சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்று அருங்காட்சியகம்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்று அருங்காட்சியகம் (Chhatrapati Shivaji Maharaj Museum of Indian History) என்பது பிரான்சுவா கௌட்டியே என்பவரால் 2012 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு தனியார் வரலாற்று அருங்காட்சியகமாகும். இது அவரது இலாப நோக்கற்ற அமைப்பான பண்பாட்டின் முன்னேற்ற உறவுகளுக்கான அமைப்பு (பவுண்டேஷன் ஃபார் அட்வான்ஸ்மென்ட் ஆஃப் கல்ச்சுரல் டைஸ்) என்ற பதாகையின் கீழ் நிறுவப்பட்டது. முதல் கட்ட அருங்காட்சியகத்தை ரவிசங்கர் திறந்து வைத்தார், அஜித் பவார் மற்றும் நிதின் கட்காரி ஆகியோர் அதற்கு ஒப்புதல் அளித்தனர். [1] பல்வேறு காட்சிப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகத்தில் இணையதளத்தில் இலவசமாக அணுகக்கூடிய டிஜிட்டல் நூலகமும் உள்ளது, அதில் இந்திய வரலாறு மற்றும் பண்பாடு குறித்த நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்று அருங்காட்சியகம்
FACT logo
விரைவில் அமையவுள்ள அருங்காட்சியகத்தின் திட்டம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்று அருங்காட்சியகம் is located in மகாராட்டிரம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்று அருங்காட்சியகம்
Location within மகாராட்டிரம்
நிறுவப்பட்டது14 சனவரி 2012 (2012-01-14)
அமைவிடம்வாடகன் ஷின்டே சாலை, குலாபாரி வஸ்தி, பிம்பிரி-சின்ச்வாட்]], மகாராஷ்டிரா
ஆள்கூற்று18°36′58″N 73°56′31″E / 18.6161241°N 73.9418829°E / 18.6161241; 73.9418829
வகைவரலாற்று அருங்காட்சியகம்
உரிமையாளர்FACT
வலைத்தளம்www.factmuseum.com
அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் பிரான்சுவா கௌட்டியேவுடன் ரவிசங்கர்

திட்ட அமைப்பு

தொகு

சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்று அருங்காட்சியக வளாகத்தில் ஒன்பது கட்டிடங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான தன்மை கொண்ட காட்சிப்பொருள்களைக் கொண்டு அமைந்துள்ளன. அவற்றில் அவுரங்கசீப்பினைப் பற்றி அமைந்த காட்சிப்பொருள்கள்கள் உள்ளன. மேலும் முகலாயர்களுடன் போராடி வெற்றி பெற்ற ஒரே ராஜபுத்திரரான மகாராணா பிரதாப் பற்றிய காட்சிப்பொருள்களும் உள்ளன. அவரது சொந்த நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டவை, மற்றும் ஆகியோரின் காட்சிகள். [2] பாரத மாதாவுக்காக இந்தியாவில் அர்ப்பணிக்கப்பட்ட இரு கோயில்களில் ஒரு கோயில் இந்த அருங்காட்சியக வளாகத்தில் உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் தொடர்ந்து கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய மன்னரான சிவாஜியின் வாழ்க்கை குறித்த ஒரு சிறிய அளவில் அமைந்த ஓவிய கண்காட்சி; யுகங்கள் முழுவதும் இந்துவின் சகிப்புத்தன்மை பற்றிய கண்காட்சி, ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக மறுக்கும் மற்றொரு கண்காட்சி உள்ளிட்ட பல கண்காட்சிகள் இங்கு நடத்தப்பட்டன. [1]

ஜூலை 2013 இல், 14 வது தலாய் லாமா திபெத்திய பெவிலியன் எனப்படுகின்ற ஒரு காட்சிக்கூடத்தைத் திறந்து வைத்தார், கடந்த 60 ஆண்டுகளாக திபெத்தைச் சேர்ந்த மக்கள் அனுபவித்து வருகின்ற துன்பங்கள் குறித்த உரை மற்றும் படங்களின் காட்சித் தொகுப்புகள் அங்கு உள்ளன. தாரா ஷிகோ பற்றிய திறந்த நிலையிலான கண்காட்சியை உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார். [3]

 
அருங்காட்சியகத்தின் சிவாஜி அரங்கில் உள்ள காட்சிப்பொருள்களைப் பாராட்டும் பார்வையாளர்கள்
 
அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப் பொருள்களைப் பாராட்டும் பார்வையாளர்கள்

இந்த அருங்காட்சியகம் தினமும் பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. உள்ளே செல்வதற்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு சுமார் 100 பார்வையாளர்களைப் பெறுகிறது. [1] வருங்காலத்தில் 100,000 சதுர அடி பரப்பளவில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் இதனை மேம்படுத்த என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 70 காட்சிப் பொருள்கள் அதிநவீன ஆய்வு மற்றும் காப்பக வசதிகளைக் கொண்டு அமையும். இது ஸ்வஸ்திகாவின் வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. ஸ்வஸ்திகா பல இந்தியாவின் பல மதங்களின் ஒரு நல்ல அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனை 2018 ஆம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.   [ மேற்கோள் தேவை ]

 
சிவாஜி அரங்கின் முன்பாக சட்ட அமலாக்க அலுவலர்கள்

அருங்காட்சியகம் தயாரித்த வீடியோக்கள் மற்றும் ஆவணப்படங்கள்

தொகு

அருங்காட்சியகம் கிறிஸ்தவ மாற்றங்கள், காஷ்மீர் பண்டிதர்கள், பிராமணர்கள் மற்றும் உயர் சாதிகள், பகிர்வின் அதிர்ச்சி, மும்பை ரயில் குண்டுவெடிப்பு, 26/11, உண்மையான கதை, சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாறு, லச்சிட் போர்புகனின் புராணக்கதை ஆகியவை உள்ளிட்ட பல வீடியோக்களையும் ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளது: [4]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Why a Frenchman built a Bhavani & Shivaji museum | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). dna. 2012-02-13. http://www.dnaindia.com/analysis/column-why-a-frenchman-built-a-bhavani-shivaji-museum-1649369. 
  2. Gautier, François (2013-12-05). "SHIVAJI MAHARAJ MUSEUM OF INDIAN HISTORY, PUNE". FRANCOIS GAUTIER. Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
  3. "Every Indian must practise Ahimsa, says Dalai Lama - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Every-Indian-must-practise-Ahimsa-says-Dalai-Lama/articleshow/21440500.cms. 
  4. "FACT - India". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2016-12-13.

வெளி இணைப்புகள்

தொகு