சேம்சங்

தென் கொரிய பன்னாட்டு கூட்டுத்தாபனம்
(சம்சுங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேம்சங் குழுமம் (அங்குல்: 삼성 그룹) என்பது தென்கொரியாவின், சியோலில் உள்ள சேம்சங் டவுனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பன்னாட்டு குழும நிறுவனமாகும். 2008[2] ஆம் ஆண்டின்படி 173.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆண்டு வருவாயாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய குழுமம் இதுவே என்பதுடன்,[3][4] தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும். சேம்சங் என்ற கொரிய ஹஞ்சா வார்த்தையின் அர்த்தம் "மூன்று விண்மீன்கள்" என்பதாகும்.

சேம்சங் குழுமம்
வகைபொது நிறுவனம் (கொரியன்: 삼성 그룹)
நிறுவுகை1938
நிறுவனர்(கள்)Lee Byung-chul
தலைமையகம்தென் கொரியா சேம்சங் நகரம், சியோல், தென்கொரியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்Lee Kun Hee (Chairman and முதன்மை செயல் அலுவலர்)
Lee Soo-bin (President, முதன்மை செயல் அலுவலர் of Samsung Life Insurance)[1]
தொழில்துறைConglomerate
உற்பத்திகள்
வருமானம்US$ 173.4 பில்லியன் (2008)[2]
நிகர வருமானம்அமெரிக்க டாலர் 10.7 billion (2008)[2]
மொத்தச் சொத்துகள்US$ 252.5 பில்லியன் (2008)[2]
மொத்த பங்குத்தொகைUS$ 90.5 பில்லியன் (2008)[2]
பணியாளர்276,000 (2008)[2]
உள்ளடக்கிய மாவட்டங்கள்சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ்
Samsung Heavy Industries
Samsung C&T etc.
இணையத்தளம்Samsung.com

சேம்சங் குழுமம் சர்வதேச அளவில் பல்வேறு வியாபாரங்களை உள்ளடக்கியுள்ளது என்பதுடன், சேம்சங் என்ற வணிகக் குறீயீட்டு பெயரின் கீழ் இயங்கி வருகிறது. சேம்சங் எலக்ட்ரானிக்ஸ் என்பது உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனம் ஆகும்.[5][6][7] அதே போன்று சேம்சங் ஹெவி ஹின்டஸ்டிரீஸ் என்பது உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமாகும், அதே போன்று சேம்சங் சி&டி என்பது உலகளாவிய மிகப்பெரிய கட்டுமான நிறுவனமாகும்.

2005 ஆம் ஆண்டிலிருந்து சேம்சங் உலகின் மிகவும் புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணு வணிகச் சின்னமாகச் செயல்பட்டு வருவதுடன், உலகின் தலைசிறந்த தென்கொரிய வணிகச் சின்னமாகவும் அறியப்பட்டு வருகிறது.[8] சேம்சங் குழுமம் தென்கொரியாவின் மொத்த ஏற்றுமதியில்[9] 20 சதவீதத்திற்கும் அதிகமாகத் தனது பங்களிப்பைக் கொண்டிருப்பதுடன், நிதி, இரசாயனம், சில்லறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் தொழில் துறைகளுக்கு தலைமை ஏற்றுள்ளது. தென்கொரியா முழுவதும் மிகப்பெரிய செல்வாக்கினைக் கொண்டிருப்பதன் காரணமாக, அந்நிறுவனம் "ரிபப்ளிக் ஆப் சேம்சங்" என்று குறிப்பிடப்படுகிறது.[7][10] சாம்சங்கின் வருவாய் 2019-ல் $305 பில்லியன், 2020-ல் $107+ பில்லியன், மற்றும் 2021-ல் $236 பில்லியன்.[11]

பின்னணி

 
சாம்சங் உலகின் முன்னணி நுகர்வோர் மின்னணு வணிகச்சின்னம் மற்றும் உலகின் சிறந்த இருபது வணிகச்சின்னங்களில் ஒன்றாகும்.

லீ சூ பின் என்பவர் தற்போது சேம்சங் லைப் இன்ஸ்யூரன்சின் தலைமை அதிகாரியாக இருக்கிறார், அத்துடன் உலகின் பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பல தலைமுறைகளாக இந்நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். இந்நிறுவனத்தை நிறுவிய லீ பயூங்-சல் என்பவரின் மூன்றாவது மகன் லீ குன் ஹீ என்பவர் இதன் முன்னாள் தலைவராவார்.

