குடசாத்ரி
குடசாத்ரி (Kodachadri) என்பது அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒரு மலை உச்சியாகும். (உயரம் - கடல் மட்டத்திலிருந்து 1,343 மீட்டர்) [2] தென்னிந்திய மாநிலமான கர்நாடகவின் மேற்கு தொடர்ச்சி மலையில் சிவமோகாவிலிருந்து 78 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதை இயற்கை பாரம்பரிய தளமாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் இது கர்நாடகாவின் 13 வது மிக உயர்ந்த சிகரம் ஆகும்.
குடசாத்ரி | |
---|---|
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் குடச்சாத்ரி மலையிலிருந்து பார்த்தபடி சராவதி உப்பங்கழிகள்[1] | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,343 m (4,406 அடி) |
ஆள்கூறு | 13°51′39″N 74°52′29″E / 13.86083°N 74.87472°E |
புவியியல் | |
அமைவிடம் | சாகரா எல்லை, ஹொசநகரம் வட்டம், சிமோகா மாவட்டம் பைண்டூர் வட்டம், உடுப்பி மாவட்டம், கருநாடகம், இந்தியா |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | வரலாற்றுக் காலம் |
எளிய வழி | நாகோடி வழி |
சொற்பிறப்பியல்
தொகுஇந்த பெயர் பூர்வீக வார்த்தையான "குடச்சா" அல்லது "குடக்சி", அதாவது குட்டஜா பூக்கள், மற்றும் "அத்ரி", மலையின் சமசுகிருத வார்த்தையிலிருந்து வந்தது. இவை இரண்டும் ஒன்றிணைந்து குடசாத்திரி என்ற வார்த்தையை உருவாக்கின. சமசுகிருதத்தில் " குடஜா " என்றால் மலை மல்லிகை எனப் பொருள்படும். மல்லிகைகள் நிறைந்த மலைப்பாங்கான பகுதி "குடஜாகிரி" என்று அழைக்கப்பட்டது. மேலும், இது "குட்டச்சத்ரி" மற்றும் "குடக்சி பர்வதம்" என்றும் அழைக்கப்படுகிறது.[3]
அமைவிடம்
தொகுகொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு குடசாத்ரி ஒரு பின்னணியை உருவாக்குகிறது.[4] இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ தூரத்திலும், ஹொசநகர வட்டம் நாகோடி கிராமத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையக சிவமோகாவிலிருந்து கர்நாடகாவின் சாகராவிலிருந்து 78 கி.மீ மற்றும் 42 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் இந்தச் சிகரத்தை அடைய வெவ்வேறு வழிகள் உள்ளன. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையைப் பொறுத்தவரை சிரமம் மிகவும் வேறுபடுகிறது. இருப்பினும், கனமழை காரணமாக மழைக்காலத்தில் உச்சத்தை எட்டுவது சவாலானது. இங்கு ஆண்டுக்கு 500 செ.மீ முதல் 750 செ.மீ வரை மழை பெய்யும். மேலும் ஒரு வருடத்தில் சுமார் எட்டு மாதங்களுக்கு மழை இருக்கும்.[5]
தாவரங்களும் விலங்கினங்களும்
தொகுமூகாம்பிகை தேசியப் பூங்காவின் நடுவில் அமைந்துள்ள இது பல்லுயிர் வெப்பமண்டலமாக கருதப்படுகிறது,[6] இது பல உள்ளூர் மற்றும் ஆபத்தான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகும். வலுவான காற்று காரணமாக சிகரம் தரிசாக உள்ளது. அடிவாரத்தில் அடர்த்தியான வனப்பகுதி உச்சநிலையை கீழ் தரை மட்டத்திலிருந்து கண்ணுக்கு தெரியாததாக்குகிறது, மேலும் பல சிறிய சிகரங்களும் மலைகளும் இச்சிகரத்தை சுற்றி உள்ளன. முக்கியமான விலங்கு வாழ்வில் மலபார் லங்கூர், மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, குருவி, வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, இந்திய யானை,[7] இந்தியக் காட்டெருது, கழுதைப் புலி, இந்திய மலைப் பாம்பு போன்ற விலங்கினங்கள் இங்குள்ளன. அவற்றில் பல அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றன.
