenan in Kew Bull. 4: 89 (1949)
  4. Jasminum mearnsii De Wild. in Pl. Bequaert. 1: 531 (1922)
  5. Jasminum rutshuruense De Wild. in Rev. Zool. Bot. Africaines 9(Suppl. Bot.): 85 (1921)
  6. Jasminum ruwenzoriense De Wild. in Rev. Zool. Bot. Africaines 9(Suppl. Bot.): 87 (1921)
  7. Jasminum wittei Staner in É.A.J.De Wildeman, Contr. Fl. Katanga, Suppl. 4: 80 (1932)
  8. Jasminum wyliei N.E.Br. in Bull. Misc. Inform. Kew 1909: 419 (1910)

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. UniProt. "Jasminum". பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.
  2. The Plant List: A Working List of All Plant Species, பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2023 {{citation}}: Check date values in: |accessdate= (help)
  3. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/boj.12385
  4. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  5. POWO-Jasminum abyssinicum
  6. https://www.zimbabweflora.co.zw/speciesdata/image-display.php?species_id=144200&image_id=4
  7. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  8. etymonline
  9. WFO-local descriptions
  10. powo-distribution
  11. https://www.merriam-webster.com/dictionary/monotypic
  12. https://www.collinsdictionary.com/dictionary/english/heterotypic

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_மல்லி&oldid=3928758" இலிருந்து மீள்விக்கப்பட்டது