சபா முதலமைச்சர்
சபா மந்திரி பெசார் அல்லது சபா முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Sabah அல்லது First Minister of Sabah; மலாய்: Menteri Besar Sabah; சீனம்: 沙巴首席部长) என்பவர் மலேசிய மாநிலமான சபா மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைப்பது வழக்கம்.
சபா மந்திரி பெசார் Menteri Besar of Sabah Menteri Besar Sabah | |
---|---|
தற்போது அஜி நூர் (Hajiji Noor) 29 செப்டம்பர் 2020 முதல் | |
சபா மாநில அரசு | |
உறுப்பினர் | சபா அமைச்சரவை |
அறிக்கைகள் | சபா மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | செரி காயா, கோத்தா கினபாலு, சபா |
அலுவலகம் | 32 - 33 மாடி, சபா மாநில நிர்வாக மையம், 88502 கோத்தா கினபாலு, சபா |
நியமிப்பவர் | ஜுகார் மகிருதீன் Juhar Mahiruddin சபா ஆளுநர் (Yang di-Pertua Negeri of Sabah) |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | புவாட் இசுடீபன்ஸ் (Fuad Stephens) |
உருவாக்கம் | 16 செப்டம்பர் 1963 |
இணையதளம் | www |
சபா மந்திரி பெசார், சபா மாநில சட்டமன்றத்தின் (Sabah State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
தற்போது சபா மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் அஜி நூர் (Hajiji Noor). இவர் 29 செப்டம்பர் 2020 முதல் சபா மாநிலத்தின் மந்திரி பெசார் (முதல்வர்) பதவியை வகித்து வருகிறார்.
நியமனம்
தொகுசபா மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, சபா ஆளுநர் முதலில் மந்திரி பெசாரை மாநில நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.
சபா மந்திரி பெசார் ஒரு மலேசியராக இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் சபா ஆளுநர் நியமிப்பார்.
மாநில ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் சபா ஆளுநர் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். சபா மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
தொகுமாநில அரசாங்கம் தனது சட்டங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப் படுமானால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது சபா ஆளுநரின் பொறுப்பு ஆகும். சபா ஆளுநர் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருப்பார்.
ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராக சபா ஆளுநர் நியமிப்பார்.
அதிகாரங்கள்
தொகுஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எடுக்கப்படுமானால், அரசாங்கப் பதவிகளில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.
தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்
தொகுமந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.
மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்கப் பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.
சபா மந்திரி பெசார் பட்டியல்
தொகு1963-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான சபா மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:[1]
அரசியல் கட்சிகள்:
சபா கூட்டணி/பாரிசான்
பெர்ஜாயா
ஐக்கிய சபா கட்சி
வாரிசான் / (பாக்காத்தான் அரப்பான்)
சபா மக்கள் கூட்டணி
# | தோற்றம் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
பதவியில் | கட்சி[a] | தேர்தல் | கூட்டத் தொடர் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி விலகல் | பதவி காலம் | |||||||
1 | புவாட் இசுடீபன்ஸ் Fuad Stephens (1920–1976) |
16 செப்டம்பர் 1963 |
31 டிசம்பர் 1964 |
1 ஆண்டு, 106 நாட்கள் | சபா கூட்டணி (கடசான் மூருட் அமைப்பு) |
– | 1-ஆவது | ||
2 | பீட்டர் லோ சு இன் Peter Lo Su Yin (1923–2020) |
1 சனவரி 1965 |
12 மே 1967 |
2 ஆண்டுகள், 131 நாட்கள் | சபா கூட்டணி (சபா சீன சங்கம்) |
– | 2-ஆவது | ||
3 | டத்து முசுதபா டத்து அருன் Datu Mustapha Datu Harun (1918–1995) |
12 மே 1967 |
1 நவம்பர் 1975 |
8 ஆண்டுகள், 173 நாட்கள் | சபா கூட்டணி (ஐக்கிய சபா) |
சபா தேர்தல் 1967 | 3-ஆவது | ||
சபா தேர்தல் 1971 | 4-ஆவது | ||||||||
பாரிசான் (ஐக்கிய சபா) | |||||||||
4 | முகமட் சாயிட் கெருவாக் Mohammad Said Keruak (1918–1995) |
1 நவம்பர் 1975 |
18 ஏப்ரல் 1976 |
0 ஆண்டுகள், 169 நாட்கள் | பாரிசான் (ஐக்கிய சபா) |
– | |||
5 | புவாட் இசுடீபன்ஸ் Fuad Stephens (1920–1976) |
18 ஏப்ரல் 1976 |
6 சூன் 1976 |
0 ஆண்டுகள், 49 நாட்கள் | பெர்ஜாயா | சபா தேர்தல் 1976 | 5-ஆவது | ||
6 | அரிஸ் சாலே Harris Salleh (பிறப்பு 1930) |