கோடச்சத்ரியை நீண்ட காலமாக உள்ளூர் மற்றும் கேரளவாசிகள் அதிக எண்ணிக்கையில் பார்வையிடுகின்றனர். ஆதி சங்கரர் இந்த இடத்திற்கு வநது, தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது [6] மேலும் அவர் கொல்லூரில் ஒரு கோவிலையும் நிறுவினார். குடசாத்ரியின் உச்சியில் ஆதிசங்கரருக்கு கல்லால் கட்டப்பட்ட சர்வஜன பீடம் என்ற சிறிய கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கொல்லூருக்கு வருகை தரும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த சில யாத்ரீகர்கள் குடசாத்ரிக்கும் ஒரு மலையேற்றம் செய்கிறார்கள். உடுப்பி மாவட்டத்தின் எழுத்டாளரான முனைவர் கே சிவராம கரந்தா, 1940 களில் குடசாத்ரிக்கு மலையேறி, இந்த இடத்தின் இயற்கை சூழலைப் பாராட்டினார். கரையோர கர்நாடகாவின் மூன்று மலை சிகரங்களில் கோடச்சாத்ரியை மிக அழகாக வைத்தார் (மற்றொன்று குதுரேமுக் மற்றும் புட்பகிரி).[8]
காடுகள்
தொகுசோலைக்காடுகள் மற்றும் அடர்ந்த காடுகள் குடசாத்ரி மற்றும் அருகிலுள்ள மலைகளை உள்ளடக்கியது. மேலும், இந்த இடம் குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ளது.[9] குடசாத்ரி மற்றும் அருகிலுள்ள மலைகளின் காடு உலக பாரம்பரிய தளமான மேற்கு தொடர்ச்சி மலையுடன் காணப்படும் வெப்பமண்டல மழைக்காடாகும்.[10]
இரும்புத் தாது
தொகுகுடசாத்ரி மலையில் இரும்புத் தாது உள்ளது [11] மேலும் 20 ஆம் நூற்றாண்டில் சோதனை தோண்டலும் இங்கு செய்யப்பட்டது. இங்கு காணப்படும் கற்களில் காந்த பண்புகள் இருப்பது அடையாளம் காணப்பட்டது.[12] இருப்பினும், பெரிய அளவில் வணிகச் சுரங்கங்கள் இங்கு நடைபெறவில்லை, இருப்பினும் சுற்றியுள்ள மலைகளை மாங்கனீசு மற்றும் இரும்புச் சுரங்கங்களுக்கு குத்தகைக்கு விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால்,சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு உள்ளூர் மக்கள் இத்தகைய நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றனர். இத்தகைய சுரங்க எதிர்ப்பு போராட்டங்களில், சிவமொகா மாவட்டம், இராமச்சந்திரபுர மடத்தைச் சேர்ந்த இராகவேசுவர பாரதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அனந்த் ஹெக்தே ஆஷிசரா ஆகியோரின் தலைமையில் உள்ளூர் மக்கள் குடசாத்ரி மற்றும் அப்பகுதியின் பிற மலைகளுக்கு அருகில் உள்ள அம்பரகுட்டாவில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் தடை செய்யக் கோரினர்.[13]
ஆர்வமுள்ள இடங்கள்
தொகுசர்வஜன பீடம்
தொகுசர்வஜன பீடம் என்பது ஆதிசங்கரர் தியானித்த சிகரத்திற்கு அருகில் உள்ள கட்டமைப்பு போன்ற ஒரு சிறிய கோயிலாகும். இந்த சிறிய அமைப்பு இது ஜம்மு-காஷ்மீரின் சர்வஜன பீடமான சாரதா பீடம் போன்ற ஒரு பெயரைக் கொண்டுள்ளது.[14] ஆதிசங்கரர் தனது நீண்ட ஆன்மீக பயணத்தின் போது இங்கு வந்திருந்தார். இங்கு அவர் மற்ற அறிஞர்களை தத்துவ விவாதத்தில் தோற்கடித்து கோயிலின் தெற்கு கதவைத் திறந்தார். மற்றொரு கோயில் பயணிகள் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது, இது மூகாம்பிகை தேவியின் மூலஸ்தானம் என்று நம்பப்படுகிறது. இந்த இடத்திலிருந்து, இது சிகரம் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. சிகரத்திற்கு சற்று கீழே, கிட்டத்தட்ட செங்குத்து பாதை சித்ரமூலம் என்ற சிறிய குகைக்கு செல்கிறது. அங்கிருந்து கொல்லூரின் மூகாம்பிகை கோயில் தெரியும்.
