கி. ராஜநாராயணன்
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4] கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், நாட்டுப்புற கதை களஞ்சியம் ஆகியவை இவரது பிரபலமான படைப்புகளில் சில. இவர் 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரை "தமிழ் வாய்மொழி பாரம்பரியத்தின் காவலர்" என்று அழைத்தது.[5]
கி. ராஜநாராயணன் | |
---|---|
கி. ராஜநாராயணன் | |
பிறப்பு | ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள்[1] 16 செப்டம்பர் 1923 இடைசெவல், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 17 மே 2021[2] லாஸ்பேட்டை, புதுச்சேரி, இந்தியா | (அகவை 97)
புனைபெயர் | கி. ரா |
குடியுரிமை | இந்தியர் |
காலம் | 1958– 2021 |
வகை | சிறுகதை, புதினம் |
கருப்பொருள் | நாட்டுப்புறவியல், கிராமிய வாழ்க்கை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1991) |
துணைவர் | கணவதி அம்மாள் (தி. 1954; இற. 2019) |
பிள்ளைகள் |
|
இணையதளம் | |
https://www.kirajanarayanan.com/ |
துவக்ககால வாழ்க்கை
தொகுராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார்.[6] இவர் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாவார்[7] உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சிறுவயதிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார். ஏழாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொண்டார்.[6][8] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ) உறுப்பினரானார். 1947 மற்றும் 1951 க்கு இடையில் சிபிஐ-யால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் கிளர்ச்சிகளில் கலந்து கொண்டு, ஆதரவளித்த காரணங்களுக்காக இரண்டு முறை சிறைக்குச் சென்றார்.[9] 1952 ஆம் ஆண்டு நெல்லை சதி வழக்கிலும் இவர் பெயர் சேக்க்கப்பட்டது இருப்பினும் குற்றச்சாட்டுகள் பின்னர் கைவிடப்பட்டன.[8]
தொழில்
தொகுராஜநாராயணன் 30 வயதில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதையான "மாயமான்" 1959 இல் சரஸ்வதி இதழில் வெளியானது.[8] அது வரவேற்பைப் பெற்றது.[10][11] அதைத் தொடர்ந்து இன்னும் பல சிறுகதைகள் வெளிவந்தன. கி. ரா.வின் கதைகள் வழக்கமாக அவரது சொந்தப் பகுதியான கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கரிசல் காட்டைச் சர்ந்தவை. கதைகள் பொதுவாக கரிசல் நாட்டு மக்கள், அவர்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை, ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளை மையமாக கொண்டவை.[12][13] கோபல்ல கிராமம் மற்றும் அதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் ஆகியவை இவரது மிகவும் பாராட்டப்பட்ட புதினங்களில் ஒன்றாகும், பிந்தைய புதினம் இவருக்கு 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது.[14] ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தென்னிந்தியாவில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பலரின் கதைகளை இந்த புதினம் கையாள்கிறது. தமிழ்நாட்டின் வடக்கே இருந்த கொடூரமான இராச்யங்களிலிருந்து தப்பித்து தெலுங்கு மக்கள் தெற்கே தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து குடியேறுவதை விவரிக்கிறது.[14][15] இந்த புத்தகங்களுக்கு அடுத்த பகுதியாக அந்தமான் நாயக்கர் புதினம் வந்தது.[8]
ஒரு நாட்டுப்புறவியலாளராக, கி. ரா. பல தசாப்தங்கள் கரிசல் வட்டாரத்தில் இருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து பிரபல பத்திரிகைகளில் வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டில், தஞ்சாவூரைச் சேர்ந்த அன்னம் என்ற பதிப்பகம் இந்த நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து நாட்டுப்புற கதைக் களஞ்சியம் என்ற பெயரில் 944 பக்க புத்தகமாக வெளியிட்டது. 2009 வரை, இவர் சுமார் 30 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் பிரித்தம் கே. சக்ரவர்த்தி மொழிபெயர்த்து 2009 இல் Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu என்ற பெயரில் வெளியிட்டார். கி. ரா. நாட்டுப்புறங்களில் நிலவும் பாலியல் கதைகளை நேர்மையாக சேகரித்து எழுதுவதற்கும்,[15][16] அவரது கதைகளில் இலக்கிய மொழிவழக்கைக் காட்டிலும் தமிழ் வட்டார வழக்கைப் பயன்படுத்துவதற்கும் நன்கு அறியப்பட்டவர்.[17] அவர் பேச்சுவழக்கை மொழியின் 'சரியான' வடிவமாகக் கருதினார்.[8] வட்டார வழக்குகளில் கதைகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், கரிசல் வட்டார அகராதி என்று அழைக்கப்படும் என்று மக்கள் தமிழுக்கு அகராதியின் ஆசிரியராகவும் இருந்தார். இந்தப் பணி தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வட்டாரவழக்குகளுக்கும் இதே போன்ற அகராதிகள் உருவாக முன்னோடியாக இருந்தது.[18]
