கொடுங்கையூர்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி


கொடுங்கையூர் (ஆங்கிலம்:Kodungaiyur), சென்னை மாநகரத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். சென்னை மாநகராட்சியின் எல்லை இங்கிருந்து ஆரம்பமாகிறது. (சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளில், முதல் இரண்டு வார்டுகள் கொடுங்கையூரில் அமைந்துள்ளன.) கொடுங்கையூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600 118.

கொடுங்கையூர்
—  neighbourhood  —
கொடுங்கையூர்
இருப்பிடம்: கொடுங்கையூர்

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°08′27″N 80°14′53″E / 13.140961°N 80.248175°E / 13.140961; 80.248175
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பெரம்பூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். டி. சேகர் (திமுக)

திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Zone 1
Ward 1 & 2
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவு

தொகு

கொடுங்கையூர், அதனுடைய வடக்கு திசையில் சேலவாயல் மற்றும் சின்ன சேக்காடு வரையிலும், கிழக்கு திசையில் எழில் நகர் வரையிலும், மேற்கு திசையில் மாதவரம் பால்பண்ணை வரையிலும், தென்மேற்கு திசையில் மூலக்கடை வரையிலும், தெற்கு திசையில் MKB நகர் (வியாசர்பாடி) வரையிலும் பரந்து விரிந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண்: 5, கொடுங்கையூரின் தென்மேற்கு திசையில் மூலக்கடையை தொட்டு செல்கிறது.

பிரதான சாலைகள்

 • காமராஜர் சாலை -> திருவள்ளுவர் சாலை -> மணலி சாலை (மூலக்கடையிலிருந்து சின்னகொடுங்கையூர் செல்லும் சாலை).
 • தண்டயார்பேட்டை நெடுஞ்சாலை (மூலக்கடையிலிருந்து கவியரசு கண்ணதாசன் நகர் வழியாக எழில் நகர் செல்லும் சாலை).
 • எத்திராஜ்சாமி சாலை ( எருக்கஞ்சேரியிலிருந்து M.R. நகர் செல்லும் சாலை).
 • மீனாம்பாள் சாலை (MKB நகரிலிருந்து கவியரசு கண்ணதாசன் நகர் செல்லும் சாலை).

மாநகரின் பிற பகுதிகளில் இருந்து கொடுங்கையூரின் தொலைவு

 • பெரம்பூரில் இருந்து - 4.5 கீ.மீ
 • பாரிமுனையில் இருந்து - 9.5 கீ.மீ
 • சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து - 9 கீ.மீ
 • எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து - 10 கீ.மீ
 • புறநகர் பேருந்து நிலையத்தில் (கோயம்பேடு) இருந்து - 14 கீ.மீ
 • விமான நிலையத்தில் இருந்து - 26.5 கீ.மீ

போக்குவரத்து வசதிகள்

தொகு

மாநகர போக்குவரத்துக்கழகம் (MTC), கொடுங்கையூரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்திசெய்து கொண்டிருக்கிறது. கொடுங்கையூரில் மொத்தம் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை கவியரசு கண்ணதாசன் நகர், பார்வதி நகர், முத்தமிழ் நகர் ஆகும்.

கவியரசு கண்ணதாசன் நகர்

கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் கொடுங்கையூரின் மிகவும் முக்கியமான பேருந்து நிலையமாகும்.

பார்வதி நகர்

பார்வதி நகர் பேருந்து நிலையம், கொடுங்கையூரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையத்திற்கு மிகவும் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், கொடுங்கையூரின் இப்பகுதி மக்கள் தானியை (Auto rickshaw) போக்குவரத்திற்காக நம்பி உள்ளனர்.

