கொசப்பேட்டை

குயப்பேட்டை என்கிற கொசப்பேட்டை என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கொசப்பேட்டை
Kosapet

குயப்பேட்டை
புறநகர்ப் பகுதி
கொசப்பேட்டை Kosapet is located in தமிழ் நாடு
கொசப்பேட்டை Kosapet
கொசப்பேட்டை
Kosapet
கொசப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°05′32″N 80°15′18″E / 13.0922°N 80.2551°E / 13.0922; 80.2551
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்54 m (177 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600012
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, சென்னை, ஜமாலியா, பெரம்பூர், வியாசர்பாடி, சூளை மற்றும் டவுட்டன்
மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி. மு. அருணா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிவட சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதிரு. வி. க. நகர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்ற உறுப்பினர்தாயகம் கவி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 54 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொசப்பேட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°05′32″N 80°15′18″E / 13.0922°N 80.2551°E / 13.0922; 80.2551 ஆகும். புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, சென்னை, ஜமாலியா, பெரம்பூர், வியாசர்பாடி, சூளை மற்றும் டவுட்டன் ஆகியவை கொசப்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகளை வடிவமைப்பு செய்யும் தொழிலே பிரதானமாகக் கொண்ட கொசப்பேட்டை பகுதியில், ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான விநாயகர் சிலைகளை, சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், அண்டைய மாவட்டங்களிலிருந்தும் பல வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.[2][3][4][5][6][7]

கொசப்பேட்டை அனுமந்தராய கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற வினைதீர்த்த விநாயகர் கோயில்,[8] கொசப்பேட்டை கந்தசுவாமி கோயில்[9] ஆகியவை இங்குள்ள சில முக்கியமான கோயில்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Prashanth Ravi (2019-09-02). "In Photos: A Walk Through Chennai's Kosapet, Discovering Ganesha". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
  2. Suresh K Jangir (2022-08-03). "கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்" (in ta). https://www.maalaimalar.com/news/state/vinayagar-statue-preparing-work-intensity-495007. 
  3. சே. பாலாஜி (2019-08-29). "வெளிமாநிலங்களிலிருந்து விநாயகர் சிலைகள் - அடையாளத்தைக் காக்க வாங்கி விற்கும் கொசப்பேட்டை மக்கள்!" (in ta). https://www.vikatan.com/government-and-politics/ganesh-chaturthi-fever-starts-at-chennai-kosappet. 
  4. Suresh K Jangir (2022-08-26). "கொசப்பேட்டையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் குவிந்தன" (in ta). https://www.maalaimalar.com/news/state/vinayagar-chaturthi-ganesha-idols-gathered-in-kosapet-504609. 
  5. சே. பாலாஜி (2021-09-02). "விநாயகர் சதுர்த்தி: களையிழந்த கொசப்பேட்டை; அடையாளம் காக்கப் போராடும் சிலைத் தொழிலாளர்கள்!" (in ta). https://www.vikatan.com/government-and-politics/story-of-chennai-kosapet-statue-workers. 
  6. "Ganesh Chaturthi: Idol makers in Chennai's Kosapettai stare at a bleak future". The Indian Express (in ஆங்கிலம்). 2022-08-29. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
  7. "Hit by shortage, Idol makers remain idle thisVinayakar Chaturthi". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
  8. "Arulmigu Vinaithirtha Vinayagar Temple, Kosapet, Chennai - 600012, Chennai District [TM000041].,Vinai Thirtha Vinayagar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
  9. "Arulmigu Kanda Samy Adhi Moottaiamman Temple, Kosapet, Chennai - 600012, Chennai District [TM000039].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசப்பேட்டை&oldid=3755001" இலிருந்து மீள்விக்கப்பட்டது