கூட்டநாடு

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஊர்

கூட்டநாடு (Koottanad) என்பது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பட்டாம்பி வட்டத்தில் உள்ள நாகலாசேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறு நகரம் ஆகும். இது திருச்சூர், பாலக்காடு, மலப்புறம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது திருச்சூரில் இருந்து 32 கிமீ தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து 65 கிமீ தொலைவிலும், குருவாயூர் மற்றும் பாலக்காடு இடையே உள்ள சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊர் கேரளத்தின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் 9 கி.மீ தொலைவில் உள்ள பட்டாம்பி 9 ஆகும். பாரதப்புழா நிலா ஆறு 5 கி. மீ தொலைவில் உள்ள திரித்தாலா வழியாக பாய்கிறது. பட்டாம்பி-குருவாயூர் சாலையில் உள்ள காட்டில் மடம் கோயில், பழமையான ஒரு சிறிய சமணக் கோயிலாகும். இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கி.பி 9/10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு கோட்டையின் இடிபாடுகள் ( திப்பு சுல்தான் கோட்டை) ஜும்ஆ மஸ்ஜித் பின்புறம், கூட்டநாடு மற்றும் சாலிசேரி சாலைக்கு இடையில் காணப்படுகிறது.

கூட்டநாடு
குட்டநாடு
நகரம்
அம்மக்காவு கோயில்
அம்மக்காவு கோயில்
கூட்டநாடு is located in கேரளம்
கூட்டநாடு
கூட்டநாடு
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°45′40.56″N 76°7′15.41″E / 10.7612667°N 76.1209472°E / 10.7612667; 76.1209472
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்நாகலச்சேரி ஊராட்சி
 • அடர்த்தி889/km2 (2,300/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679533
தொலைபேசி குறியீடு91-(0)662-XXX XXXX
அருகில் உள்ள நகரம்பட்டாம்பி
பால் வகைப்பாடு1.091 /
எழுத்தறிவு84.76%
மக்களவைத் தொகுதிபொன்னானி
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிதிரித்தாலா
குடிமை முகமைநாகலச்சேரி ஊராட்சி
இணையதளம்www.koottanad.com
கூட்டநாடு-பட்டாம்பி சாலை: ஒரு அதிகாலை காட்சி.

அமைவிடம்

தொகு

கூட்டநாடு பாலக்காடு - குருவாயூர் மற்றும் பாலக்காடு - பொன்னானி மாநில நெடுஞ்சாலை ஆகிய இரண்டு முக்கிய சாலைகளின் சந்திப்பாகும். கூட்டநாடு பாலக்காடு நகரிலிருந்து 65 கிமீ தொலைவிலும், குருவாயூரில் இருந்து 25 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. குன்னம்குளம்/குருவாயூர் சாலை, பட்டாம்பி/பாலக்காடு சாலை, எடப்பல்/போனனி சாலை, பெரிங்கோடு சாலை, திரிதாலா/குட்டிபுரம் சாலை ஆகியவை கூட்டநாட்டிலிருந்து வரும் முக்கிய சாலைகள் ஆகும்.

சமயம்

தொகு

மக்கள் தொகையில் முக்கியமாக இந்துக்களும், முஸ்லிம்களும் உள்ளனர்.

திருவிழாக்கள்

தொகு
  • கூட்டநாடு நேர்ச்சை
  • இலவத்துக்கல் பூரம்
  • அமக்காவு பூரம்
 
கூட்டநாடு ஜும்ஆ பள்ளிவாசல் நுழைவிடம்.
 
கட்டில்மடம் கோயில்: இது கி.பி 9/10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

அரசியல்

தொகு

கூட்டநாடு திரித்தாலா ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகிறது. மேலும் இது பொன்னானி சட்டமன்றத் தொகுதி மற்றும் பொன்னானி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. முன்னபு இது ஒற்றப்பாலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாக இருந்தது.