கொடுங்கையூரிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பற்றிய விபரம்:

கவியரசு கண்ணதாசன் நகரிலிருந்து

தடம் எண் புறப்படும் இடம் சேரும் இடம் வழி
7G கவியரசு கண்ணதாசன் நகர் பிராட்வே M.R. நகர்,மூலக்கடை, பெரம்பூர், டவுட்டன், வேப்பேரி, பெரியமேடு, சென்ட்ரல் ரயில் நிலையம்
M7G Cut கவியரசு கண்ணதாசன் நகர் பெரம்பூர் M.R. நகர், எருக்கஞ்சேரி, மூலக்கடை, டான் பாஸ்கோ பள்ளி, லக்ஷ்மி அம்மன் கோவில்,BB சாலை
M116A கவியரசு கண்ணதாசன் நகர் பிராட்வே SIDCO, EB, MKB நகர், வள்ளலார் நகர்,ஸ்டான்லி மருத்துவமனை,பீச் ஸ்டேஷன்
M37E கவியரசு கண்ணதாசன் நகர் ஐயப்பன்தாங்கல் சர்மா நகர், டவுட்டன், எழும்பூர் DPI, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம்
170T கவியரசு கண்ணதாசன் நகர் வண்டலூர் உயிரியல் பூங்கா M.R. நகர், மூலக்கடை, ரெட்டேரி, திருமங்கலம், புறநகர் பேருந்து நிலையம், வடபழனி, கிண்டி, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம்
M121G கவியரசு கண்ணதாசன் நகர் புறநகர் பேருந்து நிலையம் மூலக்கடை, ரெட்டேரி, திருமங்கலம்
2A Extn கவியரசு கண்ணதாசன் நகர் அண்ணா சதுக்கம் MKB நகர், வால்டாக்ஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மாநிலக்கல்லூரி, மெரினா
33Extn கவியரசு கண்ணதாசன் நகர் பிராட்வே MKB நகர்,வள்ளலார் நகர், ஸ்டான்லி மருத்துவமனை, பாரதி மகளிர் கல்லூரி, மண்ணடி
170E ஐ .ஒ. சி தாம்பரம் கொருக்குபேட்டை, எழில் நகர், கவியரசு கண்ணதாசன் நகர், M.R.நகர், மூலக்கடை, ரெட்டேரி, திருமங்கலம், புறநகர் பேருந்து நிலையம், வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை

பார்வதி நகரிலிருந்து-

தடம் எண் புறப்படும் இடம் சேரும் இடம் வழி
M7G Extn பார்வதி நகர் பிராட்வே மூலக்கடை, பெரம்பூர், டவுட்டன், பெரியமேடு, சென்ட்ரல் ரயில் நிலையம்
M116L பார்வதி நகர் பிராட்வே முத்தமிழ் நகர், SIDCO, EB, MKB நகர், வள்ளலார் நகர், ஸ்டான்லி மருத்துவமனை, பீச் ஸ்டேஷன்
M46C பார்வதி நகர் புறநகர் பேருந்து நிலையம் மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம், ICF, அண்ணா நகர் கிழக்கு, அரும்பாக்கம்
M38D பார்வதி நகர் திருவொற்றியூர் மூலக்கடை, சர்மா நகர், வள்ளலார் நகர், மகாராணி, தண்டயார்பேட்டை, சுங்கச்சாவடி, தேரடி
29G பார்வதி நகர் திருவான்மியூர் மூலக்கடை, பெரம்பூர், டவுட்டன், எழும்பூர், LIC, இராயபேட்டை, மயிலை, மந்தவெளி, அடையார்

முத்தமிழ் நகரிலிருந்து

தடம் எண் புறப்படும் இடம் சேரும் இடம் வழி
M116 முத்தமிழ் நகர் பிராட்வே SIDCO, EB, MKB நகர், வள்ளலார் நகர், ஸ்டான்லி மருத்துவமனை, பீச் ஸ்டேஷன்

கொடுங்கையூரின் உட்பகுதிகள்

தொகு

சேலவாயல், நாராயணசாமி தோட்டம், பார்வதி நகர், வெங்கடேஸ்வரா நகர் (பகுதி 1 & 2), சீதாராம் நகர், RV நகர், யூனியன் கார்பைடு காலனி, சாஸ்த்ரி நகர், ஜம்புலி நியூ காலனி, பொன்னுசாமி நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், விவேகானந்தா நகர், சௌந்தர்யா நகர், அம்பிகா நகர், முத்தமிழ் நகர், M.R. நகர், சின்னாண்டி மடம், கவியரசு கண்ணதாசன் நகர், காந்தி நகர், டீச்சர்ஸ் காலனி, ஆகியவை கொடுங்கையூரின் உட்பகுதிகள் ஆகும்.

