கினோவா
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கினோவா (Quinoa) (செனோபோடியம் கினோவா; /ˈkiːnwɑː/ or /kɪˈnoʊ.ə/, from Quechua kinwa or kinuwa)[2] நாயுருவி (அமரந்தேசியே) குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். கினோவா புல்வகைத் தாவரமன்று; இது ஒரு போலி கூலவகையாகும். இது புதினா, நாயுருவி (அமரந்து) வகைத் தாவரங்களோடு உறவுடையதாகும். இது, அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காகப் பயிரிடப்படும் ஆண்டுச் செடிவகையாகும்; இந்த விதைகளில் மற்ற கூலங்களை விட கூடுதலான புரதமும் நார்ப்பொருளும் பி உயிர்ச்சத்துகளும் கனிமச் சத்துகளும் உள்ளன.[3] வடமேற்குத் தென் அமெரிக்காவில் ஆண்டிசு மலைத் தொடரில் தோன்றியுள்ளது.[4] இது முன்பு கால்நடைத் தீவனமாக 5200–7000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பட்டுள்ளது. இது 3000-4000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மாந்தரின் உணவாக பொலீவியாவில் உள்ள பெரு படுகையின் தித்திகாக்கா ஏரியில் பயன்பட்டுள்ளது.[5]
கினோவா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. quinoa
|
இருசொற் பெயரீடு | |
Chenopodium quinoa Willd. | |
Natural distribution in red, Cultivation in green | |
வேறு பெயர்கள் [1] | |
இன்று, ஆண்டியன் பகுதி கினோவா பயிர் விளைச்சல் பெரும்பாலும் சிறிய பண்ணைகளாலும் கழகங்களாலும் செய்யப்படுகிறது. கினோவா பயிர்விளைச்சல் கென்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மேலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 70 நாடுகளில் செய்யப்படுகிறது.[6] வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கினோவா நுகர்வு கூடியுள்ளதால், கினோவா விலை 2006 இல் இருந்து 2013 க்குள் மும்மடங்கு ஏறியுள்ளது.[7][8]
தாவரவியல்
தொகுவிவரிப்பு
தொகுசெனோபோடியம் கினோவா (Chenopodium quinoa) ஓர் இருவித்திலை ஆண்டுத் தாவரமாகும். இது வழக்கமாக ஒரு மீ முதல் இரு மீ உயரம் வரை வளர்கிறது. இது இயல்பாக ஒன்று விட்டு ஒன்றாக அமைந்தஅகன்ற தூள்பூத்த மயிர்க்கால்கள் உள்ள இலைமடல்கள் கொண்டதாகும். ளையுடனோ இல்லாமலோ. பயிரிடும்வகையைப் பொறுத்து இதன் நடுத்தண்டு கிளையுடனோ இல்லாமலோ அமையலாம். தண்டின் நிறம் பச்சை, சிவப்பு, ஊதா நிறங்களில் இமைகிறது. பூ மஞ்சரி தாவர மேல்நுனியிலோ இலைக் கக்கத்திலோ அமைகிறது. ஒவ்வொரு மஞ்சரியிலும் நடுவச்சு ஒன்று அமையும். இதில் இருந்து அமரந்து வடிவத்தில் இரண்டாம் அச்சு அமையலாம் அல்லது குஞ்ச வடிவத்தில் மூன்றாம் அச்சும் உருவாகலாம்.[9] The green hypogynous flowers have a simple perianth and are generally self-fertilizing.[9][10] இதன் பழத்தில் 2 மிமீ விட்டமுள்ள விதைகள் வெள்ளை, சிவப்பு, கருப்பு நிறங்களில் பயிரிடும்வகையைப் பொறுத்து அமைகின்றன].[11]
இயற்கைப் பரவல்