சிஜெ கார்ப்பரேஷன், ஹேன்சல் குரூப், சின்சியேஜ் குரூப் மற்றும் ஜூங்-ஹாங் இல்போ தின நாளேடு உள்ளிட்ட தென்கொரிய நிறுவனங்கள் முன்னர் சேம்சங் குழுமத்தின் பிரிவுகளாக இருந்தன. இருந்தபோதும் அந்த தென்கொரிய நிறுவனங்கள் இன்றளவும் முன்னாள் தலைவர் லீ குன் ஹீ என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எம்பி3 இயக்கி உற்பத்தியாளரான ஐரிவர் மற்றும் கோப்பகத் தேடி வலை வாசலான நேவர் உள்ளிட்ட தென்கொரிய முன்னணி நிறுவனங்கள் சேங்சங் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மின்னணு துறையைச் சார்ந்த பெருமளவிலான தென்கொரிய நிறுவனங்கள் குறைக்கடத்தி பி்சிர் அல்லது எல்சிடி முகப்புகள் உள்ளிட்ட முக்கிய உதிரிகளுக்காக சேம்சங் நிறுவனத்தையே சார்ந்துள்ளன. இதன் காரணமாக விலை நிர்ணயம் மற்றும் சர்வாதீனப் போட்டி உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சேம்சங் குழுமம், சங்கியூன்க்வான் பல்கலைக்கழகம் என்ற தென்கொரியாவின் மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகத்தை தனது சொத்தாகக் கொண்டுள்ளது.

சேம்சங் குழுமம் தென்கொரியாவின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதத்தை[9] தனது பங்காகக் கொண்டுள்ளது என்பதுடன், பல உள்ளூர் நி்றுவனங்களுடன் ஒப்பிடும்போது சேம்சங் குழுமம் தனிப்பட்ட முறையில் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சேம்சங் குழுமத்தின் வருவாயானது சில நாடுகளின் மொத்த ஜிடிபியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு தரவரிசையின் அடிப்படையில் சேம்சங் குழுமம் உலகிலேயே 34வது மிகப்பெரிய பொருளாதாரம் ஈட்டும் நிறுவனம் என்பதுடன், இது அர்ஜென்டினாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும்.[12] சேம்சங் நிறுவனம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசியல், ஊடகங்கள் மற்றும் நாகரீகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது என்பதுடன், ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் மிகப்பெரிய உந்துதல் சக்தியாக இருக்கிறது; மேலும் பல்வேறு நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வளர்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

வரலாறு

 
The building of Samsung Sanghoe in Daegu in the 1930s

1938 ஆம் ஆண்டு, மிகப்பெரிய நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்த லீ பியூங்-சல் (1910 ஆம் ஆண்டு முதல்–1987 ஆம் ஆண்டு வரை) என்பவர் யூரியாங் என்ற மாவட்டத்தில் இருந்து டேகூ என்ற நகரத்திற்கு அருகாமையில் இடம் பெயர்ந்ததுடன், சூ-டாங் (தற்போது இங்கியோ-டாங் என்றழைக்கப்படுகிறது) என்ற இடத்தில் 40 ஊழியர்களைக் கொண்டு சேம்சங் சேங்கோ என்ற மிகச்சிறிய வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் காய்கறிக் கடை மற்றும் உலர்ந்த மீன்கள் உள்ளிட்ட வியாபாரங்களை அந்நகரில் மேற்கொண்டது, மேலும் பயெல்பியோ குக்ஸூ என்பவர் நூடுல்சை தயாரித்து வந்தார். அந்த நிறுவனம் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றது என்பதுடன், லீ அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை 1947 ஆம் ஆண்டு சியோலுக்கு மாற்றினார். கொரியப் போர் முடிவுக்கு வந்த சமயத்தில், சியோலை விட்டு வெளியேறும்படி லீ நிர்பந்திக்கப்பட்டார், இருந்தபோதும் அவர் பசன் என்ற நகரத்தில் செய்ல் ஜெடேங் என்ற பெயரில் சர்க்கரை ஆலை ஒன்றைத் தொடங்கினார். இதுவே தென்கொரியாவின் முதல் உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டு கொரியன் போர் முடிவுக்கு வந்த பிறகு, டெய்கூவில் உள்ள சிம்சன்-டாங் என்ற இடத்தில் லீ என்பவர் செய்ல் மாஜிக் என்ற மிகப்பெரிய ஆலையை உருவாக்கினார். அதுவே தென் கொரியாவின் மிகப்பெரிய கம்பளி ஆலை என்பதுடன், அந்த ஆலை இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.

சேம்சங் நிறுவனம் பல்வேறு இடங்களில் தனது கிளைகளை நிறுவியது, அதே சமயம் லீ சேம்சங் நிறுவனத்தை மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக உருவாக்கினார். காப்பீடு, பாதுகாப்பு மற்றும் சில்லறை வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளில் அந்த நிறுவனம் முதலீடு செய்யத் தொடங்கியது. 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் தென்கொரிய பிரதமர் பார்க் சங்-ஹூ இன் நிர்வாகம் சேம்சங் நிறுவனத்திற்கு ஆதரவு அளித்தன. பிரதமர் பார்க் தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் என்பதுடன், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார், மேலும் அவர் உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதியுதவியும் வழங்கினார். அவ்வாறு நிதியுதவி பெற்ற நிறுவனங்களுள் சேம்சங் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் நுகர்வோருக்குத் தேவைப்படும் மின்னணு சாதனங்களை தென்கொரியாவில் விற்பதற்கு அந்நாட்டு பிரதமர் பார்க் தடை விதித்தார் என்பதுடன், வெளிநாட்டு நிறுவனங்களுடனான போட்டியிலிருந்து சேம்சங் நிறுவனத்தைக் காப்பாற்றினார். மேலும் அவர் மின்னணு உற்பத்தி துறையை அதன் தொடக்கத்திலிருந்து பராமரித்து வந்தார்.

