கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம் (ஆங்கில மொழி: Kilambakkam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், 12°52′10″N 80°04′27″E / 12.869480°N 80.074160°E / 12.869480; 80.074160 (அதாவது, 12°52'10.1"N, 80°04'27.0"E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். ஊரப்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர் மற்றும் பீர்க்கன்கரணை ஆகியவை கிளாம்பாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். கிளாம்பாக்கம் பகுதியானது, செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ம. வரலட்சுமி ஆவார். மேலும் இப்பகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக க. செல்வம், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

கிளாம்பாக்கம்
Kilambakkam
கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம் Kilambakkam is located in தமிழ் நாடு
கிளாம்பாக்கம் Kilambakkam
கிளாம்பாக்கம்
Kilambakkam
கிளாம்பாக்கம், செங்கல்பட்டு
ஆள்கூறுகள்: 12°52′10″N 80°04′27″E / 12.869480°N 80.074160°E / 12.869480; 80.074160
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு மாவட்டம்
ஏற்றம்
57 m (187 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600048
வாகனப் பதிவுTN - 11 yy xxxx
அருகிலுள்ள பகுதிகள்ஊரப்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர் மற்றும் பீர்க்கன்கரணை
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிசெங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்க. செல்வம்
சட்டமன்ற உறுப்பினர்ம. வரலட்சுமி

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் அதிக கூட்ட நெரிசல் காரணமாக, பயணிகளின் சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியவை சாலைப் போக்குவரத்து சேவைகளால் எளிதாக இணைக்கப்பட்டன. சுமார் 350 மாநகர இணைப்புப் பேருந்துகள், சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் விடப்பட்டன.[1] 250 பேருந்து நிறுத்துமிடங்கள், 270 கார்கள் மற்றும் 3500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் ஆகியவை கொண்டு, இப்பேருந்து நிலையம் அமையவிருக்கிறது.[2] சுமார் 40 ஏக்கர் பரப்பளவில், சுமார் ரூ.400 கோடி திட்ட மதிப்பீட்டில் இங்கு பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டது.[3] சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ தொடருந்து பாதை திட்டம், தமிழக அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து 350 பஸ்கள் இயக்க பட்டியல் தயார் - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
  2. "பிப்ரவரியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு? பணிகளை வேகப்படுத்த உத்தரவு". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
  3. "கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமானப் பணி... கட கட; மார்ச்சில் திறப்பு விழா காண்கிறது - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-22. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
  4. Sekar, Sunitha (2023-01-29). "Residents want Airport-Kilambakkam Metro line to be implemented quickly". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.

வெளியிணைப்பு

தொகு

Geohack

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாம்பாக்கம்&oldid=4157432" இலிருந்து மீள்விக்கப்பட்டது