புவியியலும் காலநிலையும்

தொகு

கூட்டநாட்டின் வெப்ப நிலை பொதுவாக கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் நிலவும் வெப்ப நிலையை ஒத்தே உள்ளது: திசம்பர் முதல் பிப்ரவரி வரை வறண்ட காலம், மார்ச் முதல் மே வரை வெப்பமான காலம்; ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலம், அக்டோபர் முதல் நவம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம். தென்மேற்கு பருவமழை பொதுவாக மிகவும் கனமானதாக இருக்கும். இது ஆண்டு மழையில் கிட்டத்தட்ட 75% ஆகும். வறண்ட காலம் பொதுவாக வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும், வெப்பநிலை 22 °C முதல் 35 °C வரை மாறுபடும். ஆண்டு சராசரி மழையளவு 2800  மிமீ ஆகும். மூலிகைகள், பழங்கள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், ஓடைகள் கொண்ட மலைப்பகுதி இதுவாகும்.

 
ஒரு நெல் வயல்கள் கூட்டநாட்டில் (வட்டநாடு).

போக்குவரத்து

தொகு

வானூர்தி நிலையங்கள் : கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் , கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியவை கூட்டநாட்டிலிருந்து ஏறக்குறைய ஒரே தொலைவில் உள்ளன (சுமார் இரண்டு மணி நேரப் பயணம்). தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 125 km (78 mi) தொலைவில் உள்ளது.

தொடருந்து நிலையங்கள் : அருகிலுள்ள தொடருந்து நிலையங்களாக பட்டாம்பி (8 கிமீ), குட்டிப்புரம் (15 கிமீ) மற்றும் ஷொறணூர் சந்திப்பு (20 கிமீ) உள்ளன.

சாலைகள் : கூட்டநாடு உண்மையில் இரண்டு பெரிய மாநில நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலை (SH 39) குருவாயூர் - பாலக்காடு மற்றும் பொன்னானி-பாலக்காடு நெடுஞ்சாலையை இணைக்கும் திருதாலா பிரதான சாலை ஆகியவை உள்ளன. புதிய பாலம் (வெள்ளியங்கல்லு பாலம்) திருச்சூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் தூரத்தை 11 km (7 mi) ஆக குறைக்கிறது.

பேருந்துகள் : நீண்ட தொலைவுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூட்டநாடு சந்திப்பில் நிற்கின்றன.

உள்ளூர் போக்குவரத்து : கூட்டநாடில் தானி, வாடகை மகிழுந்து போன்றவை சாலைகளில் வாடகைக்குக் கிடைக்கும். மேலும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் அவற்றின் நிறுத்தகங்கள் உள்ளன. இங்கு குறுகிய சாலைகள் இருப்பதால், உள் இடங்களுக்கு சிற்றுந்துகள் சீரான இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

கல்வி

தொகு
  • அரசு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளி- வட்டேநாடு
  • அரசு மேல்நிலைப் பள்ளி- மேழத்தூர்
  • அரசு மேல்நிலைப் பள்ளி- சாலிசேரி
  • அரசு மேல்நிலைப் பள்ளி- சாத்தனூர்
  • மேல்நிலைப் பள்ளி - பெரிங்கோடு
  • அரசு மேல்நிலைப் பள்ளி - நாகலாச்சேரி (வாவனூர்)
  • சிமாட் பொறியியல் கல்லூரி - வாவனூர்
  • ராயல் பொறியியல் கல்லூரி - அக்கிக்காவு
  • அல் அமீன் பொறியியல் கல்லூரி - குளப்புள்ளி
  • ராயல் பல் மருத்துவக் கல்லூரி - சாலிசேரி

அஷ்டம்கம் ஆயுர்வேதம் சிகிச்சாலயம் வித்யாபீடம் - வாவனூர்

குறிப்பிடத்தக்க மக்கள்

தொகு
 

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டநாடு&oldid=4175008" இலிருந்து மீள்விக்கப்பட்டது