1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர், சேம்சங் குழுமம் மின்னணு தொழில் துறையைத் தொடங்கியது. சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் டிவைசஸ் கார்ப்பரேஷன், சேம்சங் எலெக்ட்ரோ-மெக்கானிக்ஸ் கார்ப்பரேஷன், மற்றும் சேம்சங் செமிகன்டக்டர் அன்ட் டெலிகம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு மின்னணு தொடர்பான பிரிவுகளை அந்நிறுவனம் சூவோனில் தொடங்கியது. அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியாகும். 1980 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் கூமி என்ற நகரத்தில் ஹேங்கக் ஜியோன்ஜா டாங்சின் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதுடன், தொலைத்தொடர்பு சாதனங்களை கட்டமைக்கத் தொடங்கியது. அந்த நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பானது நிலைமாற்றிப் பலகைகளாகும். இந்த செயல்திறனானது தொலைபேசி மற்றும் தொலைப்பிரதி தயாரிப்பு அமைப்புகளி்ல் பயன்படுத்தப்பட்டதுடன், சேம்சங் கைபேசி உற்பத்தியின் மையமாகவும் விளங்கியது. அந்த நிறுவனம் இன்றுவரை 800 மில்லியனுக்கும் அதிகமான கைபேசிகளை தயாரித்துள்ளது.[13] 1980 ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தனது அனைத்து கைபேசிகளையும் சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.

 
View of the Samsung logo inside the Time Warner Center in New York City.

1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்றவற்றிற்காக மிகப்பெரிய முதலீட்டை அளித்து வந்தது, மேலும் இத்தகைய முதலீடுகளால் அந்த நிறுவனம் உலகளாவிய மின்னணு தொழில்துறையில் முன்னணி நிறுவனமாகப் புகழ்பெற்று விளங்கியது. "1980 ஆம் ஆண்டிற்குள் சேம்சங் நிறுவனம் சாதனங்கள் மற்றும் மின்னணு கருவிகளை உற்பத்தி செய்ததுடன், அவற்றை ஏற்றுமதி செய்து உலகம் முழுவதும் விற்றது". 1982 ஆம் ஆண்டு, போர்சுகலில் சேம்சங் நிறுவனம் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பு தொழிற்கூடத்தை நிறுவியது. 1984 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் 25 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நியூயார்க்கில் ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவியது. 1987 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் 25 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் மற்றொரு தொழிற்சாலையை இங்கிலாந்தில் நிறுவியது.

1990 ஆம் ஆண்டுகளில், சேம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றது. வெளிநாடுகளில் அந்த நிறுவனம் பல்வேறு வியாபாரங்களை மேற்கொண்டது என்பதுடன், மின்னணு உபகரணங்களை தயாரித்து அளிப்பதிலும் மிகச் சிறந்த முன்னோடியாக விளங்கியது. மலேசியாவின் இரண்டு பெட்ரோனஸ் டவர்களில் ஒன்றைக் கட்டியது, தாய்வான் நாட்டின் தாய்பெய் 101 கட்டடத்தைக் கட்டியது மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் புராஜ் காலிஃபா (கேலம் கய்ரிடிஸ் என்பவரால் நிறுவப்பட்டது) என்ற உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடத்தைக் கட்டியது போன்றவற்றிற்காக சேம்சங் நிறுவனத்தின் கட்டமைப்புப் பிரிவு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.[14] லீ குன் ஹீ மற்றும் லீ பியூங்-சல் போன்ற வெற்றியாளர்களின் திட்டங்களில் சிறிது மாறுதல்களை ஏற்படுத்தும் விதமாக, 1993 ஆம் ஆண்டு சேம்சங் குழுமத்தின் பத்து துணை நிறுவனங்கள் விற்கப்பட்டது என்பதுடன், அந்த நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன, அத்துடன் சேம்சங் நிறுவனம் மின்னணுவியல், எந்திரவியல் மற்றும் இரசாயனம் உள்ளிட்ட மூன்று துறைகளில் முக்கிய கவனம் செலுத்தத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு, சேம்சங் குரூப் சங்யங்குவான் பல்கலைக்கழகத்தை நிறுவியதற்கான அதிகாரத்தைப் பெற்றது.