கி. ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., நல்ல இசை ஞானம் கொண்டவர் ,கவியரசு நா.காமராசன் அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையான" சோதனை"யின் ஆலோசகர் ஆக இருந்துள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் பல்கலைக்கழகத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுப்புறக் கதைகளின் இயக்குநர் பதவியை வகித்தார்.[17][19][20] 1998 மற்றும் 2002 க்கு இடையில் இவர் சாகித்திய அகாதமியின் பொதுக்குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார்.[21]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு16, செப்டம்பர், 1954 இல், ராஜநாராயணன் கணவதி அம்மாளை (கி.ரா தங்கை எத்திராஜத்தின் வகுப்புத் தோழி; முறைப் பெண்ணும் கூட) மணந்தார். இணையருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[5] கணவதி 25 செப்டம்பர் 2019 அன்று 87 வயதில் இறந்தார். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 98ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவரது உடல் இவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[22]
திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்
தொகு- 2003 ஆம் ஆண்டில், இவரது கிடை என்ற கதை ஒருத்தி என்ற பெயரில் தமிழ்த் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[23]
- 1992 இல், இவரது கரண்ட் என்ற சிறுகதை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் கரண்ட் (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு கே. அரிகரன் இயக்கிய இந்தித் திரைப்படம்).[24]
விருதுகள்
தொகு- 1971 – தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது[21]
- 1979 – இலக்கிய சிந்தனை விருது[25]
- 1990 – சாந்தோம் இபன்னாட்டு கிறித்தவ சங்கத்தின் சிறந்த எழுத்தாளர் விருது[26]
- 1991 – கோபல்லபுரத்து மக்கள் புதினத்துக்காக சாகித்ய அகாதமி விருது[27]
- 2008 – எம்.ஏ. சிதம்பரம் விருது[28]
- 2016 – கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது.[29][30]
- 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது.
படைப்புகள்
தொகுஅகராதிகள்
தொகுசிறுகதைகள்
தொகு- கன்னிமை
- மின்னல்
- கோமதி
- நிலை நிறுத்தல்
- கதவு(1965)
- பேதை
- ஜீவன்
- நெருப்பு
- விளைவு
- பாரதமாதா
- கண்ணீர்
- வேட்டி
- கரிசல்கதைகள்
- கி.ரா-பக்கங்கள்
- கிராமிய விளையாட்டுகள்
- கிராமியக்கதைகள்
- குழந்தைப்பருவக்கதைகள்
- கொத்தைபருத்தி
- புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
- பெண்கதைகள்
- பெண்மணம்
- வயது வந்தவர்களுக்கு மட்டும்
- கதை சொல்லி(2017)
- மாயமான்
குறுநாவல்
தொகு- கிடை
- பிஞ்சுகள்
நாவல்
தொகு- கோபல்ல கிராமம்
- கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது - 1991)
- அந்தமான் நாயக்கர்
கட்டுரை
தொகு- ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
- புதுமைப்பித்தன்
- மாமலை ஜீவா
- இசை மகா சமுத்திரம்
- அழிந்து போன நந்தவனங்கள்
- கரிசல் காட்டுக் கடுதாசி
- மாந்தருள் ஒரு அன்னப்பறவை
தொகுதி
தொகு- நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
மேற்கோள்கள்
தொகு- ↑ கரிசல் இயக்கத்தின் தந்தை' என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா. காலமானார்
- ↑ "எழுத்தாளர் கி.ரா. காலமானார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2021/may/18/writer-ki-rajanarayanan-passed-away-3624996.html. பார்த்த நாள்: 17 May 2021.
- ↑ "Writer Ki Rajanarayanan passes away at 98 in Puducherry". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 18 May 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/18/writer-ki-rajanarayanan-passes-away-at-98-in-puducherry-2303922.html.
- ↑ "Eminent Tamil writer Ki Rajanarayanan is no more". தி இந்து. 18 May 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/eminent-tamil-writer-ki-rajanarayanan-is-no-more/article34582661.ece.