கல்வி நிலையங்கள்

தொகு

கொடுங்கையூரில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல கல்வி நிலையங்கள் அமையப்பெற்றுள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

கல்லூரிகள்-

 • திருத்தங்கல் நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலவாயல்
 • முத்துக்குமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்தமிழ் நகர் .

பள்ளிக்கூடங்கள்-

 • டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, எருக்கஞ்சேரி
 • குரு மூர்த்தி மேல்நிலை பள்ளி, RV நகர்
 • FES மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, முத்தமிழ் நகர்
 • க்ரேஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, சின்னகொடுங்கையூர்
 • புனித மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
 • வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி

வழிபாட்டுத் தலங்கள்

தொகு

கொடுங்கையூரில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்கள் :

கோவில்கள்

 • அருள்மிகு சோலையம்மன் திருக்கோயில்
 • அருள்மிகு காமாட்சி அம்மன் வகையறா திருக்கோயில், கவியரசு கண்ணதாசன் நகர்
 • பவானி அம்மன் திருக்கோவில், முத்தமிழ் நகர்.
 • குரு விநாயகர் ஆலயம், RV நகர்.
 • கலசாத்தம்மன் ஆலயம், பார்வதி நகர்.
 • சங்கர விநாயகர் ஆலயம், பெரியகொடுங்கையூர்.

கொடுங்கையூரின் உட்பகுதிகளில் தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.

மருத்துவமனைகள்

தொகு

கொடுங்கையூரில் அமைந்துள்ள மருத்துவமனைகள் :

 • பவித்ரா மருத்துவமனை, எருக்கஞ்சேரி
 • சுபா மருத்துவமனை.
 • நூர் மருத்துவமனை, சின்னகொடுங்கையூர்
 • பாத்திமா மருத்துவமனை, பெரியகொடுங்கையூர் (மூலக்கடை அருகில்)
 • NRV மருத்துவமனை, பெரியகொடுங்கையூர்
 • ESI மருத்துவமனை, MR நகர்

சமுதாயக்கூடங்கள்

தொகு

கொடுங்கையூரில் அமைந்துள்ள சமுதாயக்கூடங்கள்/திருமண மண்டபங்கள் பற்றிய விபரம்:

 • AB மாளிகை, சின்ன கொடுங்கையூர்
 • மாலதி மஹால், முத்தமிழ் நகர்
 • குழந்தை தெரேசா மண்டபம், கவியரசு கண்ணதாசன் நகர்
 • ஈஸ்வரி மஹால், எருக்கஞ்சேரி
 • ராஜ் ஹால், கவியரசு கண்ணதாசன் நகர்
 • தனபாக்கியம் ஹால், மீனாம்பாள் சாலை
 • SK மஹால், மீனாம்பாள் சாலை

வங்கிகள்

தொகு

கொடுங்கையூரில் அமைந்துள்ள வங்கிகளின் விபரங்கள்:

 • பாரத ஸ்டேட் வங்கி, எத்திராஜ்சாமி சாலை, MR நகர் (ATM வசதியுடன்)
 • பாங்க் ஆப் இந்தியா, எத்திராஜ்சாமி சாலை, MR நகர் (ATM வசதியுடன்)
 • இந்தியன் வங்கி, மீனாம்பாள் சாலை (ATM வசதியுடன்)
 • ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி, TH சாலை.

இதர தானியங்கி பணம் வழங்கும் மையங்கள் (ATM)

 • SBI ATM,கவியரசு கண்ணதாசன் நகர் EB பின்புறம்
 • ICICI வங்கி ATM, செம்பியம் EB எதிரில், மூலக்கடை
 • ஆக்சிஸ் வங்கி ATM, மூலக்கடை
 • பாங்க் ஆப் இந்தியா ATM, முத்துக்குமாரசாமி கல்லூரி எதிரில், முத்தமிழ் நகர்

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம்

தொகு

சென்னை மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகங்களில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகமும் ஒன்று. வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் சேகரிக்கப்படும் ஏறத்தாழ 3200 டன் எடைக்கொண்ட குப்பைகள் தினமும் இங்கு கொட்டபடுகிறது. தென் சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகரின் தெற்கே அமைந்துள்ள பெருங்குடியில் கொட்டபடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015."https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுங்கையூர்&oldid=3866434" இலிருந்து மீள்விக்கப்பட்டது