1997–98 ஆம் ஆண்டுகளில், ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட காலகட்டத்தில், மற்ற பெரிய கொரிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சேம்சங் குழுமத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் சேம்சங் மோட்டார் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கிய ரெனால்ட் என்ற புதிய தயாரிப்புகள் குறிப்பிடத்தகுந்த இழப்பீட்டைச் சந்தித்தது. 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை சேம்சங் நிறுவனம் வானூர்திகளைத் தயாரித்து வந்தது. சேம்சங் நிறுவனம் கொரியா ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரீஸ் (கேஏஐ) நிறுவனத்தை 1999 ஆம் ஆண்டு தொடங்கியதன் விளைவாக, சேம்சங் ஏரோஸ்பேஸின் மூன்று உள்ளூர் வானூர்தி பிரிவுகள், டேவோ ஹெவி ஹின்டஸ்டிரீஸ் மற்றும் ஹூன்டாய் ஸ்பேஸ் அன்ட் ஹேர்கிராப்ட் கம்பெனி (ஹெச்ஓய்எஸ்ஏ) உள்ளிட்ட நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டின்படி, கொரியா ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரீஸ் (கேஏஐ) நிறுவனம் கொரியா மேம்பாட்டு வங்கியின் மிகப்பெரிய பங்குதாரர் என்பதுடன், 30.53 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது. சேம்சங் டெக்வின் நிறுவனம் அவ்வங்கியில் 20.54 சதவீதப் பங்குகளையும், தூசன் நிறுவனம் (முன்னர் டேவூ ஹெவி இன்டஸ்டிரீஸ் என்றழைக்கப்பட்டது) 20.54 சதவீதப் பங்குகளையும் மற்றும் ஹூன்டாய் மோட்டார் 20.54 சதவீதப் பங்குகளையும் வைத்துள்ளது.

சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் (எஸ்இசி) உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் குறைக்கடத்தி வியாபாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, அத்துடன் 2005 ஆம் ஆண்டு நிதியாண்டிற்காக சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் செய்த முதலீடு உலகெங்கிலும் தலைசிறந்து விளங்கும் இன்டெல் நிறுவனத்தின் முதலீட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சேம்சங் என்ற வணிகப் பெயர் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த முறையில் மிகவும் புகழ்பெற்று வருகிறது.[15]

1992 ஆம் ஆண்டு சேம்சங் நிறுவனம் உலகின் மிகப்பெரிய நினைவகச் சில்லைத் தயாரிக்கும் நிறுவனமாக மாறியது என்பதுடன், இன்டெல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லு உற்பத்தியாளராகவும் மாறியது (ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் முதல் 20 குறைகடத்தி சந்தைப் பங்குகளுக்கான தரவரிசைப் பட்டியலைப் பார்க்கவும்).[16] 1999 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை அமெரிக்க கணிப்பொறி உற்பத்தியாளர்களுக்குத் தேவைப்படும் டிரேம் சில்லுகளை விற்பதற்கான விலையை நிர்ணயம் செய்வதற்கு, சேம்சங் நிறுவனம் ஹைனிக்ஸ் செமிகன்டக்டர், இன்பினான் டெக்னாலஜீஸ், எல்பிடா மெமரி (ஹி்ட்டாச்சி மற்றும் என்இசி) மற்றும் மைக்ரான் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சதி திட்டம் தீட்டியது. 2005 ஆம் ஆண்டு சேம்சங் நிறுவனம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டது என்பதுடன், 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை அதற்கு அபராதமாகக் கட்டியது. இது அமெரிக்காவின் வரலாற்றில் பொறுப்பாண்மைக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய குற்றம் என்பது குறி்ப்பிடத்தக்கது.[17][18][19][20]

1995 ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் முதன் முதலில் தனது திரவப் படிகக் காட்சியிலான திரையை உருவாக்கியது. அதன் பத்தாண்டுகளுக்குப் பிறகு, திரவப் படிக காட்சி சட்டகங்களை தயாரிப்பதில் சேம்சங் நிறுவனம் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மாறியது. டிஎப்டி-எல்சிடிகளுக்காக உற்பத்தியில் சோனி நிறுவனம் சேம்சங் குழுமத்தின் ஆலோசனையின்றி மிகப்பெரிய முதலீட்டை அளிக்காது. சேம்சங் மற்றும் சோனி ஆகிய இரண்டு உற்பத்தி நிறுவனங்களும் தங்களுக்குத் தேவைப்படும் எல்சிடி சட்டகங்களைத் தொடர்ந்து பெறுவதற்காக, 2006 ஆம் ஆண்டு எஸ்-எல்சிடி நிறுவனத்தை உருவாக்கின. எஸ்-எல்சிடி நிறுவனம் சேம்சங் (50 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது) மற்றும் சோனி (49 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது) ஆகிய இரண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதுடன், அந்த இரண்டு நிறுவனங்களும் டேஙஜங் மற்றும் தென்கொரியாவில் தங்களது தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.

மிகவும் பலமான போட்டியாளர்களைக் கருத்தில் கொண்டு, சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தனது தயாரிப்புகளை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்தது என்பதுடன், டிரேம் சில்லுகள், மீள் நினைவகம் மற்றும் ஒளியல் தேக்கக இயக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அந்த நிறுவனம் உலகிலேயே முதன்மையான இடத்தைப் பெற்று விளங்குகிறது. அந்த நிறுவனம் 2010 ஆம் ஆண்டிற்குள் தனது உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது என்பதுடன், உலகின் முதல் 20 உற்பத்தியாளர்களுள் ஒருவராக ஆகவும் திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனம் தற்போது திரவப் படிகக் காட்சிகளை வழங்கும் சட்டகங்களை உற்பத்தி செய்வதில் உலகிலேயே முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது.