தொகுசெனோபோடியம் கினோவா அதன் காட்டுவகையில் இருந்து அல்லது களைப்பயிரில் இருந்து பெரூவிய ஆண்டியப் பகுதியில் வீட்டினமாக்கப் பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.[12] இது பயிரிடப்படும் பகுதியிலேயே பயிரிடாத (செனோபோடியம் கினோவா வகையான மெலனோசுபெர்மம் வளர்கிறது; இவை முந்தைய காட்டுவகையில் இருந்தோ பயிரிடும்வகையில் இருந்தோ தோன்றியிருக்கலாம்.[13]
ஊட்டச்சத்துகள்
தொகுஉணவாற்றல் | 1539 கிசூ (368 கலோரி) |
---|---|
64.2 g | |
நார்ப்பொருள் | 7.0 g |
6.1 g | |
ஒற்றைநிறைவுறாதது | 1.6 g |
பல்நிறைவுறாதது | 3.3 g |
14.1 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (0%) 1 மைகி |
தயமின் (B1) | (31%) 0.36 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (27%) 0.32 மிகி |
நியாசின் (B3) | (10%) 1.52 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (38%) 0.49 மிகி |
இலைக்காடி (B9) | (46%) 184 மைகி |
கோலின் | (14%) 70 மிகி |
உயிர்ச்சத்து சி | (0%) 0 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (16%) 2.4 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (5%) 47 மிகி |
இரும்பு | (35%) 4.6 மிகி |
மக்னீசியம் | (55%) 197 மிகி |
மாங்கனீசு | (95%) 2.0 மிகி |
பாசுபரசு | (65%) 457 மிகி |
பொட்டாசியம் | (12%) 563 மிகி |
சோடியம் | (0%) 5 மிகி |
துத்தநாகம் | (33%) 3.1 மிகி |
நீர் | 13.3 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
உணவாற்றல் | 503 கிசூ (120 கலோரி) |
---|---|
21.3 g | |
நார்ப்பொருள் | 2.8 g |
1.92 g | |
ஒற்றைநிறைவுறாதது | 0.529 g |
பல்நிறைவுறாதது | 1.078 g |
4.4 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (0%) 0 மைகி |
தயமின் (B1) | (9%) 0.107 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (9%) 0.11 மிகி |
நியாசின் (B3) | (3%) 0.412 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (9%) 0.123 மிகி |
இலைக்காடி (B9) | (11%) 42 மைகி |
கோலின் | (5%) 23 மிகி |
உயிர்ச்சத்து சி | (0%) 0 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (4%) 0.63 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (2%) 17 மிகி |
இரும்பு | (11%) 1.49 மிகி |
மக்னீசியம் | (18%) 64 மிகி |
மாங்கனீசு | (30%) 0.631 மிகி |
பாசுபரசு | (22%) 152 மிகி |
பொட்டாசியம் | (4%) 172 மிகி |
சோடியம் | (0%) 7 மிகி |
துத்தநாகம் | (11%) 1.09 மிகி |
நீர் | 72 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
கினோவாவில் 13% நீரும் 64% மாவுப்பொருளும் 14% புரதமும் 6% கொழுப்பும் உள்ளது. 100 கிராம் அளவு பச்சைக் கினோவாவில் 20% அல்லது அதற்கும் கூடுதலான அளவு புரதமும் நார்ப்பொருளும் பல பி உயிர்ச்சத்துகளும் 46% இலைச்சத்தும் கனிமச்சத்தும் மகனீசியமும் பாசுவரமும் மாங்கனீசும் அமைகின்றன.
சமைத்த கினோவாவில் 72% நீரும் 21% மாவுப்பொருளும் 4% புரதமும் 2% கொழுப்பும் உள்ளன.[14] 100 கிராம் சமைத்த கினோவாவில் 120 கிகலோரு வெப்ப மதிப்பும் செறிவாக 30% மாங்கனீ சும் 22% பாசுவரமும் 10–19% நார்ப்பொருளும் இலைச்சத்தும் கனிமச்சத்தும் இரும்பும் துத்தநாகமும் மகனீசியமும் அமைகின்றன.