விநாயகர் குகை
தொகுவிநாயகர் குகை சர்வஜ்ன பீடத்தின் மலையேற்ற பாதைக்கு அருகில் உள்ளது.
இரும்புத் தூண்
தொகுகுடசாத்ரி சிகரத்திற்கு அருகிலுள்ள மூகாம்பிகை கோயிலுக்கு முன்னால் சுமார் 40 அடி நீளமுள்ள ஒரு இரும்புத் தூண் நடப்பட்டுள்ளது. மேலும் இது தார் இரும்புத் தூண், அபு மலை போன்ற இடங்களில் அமைந்துள்ள மிகப்பெரிய வரலாற்று இரும்புத் தூண்களுடன் ஒப்பிடப்படுகிறது. உள்ளூர் பாரம்பரியத்தின் படி மூக்காசுரன் என்ற அரக்கனைக் கொல்ல மூகாம்பிகை தெய்வம் பயன்படுத்திய திரிசூலம் இது என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மங்களூரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம், கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், ஆகியவற்றின் இந்திய விஞ்ஞானிகள் இரும்புத் தூணில் ஒரு சோதனையை மேற்கொண்டனர். இது பாரம்பரிய இந்திய உலோகவியல் திறன்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தது, நவீன வார்ப்பு முறைகளிலிருந்து அல்ல எனறு வரையறை செய்தனர். மேலும், இது தூய இரும்பினால் ஆனது.[15] பலத்த மழை காரணமாக ஈரப்பதமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இது அரிப்பால் குறைவாகவே பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.[16][17] இந்த இரும்புத் தூண் பண்டைய இந்திய இரும்பு கைவினைத்திறனின் சான்றாக கருதப்படுகிறது.[18]
ஹிட்லுமனே நீர்வீழ்ச்சி
தொகுகுடசாத்ரியிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் ஹிட்லுமனே அருவி உள்ளது. மேலும் இதனை ஒரு பாலப் பாதையில் மலையேறுவதன் மூலம் அடையலாம்.[19]
அரசினகுந்தி அருவி
தொகுகொல்லூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள தல்லி கிராமத்திற்கு அருகிலுள்ள குடசாத்ரியின் அடிவாரத்தில் ஆழமான காட்டில் அரசினகுந்தி அருவி அமைந்துள்ளது.[20]
பெலகல்லு தீர்த்தம்
தொகுபெலகல்லு தீர்த்தம் என்று அழைக்கப்படும் மேலும் ஒரு அருவி ஜட்கலின் முடூர் அருகே அமைந்துள்ளது (கொல்லூரிலிருந்து 15 கி.மீ.) மற்றும் தெற்குப் பக்கத்தில் குடசாத்ரியின் அடியில் மற்றும் எளிதில் செல்ல மலையேற்றத்தை உள்ளடக்கியது.[20]
நாகரா கோட்டை
தொகு18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழைய கோட்டையான நாகரா கோட்டை இங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது [21] சராவதி ஆற்றின் லிங்கனமக்கி அணையின் உப்பங்கடல்களில் இருந்து உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு நாகரா நகரத்தை சுற்றி வருகிறது.
குடசாத்ரியின் மலையேற்றம்
தொகுகுடசாத்ரி சிகரத்தின் மலையேற்றம் நாகோடி கிராமம் அல்லது நிட்டூர், சிவமோகா கிராமத்திலிருந்து குடசாத்ரியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இரவில் தங்குதலும் முகாமில் தீ வைத்து கொண்டாடுவதும் 2015 சனவரி முதல் தடைச் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து
தொகுபெங்களூரிலிருந்து , சிவமோகா (285 கி.மீ) செல்ல வேண்டும், அங்கிருந்து நாகோடி கிராமத்தை (ஹோசநகர வட்டம்) அடைய பொது போக்குவரத்தை மேற்கொள்ளலாம். உடுப்பியில் இருந்து, நாகோடி கிராமத்திற்கு மூன்று மணி நேர பயணம், அங்கிருந்து மலையேற்றம் தொடங்குகிறது.