- ↑ "Guardian of Tamil oral tradition falls silent". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
- ↑ 6.0 6.1 "Micha Kathaigal in Ki Rajanarayanan's Idaiseval village". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
- ↑ கி. ரா.95
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 Kolappan, B. (18 May 2021). "Eminent Tamil writer Ki Rajanarayanan is no more". தி இந்து (India). https://www.thehindu.com/news/national/tamil-nadu/eminent-tamil-writer-ki-rajanarayanan-is-no-more/article34582661.ece.
- ↑ "Final rites with full State honours for Ki Rajanarayanan, statue at Kovilpatti: Stalin". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
- ↑ Maalan (21 September 2007). "இன்னும் ஒரு நூறாண்டு இரும்". பார்க்கப்பட்ட நாள் 10 March 2009.
- ↑ Rajanarayanan, Ki.; Chakravarthy, Pritham K (2009). Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Chennai, India: Blaft Publications. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-906056-4-9.
- ↑ PKR (17 August 2004). "Literary criticism". தி இந்து. தி இந்து குழுமம். பார்க்கப்பட்ட நாள் 17 December 2009.
- ↑ கி. ராஜநாராயணன்
- ↑ 14.0 14.1 "Sahitya Akademi Awards 1955–2007". www.sahitya-akademi.gov.in. சாகித்திய அகாதமி. Archived from the original on 31 March 2009. பார்க்கப்பட்ட நாள் 17 December 2009.
- ↑ 15.0 15.1 Jai Arjun Singh (10 March 2009). "Short, Sweet, and Subversive: Blaft's Tamil Folktales". பார்க்கப்பட்ட நாள் 10 March 2009.
- ↑ Vijay Nambisan. "Stranger than fiction: Thought-provoking folktales". டெக்கன் ஹெரால்டு (The Printers). http://www.deccanherald.com/content/18339/stranger-fiction-thought-provoking-folktales.html.
- ↑ 17.0 17.1 Gowri Ramnarayan (17 September 2002). "Master of the Short Story". தி இந்து. தி இந்து குழுமம். Archived from the original on 1 July 2003. பார்க்கப்பட்ட நாள் 10 March 2009.
- ↑ Kolappan, B. (18 May 2021). "Eminent Tamil writer Ki Rajanarayanan is no more" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/eminent-tamil-writer-ki-rajanarayanan-is-no-more/article34582661.ece.
- ↑ Agrawal, S. P. (1991). Development/digression diary of India: 3D companion volume to Information India 1991–92. Concept Publishing Company. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7022-305-9.
- ↑ "Ki. Rajanarayanan". தி இந்து. தி இந்து குழுமம். Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 17 December 2009.
- ↑ 21.0 21.1 "Meet the Author" (PDF). Sahitya Akademi - Indian government. பார்க்கப்பட்ட நாள் 26 April 2017.
- ↑ கி.ரா.வுக்கு அரசு மரியாதை: தமிழக அரசுக்கும் கௌரவம், ஆசிரியர் தலையங்கம், 21 மே 2021, இந்து தமிழ் நாளிதழ்
- ↑ S. Theodore Baskaran (28 November 2003). "A tale rooted in the soil". தி இந்து. தி இந்து குழுமம். Archived from the original on 8 December 2003. பார்க்கப்பட்ட நாள் 17 December 2009.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Meet the author". சாகித்திய அகாதமி. பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.
- ↑ "Ki. Rajanarayanan". HarperCollins Publishers India. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
- ↑ "Sahitya Akademi - Ki. Ra" (PDF).
- ↑ "AKADEMI AWARDS (1955-2016)". Sahitya Akademi - Indian government. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2017.
- ↑ "M.A. Chidambaram awards presented". The Hindu. 13 October 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/M.A.-Chidambaram-awards-presented/article15321253.ece.
- ↑ "விருது: கி.ரா.வுக்கு இலக்கியச் சாதனை விருது". The Hindu - Tamil. 14 August 2016. http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article8988337.ece.
- ↑ "கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது – 2016". Tamil Literary Garden. பார்க்கப்பட்ட நாள் 26 September 2017.
- ↑ கி.ரா.95: வெடித்துக் கிடக்கும் பருத்திக் காடு
வெளி இணைப்புகள்
தொகு- வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பவர்
- கி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு
- ஜெயமோகன் கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி
- கி.ரா: கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்!
- கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா நேர்காணல்! -விகடன்
- கி.ராஜாநாராயணன் - சிறுகதை எழுத்துக்களின் பிதாமகர் பரணிடப்பட்டது 2003-07-01 at the வந்தவழி இயந்திரம்
- மண்… மனிதர்கள்… வாழ்க்கை!
- கி.ராஜாநாராயணன் - சிறுகதைகள்