கினோவா பசைமை அற்றது.[3] உயர்செறிவான புரதம் உள்ளதால் பயன்படுத்தலும் சமைத்தலும் எளிது. கட்டுபாடான சுற்றுச்சூழலில் உயர்விளைச்சல் வாய்ப்புள்ளது.[15] இது விண்வெளிச் சூழலில் நெடுநாள் வாழப் பயன்படுத்துவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட செய்முறைப் பயிராகும்.[16]
காட்சிமேடை
தொகு-
பூத்தலுக்கு முன் கினோவா
-
கினோவா பூ
-
கருப்பு கினோவா விதைகள் உருவாதல்
-
பெருவில் கினோவா கூலக் கதிரடித்தல்
-
கொனோவா விதைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Plant List: A working list of all plant species". பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
- ↑ Teofilo Laime Ajacopa (2007). Diccionario Bilingüe: Iskay simipi yuyayk’anch: Quechua – Castellano / Castellano – Quechua (PDF). La Paz, Bolivia.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 3.0 3.1 "Quinoa: An ancient crop to contribute to world food security" (PDF). Food and Agriculture Organization. July 2011. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ Fuentes, F. F.; Martínez, E. A.; Hinrischen, P. V.; Jellen, E. N.; Maughan, P. J. (10 May 2008). "Assessment of genetic diversity patterns in Chilean quinoa (Chenopodium quinoa Willd.) germplasm using multiplex fluorescent microsatellite" (PDF). Conservation Genetics 10 (2): 369–377. doi:10.1007/s10592-008-9604-3. https://www.researchgate.net/publication/227063572. பார்த்த நாள்: 14 February 2016.
- ↑ Kolata, Alan L. (2009). "Quinoa" (PDF). Quinoa: Production, Consumption and Social Value in Historical Context. Department of Anthropology, The University of Chicago.
- ↑ "Distribution and production". Food and Agriculture Organization of the United Nations. 2013. பார்க்கப்பட்ட நாள் 25 June 2019.
- ↑ "Quinoa". Agricultural Marketing Resource Center, US Department of Agriculture. November 2017. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
- ↑ Blythman, Joanna (16 January 2013). "Can vegans stomach the unpalatable truth about quinoa?". The Guardian (London). https://www.theguardian.com/commentisfree/2013/jan/16/vegans-stomach-unpalatable-truth-quinoa. பார்த்த நாள்: 17 Jan 2013.
- ↑ 9.0 9.1 The Lost Crops of the Incas: Little-Known Plants of the Andes with Promise for Worldwide Cultivation. U.S. National Research Council, Advisory Committee on Technology Innovation, National Academies. 1989.
- ↑ Reinhard Lieberei, Christoph Reissdorff; Wolfgang Franke (2007). Nutzpflanzenkunde. Georg Thieme Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3135304076.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - ↑ Vaughn, JG; Geissler, CA (2009). The New Oxford Book of Food Plants. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199549467.
- ↑ Barbara Pickersgill (August 31, 2007). "Domestication of Plants in the Americas: Insights from Mendelian and Molecular Genetics". Annals of Botany 100 (5): 925–40. doi:10.1093/aob/mcm193. பப்மெட்:17766847. பப்மெட் சென்ட்ரல்:2759216 இம் மூலத்தில் இருந்து October 21, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071021154818/http://aob.oxfordjournals.org/cgi/content/full/mcm193v1.
- ↑ Heiser Jr., Charles B.; Nelson, David C. (September 1974). "On the Origin of the Cultivated Chenopods (Chenopodium)". Genetics 78 (1): 503–5. பப்மெட்:4442716. பப்மெட் சென்ட்ரல்:1213209. http://www.genetics.org/cgi/content/abstract/78/1/503.
- ↑ Johnson DL, Ward SM (1993). "Quinoa". Department of Horticulture, Purdue University; obtained from Johnson, D.L. and S.M. Ward. 1993. Quinoa. p. 219-221. In: J. Janick and J.E. Simon (eds.), New crops. Wiley, New York. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
- ↑ Abugoch, James L. E. (2009). Quinoa (Chenopodium quinoa Willd.): composition, chemistry, nutritional, and functional properties (Review). Advances in Food and Nutrition Research. Vol. 58. pp. 1–31. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S1043-4526(09)58001-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123744418. PMID 19878856.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Greg Schlick; David L. Bubenheim (November 1993). "Quinoa: An Emerging "New" Crop with Potential for CELSS" (PDF). NASA Technical Paper 3422. NASA.