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சேம்சங் எலெக்ட்ரானிக்ஸின் நிகர வருமானம் சோனி நிறுவனத்தின் வருமானத்தை விட அதிகம் என்பதுடன், சோனி நிறுவனம் தற்போது நுகர்வோர் மின்னணு உற்பத்தியில் உலகிலேயே 19வது இடத்தில் உள்ளது.[21] கைபேசி உற்பத்தியில் நோக்கியாவிற்கு அடுத்தபடியாக, சேம்சங் குழுமம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் ஆகும், அதே சமயம் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் சேம்சங் குழுமம் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.[22]

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கிறி்ஸ்துமஸ் தினத்தன்று தங்கள் நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கொரியா டைம்ஸ் செய்தித் தாளில் மைக் பிரீன் என்பவர் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறி, சேம்சங் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நட்ட ஈடாகக் கேட்டு அவர் மீது வழக்கு தொடர்ந்தது.[23][24]

சந்தைப் பங்கு

தயாரிப்புகள் சேம்சங்கின் உலகளாவிய சந்தைப் பங்கு போட்டியாளர்கள் சந்தைப் பங்கு வருடம் மூலப்பொருள்
டிரேம் 34.3% ஹைனிக்ஸ் 21.6% 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு [25]
நேன்ட் பிளாஷ் 40.4% டோஷிபா 28.1% 2008 [26]
மிகப்பெரிய அளவிலான எல்சிடி சட்டகம் 26.2% எல்ஜி டிஸ்பிளே 25.8% 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி [27]
பிடிபி சட்டகம் 30.5% எல்ஜி டிஸ்பிளே 34.8% 2008 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு [28]
ஆக்டிவ்-மேட்ரிக்ஸ் ஓல்இடி 90.0% எல்ஜி டிஸ்பிளே - 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு [29]
லித்தியம்-இரும்பினாலான மின்கலம் 19% சேன்யோ 20% 2009 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு [30]
எல்சிடி கணினித்திரை 16.1% டெல் 14.6% 2008 ஆம் ஆண்டு [31]
வன்தட்டு இயக்கி 9.5% சீகேட் டெக்னாலஜி 34.9% 2007 ஆம் ஆண்டு [32]
பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட அச்சுப்பொறிகள் 16.4% எச்பி 19.2% 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு [33]
தொலைக்காட்சிப் பெட்டிகள் (எல்சிடி, பிடிபி, சிஆர்டி) 23% எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் 13.7 % 2009 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு [34]
பிரான்ஸ் கதவுகளினாலான குளிர்சாதனப் பெட்டி (அமெரிக்கச் சந்தைகளில் மட்டும்) 18.79% வேர்ல்பூல் 23.83% 2009 ஆம் ஆண்டு சனவரி [35]
கைபேசி 21% நோக்கியா 37.8% 2009 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு [36]
எண்மருவி நிழற்படக் கருவி 9.1% கேனான் 19.2% 2007 ஆம் ஆண்டு [37]
கப்பல் 80% டேவூ சிப்பில்டிங் & மெரைன் இன்ஜினியரீங் 20% 2000 ஆம் ஆண்டு முதல்~2007 ஆம் ஆண்டு வரை [38][39]

விளையாட்டுகளுக்கு ஆதரவு அளித்தல்

 
The Samsung Running Festival in Taipei, Taiwan.
 
Samsung sponsors English premiership team Chelsea FC.

பெடரேஷன் ஈக்வெஸ்ட்ரீ இன்டர்நேஷனலே (ஆங்கிலத்தில்: சர்வதேச விளையாட்டுகளுக்கான அமைப்பு) மற்றும் எப்இஐ தேசிய கோப்பை ஆகியவற்றுடன் இணைந்த சேம்சங் சூப்பர் லீக் போட்டி, உலகின் பழமையான மற்றும் தலைசிறந்த எக்கோஸ்டிரியன் தொடர்கள் உள்ளிட்ட பல போட்டிகளுக்கு சேம்சங் நிறுவனம் விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. 29. ஏப்ரல் 2009 ஆம் ஆண்டிலிருந்து, ஆஸ்திரியாவின், வியன்னாவில் உள்ள ஸ்பேனிஷ் ரைடிங் பள்ளிக்கு (தி: ஸ்பேனிஷ்க் ஹாப்ரெய்ட்ஸ்கல், தி "ஸ்பேனிஷ்க் கோர்ட் ரைடிங் ஸ்கூல்") சேம்சங் எலெக்ட்ரானிக்ஸ் ஆதரவு அளித்து வருகிறது.[40]