குந்தாபுரா மற்றும் பைண்டூர் ஆகியவை மங்களூர் - மும்பை கொங்கன் இருப்புப் பாதையில் உள்ள மிகப் பெரிய இரயில் நிலையங்கள் ஆகும்.
மேலும் காண்க
தொகு- மங்களூர்
- உடுப்பி
- மரவந்தே
- கொல்லூர்
- புனித மேரித் தீவுகள்
- முல்லாயனா கிரி
- பாபா புதன்கிரி
- பிரம்மகிரி
- புட்பகிரி
புகைப்படங்கள்
தொகு-
குடசாத்ரி - காட்சி 1
-
குடசாத்ரி - காட்சி 2
-
குடச்சாத்ரி கணேச குகை
-
குடசாத்ரி மலைகளின் மேல்.
-
மலையின் மேல் மலையேற்ற பாதை
-
குடசாத்ரி இயற்கை
-
மலையின் உச்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.karnataka.com/kollur/kodachadri-trek/
- ↑ "Kodachadri, Karnataka". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 12 August 2012.
{{cite web}}
:|first=
missing|last=
(help) - ↑ Durgadas, Mukhopadhyay (1978). Lesser known forms of performing arts in India. Sterling. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-842-61004-9.
- ↑ "Now, tourists can visit Kodachadri hills". Bangalore: The Times of India. 11 April 2011 இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111103074706/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-11/mysore/29406069_1_hill-trekkers-tourists. பார்த்த நாள்: 12 August 2012.
- ↑ NML, Technical Journal. NML Technical Journal Vol.37. New Delhi: National Metallurgical Laboratory (India).
- ↑ 6.0 6.1 "Now, tourists can visit Kodachadri hills". Bangalore: The Times of India இம் மூலத்தில் இருந்து 2011-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111103074706/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-11/mysore/29406069_1_hill-trekkers-tourists.
- ↑ The, Hindu(news). "Sighting of wild elephant creates panic". Bangalore: The Hindu(newspaper). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article2644972.ece?css=print.
- ↑ Karanth, K.Shivarama (translated by H.Y. Sharada Prasad) (1993). Ten faces of a crazy mind : autobiography (1st ed.). Bombay: Bharatiya Vidya Bhavan. pp. 158, 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172760236.
- ↑ "Now, tourists can visit Kodachadri hills". Bangalore: The Times of India. 11 April 2011 இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111103074706/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-11/mysore/29406069_1_hill-trekkers-tourists. பார்த்த நாள்: 12 August 2012.
- ↑ "Western Ghats". United Nations: United Nations Educational, Scientific and Cultural Organisation. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
- ↑ Mysore, Govt. of. Mysore Ports. Bangalore: Dept. of Publicity and Information.
- ↑ B.L., Rice (2001). Gazetteer of Mysore - 2 Vols. London: Asian Educational Service, New Delhi (Reprint).
- ↑ Special, Correspondent (17 August 2005). "Andolan seeks restoration of ban on mining at Ambargudda". Bangalore: The Hindu. Archived from the original on 23 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 11 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ kumar, kondur. "Pics of Sharada or Saraswati devi shakthi peetha in POK". shakthipeethas.org. Archived from the original on 29 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ [1]
- ↑ NML, Technical Journal (1995). NML Technical Journal Vol.37. New Delhi: National Metallurgical Laboratory (India). p. 133.
- ↑ Srivatsan, T.S. (2009). Processing and fabrication of advanced materials, XVII: Volume One. New Delhi: I K International Pvt Ltd. p. 65.
- ↑ Tripathi, Vibha (2001). The age of iron in South Asia: legacy and tradition. New Delhi: Aryan Books International. p. 130.
- ↑ The, Hindu(news) (21 November 2011). "Sighting of wild elephant creates panic". Bangalore: The Hindu(newspaper). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article2644972.ece?css=print. பார்த்த நாள்: 12 August 2012.
- ↑ 20.0 20.1 Ganesh, Prabhu (12 July 2011). "Enchanting Kudlu Thirtha". Bangalore: The Hindu (newspaper). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article2220269.ece?css=print. பார்த்த நாள்: 12 August 2012.
- ↑ Lewin Benthan, Bowring (1871). Eastern experiences. London: H.S.King. pp. 132, 133, 150.