{{cite web}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help)
மேலும் படிக்க
தொகு- Pulvento, C.; Riccardi, M.; Lavini, A.; d’Andria, R.; Ragab, R. (2013). "SALTMED Model to Simulate Yield and Dry Matter for Quinoa Crop and Soil Moisture Content Under Different Irrigation Strategies in South Italy". Irrigation and Drainage 62 (2): 229–238. doi:10.1002/ird.1727. http://nora.nerc.ac.uk/id/eprint/506200/1/N506200PP.pdf.
- Cocozza, C.; Pulvento, C.; Lavini, A.; Riccardi, M.; d’Andria, R.; Tognetti, R. (2012). "Effects of increasing salinity stress and decreasing water availability on ecophysiological traits of quinoa (Chenopodium quinoa Willd.)". Journal of Agronomy and Crop Science 199 (4): 229–240. doi:10.1111/jac.12012.
- Pulvento, C; Riccardi, M; Lavini, A; d'Andria, R; Iafelice, G; Marconi, E (2010). "Field Trial Evaluation of Two Chenopodium quinoa Genotypes Grown Under Rain-Fed Conditions in a Typical Mediterranean Environment in South Italy". Journal of Agronomy and Crop Science 196 (6): 407–411. doi:10.1111/j.1439-037X.2010.00431.x.
- Pulvento, C.; Riccardi, M.; Lavini, A.; Iafelice, G.; Marconi, E.; d’Andria, R. (2012). "Yield and Quality Characteristics of Quinoa Grown in Open Field Under Different Saline and Non-Saline Irrigation Regimes". Journal of Agronomy and Crop Science 198 (4): 254–263. doi:10.1111/j.1439-037X.2012.00509.x.
- Gómez-Caravaca, A.M.; Iafelice, G.; Lavini, A.; Pulvento, C.; Caboni, M.; Marconi, E. (2012). "Phenolic Compounds and Saponins in Quinoa Samples (Chenopodium quinoa Willd.) Grown under Different Saline and Non saline Irrigation Regimens". Journal of Agricultural and Food Chemistry 60 (18): 4620–4627. doi:10.1021/jf3002125. பப்மெட்:22512450.
- Simon Romero; Shahriari, Sara (March 19, 2011). "Quinoa's Global Success Creates Quandary at Home". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2011/03/20/world/americas/20bolivia.html. பார்த்த நாள்: July 22, 2012.
- Geerts, S; Raes, D; Garcia, M; Vacher, J; Mamani, R; Mendoza, J; Huanca, R; Morales, B et al. (2008). "Introducing deficit irrigation to stabilize yields of quinoa (Chenopodium quinoa Willd.)". Eur. J. Agron. 28 (3): 427–436. doi:10.1016/j.eja.2007.11.008.
- Geerts, S; Raes, D; Garcia, M; Mendoza, J; Huanca, R (2008). "Indicators to quantify the flexible phenology of quinoa (Chenopodium quinoa Willd.) in response to drought stress". Field Crop. Res. 108 (2): 150–6. doi:10.1016/j.fcr.2008.04.008.
- Geerts, S; Raes, D; Garcia, M; Condori, O; Mamani, J; Miranda, R; Cusicanqui, J; Taboada, C et al. (2008). "Could deficit irrigation be a sustainable practice for quinoa (Chenopodium quinoa Willd.) in the Southern Bolivian Altiplano?". Agric. Water Manage 95 (8): 909–917. doi:10.1016/j.agwat.2008.02.012. https://archive.org/details/sim_agricultural-water-management_2008-08_95_8/page/909.
- Geerts, S; Raes, D; Garcia, M; Taboada, C; Miranda, R; Cusicanqui, J; Mhizha, T; Vacher, J (2009). "Modeling the potential for closing quinoa yield gaps under varying water availability in the Bolivian Altiplano". Agric. Water Manage 96 (11): 1652–1658. doi:10.1016/j.agwat.2009.06.020. https://archive.org/details/sim_agricultural-water-management_2009-11_96_11/page/1652.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கியினங்களில் Chenopodium quinoa பற்றிய தரவுகள்