சேம்சங் விளையாட்டுகளில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு மிகவும் போராடியது. 1998 ஆம் ஆண்டிலிருந்து அந்த நிறுவனம் ஏறத்தாழ ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்தது என்பதுடன், கடைசி ஐந்து ஒலிம்பிக் போட்டிகளுக்காக நிதி உதவியும் அளித்து வருகிறது. 2002 ஆம் ஆண்டு அந்த நிறுவனம் டைம்ஸ் ஸ்கொயரில் மிகப்பெரிய விளம்பர நிகழ்படத்தை காட்சிக்கு வைத்தது (லீ குன் ஹீ தலைமையில் நிறைவேற்றப்பட்டது). சேம்சங் நிறுவனம் ஆசிய விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் காட்டி வருவதுடன், சேம்சங் தேசிய கோப்பை, சேம்சங் சர்வதேச விளையாட்டுத் திருவிழா, சேம்சங் உலகக் கோப்பை (எல்பிஜிஏ சுற்றுப்பயணம்) மற்றும் பல போட்டிகளை உலகம் முழுவதும் நடத்தி வருகிறது.

சூவான் சேம்சங் புளூவிங்ஸ் எனும் கால்பந்தாட்ட அணி, சேம்சங் லயன்ஸ் எனும் அடிப்பந்தாட்ட அணி, சியோல் சேம்சங் தண்டர்ஸ் எனும் கூடைப்பந்தாட்ட அணி, சேம்சங் பிக்குமி எனும் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட அணி மற்றும் சேம்சங் புளூபேங்ஸ் எனும் கைப்பந்தாட்ட அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனக்குச் சொந்தமாக வைத்துள்ளது.

2005 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால்பந்தாட்ட வரலாற்றில் முதன் முறையாக சேம்சங் நிறுவனம் செல்சீ அணிக்கு விளம்பர உதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவர்களின் ஐந்து வருட ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பானது ஏறத்தாழ 50 மில்லியன் யூரோவாகும். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேம்சங்கும், கிளப் டெபோர்டிவோ குவடலஜரா என்ற மெக்சிகோ கால்பந்தாட்ட அணியும் தங்களுக்குள் ஆறு வருட ஒப்பந்தம் செய்துகொண்டது, இதன்படி அந்தக் கால்பந்தாட்ட அணி நிறுவிய எஸ்டாடியோ சிவாஸ் என்ற புதிய விளையாட்டு அரங்கத்திற்கு சேம்சங் நிறுவனம் 865 பிளாஸ்மா மற்றும் எல்சிடி திரைகளை இலவசமாக அளித்தது.

2009 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் தேதி, பேல்மைராஸ் என்ற பிரேசில் நாட்டைச் சார்ந்த கால்பந்தாட்ட அணியுடன் சேம்சங் நிறுவனம் மூன்று வருட ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி சேம்சங் நிறுவனம் ஆண்டுதோறும் அந்த அணிக்கு 15 மில்லியன் அமெரி்க்க டாலரை (ஏறத்தாழ 4.8 மில்லியன் யூரோ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது) உதவியாக அளித்து வருகிறது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பேல்மைராஸ் கால்பந்தாட்ட அணி வீரர்கள் சேம்சங் முத்திரையிட்ட சட்டையை அணிந்து விளையாடுவார்கள், அதே சமயம் சேம்சங் நிறுவனம் தனது தயாரிப்புகளை அந்தக் கால்பந்தாட்டச் சங்கத்திற்கு இலவசமாக வழங்கும், இதன் மூலம் பார்வையாளர்களுக்கு தங்களது தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என்று சேம்சங் நிறுவனம் நம்புகிறது.[41][42][43]

1995 ஆம் ஆண்டு முதல்-1997 ஆம் ஆண்டு வரை மற்றும் 2004 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, அந்த நிறுவனம் ஆஸ்திரேலிய தேசிய அஞ்சல்பந்தாட்ட லீக் போட்டிகளில் சிட்னி ரூஸ்டர் என்ற அஞ்சல்பந்தாட்ட அணிக்கு விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏ-லீக் போட்டிகளில் சேம்சங் நிறுவனம் மெல்போர்ன் விக்டரி கால்பந்தாட்ட சங்கத்திற்கு விளம்பர உதவிகளைச் செய்தது. விக்டரி உடன் சேம்சங் நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தமும் ஆஸ்திரேலியக் கால்பந்தாட்ட வரலாற்றின் மிகப்பெரிய ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் சேம்சங் நிறுவனம் எஸென்டன் கால்பந்தாட்ட சங்கத்தின் முதன்மையான விளம்பர உதவி அளிக்கும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

சேம்சங் 500, டெக்சாஸ் மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறும் நாஸ்கார் நெக்ஸ்டெல் கோப்பையின் முக்கிய விளம்பரதாரர் சேம்சங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பர உதவி 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை, ரேடியோஷேக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டு பருவத்திலிருந்து கம்பியற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விளம்பர உதவிகளைத் தடைசெய்யப் போவதாக நாஸ்கர் அறிவித்ததைத் தொடர்ந்து, ரேடியோஷேக் நிறுவனத்தின் உதவி நிறுத்தப்பட்டது (இருப்பினும் நெக்ஸ்டெல் மோட்டரோலாவின் சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறது). ஸ்பிரின்ட் நிறுவனம் நெக்ஸ்டெல் உடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர், சேம்சங் நிறுவனத்திற்காக நெக்ஸ்டெல் நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பு இரத்து செய்யப்பட்டது, ஏனெனில் ஸ்பிரின்ட் நிறுவனம் சேம்சங்கின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருவதே அதற்குக் காரணமாகும்.