6 சூன் 1976 |
22 ஏப்ரல் 1985 |
8 ஆண்டுகள், 320 நாட்கள் | பாரிசான் (பெர்ஜாயா) |
– | |||
சபா தேர்தல் 1981 | 6-ஆவது | ||||||||
7 | ஜோசப் பைரின் கித்திங்கான் Joseph Pairin Kitingan (பிறப்பு 1940) |
22 ஏப்ரல் 1985 |
17 மார்ச் 1994 |
8 ஆண்டுகள், 329 நாட்கள் | ஐக்கிய சபா கட்சி | சபா தேர்தல் 1985 | 7-ஆவது | ||
பாரிசான் (ஐக்கிய சபா கட்சி) |
சபா தேர்தல் 1986 | 8-ஆவது | |||||||
காகாசான் ராக்யாட் (ஐக்கிய சபா கட்சி) |
சபா தேர்தல் 1990 | 9-ஆவது | |||||||
சபா தேர்தல் 1994 | 10-ஆவது | ||||||||
8 | சக்காரான் டன்டாய் Sakaran Dandai (1930–2021) |
17 மார்ச் 1994 |
27 டிசம்பர் 1994 |
0 ஆண்டுகள், 285 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
– | |||
9 | சாலே சாயிட் கெருவாக் Salleh Said Keruak (பிறப்பு 1958) |
27 டிசம்பர் 1994 |
28 மே 1996 |
1 ஆண்டு, 153 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
– | |||
10 | யோங் தெக் லீ Yong Teck Lee (பிறப்பு 1958) |
28 மே 1996{{}} |
28 மே 1998 |
2 ஆண்டுகள், 0 நாட்கள் | பாரிசான் (சபா முற்போக்கு கட்சி) |
– | |||
11 | பெர்னார்ட் கிலுக் தும்போக் Bernard Giluk Dompok (பிறப்பு 1949) |
28 மே 1998 |
14 மார்ச் 1999 |
0 ஆண்டுகள், 290 நாட்கள் | பாரிசான் ( கடசான் மூருட் அமைப்பு) |
– | |||
12 | ஒசு சுக்காம் Osu Sukam (பிறப்பு 1949) |
14 மார்ச் 1999 |
27 மார்ச் 2001 |
2 ஆண்டுகள், 13 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
சபா தேர்தல் 1999 | 11-ஆவது | ||
13 | சோங் கா கியாட் Chong Kah Kiat (பிறப்பு 1948) |
27 மார்ச் 2001 |
27 மார்ச் 2003 |
2 ஆண்டுகள், 0 நாட்கள் | பாரிசான் (மக்களாட்சி விடுதலைக் கட்சி) |
– | |||
14 | மூசா அமான் Musa Aman[2][3][4][5][6][7][8] (பிறப்பு 1951) |
27 மார்ச் 2003 |
12 மே 2018 |
15 ஆண்டுகள், 46 நாட்கள் | பாரிசான் (அம்னோ) |
– | |||
சபா தேர்தல் 2004 | 12-ஆவது | ||||||||
சபா தேர்தல் 2008 | 13-ஆவது | ||||||||
சபா தேர்தல் 2013 | 14-ஆவது | ||||||||
சபா தேர்தல் 2018 | 15-ஆவது | ||||||||
15 | சாபி அப்டால் Shafie Apdal [9] (பிறப்பு 1956) |
12 மே 2018 |
29 செப்டம்பர் 2020 |
2 ஆண்டுகள், 140 நாட்கள் | வாரிசான் | – | |||
16 | அஜிஜி நூர் Hajiji Noor (பிறப்பு 1955) |
29 September 2020 |
பதவியில் உள்ளார் | 4 ஆண்டுகள், 54 நாட்கள் | சபா மக்கள் கூட்டணி (பெர்சத்து) |
சபா தேர்தல் 2020 | 16-ஆவது | ||
சபா மக்கள் கூட்டணி (காகாசான் ராக்யாட்) |
- ↑ இந்த நெடுவரிசையில் மந்திரி பெசார் சார்ந்த கட்சியின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; அவை இங்கே பட்டியலிடப்படவில்லை.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sabah". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 20 April 2011.
- ↑ Katrina Khairul Azman (11 May 2018). "Disappointed Sabahans Stage Protest After Jeffrey Joins BN To Form State Govt". Says.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
- ↑ Alyaa Azhar (10 May 2018). "Despite protests, Musa Aman sworn in as Sabah CM". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
- ↑ Alyaa Azhar (11 May 2018). "Shafie: We don't recognise Sabah government's legitimacy". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
- ↑ Avila Geraldine; Norasikin Daineh (11 May 2018). "Warisan now has 35 seats, enough to form state government: Shafie [NSTTV]". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
- ↑ Suraini Andokong (13 May 2018). "Shafie's appointment constitutionally valid – lawyer". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 13 May 2018.
- ↑ Ruzaini Zulkepli (13 May 2018). "Warisan tidak akan sama dengan UMNO - Shafie Apdal". Astro Awani. பார்க்கப்பட்ட நாள் 13 May 2018.
- ↑ "Istana serah surat kepada Musa". Berita Harian. 14 May 2018. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018.
- ↑ Sadho Ram (12 May 2018). "Sabah Musical Chairs To End With Shafie Swearing In As Chief Minister Tonight". Says.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
வெளி இணைப்புகள்
தொகு- Pejabat Setiausaha Kerajaan Negeri Pahang (Office of the Government of Sabah) (Official site)