சேம்சங் நிறுவனம் தற்போது பிரெஞ்ச் பீப்புள்ஸ் அடிப்பந்தாட்ட அணிக்கு விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. சேம்சங் நிறுவனம் இந்தியாவில் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையுடன் மட்டைப்பந்து லீக்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது (2009 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சேம்சங் நிறுவனம் ஒன்பது விளையாட்டு அரங்கங்களைக் கட்டத் திட்டமிட்டிருந்தது).

சேம்சங் நிறுவனம் தற்போது சேம்சங் கான் என்ற சிறந்த ஸ்டார்கிராப்ட் அணிக்கு விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு ஷின்ஹேன் பேங் லீக்கிற்கு முன்பான முதல் பருவத்தில் சேம்சங் கான் அணி முதன் முறையாக பட்டத்தை வென்றது. வேர்ல்ட் சைபர் கேம் (டபிள்யூசிஜி) இன் முக்கிய விளம்பர உதவியாளர் சேம்சங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் டபிள்யூசிஜி என்பது ஸ்டார் கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு கணிப்பொறி விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கியது.

தேசிய கால்பந்தாட்ட லீக்கின் (என்எப்எல்) அதிகாரப்பூர்வ எச்டிடிவி விளம்பரதாரர் சேம்சங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. என்எப்எல் உயர்ந்த தரத்திலான சேம்சங் தொலைக்காட்சிகளை தனது அணி விளையாடும் கால்பந்தாட்ட அரங்கின் முக்கிய இடங்களில் பொருத்தியுள்ளது.[44]

2009 ஆம் ஆண்டு (ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில்) மற்றும் 2011 ஆம் ஆண்டின் (தென்கொரியாவில் உள்ள டேய்கூவில்) ஐஏஏஎப் (சர்வதேச தடகளப் போட்டிகளுக்கான கூட்டமைப்பு) உலகக் கோப்பை தடகளப் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ பங்குதாரராகவும், 2010 ஆம் ஆண்டின் ஐஏஏஎப் உலகக் கோப்பை உள்ளரங்க விளையாட்டு போட்டிகளுக்கான பங்குதாரராகவும் இருக்க சேம்சங் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. [45]

ஒலிம்பிக் போட்டிகளுக்கான சேம்சங்கின் விளம்பர உதவிகள்

1998 ஆம் ஆண்டின் நேகானோ குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, சேம்சங் நிறுவனம் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளம்பர உதவிகளை அளிக்கத் தொடங்கியது. 2010 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் வேன்கவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2011 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள், 2014 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2016 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ரியோ தி ஜெனரியோ ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளுக்கு சேம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமான முறையில் விளம்பர உதவிகளை அளிக்கும் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு சேம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ பின்வருமாறு தெரிவித்தார்: "திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சேம்சங்கின் பெயரை இன்னும் விரிவுபடுத்த இயலும் என்பதுடன், சேம்சங் நிறுவனத்தை மிகப்பெரிய சக்தியாக உருவாக்க இயலும்" - எனவே சேம்சங் நிறுவனம் தனது புகழை உலகம் முழுவதும் பரப்புவதற்கும், தனது தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளம்பர உதவி அளிப்பது என முடிவு செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளம்பர உதவிகளை அளிப்பதன் மூலம் சேம்சங் நிறுவனம் உலகளாவிய சந்தைகளில் முக்கியத்துவம் பெறமுடியும் என நம்புகிறது.

1997 ஆம் ஆண்டு, ஐஓசி உடன் மிகப்பெரிய விளம்பர ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சேம்சங் நிறுவனம் (ஒலிம்பிக் போட்டிகளின் பங்குதாரர்) முடிவு செய்தது. 1998 ஆம் ஆண்டின் நேன்கோ குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2000 ஆம் ஆண்டின் சிட்னி ஒலிம்பிக் போட்டிகள், 2002 ஆம் ஆண்டின் சால்ட் லேக் சிட்டி ஒலிம்பிக் போட்டிகள், 2004 ஆம் ஆண்டின் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகள், 2006 ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்]], 2008 ஆம் ஆண்டின் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2010 ஆம் ஆண்டின் [[வேன்கவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளுக்கான கம்பியற்ற தொலைத்தொடர்பு சாதனங்களின் பிரிவுகளுக்காக சேம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வ விளம்பர உதவிகளை அளித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாக பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் இயக்கங்களுக்கு விளம்பர உதவிகளை அளித்து வருவதன் மூலம், சேம்சங் நிறுவனம் கைபேசி தொழில்துறையில் "உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக" ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டில் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள், சேம்சங் நிறுவனத்தின் கடந்த பத்தாண்டுகளுக்கான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் விதத்தில் இருந்தது.

குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்

  1. Kelly Olsen (2008-04-22). "Samsung chairman resigns over scandal". அசோசியேட்டட் பிரெசு via கூகிள் செய்திகள் இம் மூலத்தில் இருந்து 2008-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080429210900/http://ap.google.com/article/ALeqM5gmnWKlfgTsbW4n6D9OKnynHdXnhwD906SF9O0. பார்த்த நாள்: 2008-04-22. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Samsung Profile 2009
  3. See List of companies by revenue
  4. http://www.oled.si/en/about-oled/11-companies-sony-samsung-applications[தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://koreatimes.co.kr/www/news/nation/2009/09/123_51434.html Sony Vows Comeback Against Samsung, LG
  6. http://koreatimes.co.kr/www/news/nation/2009/09/123_51093.html Samsung Group Expects Record Profit of $12 Billion
  7. 7.0 7.1 Economist.com Succession at Samsung – Crowning success
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  9. 9.0 9.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-23. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  10. http://articles.latimes.com/2005/sep/25/business/fi-samsung25
  11. "Samsung Net Worth". 2022-09-24. Archived from the original on 2022-09-29. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
  12. "[초 국가기업] <上> 삼성 매출>싱가포르 GDP… 국가를 가르친다 – 조선닷컴". Archived from the original on 2010-11-28. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  13. (கொரிய மொழி) http://www.gumisamsung.com/jsp/gp/GPHistory03.jsp
  14. "Dubai skyscraper symbol of S. Korea's global heights". CNN. October 19, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  15. "brandchannel.com|Samsung Brand|Top 100 Global Brands|brands|brand|branding news". Archived from the original on 2006-02-17. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  16. [1]
  17. "Samsung Agrees to Plead Guilty and to Pay $300 Million Criminal Fine for Role in Price Fixing Conspiracy". U.S. Department of Justice. பார்க்கப்பட்ட நாள் 2009-05-24.
  18. "Samsung fixed chip prices. Korean manufacturer to pay $300 million fine for its role in scam". San Francisco Chronicle. 2005-10-14. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2005/10/14/BUGH3F85PU1.DTL. பார்த்த நாள்: 2009-05-24. 
  19. "Price-Fixing Costs Samsung $300M". InternetNews.com. 2005-10-13 இம் மூலத்தில் இருந்து 2007-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071114233939/http://www.internetnews.com/bus-news/article.php/3556156. பார்த்த நாள்: 2009-05-24. 
  20. "3 to Plead Guilty in Samsung Price-Fixing Case". New York Times. 2006-03-23. http://www.nytimes.com/2006/03/23/technology/23chip.html. பார்த்த நாள்: 2009-05-24. 
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-26. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  22. http://joongangdaily.joins.com/article/view.asp?aid=2908852
  23. http://www.techdirt.com/articles/20100510/1820159367.shtml
  24. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-19. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  25. "Micron regains No. 3 spot in DRAM". Archived from the original on 2012-01-19. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  26. The 2009 Outlook of Taiwanese DRAM vendors; 4Q08 and 2008 Sales Ranking of NAND Flash Brand Companies
  27. Large-size TFT-LCD Panel Shipments are Up[தொடர்பிழந்த இணைப்பு]
  28. LG Takes Over Lead From Matsushita in PDP Market
  29. "Samsung SDI has a 90% share of AM-OLED shipments for Q2 2008". Archived from the original on 2010-04-21. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  30. http://www.hankyung.com/news/app/newsview.php?aid=2009082159441&sid=010401&nid=004&ltype=1
  31. Samsung Ranks #1 for Preliminary Worldwide LCD Monitor Market Share for Q1’08; Dell Grows Stronger in US Retail but Still Drops Share to Samsung
  32. "TrendFOCUS Report: HDDs Shrug Off Flash, Hit Shipment Records". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  33. Multifunction printers defy economic downturn to record solid worldwide salesgrowth
  34. Samsung Profit Triples to Record on Chip, LCD Prices (Update3)
  35. "Whirlpool Refrigerators Dominate Dealer Floors". Archived from the original on 2010-03-29. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  36. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  37. Samsung Techwin Takes 3rd Place in Digital Camera Market Share
  38. "Frontier Spirit". Archived from the original on 2009-07-31. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  39. [2][தொடர்பிழந்த இணைப்பு]
  40. Samsung: New partner of the Spanish Riding School – Federal Stud Piber[தொடர்பிழந்த இணைப்பு]
  41. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  42. http://www.estadao.com.br/noticias/esportes,palmeiras-fecha-patrocinio-com-a-samsung-por-r-15-milhoes,307924,0.htm
  43. http://www.futebolfinance.com/en/palmeiras-assina-com-samsung/[தொடர்பிழந்த இணைப்பு]
  44. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-09. பார்க்கப்பட்ட நாள் 2010-06-23.
  45. IAAF signs major marketing partnership with Samsung

புற இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samsung
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்சங்&oldid=3732203" இலிருந்து மீள்விக்கப்பட்டது